Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Tuesday, August 27, 2019

இலங்கையின் சிவில் நிர்வாகம்.

இலங்கையின் சிவில் நிர்வாகம்.

1796ஆம் ஆண்டு பிரித்தானியக் காலனித்துவத்திற்குள் இலங்கை கொண்டு வரப்பட்டு, 1802ஆம் ஆண்டு முடிக்குரிய காலனியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுவரையில் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் நிர்வாகத்தின் கீழ் இலங்கை நிர்வகிக்கப்பட்டது.

1815ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் பிரித்தானியர்களால் கைப்பற்றப்படுவதோடு இலங்கை முழுவதும் காலனித்துவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. 1802ஆம் ஆண்டு கரையோர மாகாணங்களின் அறிமுகத்தோடு, பிரித்தானிய சிவில் நிர்வாக முறைமை ஆரம்பமாகின்றது. கரையோர மாகாணங்களை நிர்வாகப் பிரதேசமாகக் கொண்ட அரசாங்கம் ஏறக்குறைய 30 வருடங்கள் செயற்பட்டது. இக்கால கட்டத்தில் இலங்கையானது “எடுத்துக்காட்டான முடிக்குரிய காலனியாக ( Typical Crown Colony) இருந்தது.

சட்ட, நிர்வாக, நீதித்துறை சார்ந்த சகல அதிகாரங்களும் ஆளுநரிடமே இருந்தன. இவர் காலனித்துவ அரச செயலாளரூடாகப் பிரித்தானியப் பாராளுமன்றத்திற்குப் பதிலளிக்க வேண்டியவராக இருந்தார்.

ஆளுநருக்கு ஆலோசனை வழங்குவதற்குச் சபை (Council) ஒன்று இருந்தது. ஆனால் சபையின் ஆலோசனையை ஆளுநர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கவில்லை. இவர் இக்காலத்தில் தன் விருப்பத்திற்கு ஏற்ப இலங்கையை நிர்வகிக்க முடிந்தது. கண்டி மாகாணத்தைப் பொறுத்த வரையில் அதன் நிர்வாகம் தனியாக நிர்வகிக்கப்பட்டதுடன், இதற்கான தனி ஆணைக்குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது.

இவ் அத்தியாயத்தின் முதற்பகுதி இலங்கையின் சிவில் சேவை வளர்ச்சிக்கு கோல்புறூக், டொனமூர், சோல்பரி சீர்திருத்தங்கள் ஆற்றிய பங்களிப்புக்களை பரிசீலனை செய்கின்றது. அடுத்த பகுதி, சுதந்திர இலங்கையின் சிவில் சேவையில் பொதுச்சேவை ஆணைக்குழுவின் முக்கியத்துவத்தினையும், 1956ஆம் ஆண்டின் பின்னர் சிவில் சேவையில் ஏற்பட்ட முரண்பாடுகள், மாற்றங்களையும் பரிசீலனை செய்கிறது. இறுதியாக, சமகால சிவில் சேவைக் கட்டமைப்பில் அரசியல் கட்சிகள் செலுத்தும் செல்வாக்குகளும் சிவில் சேவை தொடர்பான சமகால சிந்தனைகளும் பரிசீலிக்கப்படுகிறது.

சிவில் சேவைத் திணைக்களங்களும்,சிவில் நிர்வாக மாகாணங்களும்

பிரித்தானிய காலனித்துவத்தின் கொள்கை, இலங்கை மக்களிடம் வரியை அறவிட்டு அதன் மூலம் இலங்கையை நிர்வகிப்பதாகவே இருந்தது. இது இலங்கை மக்கள் மீது தேவையற்ற வரிச் சுமைகளைச் சுமத்தி, அவர்களின் வாழும் உரிமைகளை மீறும் செயலாகவே இருந்தது. வரியை அறவிடும் நோக்கத்திற்காக இலங்கையில் இரண்டு சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டன.

சிவில் சேவைத் திணைக்களங்கள்
மாகாண சிவில் நிர்வாகக்கட்டமைப்பு
சிவில் சேவைத் திணைக்களங்கள்

1798ஆம் ஆண்டின் பின்னர் பல்வேறு சிவில் சேவைத் திணைக்களங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் கணக்காய்வாளர் நாயகத் திணைக்களம், நில அளவையாளர் திணைக்களம், மருத்துவத் திணைக்களம், காணிப்பதிவுத் திணைக்களம் போன்றவற்றைக் கூறிக் கொள்ளலாம்.

சேர் தோமஸ் மெயிற்லாண்ட் (Sir Thomas Maitland) ஆளுநராக இருந்த 1805ஆம் ஆண்டுக்கும் 1811ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சிவில் சேவைத் திணைக்களங்கள் மீள் ஒழுங்கமைக்கப்பட்டதுடன், புதிய சிவில் சேவைத் திணைக்களங்கள் சில உருவாக்கப்பட்டன. காணிப்பதிவுத் திணைக்களம் செயலிழந்தது. அதேநேரம், சுங்கத் திணைக்களம், உப்புத் திணைக்களம் என்பன புதிதாக உருவாக்கப்பட்டன.

மாகாண சிவில் நிர்வாகக்கட்டமைப்பு

சிவில் சேவை நிர்வாகக் கட்டமைப்பின் முதுகெலும்பாக மாகாண நிர்வாகமே காணப்பட்டது. அதிகார மையப்படுத்தப்பட்ட அரசாங்க முறைமை நாடு முழுவதும் செயற்படப் படிநிலை அமைப்பு ஊடான மாகாண சிவில் நிர்வாக முறைமை வாய்ப்பாக இருந்தது. மாகாண சிவில் நிர்வாக முறைமைக்கான சிந்தனை 1796-1798ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஆரம்பமாகியிருந்தது. இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் மூன்று சிவில் நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, புதிய மூன்று மாகாணங்கள் உருவாக்கப்பட்டன. அவையாவன:

யாழ்ப்பாணம், மன்னார்
கொழும்பு, காலி
திருகோணமலை, மட்டக்களப்பு
மூன்று மாகாணங்களையும் நிர்வகிப்பதற்கு வதிவிட இறைவரி அத்தியட்சகர் (Resident and Superintendent of Revenue) ஒருவர் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் மூன்று மாகணங்களுக்கும் வரி சேகரிப்பாளர்கள் நியமிக்கப் பட்டார்கள். இதுவே பிரித்தானியர் அறிமுகப்படுத்திய மாகாண சிவில் நிர்வாக முறைமையாகும். 1815ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட கண்டி இராச்சியம், 1833ஆம் ஆண்டு வரை தனி சிவில் நிர்வாக மாகாணமாக நிர்வகிக்கப்பட்டது.

கோல்புறூக் சீர்திருத்தமும், சிவில் நிர்வாகக் கட்டமைப்பும்.

இலங்கையின் சிவில் நிர்வாகக் கட்டமைப்பு கோல்புறூக் சீர்திருத்தத்துடன் புனரமைக்கப்பட்டது. கோல்புறூக் சீர்திருத்தம் இலங்கை முழுவதையும் முடிக்குரிய நாடாக மாற்றியதுடன், பிரித்தானிய ஆளுநரின் கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டு வந்தது. பொது நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு, மையப்படுத்தப்பட்டது. அரசாங்க அதிகாரத்தின் மையமாகக் கொழும்பு நகரம் உருவாக்கப்பட்டது.

கோல்புறூக் சீர்திருத்தத்தின் கீழ் இலங்கையின் சிவில் நிர்வாகக் கட்டமைப்பின் உச்சியில் காலனித்துவச் செயலாளர் காணப்பட்டார். இவர் இலங்கையின் சிவில் நிர்வாக விடயங்கள் தொடர்பாக ஆளுநருக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டியவராகக் காணப்பட்டார். இதனால் பொது நிர்வாகமானது காலனித்துவச் செயலாளரால் அடக்கியாளப்படுவதாக இருந்தது. எல்லாச் சிவில் நிர்வாகச் செயற்பாடுகளும் காலனித்துவ செயலாளரினாலேயே நெறிப்படுத்தப்பட்டது. அத்துடன், இலங்கை சிவில் சேவையின் (Ceylon Civil Service – CCS) சிரேஷ்ட அங்கத்தவர்கள் அனைவரும் இவருக்குக் கட்டுப்பட்டுச் செயற்பட்டனர். காலனித்துவச் செயலாளர் பொது நிர்வாகத்தின் மையமாகச் செயற்பட்டார்.

மாகாண சிவில் நிர்வாகம்

கோல்புறூக் சீர்திருத்தத்தின் கீழ் இலங்கை ஐந்து சிவில் நிர்வாக மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன. அவையாவன:

வடமாகாணம்
கிழக்கு மாகாணம்
மேற்கு மாகாணம்
தெற்கு மாகாணம்
மத்திய மாகாணம் என்பவைகளாகும்.

ஓவ்வொரு மாகாண சிவில் நிர்வாகமும் ஒவ்வொரு அரசாங்க அதிபரின் கீழ் (Government Agent – G.A) விடப்பட்டது. மாகாண சிவில் நிர்வாகத்தின் செயற்பாட்டிற்காக ஒவ்வொரு மாகாணத்திலும் கச்சேரி உருவாக்கப்பட்டது. மத்திய அரசாங்கத்தின் சிவில் சேவைத் திணைக்களங்களும்,முகவரகங்களும் கச்சேரிகளில் உருவாக்கப்பட்டு, அரசாங்க அதிபரால் இணைக்கப்பட்டுக் கட்டுப்படுத்தப்பட்டன. எல்லாக் கச்சேரி சிவில் நிர்வாகங்களையும் காலனித்துவச் செயலாளர் கொழும்பிலிருந்து இணைத்துக் கட்டுப்படுத்தியிருந்தார்.

ஓவ்வொரு சிவில் நிர்வாக மாகாணங்களும் பல உப பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இந்தப் பிரிவுகள் ஒவ்வொன்றும் சிவில் நிர்வாக மாவட்டங்கள் என அழைக்கப்பட்டன. ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபரின் கீழே செயற்பட்டது. ஆயினும், அரசாங்க அதிபரே மாவட்ட சிவில் நிர்வாகத்திற்கும் முழுமையாக மாகாண சிவில் நிர்வாகத்திற்கும் பொறுப்பானவராவார்.

முகாமைத்துவ நுட்ப ரீதியாக அரசாங்க அதிபர் இறைவரி அறவிடும் அலுவலர் ஆவார். இதனடிப்படையில் இவர் ஆரம்பத்தில் இறைவரித் திணைக்களத்துக்கே பொறுப்பாக இருந்தார். எவ்வாறாயினும், அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிகரிக்க, அரசாங்க அதிபர்கள் அரசாங்க முகவர்களாக மாற்றம் அடைந்தனர்.

அதிகார ஒழுங்கைப் பார்க்கின்ற போது மையத்திலிருக்கும் காலனித்துவச் செயலாளரிடமிருந்து அதிகாரம் கீழ் நோக்கிச் செல்கின்றது. மாகாணமட்டத்தில் அரசாங்க அதிபர் காணப்படுகின்றார். கீழ்மட்டத்தில் சுதேசிய மட்ட உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றார்கள். இது கிராமிய மட்டம் வரை தொடர்கின்றது. போர்த்துக்கேயர், டச்சுக்காரர் போன்று பிரித்தானியர்களும் சுதேசிய நிர்வாகிகளாகிய முதலியார்கள், விதான – ஆராய்ச்சி (Vidane- Arachchis) போன்ற கிராமியத் தலைவர்களைச் சிவில் சேவையாளர்களாகப் பயன்படுத்தினார்கள்.

சிவில் சேவை மறுசீரமைப்பு 1856-1928

1856ஆம் ஆண்டில் காலனித்துவ சிவில் சேவை அமைப்பு மீள் ஒழுங்கமைக்கப்பட்டது. சிவில் சேவை ஆட்சேர்ப்பு முறைமை, போட்டிப் பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டது. பல்கலைக்கழகப் பட்டதாரிகள் சிவில் சேவைக்கான ஆட்சேர்ப்பில் மிகவும் காத்திரமானவர்களாகக் கருதப்பட்டார்கள். 1870ஆம் ஆண்டு சிவில் சேவை ஆட்சேர்ப்புக்கான பரீட்சை கொழும்பில் நடாத்தப்பட்டது. பிரித்தானிய பல்கலைக்கழகக் கல்வியை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெற்றுக்கொண்ட இலங்கையர்களால் சிவில் சேவையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இணையக்கூடியதாக இருந்தது. இதனால் இலங்கையின் சிவில் சேவையானது பிரித்தானியர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதொன்றாக இருந்தது. ஆகவே பிரித்தானிய அரசாங்கம் 1880ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மட்டும் பரீட்சையை நடாத்துவது எனத் தீர்மானித்தது. இதனால், இலங்கையர்கள் சிவில் சேவை ஆட்சேர்ப்பு பரீட்சையினை இங்கிலாந்து சென்று எழுத வேண்டியேற்பட்டது.

இலங்கையர்கள் சிவில் சேவையில் நுழைவதற்கான கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கினர். இக் கோரிக்கைகளால் 1891ஆம் ஆண்டு சிவில் நிர்வாக சேவையில் உள்ளூர்ப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டது. இது சிவில் நிர்வாக சேவையின் கீழ்மட்ட அலகாகச் செயற்பட்டது. இவர்களுக்கான அறிவுறுத்தல்களும், வழிகாட்டல்களும் ஐரோப்பிய சிவில் சேவை மேலதிகாரிகளால் வழங்கப்பட்டன.

1928ஆம் ஆண்டில் மாகாண சிவில் நிர்வாகமானது மீள் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டதுடன் மாகாணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மாகாணங்களின் எண்ணிக்கை ஒன்பதாகவும், மாவட்டங்களின் எண்ணிக்கை பத்தொன்பதாகவும் அதிகரித்தது. இதனை விட நூற்றுப் பத்து பிரதான தலைவர் (Chief head men’s ) பிரிவுகளும் அறுநூற்றுப் பதின்மூன்று மேல் நிலை தலைவர் (Superior head men’s) பிரிவுகளும் நான்காயிரம் கிராமியத் தலைவர் (Village head men’s ) பிரிவுகளும் தோற்றுவிக்கப்பட்டன.

அரசாங்க அதிபர் தொடர்ந்தும் வரி சேகரிப்பவராக இருந்தாலும், அவருடைய பணிகள் பல நிலைகளிலும் விரிவடைந்து சென்றிருந்தன. சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்க அதிபரிடம் விடப்பட்டிருந்தது. சட்ட, நிர்வாக, நீதித்துறை சார்ந்த கடமைகளைப் படிப்படியாக மாகாணமட்டத்தில் மேற்கொள்ள வேண்டியிருந்ததுடன், பொதுவான சிவில் நிர்வாகப் பொறுப்புக்களையும் இவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

டொனமூர் சீர்திருத்தமும், சிவில் நிர்வாகமும்

1931ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டொனமூர் சீர்திருத்தம் ஏனைய துறைகளில் ஏற்படுத்திய தீவிர மாற்றம் போன்று சிவில் நிர்வாக அமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் நூறு வருடங்களாக மாற்றமின்றியிருந்த சிவில் நிர்வாக ஒழுங்கமைப்பு மாற்றத்துக்குள்ளாகியது. அதாவது சிவில் சேவையின் செயற்பாடு, வடிவம், அமைப்பு என்பவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன. சிவில் நிர்வாகக் கட்டமைப்பின் உச்சியில் இவ்வளவு காலமும் இருந்த காலனித்துவ செயலாளருக்குப் பதிலாகப் பத்து அமைச்சர்கள் உருவாக்கப்பட்டனர். காலனித்துவச் செயலாளரின் அதிகாரங்கள் இல்லாதொழிக்கப்பட்டு அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஒவ்வொரு அமைச்சும் சுதந்திரமாகச் செயற்பட்டதுடன், அமைச்சரின் கட்டுப்பாட்டுக்குள்ளும் விடப்பட்டது. அமைச்சர்களுக்குக் கீழான சிவில் சேவைத் திணைக்களங்கள் உருவாக்கப்பட்டமை பெரும் சிவில் நிர்வாக வலைப்பின்னலை உருவாக்கியது. சிவில் நிர்வாகத்தில் ஏற்பட்ட இம் மாற்றம் நிர்வாக உச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தியதுடன், சுதந்திரம் பெறும் வரை இது தொடர்ந்திருந்தது.

காலனித்துவ செயலாளருக்குப் பதிலாக அமைச்சர்கள் உருவாக்கப்பட்டமை சிவில் நிர்வாக அமைப்பில் பல வழிகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது. மத்திய அரசாங்கம் ஆளுநரையும் சர்வஜன வாக்குரிமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 50 அரசாங்க சபை உறுப்பினர்களையும் கொண்டிருந்தது. இவர்களை விட 08 நியமன உறுப்பினர்களையும், பிரதம செயலாளர், நிதிச் செயலாளர், சட்டச் செயலாளர் ஆகிய 03 உத்தியோகத்தர்களையும் கொண்டிருந்தது. அரசாங்க சபை சட்டத்துறையின் கடமைகளையும், நிறைவேற்றுத்துறையின் கடமைகளையும் மேற்கொண்டு வந்தது.

அரசாங்க சபையில் இயங்கிய ஏழு நிர்வாகக் குழுக்களின் தலைவர்களும், ஏழு அமைச்சர்களாக இயங்கினர். இவர்கள் கூட்டாக வரவு செலவுத் திட்டத்துக்;குப் பொறுப்பானவர் களாவார். அத்துடன், ஒவ்வொரு அமைச்சர்களும் தனித்தனியாக ஒதுக்கப்பட்ட சிவில் நிர்வாகத் திணைக்களத்திற்கு பொறுப்பானவர்களாவார்.

காலனித்துவ செயலாளருக்குப் பதிலாக அமைச்சர்களை அறிமுகப்படுத்தியமையானது இலங்கையின் சிவில் நிர்வாக அமைப்பில் பல வழிகளிலும் புரட்சியை ஏற்படுத்தியது.

அதிகாரங்கள் புதிய அமைச்சர்களிடம் வழங்கப்பட்டன. இதனால் சிவில் நிர்வாகத்தின் வடிவமும், அமைப்பும் மாற்றமடைந்ததுடன் அதிக எண்ணிக்கையிலான அரசாங்க சிவில் நிர்வாகத் திணைக்களங்கள் தோற்றமடைந்தன. சிவில் நிர்வாகத் திணைக்களங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமை இயல்பாகவே அரசின் செயற்பாட்டை விஸ்;தரித்திருந்தது. மறுபக்கத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட சிவில் நிர்வாகத் திணைக்களங்களையும், அமைச்சர்கள் மேற்பார்வையிடுவது கடினமானதாக இருந்தது.

அமைச்சர்கள் உருவாக்கம் என்பது ஒவ்வொரு அமைச்சின் சிவில் சேவைத் திணைக் களத்துக்குள்ளும் அதிகாரம் மையப்படுத்தலை ஏற்படுத்தியது. முக்கியமான தீர்மானங்கள் யாவும் சிவில் நிர்வாகத் திணைக்களத் தலைமை யகத்தினால் இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்டன.

சிவில் நிர்வாக அமைப்பில், திணைக்களங்கள் உருவாக்கப்பட்டமையானது பகுதிகள், பிரிவுகள் உருவாவதற்குக் காரணமாயிருந்தது. அத்துடன் நிலைக்குத்து வடிவிலான சிவில் நிர்வாகக் கட்டமைப்பு அரைகுறைத் தன்னாட்சியுடன் (Semi- Autonomous) இயங்கும் நிலை உருவாகியது. படிநிலை அமைப்பின் உச்சியில் அமைச்சர்களும், அவர்களுக்குக் கீழ்ப் பல பகுதிகள், பிரிவுகள் உருவாக்கப்பட்டு, இறுதியில் சிவில் நிர்வாகம் கிராமங்கள் வரை பரந்து விரிந்து சென்றது.

சர்வஜன வாக்குரிமையை அடிப்படையாகக் கொண்டு எழுச்சியடைந்த அரசியல் நிறுவனங்கள் ஓரளவு சுய அரசாங்க இயல்பைப் பிரதிபலிக்கின்றவைகளாகக் காணப்பட்டன. இதற்கு ஏற்ப சிவில் சேவையின் இயல்புகளும்,பங்களிப்புக்களும் பூரணமாக மாற்றிக் கொள்ளப்பட்டன. சிவில் சேவையாளர்கள் மக்களிடம் இருந்து தோற்றம் பெறும் அரசியல் அதிகாரத்துகுப் பொறுப்புக் கூற வேண்டியவர்களாக இருந்தனர். இவ்விடத்தில் நாம் தர ரீதியான மாற்றத்தை (Qualitative Change) சிவில் சேவையில் அவதானிக்க முடிந்தது. அதாவது, சிவில் சேவையானது, காலனித்துவப் பண்பு கொண்ட நிலையில் இருந்து, மக்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய சிவில் சேவை அமைப்பாகப் புனரமைக்கப்பட்டது. இம்மாற்றம் அரசாங்கச் செயற்பாட்டில் ஒரு திருப்திகரமான நிலையை ஏற்படுத்தியிருந்தது. தேர்தல் தொகுதி மூலம் தெரிவு செய்யப்பட்ட சட்ட சபையானது, சட்டம், ஒழுங்கு,வருமானவரி சேகரிப்பு என்பவற்றில் அதிக கவனம் செலுத்துவதில் இருந்து, விடுபட்டு, மக்களுடைய சமூக, பொருளாதார வளர்ச்சியில் இயல்பாகவே கவனம் செலுத்துகின்ற அமைப்பாக அபிவிருத்தியடைந்தது.

சிவில் சேவையில் திட்ட அமுலாக்கல் செயற்பாடு மிகவும் தெளிவான ஒன்றாகக் காணப்பட்டது. சிவில் சேவையானது, அரசாங்க சமூக, பொருளாதார நலன்புரித் திட்டங்களை அமுலாக்குகின்ற நிறுவனமாக மட்டும் நின்று கொள்ளாமல், அரசாங்கத்தின் சமூக, பொருளாதார, நலன்புரிக் கொள்கைகளுக்கு ஆலோசனை கூறுகின்ற நிறுவனமாகவும் மாற்றிக் கொள்ளப்பட்டது. இது காலனித்துவ அரசாங்கத்தின் வரி சேகரிப்பு, சட்டம், ஒழுங்கு என்பவைகளைப் பேணுகின்ற நிறுவனம் என்ற பண்பிலிருந்து அபிவிருத்திப் பண்பு கொண்ட அமைப்பாகச் சிவில் சேவை மாறுவதற்கு உதவியிருந்தது. இம்மாற்றமானது சிவில் சேவை விஸ்தரிப்பின் அவசியத்தை உணர்த்தியதுடன், இக்காலப்பகுதி சிவில் சேவை விஸ்தரிப்புக் காலப்பகுதி எனவும் அழைக்கப்பட்டது.

இவற்றை இலகுபடுத்தும் வகையில் டொனமூர் அரசியல் திட்டத்தின் கீழ்,1933ஆம் ஆண்டு சிவில் சேவை தொடர்பாக ஒரு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இச்சீர்திருத்தம், திறைசேரியை மீள் ஒழுங்கமைப்பது தொடர்பான விடயங்களை உள்ளடக்கியிருந்தது. பிற்காலத்தில் சிவில் சேவையானது அபிவிருத்தி அடைவதற்கு இச்சீர்திருத்தம் பெரும் பங்காற்றியிருந்தது. திறைசேரியில் நிதியும், விநியோகமும் என்று ஒரு பிரிவும், நிறுவனம் (Establishments), என்று ஒரு பிரிவும் உருவாக்கப்பட்டது. நிதியும், விநியோகமும் என்ற பிரிவு, களஞ்சியங்களுடன் தொடர்புடைய விடயங்கள், ஒப்பந்தக்காரர்கள், கேள்விப்பத்திரம் (Tenders) போன்ற விடயங்களுக்குப் பொறுப்பாக்கப்பட்டது. நிறுவனக்கிளை ஊதியம், ஓய்வூதியம்,விடுமுறை ஒழுங்குகள் போன்ற விடயங்களை நெறிப்படுத்தும் அலகாகத் தொழிற்பட்டது. சிவில் சேவையில் திறைசேரியின் கட்டுப்பாடு, அல்லது செல்வாக்கு என்பது தவிர்க்க முடியாத ஓர் இயல்பாகக் காணப்பட்டிருந்தது. திறைசேரியின் கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாக இயங்கும் சிவில் சேவையாக இது இருக்கவில்லை.

டொனமூர் சீர்திருத்தம் சிவில் சேவையில் இலங்கையர் மயவாக்கம் ஏற்படுவதைத் துரிதப்படுத்தியிருந்தது. இலங்கையின் பொருளாதாரம் அபிவிருத்தியடைய வேண்டுமாயின், காலனித்துவ அரசாங்கத்தின் சிவில் சேவையானது இலங்கையர்களை முழுஅளவில் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற கருத்து வலுப் பெறலாயிற்று. இலங்கையர் மயவாக்கம் என்ற சிந்தனையை உள்வாங்கி சிவில் சேவையை நோக்குகின்றபோது, இலங்கையர்கள் கொள்கை உருவாக்கம் மீது ஏற்கனவே பாரிய கட்டுப்பாட்டினைக் கொண்டிருந்தமை புலனாகும். உண்மையில் இலங்கையர் மயவாக்கக் கொள்கையானது இலங்கையர்கள் உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கின்ற ஒரு செய்முறையாகக் காணப்பட்டது. தேசிய சிவில் சேவையின் எழுச்சிக்கு இது மிகவும் அவசியம் என்பது உணரப்பட்டது. இவ்வுணர்வானது ஏற்கனவே ஆங்கிலம் கற்ற சிறியளவிலான உயர்குழாமிலிருந்து எழுச்சியடைவதாகவும் இருந்தது. இதன் விளைவாக 1939ஆம் ஆண்டு சிவில் சேவையில் இலங்கையர்களுடைய எண்ணிக்கை 78 % மாகக் காணப்பட்டது எனப் பேராசிரியர் விஸ்வவர்ணபால குறிப்பிடுகின்றார்.

டொனமூர் அரசியல் திட்டம் பொதுச் சேவைகள் ஆணைக்குழு ஒன்றை உருவாக்கியது. இவ்வமைப்பானது சிவில் சேவை உத்தியோகத்தர்களின் நியமனம், பதவியுயர்வு, மாற்றம், நீக்கம், ஒழுக்கக்கட்டுப்பாடு என்பவற்றிற்குப் பொறுப்பாக இருந்தது. மேலும் ஆளுநருக்கு இவ்விடயங்கள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கும் நிரந்தர அமைப்பாகவும் இது செயற்படும் என அரசியல் திட்டம் கூறியது. உண்மையில் டொனமூர் உருவாக்கிய நிர்வாகக் குழுமுறையுடன் தனது செயற்பாட்டைப் பகிர்ந்து கொள்கின்ற ஓர் அமைப்பாகவே பொதுச் சேவை ஆணைக்குழு காணப்பட்டிருந்தது.

மாகாண நிர்வாகம்

டொனமூர் சீர்திருத்தம் அரசாங்க அதிபரிடம் விடப்பட்டிருந்த மாகாண நிர்வாகத்தை மீளப் பெற்றிருந்தது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள் திணைக்களங்களுக்குத் தலைவர்களாக்கப்பட்டு, அவற்றின் செயற்பாடுகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனால் ஒவ்வொரு அமைச்சர்களும் தமக்குரிய சிவில் நிர்வாகத் திணைக்களத்தின் செயற்பாடுகளைத் தாமே நெறிப்படுத்தினர். இதற்காக அரசாங்க அதிபர் பயன்படுத்தப்பட்டிருந்தார். அரசாங்க அதிபர் உள்விவகார அமைச்சினால் (Home Affairs) நெறிப்படுத்தப்பட்டுக், கட்டுப்படுத்தப்பட்டிருந்தார். 1931ஆம் ஆண்டுக்கும் 1946ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டகாலத்துக்குள் அரசாங்க அதிபர் சிவில் நிர்வாகத் திணைக்களங்களை இணைக்கின்ற இணைப்பாளராக மாற்றப்பட்டார். இவருடைய இணைப்புக்கடமையானது மாகாண மட்டத்திலிருந்து, மாவட்ட மட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னர் அரசாங்க அதிபரால் மேற்கொள்ளப்பட்ட கடமைகள் யாவும் தற்போது சிவில் நிர்வாகத் திணைக்களத் தலைவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் அரசாங்க அதிபரின் கடமைகளும் பொறுப்புக்களும் குறைக்கப்பட்டதுடன் இவர் தனித்து இணைப்பாளராகச் செயற்படக்கூடியவராகவுள்ளார்.

அமைச்சரவை முறை அறிமுகப்படுத்தப்பட்டுத் திணைக்களங்கள் உருவாக்கப்பட்டமை அதிகளவு துணை நிர்வாகப்பிரிவுகள் உருவாக்கப்படுவதற்குக் காரணமாயிருந்தது. டொனமூர் சீர்திருத்தம் நிலைக்குத்து வடிவிலான நிர்வாக அமைப்பினைத் தோற்றுவித்தது. திணைக்களங்களும், துணை நிர்வாகப் பிரிவுகளும் தமது தலைமையகங்களைக் கச்சேரிகளில் நிறுவிச் செயற்படத் தொடங்கின.

ஓவ்வொரு பாரிய திணைக்களங்களும் தமக்குத் தேவையான மேலதிகக் கிளைகளை அல்லது பகுதிகளை நிறுவிச் செயற்பட்டன. இக்காலத்தில் ஒவ்வொரு திணைக்களங்களும் தமக்கான கிளைகளை ஒவ்வொரு பிராந்தியங்களிலும் கொண்டிருந்தன. இவ்வகையில், 1939 ஆம் ஆண்டு அளவைத் திணைக்களம் ஏழு பிராந்திய அலுவலகங்களையும், பொது வேலைத் திணைக்களம் ஒன்பது பிராந்திய அலுவலகங்களையும், வனத்திணைக்களம் நான்கு பிராந்திய அலுவலகங்களையும், நீர்ப்பாசனத் திணைக்களம் ஆறு பிராந்திய அலுவலகங்களையும், கல்வித் திணைக்களம் நான்கு பிராந்திய அலுவலகங்களையும், சுகாதாரத்திணைக்களம் ஒன்பது பிராந்திய அலுவலகங்களையும் கொண்டிருந்தன.

இவைகள் தேவைப்படும் போது மாவட்டத்தில் மேலும் பல உப பிரிவுகளைக் கொண்டிருந்தன. உதாரணமாக பொது வேலைத் திணைக்களம் முப்பத்து நான்கு உப பிரிவுகளைக் கொண்டிருந்தது. உள்ளுராட்சித் திணைக்களம் 1946ஆம் ஆண்டு தனக்கான பிராந்திய திணைக்களங்களை உருவாக்கிக் கொண்டது. இதன் அதிகாரங்களை இவ்வளவு காலமும் அனுபவித்து வந்த அரசாங்க அதிபர், இவ் வாண்டில் அதனை உள்ளூராட்சி உதவி ஆணையாளரிடம் ஒப்படைத்தார்.

உண்மையில் மாகாண மட்ட நிர்வாகத்தில் ஏற்பட்ட இம்மாற்றமானது அபிவிருத்திச் செயற்பாட்டுக்;கான ஒழுங்கமைப்பில் சிறப்பான ஒரு நிலையை ஏற்படுத்தியிருந்தது. இதுவரைகாலமும் “நிர்வாக இணைப்பு” என்பதில் காணப்பட்டு வந்த சிக்கல் என்பது இதன் மூலம் தீர்த்து வைக்கப்பட்டது. மேலும் நிர்வாக ஒழுங்கமைப்பு முறைமையானது புதியதொரு வடிவத்தைப் பெறக்கூடியதாகவும் இருந்தது. மையவாக்க நிர்வாக அமைப்புக்குள் பிரமிட் வடிவிலான அல்லது படிநிலை அமைப்பிலான நிர்வாகப் பரவலாக்க வடிவத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது.

தேசிய சிவில் சேவையின் உறுதியான வளர்ச்சியையும், விஸ்தரிப்பினையும் சோல்பரி அரசியல் திட்டத்தின் பின்னரே அவதானிக்க முடிந்தது. அதாவது, 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதுடன் தேசிய சிவில் சேவையின் சகாப்தம் என்பதும் எழுச்சியடையலாயிற்று. சுதந்திர அரசாங்கத்தைப் பொறுத்த வரை அரசியல் அதிகாரத்தைப் பொறுப்பேற்பதுடன், பொருளாதார முகாமைத்துவப் பொறுப்பையும், சமூக நல உயர்வுக்கான பொறுப்பையும் ஏற்க வேண்டியிருந்தது. மக்கள் ஆதரவுடன் தெரிவுசெய்யப்படும் ஓர் அரசாங்கத்துக்கான இப்பொறுப்புகள் யாவும் சிவில் சேவையினாலேயே நிறைவேற்றப்பட வேண்டியிருந்தது. இது சிவில் சேவையின் கடமையைத் தார்மீகத் தன்மை பொருந்திய ஒன்றாக ஆக்கியதுடன், இலங்கையின் சிவில் சேவை அபிவிருத்தியின் புதிய பாதைக்கான அரசியல் சூழ்நிலை ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. புதிய அரசாங்கம் சமூக,பொருளாதார விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்தது. குறிப்பாகக் காலனித்துவப் பண்பில் வளர்ச்சியடைந்த பொருளாதார அமைப்பினைத் தேசிய பொருளாதாரப் பண்பில் வளர்த்தெடுக்க வேண்டியிருந்தது. இது எவ்வித சந்தேகமுமின்றி சமூக, பொருளாதார அபிவிருத்தியையும், நலன்புரித் திட்டங்களையும் செயற்படுத்தும் பாரிய பொறுப்பினைச் சிவில் சேவைக்கு வழங்கியது. தேசத்தினைக் கட்டியெழுப்புவதில் சிவில் சேவையின் பங்கு உயர்ந்ததாக மதிப்பிடப்பட்டது.

சோல்பரி சீர்திருத்தமும், சிவில் நிர்வாக அமைப்பும்.

சுதந்திர அரசின் புதிய அரசாங்கம் பாராளுமன்ற அரசாங்க முறையினை அறிமுகப்படுத்தியது. பாராளுமன்றம், அமைச்சரவை ஆகிய அரசியல் நிறுவனங்கள் இரண்டும் கொள்கை உருவாக்கம், அமுலாக்கம் ஆகியவற்றிற்குப் பொறுப்புடையதாக்கப்பட்டது. பாராளுமன்ற அரசியல் முறை இயல்பாகவே முக்கியமான இணைப்புக் கடமைகளை ஆற்றுகின்ற நிறுவனமாகக் காணப்பட்டது. இவ்விணைப்பானது ஒரு முனையில் அரசியலுக்கும், நிர்வாகத்துக்கும் இடையிலான உறவினைத் தீர்மானித்தது. நிர்வாகப் பொறுப்பைச் சம்பிரதாயமாகக் கொண்டிருக்கும் அமைச்சர்கள் ஒவ்வொரு அமைச்சுக்கும் பொறுப்பானவர்களாகக் காணப்பட்டார்கள். ஒவ்வொரு அமைச்சும் பல திணைக்களங்களை உருவாக்கியது. இச் செய்முறையானது சுதந்திரத்துக்கு முன்பிருந்த நிலையை விட முற்றிலும் வேறுபட்ட நிலையாகவே காணப்பட்டது. அமைச்சர்கள் அரசியல்வாதியாக மட்டுமன்றித், தனது அமைச்சின் நிர்வாகத் தலைவர்களாகவும் இருந்தனர்;. ஒவ்வொரு அமைச்சுகளும் நிரந்தர செயலாளர்களைக் கொண்டிருந்தன. இச்செயலாளர்,நிர்வாகத்தின் உயர்நிலையில் இருந்து சிவில் நிர்வாகக் கடமைகளை மேற்பார்வை செய்பவராக இருந்தார். இவரே அமைச்சுத் திணைக்கள நிர்வாகப் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றினார். ஆயினும்,பொதுவான வழிகாட்டல்களும், கட்டுப்பாடுகளும் செயலாளர்களுக்கு அமைச்சர்களால் வழங்கப்பட்டன.

நிர்வாகச் செயற்பாடுகள் சிவில் நிர்வாகத் திணைக்களங்களை அடிப்படை அலகாகக் கொண்டு நடைபெற்றன. இத்திணைக்களங்கள் எண்ணிக்கையில் பலவாக காணப்பட்டாலும், அமைப்பு ரீதியாக இவைகளைப் பின்வருமாறு பட்டியல் படுத்த முடியும். அவையாவன: அபிவிருத்தித் திணைக்களம், சமூக சேவைத் திணைக்களம், விஞ்ஞானத் திணைக்களம், நிர்வாகத் திணைக்களம் என்பவைகளாகும். இத் திணைக்களங்கள் நிர்வாகச் செயற்பாட்டுக்கான சுதந்திர நிர்வாக அலகுகளாகும். இவற்றை மையமாகக் கொண்டு பல எண்ணிக்கையிலான திணைக்களங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

இவ்வாறு பல எண்ணிக்கையில் திணைக்களங்கள் தோற்றுவிக்கப்பட்டமை சிவில் சேவையில் பல பிரச்சினைகளைத் தோற்றுவித்திருந்தது. அதாவது,திணைக்களங்களுக்கிடையில் இணைப்பு என்பது சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை புதிய, பழைய திணைக்களங்களுக்கு இடையில் நிலவிய போட்டி, பூசல்கள் அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதில் காலதாமதத்தை ஏற்படுத்தின.

சுதந்திர அரசின் சிவில் நிர்வாக சேவையில் திறைசேரியின் முக்கியத்துவம் தொடர்ந்தும் பேணப்பட்டே வந்தது. அதாவது திறைசேரியை மையமாகக் கொண்ட சிவில் நிர்வாக அமைப்பே தோற்றுவிக்கப்பட்டது. இது நிர்வாக அதிகாரத்தில் திறைசேரி முதன்மையான சக்தியாக எழுச்சியடைவதை வெளிப்படுத்துவதாகவும் இருந்தது. திறைசேரியின் நெறிப்படுத்தும் பொறுப்பு நிதி அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்தது. திறைசேரி, திணைக்களங்களின் செலவீனங்களை மேற்பார்வையிடும் பொறுப்பைக் கொண்டிருந்தது. இதனால் செலவீனங்களுக்கான பிரேரணைகள், பொருளாதார மேம்பாட்டுக்கான செலவீனங்கள் அனைத்திற்கும் முறையான கணக்குகளைப் பேணமுடிந்தது. அத்துடன் எல்லாத் திணைக்களங்களதும் நிதி நிலையை உயர் நிலையில் பேணவும் முடிந்தது.

மறுபக்கத்தில், சிவில் வேலைத்திணைக்களங்கள் அதிகரிக்க சிவில் சேவையாளர்களும் சிவில் சேவை நிபுணர்களும் அதிகரித்தனர். இலங்கையில் சிவில் சேவை “உயர் வர்க்கப் பணிக்குழுவாக” மாற்றமடைந்தது. மேலும் ஒதுக்கப்பட்ட பல உயர் பதவிகளையும் உருவாக்கிக் கொண்டது. அதாவது கணக்காளர் சேவை, இலிகிதர்சேவை போன்ற நிபுணத்துவ சேவைகள் உருவாக்கப்பட்டன. இப்பண்பு சிவில் சேவையை “நிபுணத்துவ சிவில் சேவையாக மாற்றியதுடன் சிவில் சேவை நிபுணர்கள் உருவாக்கப்படுவதற்கும் துணை புரிந்தது.

சுதந்திர அரசியல் திட்டத்தின் கீழ் பொதுச்சேவை ஆணைக்குழு மறு பரிசீலனைக்குட்படுத்தப்பட்டிருந்தது. சிவில் சேவையாளர்களின் நியமனம், மாற்றம், பதவிநீக்கம், ஒழுக்கக்கட்டுப்பாடு ஆகிய விடயங்களை உருவாக்கும் மைய அதிகார சபையாக இது மாற்றப்பட்டது. பொதுச் சேவை ஆணைக் குழுவின் சுதந்திரமான செயற்பாடு, சுதந்திர இலங்கையில் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் சட்ட சபையானது சிவில் சேவையில் தலையீடு செய்யலாம் என்பது முன்னுணரப்பட்டதனால், இதன் வழி சிவில் சேவைக்கு ஏற்படக் கூடிய பாதிப்பைத் தடுக்கும் நோக்குடன் சுதந்திர பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயற்பாடு எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அரசியல் சார்பற்ற ஒரு பொதுச் சேவையை மக்களுக்கு வழங்க முடியும் எனவும், சிவில் சேவைமீது பொதுச் சேவைகள் ஆணைக்குழு மாத்திரமே செல்வாக்கும், கட்டுப்பாடும் செலுத்தும்; எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

தொகுத்து நோக்குகின்ற போது சுதந்திர இலங்கையில் சிவில் சேவையில் இரண்டு பரிமாணங்கள் வெளிப்படுவதை அவதானிக்க முடிகின்றது. ஒன்று திறைசேரி நிர்வாகப் படிநிலை அமைப்பின் உச்சஅலகாகக் காணப்பட்டது. இது முழுநிர்வாகத்தின் மையமாகக் காணப்பட்டதுடன், எல்லாத் திணைக்களங்களுக்குமான பொது நிர்வாகப் பொறுப்பு, இணைப்புத் திறமையை உத்தரவாதப்படுத்துதல், முன்னேற்றம் என்பவற்றுக்குப் பொறுப்பாக இருந்தது. மற்றையது பொதுச் சேவைகள் ஆணைக்குழு சிவில் சேவையாளர்களின் நியமனம், மாற்றம், நீக்கம், ஒழுக்கக்கட்டுப்பாடு என்பவற்றைப் பேணுகின்ற அமைப்பாகக் காணப்பட்டது. சுதந்திரமான பொதுச் சேவைகள் ஆணைக்குழுவானது அரசியல் தலையீடு இல்லாத பாதுகாப்பான நடுவுநிலையான சிவில் சேவையின் தோற்றத்தை உத்தரவாதப்படுத்துவதாக இருந்தது.

மாவட்ட மட்டநிர்வாகச் செயற்பாட்டைப் பொறுத்த வரையில் மாவட்டங்களின் சிவில் நிர்வாகத்திற்கான உப அலகுகள் உருவாக்கப்பட்டன. அரசாங்க அதிபர் முறைமை டொனமூர் காலத்துக்குப் பின்னர் நாடளாவிய ரீதியில் பலவீனம் அடைந்த ஒரு சிவில் நிர்வாக அலகாக மாற்றமடைந்தது. இது அரசாங்க அதிபரின் வரம்பெல்லைக்கு வெளியே பல திணைக்களங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருந்தது. இதனால் அரசாங்க அதிபர் மாவட்ட மட்டத்திலிருந்து தனது செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம் மாகாணமட்டத்தில் செயற்பட்ட அரசாங்க அதிபர் மாவட்ட மட்டத்திற்குக் கொண்டுவரப்பட்டமையேயாகும். மாகாண மட்டத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த இணைப்புச் செயற்பாடு என்பது தற்போது மாவட்ட மட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசாங்க அதிபர் தலைமையில், மாவட்ட சிவில் நிர்வாக அபிவிருத்திக்கான பங்களிப்பு வழங்க பட வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. இதன் போது அரசாங்க அதிபரது தலைமையின் கீழ் விவசாயக் குழு, மாவட்ட இணைப்புக் குழு என்பன கொண்டுவரப்பட்டிருந்தன. சுதந்திரத்துக்குப் பின்னரான மாவட்ட நிர்வாகமானது அரசாங்க அதிபரின் அபிவிருத்திச் செயற்பாட்டையும், மத்திய அரசாங்கத்துடனான மைய இணைப்புச் செயற்பாட்டையுமே வெளிப்படுத்தியிருந்தது.

சிவில் சேவை முரண்பாடுகளும், மாற்றங்களும்

1956ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததுடன் சிவில் சேவையின் இலக்கும், சிந்தனையும் மாற்றத்துக்குள்ளாகியது. இன்னொரு வகையில் கூறின் 1956ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றம் சமூக, அரசியல் தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இத்தாக்கமானது சிவில் சேவையின் அமைப்பு, தேவை, செயற்பாடு என்பவற்றின் ஊடாகவே பிரதிபலித்திருந்தது. இக்கால கட்டத்தில் அரசியல் நவீனத்துவமும், சிவில் சேவையும் சமூக, கலாசார தேவைகளை மையமாகக் கொண்ட கொள்கைகளையே உருவாக்கியது. அனுபவம், திறமை என்பன மழுங்கடிக்கப்பட்டன. அதேநேரத்தில் சமூக,பொருளாதார, அபிவிருத்தித் திட்டங்களை அமுலாக்குவதற்கான காலத்தேவையாக இது எடுத்துரைக்கப்பட்டது.

பிரதமமந்திரி பொருளாதார அபிவிருத்திக்கான முக்கிய பொறுப்புக்களை நேரடியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 1965 இல் பிரதமமந்திரியின் கீழ் திட்டமிடல், பொருளாதார விவகாரங்கள் கொண்டுவரப்பட்டன. இதனால் பிரதமமந்திரி திட்டமிடல், இணைப்பு ஆகிய விடயங்களுக்குப் பொறுப்பு வாய்ந்தவராக்கப்பட்டார். நாடளாவிய ரீதியில் சமூக, பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது மாவட்ட மட்டத்தில் நிர்வாகப் பரவலாக்கல் செயல் முறையை வேண்டி நின்றது. மாவட்ட மட்டத்தில் திணைக்களங்கள் அதிகரிக்கப்படலாயிற்று. இதனால் திணைக்களங்களின் ஆட்சேர்ப்புக்கான தேவை அதிகரித்தது. இது சிவில் சேவையின் அபிவிருத்தியை மேலும் வளர்ப்பதாக அமைந்திருந்தது.

ஒரு திணைக்களத்தின் ஊழியர்கள் இரு வகையில் தரப்படுத்தப்பட்டனர். ஒரு சாரார் உத்தியோகத்தர்கள் தரத்திலான ஊழியர்களாகவும், மறுசாரார் உத்தியோகம் சாராத ஊழியர்களாகவும் வகைப்படுத்தப்பட்டனர். உத்தியோகத்தர் தரத்தில் உள்ளவர்கள் மாவட்டத் திணைக்களங்களுக்கான தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். உத்தியோகம் சாராத தரத்தில் உள்ளவர்கள் பிரதேச, கிராமிய மட்டங்களில் கடமையாற்றுபவர்களாகக் காணப்பட்டார்கள்.

சிவில் சேவையில் ஏற்படுத்தப்பட்ட இம்மாற்றங்களை இலகு படுத்தவும் வேலைவாய்ப்பின்மையைப் போக்கவும் 1956 ஆம் ஆண்டு அரசாங்க உத்தியோக மொழிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது சிவில் சேவையின் பரிமாணம், வளர்ச்சி, எதிர்காலம் என்பவற்றில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. நடைமுறையில் உத்தியோக மொழியாக இருந்த ஆங்கிலம் கைவிடப்பட்டு அதற்குப் பதிலாகச் சிங்களம் உத்தியோக மொழியாக்கப்பட்டது. ஒருவர் அரசாங்க உத்தியோகத்தராகக் கடமையாற்ற வேண்டுமெனின் ஆகக் குறைந்தது கல்வி பொது தராதரப்பத்திர சாதாரண தரத்தில் சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனக்கூறப்பட்டது. 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிங்கள மொழிச் சட்டம் ஆங்கிலத்தில் கற்ற பெரும்பான்மையான தமிழ் உத்தியோகத்தர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியது.

1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிங்கள மொழிச் சட்டமானது நிர்வாக முறைமையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. ஆயினும், 1960 ஆம் ஆண்டு; பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தமானது,சிவில் சேவையில் உடனடியாக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அழுத்தத்தைக் கொடுத்திருந்தது. நிர்வாக ஒழுங்கமைப்பில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. இது சிவில் சேவையின் ஒழுங்கிலும், வழிமுறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் அடிப்படை நிர்வாக அமைப்பு முறைமையில் மாற்றம் ஏற்பட்டது.

1963ஆம் ஆண்டு இலங்கையின் சிவில் சேவை அமைப்பு ஒழிக்கப்பட்டு, இதற்குப் பதிலாக இலங்கையின் நிர்வாக சேவை (Ceylon Administrative Service – CAS) என்பது தோற்றுவிக்கப்பட்டது. இது சிவில் சேவையில் ஏற்படுத்தப்பட்ட முதல் மாற்றமும், புதிய ஏற்பாடும் எனக் கூறப்படுகின்றது. பொது நிர்வாக முறைமையின் CAS உருவாக்கமானது அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாட்டில் மிகவும் திறமையான பங்களிப்பினைச் செய்யக் கூடியதாக இருந்தது. இதற்காகச் சிவில் சேவை விஸ்தரிக்கப்பட்டு, அதிகளவு சிவில் சேவையாளர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பொதுச்சேவை அமைப்பானது படிநிலை அமைப்பின் பலபகுதிகள், தரங்கள் கொண்டதாக உருவாக்கப்பட்டதுடன், ஒன்றுபட்டுச் செயற்படக் கூடிய தன்மையையும் பெற்றுக் கொண்டிருந்தது. இவ்வமைப்பு முறையை பின்பற்றியதன் மூலம், சிறப்பான தீர்மானம் எடுக்கும் செய்முறையைப் பேணவும், குறிப்பாக அபிவிருத்தி வேலைகளைத் துரிதப்படுத்தவும், முக்கியமான நிர்வாக விடயங்களைத் திறமையுடன் செயற்படுத்தவும் துணைபுரிந்ததாகக் கூறப்படுகின்றது.

1960ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பொதுநிர்வாகமானது துரித வேலைத்திட்டங்களுக்கு ஏற்ற ஓர் அமைப்பாக வளர்ச்சி கண்டது. மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய பங்கு, அபிவிருத்திக் கொள்கைகள், திட்டங்களை அங்கீகரித்து அமுல்படுத்துவதாக இருந்தது. இவ்வாறு மாவட்ட நிர்வாகமானது மீள் ஒழுங்கமைக்கப்பட்டதன் மூலம் சில இலக்குகளை அடைய முடியும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

மத்திய நிர்வாகத்திற்கும், அரசாங்க அதிபருக்கும் இடையில் நேரடியானதும் செயலூக்கம் மிக்கதுமான தொடர்பைப் பேணமுடியும்.
கச்சேரி முறைமையில் மீள் ஒழுங்கமைப்பு ஏற்பட்டமை.
அபிவிருத்தி ஒழுங்கமைப்பு முறைமை மாவட்ட அலுவலகச் செயற்பாட்டில் ஒருங்கிணைக்கப்பட்டது.

அபிவிருத்திச் செயற்பாட்டில் வெகுஜனப் பங்குபற்றலுக்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது..

நிர்வாக மீள் ஒழுங்கமைப்பில் காணப்பட்ட இறுதியான சிறப்பம்சம் யாதெனில், அரசாங்க முகாமைத்துவமானது வளப்படுத்தப்பட வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. முகாமைத்துவப்பயிற்சி, அலுவலக முகாமைத்துவ முறையின் வளர்ச்சி என்பன முதன்மையாக வளப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது. இதன்மூலம் ஏற்பட்ட முக்கிய பரிமாணம் யாதெனில் 1966களில் நிர்வாகக் கற்கைகளுக்கான நிலையம் (Academy of Administrative Studies) நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தில் முகாமைத்துவப் பயிற்சி, நுட்பங்கள் போதிக்கப்பட்டன.

கூட்டு முன்னணி அரசாங்கம்

1970ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் கூட்டு அரசாங்கம் ஒன்று வெற்றி பெற்றது. இவ் அரசாங்கம் கணிசமான அளவில் இடதுசாரி மனோபாவம் கொண்ட மாக்சிசவாதிகளைக் கொண்டிருந்தது. இவர்கள் அரசியல் முறைமையினை மாற்ற விரும்பி அரசியல் திட்டத்தினைப் புதிதாக வரைந்து கொண்டனர். 1948ஆம் ஆண்டு சுதந்திர அரசாங்கத்தின் அரசியல் திட்டமானது பொதுச் சேவை ஆணைக் குழுவைத் தோற்றுவித்திருந்தது. ஆயினும்,1956ஆம் ஆண்டின் பின்னர் சுதந்திரமான பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாடானது அமைச்சரவையின் கட்டுப்பாட்டுக்குள்ளாகியது. இச்செய்முறையானது பொதுச் சேவைகளின் நலனுக்கும் அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாட்டுக்கும் இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவித்தது. 1972ஆம் ஆண்டு அரசியல் திட்டமானது சிவில் சேவையாளர்களின் நியமனம், மாற்றம், நீக்கம், ஒழுக்கம் தொடர்பான பொறுப்புகளை அமைச்சர்களுக்கு வழங்கியிருந்தது. அமைச்சர்களுக்கு உதவியாகச் செயற்படுவதற்கென்று அரச சேவைகள் ஆலோசனைச் சபை ஒன்றைத் தோற்றுவிக்க அரசியல் திட்டம் ஏற்பாடு செய்திருந்தது. இதை விட அரச சேவை ஒழுக்காற்றுச் சபை ஒன்றையும் அரசியல் திட்டம் தோற்றுவித்திருந்தது. இச்சபையானது பொதுச்சேவைகள் ஆணைக்குழுவுக்குப் பிரதியீடாக உருவாக்கப்பட்ட ஆலோசனைச் சபையாகும். இச்செய்முறை மூலம் சுதந்திரமான பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாடு இல்லாதொழிக்கப்பட்டு, அமைச்சரவையின் நேரடியான கட்டுப்பாட்டுக்குட்பட்ட சிவில் சேவையை அரசியல் திட்டம் தோற்றுவித்ததுடன், அரசியல் மயப்படுத்தப்பட்ட சிவில் சேவையை இவர்கள் உருவாக்கியும் கொண்டார்கள்.

ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம்

1978ஆம் ஆண்டு அரசியல் திட்டமானது அடிப்படையில் எவ்விதமான பாரிய மாற்றங்களையும் சிவில் சேவையில் ஏற்படுத்தியிருக்கவில்லை. ஆயினும், 1972ஆம் ஆண்டு அரசியல் திட்டம் உருவாக்கிய இரண்டு ஆலோசனைச் சபைகளுக்கும் பதிலாக மீண்டும் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவைத் தோற்றுவித்துள்ளது. இவற்றை விட 1978ஆம் ஆண்டு பதவியேற்ற புதிய அரசாங்கம் “அபிவிருத்தியில் மக்கள் பங்கு பற்றல்” என்ற எண்ணக்கருவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முனைப்புடன் செயற்பட்டது. இது மாவட்ட நிர்வாக முறைமைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டிய தேவையை ஏற்படுத்தியது. இச் செய்முறை, திட்ட அமுலாக்கத்தின் முக்கிய அம்சமாக விளங்கும் எனவும் கூறப்பட்டது. மாவட்ட அபிவிருத்தி சபைகள் ஒவ்வொரு மாவட்டத்தினதும் உயர் நிர்வாக அலுவலகங்களாக மாற்றப்பட்டன. அரசாங்க அதிபர் ஒவ்வொரு மாவட்டத்தினதும் திட்ட அமுலாக்கத்திற்கும், முன்னேற்றத்திற்கும் பொறுப்பான வராக்;கப்பட்டார். இவர் மாவட்ட அமைச்சரின் செயலாளராக இருந்து பணிபுரிந்தமை இதற்கு வாய்ப்பாக அமைந்தது. இவ் ஏற்பாடுகள் அரசாங்க அதிபர் ஒவ்வொரு அமைச்சர்களுடனும் தொடர்புடைய விடயங்களைத் தேசிய திட்டமிடலுக்கு ஏற்ப மாவட்ட மட்டத்தில் வழிநடத்திச் செல்ல வாய்ப்பாக இருந்தது.

மாவட்ட மட்டத்துக்கு அடுத்த நிலையில் பிரதேச அபிவிருத்திச் சபைகள் தோற்றுவிக்கப்பட்டன. இவை ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபர்; பிரிவுகளிலும் அபிவிருத்தித் திட்டமிடல் அமுலாக்கங்களில் ஈடுபடும் எனவும் கூறப்பட்டது. உதவி அரசாங்க அதிபர் இச்சபைகளின் செயலாளராக இருந்து பணிபுரிவார். இச்சபைகளின் செயற்பாடுகளாகப் பிரதேச அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்குவது, அபிவிருத்திச் செயற்பாடுகளை இணைப்பது, திட்ட அமுலாக்கங்களை மீளாய்வு செய்வது போன்ற விடயங்கள் கூறப்பட்டன.

இலங்கையின் இன்றைய சிவில் சேவையின் செயற்பாடானது இந்த நூற்றாண்டுக்குரிய அபிவிருத்திப்பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றி விடுவதேயாகும். காலனித்துவ அரசாங்கத்தின் கருவியாக மட்டும் செயற்பட்டு வந்த சிவில் சேவையானது இன்று தேசிய அபிவிருத்தியைத் துரிதப்படுத்துகின்றதும், முன்னெடுத்துச் செல்கின்றதுமான முகவரகங்களாக மாறியுள்ளன. சிவில் சேவையானது இதுவரைபெற்ற வளர்ச்சியும், மாற்றமும் சமூக பொருளாதாரச் சூழ்நிலைகளின் தாக்கத்தின் வழி முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பது கருத்தில் கொள்ளத்தக்கதாகும்

Saturday, August 17, 2019

சார்க் அமைப்பின் நோக்கம் நிறைவேற்றப்பட்டதா?

சார்க் அமைப்பின் நோக்கம் நிறைவேற்றப்பட்டதா?


பொது மக்கள் நாளாந்த வாழ்க்கையை கொண்டு நடத்துவது தொடர்பான வழிமுறைகளை கொண்டு நிற்கின்றனர். தலைநகர் அல்லது முக்கிய வர்த்தக நகரங்கள் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்வாங்கப்பட்டிருப்பதால் பொது மக்கள் சற்று விலகியே இருக்கின்றனர். வைபவங்களுக்காக அல்லது பொது நிகழ்ச்சிகளுக்காக பெருந்தொகை லெவு செய்யப்படுவது தேவையற்ற லெவினம் என எதிர்க் கட்சி குழுவினர் குறை கூறுகின்றனர். சார்க் தலைவர்களின் மகா நாட்டுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளி?ல் கிடைக்கப்பெறும் நன்மைகள் தொடர்பில் விவாதங்கள் நடத்தப்பட்டன.

இருப்பினும் இதன் யதார்த்தம் என்ன?

சார்க் மகாநாட்டுக்காக பெருந் தொகையில் லெவு செய்து நடத்தப்பட்டது வெறுமனே கொண்டாட்டம் மட்டும் தான் இதன் உண்மையான பலன் தொடர்பில் மக்களிடமிருந்து ரியான தீர்வு கிடைத்ததா? இது தொடர்பில் முழுமையான ஆய்வு அவசியம்.

தெற்காசிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் மூக புரிந்துணர்வை கட்டியெழுப்புவதற்காக இந்த அமைப்பு அமைக்கப்பட்டது. என்ற 15ஆவது கூட்டத்தொடர் இலங்கையில் நடைபெற்றது.

இந்த அமைப்பில் ஆப்கானிஸ்தான் புதிய உறுப்பு நாடாக இணைந்து கொண்டுள்ளதுடன் 8 நாடுகளின் பொது மக்கள், ஊடகவியலாளர்கள், அதிகாரிகள், வெளிநாட்டு அமைச்ர்கள், மற்றும் அர தலைவர்கள் முதலானோர் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய கொள்கைத் திட்டங்கள் ம்பந்தமான கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளின் மக்கள் தொகை 1.5 பில்லியனுக்கு மேலானது. உலகப் பொருளாதாரத் தன்மை மற்றும் வல்லர நாடுகளின் பயணத்திற்கு அமைவாக தென்கிழக்காசிய நாடுகளின் பலம் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படலானது. 1970 ஆண்டுகளில் வங்களாதேத்தின் ஜனாதிபதி செய்யர் முஜிபுர் ரஹ்மானினால் முன்மொழியப்பட்ட இந்த கொள்கைக்கு அமைவாக ஆசிய நாடுகளின் பொருளாதார ஒன்றிணைப்பு அவசியம் என வலியுறுத்தப்பட்டது. 1980ஆம் ஆண்டுகளில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்வார்த்தையே இதற்கு அடிப்படையாக அமைந்தது. தெற்காசிய வெளிநாட்டு அமைச்ர்கள் 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொழும்பில் இது தொடர்பாக கூடினர்.

இதே ஆண்டில் ஆகஸ்ட் மாதமளவில் மீண்டும் இலங்கையில் கூடிய 5 நாடுகளின் பிரதிநிதிகள் சார்க் அமைப்பின் கொள்கைகள், நோக்கம் முதலானவற்றை பிரகடனப்படுத்தினர். தெற்காசிய நாட்டு மக்களின் மே நலன்கள் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், தந்திர பொருளாதாரம் மற்றும் மூக க்தியின் மூலம் முன்னேற்றம் காணுவதற்கான கொள்கை, நட்பு, நம்பிக்கை, புரிந்துணர்வு முதலான பல்வேறு விடயங்கள் இதில் உள்வாங்கப்பட்டன.

முதலாவது சார்க் நாட்டு தலைவர்களின் மகா நாடு 1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி முதல் வங்களாதேத்தில் உள்ள டாக்கா நகரில் நடைபெறலானது. 7 நாடுகள் கலந்துகொண்ட இந்த மகா நாட்டில் வெற்றியடைந்ததுடன் பின்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்காணிப்பு ரீதியில் சீன, ஐரோப்பிய அமைப்புகள், ஈரான், ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா முதலான நாட்டு பிரதிநிதிகள் ?ர்க் மகா நாட்டுக்கு முகமளித்துள்ளனர்.

6 தாப்தங்களுக்கு முன்னர் ஒரே சந்தர்ப்பத்தில் தொடர்ச்சியாக இந்தியா உள்ளிட்ட தெற்காசிய பிராந்தியம் உலக நாடுகளின் அவதானத்திற்கு உள்ளானது. அந்நிய ஏகாதிபத்தியவாதிகளின் பிடியிலிருந்து விடுபட்டதன் பின்னர் பல்வேறு வால்களுக்கு உள்ளான காலகட்டத்தில் நாடுகளுக்கு இடையே பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சினை பல ஏற்படலாயின. இதில் இந்தியா முக்கியமான நாடாகும். தந்திரம் கிடைக்கப்பெற்ற இந்தியாவில் இன்றும் கூட பல்வேறு இனத்தவர், பல்வேறுபட்ட மயம், பல்வேறு மொழி, பலதரப்பட்ட கலாசாரங்களுடன் ஒற்றுமை காணப்படுகின்றது. இருந்த போதிலும் பாகுபாடுகளின் காரணமாக பல நாடுகளில் இந்தியா ஒதுக்கப்பட்டிருந்த யுகத்தில் இருந்து இன்று நீங்கியுள்ளது. பொருளாதாரம் மற்றும் அரசியல் வட்டமொன்றை வகுத்துக்கொள்வதற்கு சார்க் பிராந்தியம் எடுக்கும் நடவடிக்கையில் இன்றுங் கூட பல்வேறு வால்களை எதிர்நோக்கியுள்ளது.

சார்க் நாடுகளின் கல்வி முதலானவை உயர்வான ஸ்தானத்தில் காணப்படுகின்றது. பௌத்தத்திற்கென தனியான வரவேற்பு உண்டு. தகவல் தொடர்பாடல், தொழில்நுட்பம் வேகமான வளர்ச்சி காட்டுகின்றது. முக்கியமான பிரச்சினையாக காணப்படும் வறுமையை தீர்த்துக்கொள்ள முடியும். அபிவிருத்தியைப் பொறுத்தவரையில் ஒன்றுக்கொண்று வேறுபட்ட கொள்கைளை காட்டுவதுடன் கொள்கை மற்றும் அராங்க நிர்வாகத்திற்கு எதிராக இருக்கும் பயங்கரவாதம், வறுமை ஆகியவற்றுக்கு நிகராக இந்த பிராந்தியம் வேறு முரண்பாடுகளையும் எதிர் நோக்கி இருக்கின்றது. காஷ்மீர் பிரச்சினையைப் போன்று இலங்கையில் சிவில் யுத்தச் சூழலும் சார்க் பிராந்தியத்தை அமைதியற்ற நிலைக்குள்ளாக்கியுள்ளது.

சார்க் நாடுகளிடையே புரிந்துணர்வும் பொருளாதாரத்தை வலுவுள்ளதாக மாற்றும் கொள்கை விடயத்தில் சார்க் அமைப்பின் முன்னுள்ள முக்கியதொரு விடயமாக இந்த பயங்கரவாதம் உள்ளது. பொருளாதார விடயத்தில் இந்த பிராந்தியத்தை நோக்கும் பொழுது, மொத்த னத்தொகை 1.5 பில்லியனில் மார் ஒரு பில்லியன் தொகையினர் இந்தியாவுடன் மற்றும் ஏனைய நாடுகளுடன் தந்திரப் பொருளாதார உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இதற்கமைய இந்து முத்திரத்தில் பொருளாதார வல்லர நாடாக இந்தியா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 1993 ஆம் ஆண்டில் சார்க் நாடுகளுக்கிடையே வரியைக் குறைக்கும் உடன்படிக்கையில் கைச்?த்திடப்பட்டதுடன் அதன் பின்னர் 11 வருடங்களின் பின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற 12ம் மகா நாட்டில் தெற்காசிய தந்திர வர்த்தகம் தொடர்பாக விபரம் வெளியிடப்பட்டது. இதற்கமைவான வட்டத்துக்குள் 2006 ஆம் ஆண்டு முதல் தந்திர வர்த்தக உடன்படிக்கையை அமுல்படுத்தவும், 2007ஆம் ஆண்டில் இறக்குமதி ஏற்றுமதி தொடர்பான வரியை மட்டுப்படுத்தி ஒரே சீரானதாக வகுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் இறுதியில் சார்க் அமைப்பு உலகம் முழுவதிலும் உள்ள இவ்வாறான புரிந்துணர்வுள்ள அமைப்புக்களுடன் ஒப்படுகையில் யெற்பாட்டு விடயத்தில் எத்தகைய ஸ்தானத்தில் இருக்கின்றது என்பது விமர்சிக்கப்பட வேண்டியது முக்கியமாகும்.

சார்க் அமைப்பின் நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளதா? இம்முறை கொழும்பில் நடைபெற்ற மகா நாட்டின் போது இந்த விடயம் எழுப்பப்பட்டது. பொதுவாக நோக்கும் பொழுது இந்த பிராந்தியத்தில் தேவை மற்றும் பிரச்சினை குறித்து பாரிய கவனம் ?லுத்தப்பட்ட போதும் இவை காத்திரமானதாக அமையவில்லை. ஆசியாவில் அல்லது ஐரோப்பிய கூட்டமைப்புடன் வட்டம் குறித்து பார்க்கும் போது இதன் உண்மை புல?கும். இந்தியா ஒரு வல்லராக உள்ளது. அந்த வல்லரசின் பொருளாதாரத்துடன் கூடிய மக்கள் தொகை இந்தப் பிராந்தியத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இன்னும் சார்க் அமைப்பின் பொதுவான தன்மை நிறைவேற்றப்படவில்லை.

ஐரோப்பிய சங்கம் இது வரையில் பொது நிதிக் கொள்கை, பொது நிர்வாக முறை மற்றும் விச ம்பந்தமான பொதுச் சட்டதிட்டங்களையும் வரி தொடர்பில் ஒரு உடன்பாட்டை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது. சார்க் மகா நாடுகளின் போது பிராந்திய நாடுகளிடையில் விசா இன்றி சுற்றுலாவில் ஈடுபடுவது, பொதுவான நிதிக்கொள்கை, பயங்கரவாதத்தை ஒருக்குவதில் போன்ற விடயங்கள் தொடர்பாக பல்வேறு ந்தர்ப்பங்களில் பேப்பட்டுள்ளது. இருப்பினும் இறுதியில் காத்திரமான பெறுபேறுகள் சார்க் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு கிட்டியுள்ளதா?

தந்திரப் பொருளாதார உடன்படிக்கையோ வரியை இலகுபடுத்தும் அத்தியாவசிய காரணங்கள் ம்பந்தமாகவும் இறுதித் தீர்மானங்கள் எடுக்கத் தவறியுள்ளது. இந்த அமைப்பில் உள்ள உருப்பு நாடுகளிடையே சில ந்தர்ப்பங்களில் காட்டப்பட்ட குறுகிய மனப்பான்மையே இதற்கு காரணம் என்பதில் ந்தேகமில்லை.

தெற்காசிய புரிந்துணர்வு தொடர்பில் ர்வதேம் கூடுதலான எதிர்பார்ப்பை வைத்துள்ளது. அமெரிக்கா உலக வல்லர என்ற ரீதியில், ச ர்வதே மட்டத்தில் பொருளாதார ரீதியில் முன்னிலை வகிக்க முனைகின்றது. ஈரான் மத்திய கிழக்கில் இஸ்லாமிய நாடு என்ற இறைமையை நிலைநிறுத்த முனைகிறது. ?ர்க் அமைப்பின் கண்காணிப்பு மட்டத்தில் பங்கு கொண்டு இதனை நிலைநாட்டுகின்றது. ஜப்பான் உலகின் முன்னணி ?ல்வந்த நாடென்ற ரீதியிலும் இந்த கண்காணிப்பில் தொடர்புபட்டுள்ளது. எதிர் காலத்தில் சார்க் பிராந்தியத்தை தட்டிக்கழித்து விட முடியாது என்பதும் உணர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.

பிராந்தியத்தின் புரிந்துணர்வு மூலமாக மின்?ரம், மின்க்தி தொடர்பில் பொதுவான உடன்பாட்டுக்கு வர முடியும். எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயு முதலானவை இந்தப் பிராந்தியத்தின் இயற்கை வளங்களாகும். இன்னும் ஆய்வு செய்யப்படாத பெரும் கடல்ப் பிரதேம் தெற்காசியாவுக்கு உரித்தானதாகும். உல்லா பயணத்துறையை அபிவிருத்தி செய்வதிலும் பிராந்திய புரிந்துணர்வு மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் விடேமாகும்.

இருப்பினும் சார்க் அமைப்பின் மக்களுக்கு உணரக் கூடிய இதன் நன்மைகளை பரிசீலித்துப்பார்ப்பதற்கான வாய்ப்புக்கள் இன்னும் இல்லை.

ஆப்கானிஸ்தான் சார்க் அமைப்பில் உள்வாங்கப்பட்டதன் காரணமாக தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களின் யெற்பாடுகளின் முன்னிலையில் அமைதியை விரும்பும் சர்வதே மூகம் எதிர்பார்க்கும் ஏதாவது ஒன்று உண்டு. அதே போன்று சார்க் அமைப்பின் மூலமாக ஆப்கானிஸ்தானின் அழிவுக்கு உட்பட்ட பௌத்த சிற்பங்கள் தொடர்பாக எண்ணம் ஒன்றை உருவாக்குவதற்கு ந்தர்ப்பம் உண்டு
உலகமயமாக்கலும் வளர்முக நாடுகளும் 2019

உலகமயமாக்கலும் வளர்முக நாடுகளும் 2019


இருபத்தியோராம் நூற்றாண்டில் அனைத்துலகநாடுகளிலும் பேசப்படும் முக்கியமான விடயங்களில் ஒன்றாக உலமயமாக்கல் என்னும் செயற்திட்டம் காணப்படுகின்றது. முக்கியமாக மேலை நாடுகள் உலமயமாக்கல் பற்றிய கருத்துக்களை விதைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

உலமயமாக்கல் என்னும் பதத்திற்கு தேவைக்கேற்ப பலவித அர்த்தங்கள் கொடுக்கப்படுகின்றன. உலக நாடுகளுக்கிடையேயும், மக்களுக்கிடையேயும் காணப்படும் பொருளாதார, தொழில்நுட்ப, அரசியல், காலாச்சார மற்றும் சமுக கட்டமைப்புகளிற்கேற்ப இணைவாக்ப்பட்டதாகவும், அல்லது மாறுபடும் தன்னை கொண்டதாகவும் உலமயமாக்கல் கொள்கை காணப்படுகின்றது என்று கூறினால் மிகையாகாது.

நாடுகளுக்கிடையேயான தூரம்; குறைக்கப்பட்டு அனைத்து தொடர்பாடல்களும் சிரமமின்றி மேற்கொள்ளக் கூடிய வகையில் செய்திப்பரிமாற்றம் சீரிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதே உலமயமாக்கல் கொள்கையை முழு வீச்சுடன் முன்னெடுக்க முக்கிய காரணமாக உள்ளது. உற்பத்ததிப் பொருட்களைச் சந்தைப்படுத்தவும், சிரமமின்றி நாட்டுக்கு நாடு பிரயாணம் செய்யவும், மின் வலையின் உதவியால் தகவல் பரிமாற்றங்களை மேற் கொள்ளவும் கிடைத்த அரிய வாய்ப்பைக் கொண்டே வர்த்தகமும் மற்றும் அரசியல் தொடர்புகளும் உலக நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த காலங்களில் தகவல் நுட்பத்துறையில் ஏற்படுத்தப்பட்ட அதியத்தக்க தக்க அசுர வழற்சியே உலமயமாக்கலின் உந்து சக்தியாக விளங்குகின்றது.

இருபதாம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் தகவல் தொழில் நுட்பம் தனது விரைவான முன்னேற்றத்தை ஆரம்பித்து எதிர்பார்த்திருக்காத அளவில் வழற்சி அடைந்து இன்று அனைவரையும் ஆட்கொண்டுவிட்டதுடன் மேலும் முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றது. உலமயமாக்கல் கொள்கையானது பல தரப்பட்ட பயன்பாடைக் கொண்டிருந்தாலும் பொருளாதராத்தைக் குறியாகவைத்தே விரைவாக செல்வதை அவதானிக்க முடிகிறது. குறைந்த செலவில் கூடிய வருவாயைப் பெறுவதே... என்று சுரங்கக் கூறினால் மிகையாகாது. எதிலும் உண்டாகக் கூடிய சாதக பாதகமான விளைவுகள் உலமயமாக்கல் கொள்கையிலும் காணப்படுகின்ற காரணத்தால் இத் திட்டத்திற்கு கிடைக்கும் ஆதரவு போல கணிசமான அளவு எதிப்பும் இருப்பதை ஏற்றுக் கொண்டேயாகவேண்டும்.

இலத்திரனியல் தொழில்நுட்பத்துறையில் அபார வளற்சியடைந்த தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களையும், வாடிக்கையாளார் ஆலொசனை மையங்களையும் கீழைத்தேய நாடுகளிற்கும், வளர்முகநாடுகளிற்கும் நகர்த்துவதன் முலம் குறைந்த செலவில் கூடிய வருவாயைப் பெறுவதோடு அந்த நாடுகளில் காணப்படும் வேலை இல்லாப் பிரச்சினைகளிற்கும் தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பது வெளிப்படையான விடயம். இந் நிறுவனங்கள் அனேகமானவை இலகுவான உரையடலுக்கு ஏதுவாக ஆங்கில மொழி பேசப்படும் நாடுகளிற்கே முன்னுரிமை கொடுத்து தொழிற்படுகின்றன. முக்கிய காரணமாக அனேகமான தொழில் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களும் ஆங்கில மொழியிலேயே தங்கள் தொடர்பைப் பேண விரும்புவதும் முக்கிய காரணமாகும்.

இதனால் தான் இன்று ஜரோப்பாவில் அல்லது வட அமரிக்காவிலன் ஒரு அலுவலகத்தில், அல்லது வீட்டில் ஒருவரின் கணணித் தொழிற்பாட்டில் ஏற்படும் தடங்கலை நிவர்த்தி செய்ய தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினால் மறுமுனையில் உதவி வழங்குபவர் தென்னாபிரிக்காவில் இருந்து உரையாடுவதையும். அல்லது தடைப்பட்ட இணையத்தள தொடர்பைப்பெற தொலைபேசியில் உதவிக்கு அழைத்தால் மறுமுனையில் இருப்பவர் இந்தியாவின் ஒரு மாநிலத்தில் இருப்பதையோ அறியக்கூடியதாக இருக்கின்றது. இவற்றுக்கு முக்கிய காரணம் சீரான தொடர்பு பேணப்படுவதோடு தகுதி வாய்த பல திறமைசாலிகள் இந் நாடுகளில் அணியணியாக உருவாகுவதுமேயாகும்.

உயர்கல்வியை நிறைவு செய்துவிட்டு வேலை பெற முடியாமல் தவிக்கும் பட்டதாரிகளிற்கு அவர்கள் நாட்டிற்கே தெடிச்சென்று தொழில் வாய்ப்பு அளிக்கும் இவ் அரியபணி உலகமயமாக்கலின் ஒரு அங்கமேயாகும். அரசியல்ரீதியாக பெரிய நிறுவனங்கள் வளர்முக நாடுகளுடன் ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தங்களின் அடிப்படையில் சில சலுகைகளை பெற்றுக் கொண்டாலும், அந்நாடுகளின் பொருளாதாரத்தை உயர்த்த உதவுவதுடன், தொழில் வாய்ப்பை எதிர்பார்த்திருப்போருக்கு இந் நிறுவனங்களின் வரவு பெரும் வரப்பிரசாதமாக அமைகின்றன.

இத்திட்டங்களிற்கு உண்டாகிவரும் எதிர்ப்பை சற்று நோக்குவொமேயானால,; வளர்முக நாடுகளின் வருகை என்பது உள்ளுர் அரசியல் நிலையைப் பொறுத்தவரையில் சர்வதேச நிறுவனங்களில் தங்கி இருக்க நேரிடும் என்ற தயக்கமும், தங்கள் அரசியல், பொருளாதார பலத்தில் தளர்வு உண்டாகின்றது என்ற விவாதமும் முன்வைக்கப்படுகின்றது.

வசதிகளின் அடிப்படையில் குறிப்பிட்ட சில இடங்களிலேயே தொழில் வாய்புகள் கிடைக்க் கூடிய வாய்ப்புகள் இருப்பதனால், பல காலமாகக் குடும்பக்கட்டமைப்புக்குள் வாழ்ந்து பழகிய இளையவர்கள் தொழில் நிமிர்த்தம் அதிக தூரம் இடம் பெயர்ந்து தங்கள் வயது ஒத்தவர்களுடன் வசிக்கப் நிர்பந்திக்கப் படுகின்றனர். அத்துடன் உலக நாடுகளிற்கிடையே உள்ள மாறுபட்ட நேர வித்தியாசத்திற்கேற்ப தொழில் புரிய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால், உடல் ஆரொக்கியம் குறைவடைவதும், மன அழுத்தம் ஏற்படுவதும் தவிர்க முடியாத ஒன்றாகிவிடுகின்றது. மனதில் ஏற்படும் இன்ப துன்பம் இரண்டையும் மற்றவருடன் பகிர்ந்து கொள்ளவும், பொழுது போக்காகன நேரத்தையும் சக தொழிலாளருடனேயே பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. இவற்றின் காரணமாக, குடும்பக் கட்டமைப்புகளிற்க்குள்ளும், வாழ்க்கை முறைகளிலும் மாறுதல்கள் ஏற்படுவதுடன், இவ்வகையான வாழ்க்கை முறை ஏற்கனவே காணப்படும் மேற்குலக நாகரீகத்தைப் பின்பற்றி கலாச்சார மாற்றங்கள் ஏற்படலாம் என்ற அச்ச உணர்வும் தலைதூக்கி உள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.

எங்கும், எதிலும் நன்னை தீமை உண்டாகும் என்பது உலகமயமாக்கல் என்ற செயற்த்திட்டத்திலும் உள்ளதை அவதானத்துடன் அணுகி, பன்முகப் படுத்தப்பட்ட அடிப்படையில் அமைந்திருக்கும் இச் செயற்திட்டங்களின் அனுகூலங்களையும் எதிர்வு விளைவுகளையும் சமன் செய்து சீர் தூக்கிப் பார்ப்பாதன் மூலமாக நற்பயனை அடையலாம்.

Wednesday, August 14, 2019

இலங்கையின் முன்பிள்ளைப் பருவக் கல்வியின் வளர்ச்சிப் போக்குகளும் சவால்களும்

இலங்கையின் முன்பிள்ளைப் பருவக் கல்வியின் வளர்ச்சிப் போக்குகளும் சவால்களும்


அறிவில்  இடப்படும் முதலீடு சிறந்த ஆதாயங்களை தருகின்றது என்ற பென்ஜமின் பிராங்க்ளின் இன் கூற்றுக்கு ஏற்ப இன்றைய நவீன கால பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு அறிவினைப் பெற்றுக் கொடுப்பதில் அதிக முனைப்புடன் செயற்பட்டு வருவதைக் காணமுடிகின்றது. அத்துடன், பிள்ளைகளின் முதல் ஐந்து வருடப் பருவமானது அவர்களின் வளர்ச்சியிலும் விருத்தியிலும் மிக முக்கியமானதாகவும் உள்ளது. இதன்காரணமாக, முறைமையான பாடசாலைக் கல்வியை வழங்க முன்னரே பல்வேறு கற்றல் நடவடிக்கைகளில்  தம் பிள்ளைகளை பெற்றோர்கள் ஈடுபடுத்துகின்றனர். கைத்தொழில்மயமாக்கல், விரைவான நகரமயமாக்கம், அறிவியல் தொழிநுட்ப வளர்ச்சிகளும் இவற்றின் பேறாக மனித குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும் பிள்ளைளை மிகக் குறைந்த வயதிலேயே கல்வி நடவடிக்கைகளுக்குள் ஈடுபடுத்த விரைவுபடுத்துகின்றன. முறையான பாடசாலைக் கல்விக்கு முன்னரான கல்வியூட்டல் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை முன்பிள்ளை பராமரிப்பு மற்றும் முன் பிள்ளைப் பருவக் கல்வி என நாம் அழைக்கிறோம். இலங்கையில் இந்த முன்பிள்ளைப் பருவக் கல்வியின் வளர்ச்சிப்போக்குகள் அவை தொடர்பான சவால்கள் தொடர்பாக இந்தக் கட்டுரையில் எடுத்து நோக்கப்படுகிறது.

இலங்கைக் கல்வி முறைமை

இலங்கை, கல்வி தொடர்பான குறிகாட்டிகளில் தெற்காசிய நாடுகளில் முதன்மை பெறும் நாடாக விளங்குகின்றது. பண்டைக்காலத்தில் இருந்தே இலங்கைச் சமூகங்களில் கல்விக்குக் கொடுக்கப்பட்டு வரும் முக்கியத்துவம், சுதந்திரத்தின் பின்னர் மாறி மாறி வந்த அரசுகள் கல்வி தொடர்பாக நடைமுறைபடுத்திய கல்விக்கொள்கைகள், நாட்டு மக்களின் தன்னார்வம் போன்றன கல்வி தொடர்பாக உலகில் ஒரு கெளரவமான நிலையில் நாடு வகிக்கின்றது. இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் யாப்பின் 27 ஆவது உறுப்புரையின்படி, “நாட்டில் எழுத்தறிவின்மையை இல்லாதாக்குதல், முழுமையான,சமமான கல்வியை சகலரும் பெறுவதை உறுதிப்படுத்தல்”  என்பதே நாட்டின் கல்வியின் இலட்சியமாக உள்ளது. இலங்கையின் கல்வி முறைமை மிகப்பழமையான சட்டமொன்றினால்  நிருவகிக்கப்படுகின்றது. அதாவது, 1939 ஆம் ஆண்டின் 31ஆம் இலக்க சட்டமே இதுவரை அமுலில் உள்ளது. 2010 இன் பின்னர் புதிய கல்விச் சட்டம் பற்றி பலரால் அதிகம் பிரஸ்தாபிக்கப்பட்ட போதும், அதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட போதும்,  புதிய கல்விச் சட்டம்  இன்னும் கைக்கூடவில்லை எனலாம்.

மேலும், 1997 இன்  1 வது இலக்க ஒழுங்கின்படி 15-14 வயதுப்பிள்ளைகளது கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த வயது 16 வயது வரை அண்மையில் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் கல்வி முறைமையில், கல்வி மொழிமூலம் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சமாக உள்ளது. இலங்கையில் உள்ள சகல இனக்குழுமங்களும் கல்வியைப் பெறும் வகையில், இலங்கையின் இரு பிரதான மொழிகளான சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் கல்வியை தொடரும்  வாய்ப்பு காணப்படுகின்றது. இலங்கையில் சிங்களவர், தமிழர், சோனகர், பறங்கியர், மலாயர் எனப்   பல்வேறு இனங்கள் இருந்த போதிலும் இவர்களின் அதிகமானோர் சிங்களம் அல்லது தமிழை தம்தை மொழியாகக் கொண்டவ்ர்கள். இவற்றுக்கு மேலதிகமாக ஆங்கில மொழி மூலமும் கல்வியைப் பெறும் வாய்ப்புக்களும் இல்லாமலில்லை. நாட்டின் பொதுவான கல்விக் கட்டமைப்பு உரு: 1இல் காட்டப்படுள்ளது.




உரு :1 இலங்கையின் கல்விக் கட்டமைப்பு

மூலம்: கல்வி அமைச்சு (2009)

உரு 1 இன் படி, இலங்கையின் கல்வி முறைமை பின்வருமாறு அமைந்துள்ளது:

1.    முன் பள்ளிக் கல்வி : இரண்டரை அல்லது மூன்று வயதில் இருந்து ஐந்து வயதுப் பிள்ளைகளுக்கான கல்வி. இது கட்டாயக் கல்விக்குள்ளடங்காது என்பதை மனதிற் கொள்க.

2.    பொதுக்கல்வி – இது ஐந்து வயதில் இருந்து பதினெட்டு வயது வரையிலான பாடசாலைக் கல்வியைக் குறிக்கின்றது. இதில் தற்போதைய நிலவரங்களின்படி, ஐந்து தொடக்கம் பதினாறு வயது வரையிலான கல்வி கட்டாயமானது. இப்பொதுக் கல்வியில் மூன்று வகுதிகள் காணப்படுகின்றன. வயது ஐந்தில் இருந்து ஒன்பது வயது வரையிலான ஆரம்பக் கல்வி, பத்து வயது தொட்டு பதின்மூன்று வயது வரையிலான கனிஸ்ட இடைநிலைக் கல்வி, இதன்பின்னரான இருவருடக் கல்வி மேல் இடைநிலைக் கல்வி என வகுத்து நோக்கப்படுகிறது.

3.    மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி : கல்வியின் நகர்வினை உறுதி செய்யும் வகையில், உயர்தரக் கல்விக்குப் பின்னர் பலகலைகழக கல்வியும் அதற்கு நிகரான வாண்மைக் கல்லூரிகளும்,பாடசாலைக் கல்வியில் இருந்து இடை விலகுவோரை கருத்திற்கொண்டு தொழில்சார் கல்வி வாய்ப்புக்களும் இலங்கை கல்வி முறைமையில் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இலங்கை கல்வி முறைமையினை சர்வதேச தரங்களுக்கு ஒப்பான வகையில் பேணவும், மாணவர்கள் கல்வி எனும் ஏணியில் பெயர்சசி அடைந்து செல்லக் கூடிய வகையில் இலங்கை தர மாதிரி சட்டகம் (SLQF) ஒன்று அறிமுகம் செய்யப்படுள்ளது. இதில் SLQL எனும் இலங்கை தர மட்டம் 1 இல் இருந்து 12 வரையிலான மட்டங்கள் அறிமுகம் செய்யப்படுள்ளது.

இலங்கையில் முன்-பிள்ளைப் பருவக் கல்வி.

இலங்கையில் முன்-பிள்ளைப் பருவமானது பிள்ளையின் முதல்  ஐந்து வயது வரையயுள்ள காலப்பகுதியை குறிப்பதாக வரைவிலக்கணம் செய்யப்படுகின்றது. இப்பருவ வயதுப் பிரிவினரை இலக்காகக் கொண்டு பல்வேறு பெயர்களில் முன் பிள்ளைப்பருவ பராமரிப்பும் விருத்தியும் தொடர்பான பல்வேறு நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன. முன்-பிள்ளைப் பருவ விருத்தி நிலையங்கள், முன்-பிள்ளைப் பாடசாலைகள், மொண்டிசூரிகள், தினசரிக் காப்பு நிலையங்கள், கிரேச்சார்ஸ் எனப்படும் பிள்ளைப் பராமரிப்பு நிலையங்கள் என்பன  அவற்றுள் சிலவாகும். அரசாங்கத்தின் நேரடி முகவர்களான உள்ளுராட்சி சபைகள், தனியார் தொண்டு நிறுவனங்கள், சமயத் தாபனங்கள் மட்டுமன்றி, இலாபத்தை நோக்காகக் கொண்ட தனியார் குழுக்களும் இக்கல்வி மற்றும் பராமரிப்பில் கரிசனைக் காட்டி வருகின்றனர். இலங்கையில் 1990 களுக்கு முன் இத்தகைய முன்பிள்ளைப் பருவ நிகழ்ச்சித்திட்டங்கள் பரவலாகக் காணப்பட்ட போதிலும், 1997 யில் அறிமுகம் செய்யப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களின் பின்னர் இதில் ஒரு துரித விருத்தி ஏற்பட்டதைக் காணலாம். 1997 ஆம் ஆண்டின் கல்விச் சீர்திருத்தங்களின் பின்னர், அரசாங்கம் முன்பிள்ளைப்பருவ நிகழ்ச்சிகள் தொடர்பாக பின்வரும் முக்கிய செயற்பணிகளை முன்னெடுத்தது:

1.    சிறுவர் செயலகத்தையும், கல்வி அமைச்சின் முறைசார் கல்விப் பிரிவினையும், முன்   பிள்ளைப் பருவ நிகழ்ச்சித்திட்டங்களை முறையாக திட்டமிட்டு அமுலாக்கும் வகையில் மேலும் வலுப்படுத்தல்.

2.    தாய்மார்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகம் செய்தல். இதன் மூலம் பிள்ளைகள் தொடர்பாக களத்தில் பணியாற்றும் பல்வேறு நபர்கள் மற்றும் பொது மக்களிடம் பிள்ளைகளின் முன் பிள்ளைப் பருவம் தொடர்பான பரந்த விழிப்புணர்வினை ஏற்படுத்தல்.

3.    பிள்ளை பராமரிப்பை வழங்குனர்கள் மற்றும் தாய்மார்களுக்கு முன் பிள்ளைப் பருவம் தொடர்பான பயிற்சிகளை வழங்குதல்.

4.    பிள்ளைகள் கல்வியில் அதிகம் பங்குபற்றுவதை இலக்காகக் கொண்டு அதிகமான முன் பாடசாலைகளை அமைத்தல்.

5.    முன் பள்ளிகளுக்கான பொதுவான சட்ட ஏற்பாடுகளை ஒழுங்கமைத்தல்.

6.முன் பள்ளிகளுக்கான பொதுவான கலைத்திட்ட வழிகாட்டல்களை தயாரித்தல்
7.இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் முன் பிள்ளைப் பருவ துறையொன்றை உருவாக்குதல். அத்துடன் சிறுவர் ஆய்வு நிலையத்தையும் நிறுவுதல். இதன்பயனாக இலங்கை திறந்த பல்கலைக்கழக கல்விப்பீடத்தில் முன் பிள்ளைப் பருவம் மற்றும் ஆரம்பக் கல்வித் துறையும் பிள்ளை ஆய்வு மையமும்   நிறுவப்பட்டுள்ளன. அண்மையில் தேசிய கல்வி நிருவகத்திலும் முன் பிள்ளைப் பருவம் மற்றும் ஆரம்பக் கல்வித் துறை ஆரம்பிக்கப்படுள்ளது.

மேற்கண்ட செயற்பணிகளின் மூலம், ஐந்து வயதுகுட்பட்ட பிள்ளைகளின் போசணை மட்டம், அவர்களின் முன் பள்ளிகளுக்கான பங்குபற்றல் என்பவற்றை அதிகரித்தல், முன் பிள்ளைப்பருவ பராமரிப்பும் விருத்தியும் தொடர்பான வேலைத்திட்டங்களின் தரத்தை மேம்பதுத்துவதன் ஊடாக முறைசார் கல்வியின் தரத்தைப் பேண வழிசெய்தல் போன்ற குறிகோள்களை அடைய எதிர்பார்க்கப்ட்டது. இவற்றுக்குப் புறம்பாக, விசேட தேவை உடைய பிள்ளைகளின் தேவைகளைக் கருத்திற்கொண்டு  விசெடதேவைக் கல்விக்கான துறையொன்று 2005 இலிருந்து இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில்  ஆரம்பிக்கப்பட்டதுடன், விசேட தேவைப் பிள்ளைகளுக்கான கற்றல் நிலையமொன்றை நிறுவவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மேலும், இளஞ் சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

முன் பிள்ளைப்பருவ பராமரிப்பும் கல்வியும் தொடர்பான தேசியக் கொள்கை

முன்பிருந்த பெண்கள் வலுவூட்டல் மற்றும் சமூக நலனோம்பல் அமைச்சு 2004 இல் முன் பிள்ளைப்பருவ பராமரிப்பும் கல்வியும் தொடர்பான தேசியக் கொள்கையினை உருவாக்கியிருந்தது. இதனை தற்போதுள்ள சிறுவர் விருத்தி மற்றும் மகளிர் வலுப்படுத்தல் அமைச்சு சிறுவர் செயலகத்தின் ஊடாக செயற்படுத்திவருகின்றது.

தேசிய கொள்கையின் நோக்கங்கள் வருமாறு:

போதுமான சுகாதாரம் மற்றும் போசாக்கு சேவைகளை பெறுவதனை உறுதிப்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு பிள்ளையினதும் வாழ்வினை சிறப்பாக ஆரம்பிப்பதற்கு உறுதியளித்தல்.

சுகாதாரம், போசாக்கு, உள சமூகஊக்கம், பாதுகாப்பான குடிநீர்,  சுத்தம், கழிவகற்றல் சேவைகளை ஒருங்கே கொண்டு வரும் ஒன்றிணைந்த அணுகுமுறையினை மேம்படுத்தல்.

வீட்டை அடிப்படையாகக் கொண்ட நிகழச்சித்திட்டங்கள், பிள்ளை விருத்தி நிலையங்கள், முன்பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் விருத்தி வேலைத்திட்டங்களின்  விருத்தி மற்றும் அமுலாக்கம் என்பவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டல்களையும் நியமங்களையும் உருவாக்குதல்.

முன்பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் விருத்தி தொடர்பாக ஈடுபடும் அனைத்து தரப்பினரதும் பொறுப்புக்கள், வகிபங்குகளை தெளிவுபடுத்தல்

முன்பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் விருத்தி தொடர்பாக ஈடுபடும் அரச,அரச சார்பற்ற ,தனியார் என அனைத்துதரப்பினர்களுக்கு இடையில் பரஸ்பர தொடர்புகளை ஏற்படுத்தல்.

முன்பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் விருத்தியினை வழங்கும் தரப்பினர்களினால் வழங்கப்படும் சேவைகளை ஒழுங்குபடுத்தி ஒருங்கிணைத்தல். இதன்மூலம் சகலரும் பயனடையக்கூடிய வகையில்  முன்-பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் விருத்தி சேவையினை ஆக்குதல்.

முன்பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் விருத்தி நிகழ்ச்சித்திட்டங்களிற்காக  அதிக நிதிவளங்களை ஒதுக்குதல்.
முன் பிள்ளைப் பருவ விருத்தியில் பெற்றோர், பாதுகாவலர்கள், சமூக அங்கத்தவர்களின்  வகிபங்குகளை மேம்படுத்தல்.

·தமது பிள்ளைகளின்  விருத்திக்கு உரிய  வகையில் உதவக்கூடிய வகையில்  பெற்றோர், பாதுகாவலர் மற்றும் சமுதாயத்தவர்களது இயலளவை அதிகரித்தல்.


இத்  தேசிய கொள்கையினை தேசிய ரீதியில்  வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதனை  உறுதிசெய்யும் வகையில்,  அரச அமைப்புகள், அரச சார்பற்ற அமைப்புகள், துறைசார் நிபுணர்கள், மாகாண இணைப்பாக்க சபைகள், மாவட்ட இணைப்பாக்க சபைகள், பிரதேசிய இணைப்பாக்கம் மற்றும் கிராமிய சபைகள் போன்றவற்றை உள்ளடக்கிய தேசிய இணைப்பாக்க குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்பாடசாலைகளின் முகாமைத்துவத்தை மேற்பார்வை செய்யும் வகையில் மாகாண சபைகளுக்கு  தேவையான அதிகாரத்தை அரசியல் யாப்பின்13 வது இணைப்பின் 154 G (1) உறுப்புரை வழங்குகின்றது. இதன்பேறாக, முன்பாடசாலைகளில் தரமான சேவைகளை வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் முன்-பள்ளிக்  கல்வி தொடர்பாக வட மத்திய, மேல், வட மேல் மாகாணங்கள் தமது சொந்த நிலைப்பாடுகளை வெளியிட்டு நடைமுறைப்படுத்துகின்றன. முன்-பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் கல்வி நிலையங்களுக்கான ஆகக் குறைந்த நியமங்கள் , அவற்றை அளிக்கும்  வழங்குனர்களது ஆகக்குறைந்த தகைமைகள் (முன்பாடசாலை ஆசிரியர்கள்), சேவை நிலையங்களை பதிவு செய்தல், என்பனவற்றில் மாகாண மட்டத்தில் ஒழுங்குவிதிகள் ஏற்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. எனினும் மத்திய அரசின் கொள்கைகளின் அனேக விடயங்களிற்கும் மாகாண மட்ட கொள்கைகளுக்குமிடையில் அதிக வேறுபாடுகள் இல்லை எனலாம்.

முன் பிள்ளைப் பராமரிப்பு மற்றும் கல்வி தொடர்பான பயிற்சிகளும் வாய்ப்புக்களும்

தரமான முறைசார் கல்வியை கட்டியெழுப்ப வேண்டுமாயின் தரமான முன் பிள்ளைப் பராமரிப்பு மற்றும்  கல்வியுடன் தொடர்பானவர்களுக்கு  அளிக்கப்படல்  வேண்டுமாகின்றது. இலங்கையில் முன்-பள்ளி ஆசிரியர்கள், பிள்ளை விருத்தி உத்தியோகத்தர்கள், போதனாசிரியர்கள், கிரேச்நிலைய ஊழியர்கள் என பல்தரப்பட்ட ஆளணியினர் இத்துறையுடன் தொடர்புறுகின்றனர். இவர்களுக்கான பயிற்சி, உயர்கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துவதன் மூலம் தரமான முன் பிள்ளைப் பராமரிப்பு மற்றும் கல்வியை உருவாக்க முடியும். அத்துடன், இச் சேவையில் ஈடுபடுவோர் கண்ணியமான ஊதியத்தைப் பெறவும் முடியுமகின்றது. இந்நோக்கில், இலங்கை திறந்த பல்கலைகழகத்தில் 1980 களில் இருந்துமுன்-பள்ளிக் கல்வியில் பட்டப்பின் சான்றிதழ் இனையும், வழங்கி வந்ததுடன் 2006 இலிருந்து ஆரம்பக் கல்வி டிப்ளோமா கற்கை (நாட்டின் 15 பிராந்திய மற்றும் கற்கைநிலையங்கள் ஊடாக), ஆரம்பக் கல்வி தொடர்பான உயர் சான்றிதழ் கற்கை (நாட்டின் நான்கு நிலையங்களில்), முன்-பிள்ளைப்பருவ மற்றும் ஆரம்பக் கல்வி தொடர்பான   டிப்ளோமா சான்றிதழ் கற்கை (நாட்டின் நான்கு பிராந்திய நிலையங்களில்) ஆகியவற்றை வழங்கி வருகின்றது.  தேசிய கல்வி நிறுவகமும் 2007/2008 களில் இருந்து முன்-பள்ளி கல்வி தொடர்பான சான்றிதழ் கற்கையினை வழங்கி வருகின்றது.  அண்மைக் காலங்களில் ஏனைய சில பல்கலைக்கழகங்களிலும் இது தொடர்பான கற்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை தவிர, தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களில், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களும், வேறு பல தனியார் கல்வி நிலையங்களும் இது தொடர்பான குறுங்கால கற்கைகளை வழங்கி வருவதைக் காணலாம்.

முன் பிள்ளைப் பராமரிப்பு மற்றும் கல்வி தொடர்பாக எதிர் நோக்கும் சவால்கள்.

பிள்ளைகளின் முதல் ஐந்து வயதுப் பருவம் முக்கியமானது என்ற வகையில், அரசு பல்வேறு நலப்பணிகளை திட்டமிட்டு நடைமுறைபடுத்தி வருகின்ற போதிலும் இன்னமும் முன் பிள்ளைப் பராமரிப்பு மற்றும் கல்வி தொடர்பாக பல்வேறு சவால்கள் எதிர்நோக்கப்படுகின்றன. முன் பிள்ளைப் பருவ பராமரிப்பும கல்வி தொடர்பான ஈடுபடும் நிறுவனங்கள், முன் பள்ளிகள், ஆசிரியர்கள் தொடர்பான் முழுமையான,  துல்லியமான  புள்ளிவிபரம் இன்மை, போதுமான (குறைந்து ஒரு வருட பயிற்சிநெறிகளை) பயிற்சிகளை பெறாத ஆசிரியர்கள் தொடர்ந்தும் சேவையாற்றி வருதல், முன்பள்ளிக் கல்வி தொடர்பான பயிற்சிகள் இலாப நோக்கில் தரத்தினை கருத்திற் கொள்ளாமல் வழங்கப்படல், முன்பள்ளிக் கல்வியில் இன்னமும் மலையக தோட்ட மக்களின் பிள்ளைகள் குறைவாகப் பங்குபற்றல்,  பொதுவான கலைத்திட்டமின்மை என்று சவால்களை பட்டியலிட்டுக் கூறலாம்.

முடிவுரை

பிள்ளைகளின் முதல் ஐந்து வருட பருவமானது  அவர்களினதும், நாட்டினதும் சுபிட்சமான எதிர்காலத்துக்கு முக்கியமானதொன்றாக உள்ளது. இப்பிள்ளகளின் பராமரிப்பு மற்றும் முன் பள்ளிக் கல்வி தொடர்பாக மத்திய மற்றும் மாகாண அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. இவற்றுள் முன் பள்ளிக் கல்வி தொடர்பாக ஈடுபடும் ஆளணியினர் போதுமான தரமான பயிற்சிகளைப பெற்று தேவையான தகமைகளைக் கொண்டிருத்தல் அவசியமாகின்றது. இதுதொடர்பான பயிற்சிகளை பெரும் போது அவற்றின் தரம் அறிந்து அவற்றைப்  பெறுவது முக்கியமாக உள்ளது. தரமான பயிற்சி, துறை சார் நிபுணத்துவத்தையும் அனுபத்தையும் தருவதுடன் அதன் மூலம் பயன் பெரும் இளம் பிள்ளைகளும் தரமான முறை சார் கல்வி ஒன்றுக்குள் செல்ல
சமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை - 2019

சமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை - 2019

கல்வி என்பது அறிவோடு தொடர்புடையதைப் போல் தத்துவத்தோடும் சமூகத்தோடும் நெருங்கிய தொடர்புடையதாகும். மனிதர் தோன்றிய காலந்தொட்டே பாரம்பரியமாக அறிவின் தேடல் உருவாகியது. 

நெருப்பினைக் கண்டுப்பிடித்தல், சக்கரம் கண்டுபிடித்தல், விவசாயம் கண்டுபிடித்தல் முதலிய பாரம்பரிய கண்டுபிடிப்புகள் யாவுமே அறிவின் தோற்றமாகவே கொள்ள முடிகிறது. இவ்வாறு தோன்றிய அறிவின் தேடல் கூட்டு உணர்வாகவும், கூட்டுச் செயல்பாடாகவும், கூட்டு நடவடிக்கையாகவும் அறிவு பெறுவதிலிருந்தே கல்வி தோற்றம் கொள்கிறது. பாடம்-ஆசிரியர்-கற்கும் இடம்-கற்றல் கருவி ஆகிய தன்மைகளில் செயல்படக் கூடியதாகும். 

கல்வி வளர்ச்சிப்பயணத்தில் அறிவின் தேடலாக நீண்ட நெடிய பரப்புடையதாக காலந்தோறும் பல உருமாற்றங்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. கல்வி சமூகநீதியை முதன்மைப்படுத்த வேண்டிய தன்மையிலேயே உருவாக வேண்டும் என்பதே கல்வியின் தலையாய நோக்கமாகும்
ஆங்கிலேயரின் வருகையை ஒட்டியே கல்வித்தளத்திலும் நெறிமுறைப்படுத்தப்பட்ட காலனியக் கல்வி முறை இந்திய - தமிழகத்திற்குள் பரப்பப்பட்டது. காலனியக் கல்வி முறைக்கு முன்னதாகவே குருகுலக் கல்வி முறை தமிழகத்திலும் நடத்தப்பட்டது. காந்தியடிகள், அரவிந்தர், விவேகானந்தர், இராஜாஜி, வ.வே.சு முதலானவர்கள் இந்தியச் சூழலில் கல்விக்காக தங்களை அர்ப்பணித்தாலும் இக்கல்வி முறைகளில் வர்க்க முரண்பாடுகளும் சாதிய முரண்பாடுகளும் தவிர்க்க முடியாதவையாக இருந்தன. இவர்களின் கல்வி குறித்த சிந்தனை ஆன்மீகத்தை கல்வியோடு இணைக்கப்பட்டுப் போதிக்கப்பட்டுள்ளதையும் அறிய முடிகிறது. மேலும் காலனியக் கல்வி முறையில் மெக்காலே, ரூசோ, புரோபல், ஜான்டூயி முதலியவர்களின் கல்விக் கொள்கையை இந்திய தமிழ் சூழலில் பள்ளிகள்தோறும் பரவலாக்கம் செய்யப்பட்டன. ரூசோவினுடைய கல்விச்சிந்தனை ஆதிக்கச் சமூகத்தில் பெண்கள் நிலைப்பாடுகளை ஆண்களே தீர்மானிக்கும் தன்மையிலேயே அமைந்துள்ளது. இவருடைய எமீல் (Emile) எனும் நூல் கற்பனை வடிவிலான ஆண்குழந்தைக்குக் கல்வி கற்பித்தலை எடுத்துரைக்கிறது. ஆண்கள் அதிகாரம் படைத்தவர்களாகவே உருவாக வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது. மேலும் இவரது சோஃபி (Sophie) எனும் படைப்பு கற்பனையான பெண்குழந்தைக்குக் கல்வி கற்பித்தலை எடுத்துக் கூறுகிறது. இதில் பெண்களுக்கான கற்பித்தல் ஆண்களிடமிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும். பெண் என்பவள் ஆணுக்குக் கட்டுப்பட்டு நடக்கக் கூடியவளாகவும், ஆணுக்கு மகிழ்ச்சி அளிப்பவளாகவும், குடும்பத்தைப் பேணிக் காப்பவளாகவும், அழகு, சமையல், உடல் இவைகளில் அக்கறை கொண்டவளாகவும் திகழ வேண்டுமென ரூசோவின் கல்விச் சிந்தனைவழி அறிய முடிகிறது. இச்சிந்தனை ஏனைய கல்விமுறைக்கு மாறுதலாகக் கொண்டு வந்தாலும் பெண்ணடிமைத்தனத்தை ஆழமாக வலியுறுத்தியது. இதனால் பெண்கள் அடிமை மனோபாவத்தை தாங்கள் மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

காலனியக் கல்வி மானோபாவத்தில் ஆங்கிலக்கல்வி முறை குருகுல கல்விமுறைக்கு மாற்றாக அமைந்தாலும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை உள்வாங்கியே அமைந்துள்ள போதிலும் கிறித்தவ கல்வி நிறுவனங்கள் சழுக ஏற்றத்தாழ்வுகளை ஓரளவிற்குக் களைத்துள்ளதையும் பார்க்க முடிகிறது. இருப்பினும் கல்வியில் தொடர்ச்சியாக பார்ப்பனிய மேலாதிக்க மனநிலையை மாற்றவும சமூகநீதியை மறுக்கக்கூடியதாக இருக்கின்ற காரணத்தாலும் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், மகாத்மா புலே போன்றவர்கள் கல்வியில் மாறுதல் கொண்டு வர எண்ணினார்கள். அண்ணல் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட-பழங்குடி மக்களுக்கு உதவித் தொகையும் இடஒதுக்கீடும் வழங்குதல் மூலமாக கல்வியின் வழியாக தன்னிறைவு பெறவும், இழிவுகளில் இருந்து விடுதலை அடையமுடியும் என தாழ்த்தப்பட்டோர்கான சட்டத்தை முன்வைத்ததோடு பிற்படுத்தபட்டோர்-மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கல்வி-வேலை வாய்ப்புபெற அண்ணல் அம்பேத்கர் அவர்களால் உருவாக்கப்பட்ட கல்வி வேலை வாய்ப்புக்கான சட்டத்தினைப் புதிய கல்விக் கொள்கை முற்றிலும் மறுப்பது சட்ட விரோதச் செயலாகும்.

 புதிய கல்விக் கொள்கையின் வரைவு முழுக்க முழுக்க கார்ப்ரேட்டுக்கான முதலாளித்துவத் தன்மையை வலுவாகப் பின்பற்றக்கூடிய நிலையிலேயே அமைந்துள்ளது. இன்றைய சூழலில் தொழில் நுட்ப ரீதியான அறிவு இருப்பவர்களே சாதனை படைக்க முடியும் என்கிற நிலைக்கு மூன்றாம் உலக நாடுகளில் இக்கருத்து நிலவுகிறது. அறிவியல் தொழில்நுட்பக்கல்வி மேலும் மனிதர்களை இயந்திரத்தனமாகவும் மாற்றியும் உள்ளது. பள்ளிக் கல்வியை ஓரளவு பெற முடிந்தாலும் பட்டமேற்படிப்பு பெறுவது என்பது ஒடுக்கப்பட்ட-பிற்படுத்தப்பட்ட-மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்கக் கூடாது என்பதே புதிய கல்விக்கொள்கையின் உள்ளீடாகப் பார்க்கமுடிகிறது. கல்வியின் மூலமாக சமநிலைநோக்கிய பாதையை முடக்குவதற்காகவும் அடித்தள மக்களுக்கான இடஒதுக்கீட்டை மறுதலிப்பதற்கான காரணத்தினையும் கல்விக் கொள்கை வரைவின்வழி அனுமானிக்கமுடிகிறது.

 இன்றைய கல்விமுறை (தொடக்கக்கல்வி முதல் மேனிலைக்கல்வி வரை) மாணவர்களை மேலும் ஒடுக்குகின்ற கருவியாக இருக்கின்ற சூழலில் கல்வி பயில் அமைப்புமுறையில் மாற்றம் கொண்டு வர நினைப்பது மேலும் உழைக்கும் மக்களின் குழந்தைகளுக்கு எதிரான கல்விக் கொள்கை அமைந்துள்ளது. இச்சூழலில் செயல்வழி கல்வியை உள்ளடக்கிய சமச்சீர் கல்வி எனும் புதிய கல்விக் கொள்கையாக, பரவலாக்கம் செய்யத்தவறுதலோடு மும்மொழியைத் திணித்தல் இளம்பருவத்தில் கொண்டு வர எண்ணுவது தேசிய இனம்சார்ந்த மொழிவழி அடையாளத்தை அழிக்க எண்ணுவதாகும்.

               கல்வி கற்று பட்டம் பெற்ற பின்னர் தகுதித்தேர்வு என்பது முதலாளிகள் நடத்தும் பயிற்சி நிறுவனங்களின் லாப நோக்கத்திற்கானதாகவே அமையக்கூடியதாகும். மேல்நிலைக் கல்வித்தகுதி பெற்ற மாணவர்கள் சூத்திரங்களையும் விதிமுறைகளையும் மனப்பாடம் செய்து மூளையில் நிரப்பி தகுதி பெறுதல் ஒழிய அதனை அன்றாட வாழ்க்கையில் பொருத்திப் பார்ப்பதற்கான வாய்ப்பில்லாமல் போகிறது. பாடங்களைப் படித்து மதிப்பெண்கள் பெறுவதன் மூலம் எப்பயனும் இல்லை என்பதையே புதிய கல்விக் கொள்கையின் வரைவு அமைந்துள்ளது. மேல்நிலைக்கல்விக்குப் பின்னே தேசியத் தகுதித்தேர்வு முகமை நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலமே பட்டப் படிப்பு சாத்தியமாகும் என்று முன்மொழியும் நிலை என்பது மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு முக்கியம் என்பதால் கிராமப்புற சமச்சீர் கல்வியில் அதிக மதிப்பெண்களைப் பெற்றும் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பில்லாமல் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மனநிலையே மாணவர்களின் மத்தியில் ஏற்படும். இது வாழ்வின் மீதான விரக்தி மனநிலையையே உருவாக்கும் என்பதில் அய்யமில்லை.

 இன்றைய சூழலில் ஆசிரியர் மாணவர்களுக்கு சமகாலச் சூழலோடு கல்வியைப் பொருத்திப் பார்ப்பதற்கு வழிகாட்டுவதில்லை. காரணகாரிய தர்க்கரீதியான உரையாடல் ஆசிரியர்- மாணவர், மாணவர் – ஆசிரியர், பெற்றோர்-மாணவர், ஆசிரியர்-பெற்றோர் மத்தியில் நிகழ்வதில்லை. கற்பித்தலின் வழியாக நுட்பங்களைத் கற்றுத் தருகிறார்களொழிய அதனால் சமூகத்திற்கு சாதக, பாதகமான விளைவு என்ன என்பதை விளக்கப்படாமலேயே இருக்கிறது. அணுக்கரு கொள்கை, அணுக்கரு விளைவுடன் அணு இணைவு, அணு சிதைவு, அறிவியல் ஆய்வு என நுண்மான் நுழைபுலம் கொண்டு அணுகுகிறோம். அதன் கண்டுபிடிப்பின் உச்சத்தில் மனித இருப்பும் மனித வாழ்வாதாரமும் இல்லாமல் போகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி நாட்டின் வல்லரசாக மாற்றினாலும் அங்கு சமூகவிருத்தி, மனித ஆற்றலின் முக்கியத்துவம் பேணப்பட வேண்டும் என்பதை இன்றைய அறிவியல் ஆய்வுமுறைக் கல்வியில் கற்பிக்கப்படுவதில்லை.

எவனோ ஒருவன் குளிர் தாங்குவதற்கு எவனோ ஒருவன் உள்ளன் ஆடை தயாரிப்பது போல் எவனோ ஒருவன் பயன் பெற நம் மண்ணில் யுரேனியம் தயாரிக்க அணு உலை, ஸ்டெரிலைட் ஆலை உருவாக்குகிறோம். உள்ளன் தயாரித்தல் என்பது தொழில் நுட்பம் தான். அணு உலையின் மூலம் யுரேனியம் தயாரிப்பதும், ஸ்டெரிலைட் தயாரிப்பதும், கைட்ரோ கார்பன் எடுப்பதும் தொழில் நுட்பம் தான். இவை இரண்டிற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. உள்ளன் ஆடை மனிதர்களுக்கு இயற்கையின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றார் போல உடம்பிற்கு சீர் செய்யும் ஓர் ஆடை, ஆனால் அணு உலை, கைட்ரோ கார்பன் எடுத்தல் என அரசின் செயல்பாடு, சமூக இயற்கை வாழ்க்கையை சீர்குலைக்கக் கூடியது. இயற்கையையும், மனித சமூகத்தையும் காவுவாங்க காத்திருக்கக்கூடியதாகும். இவ்வாறு சமூக நடவடிக்கையையும், அரசியல் செயல்பாடுகளையும் காரணகாரியத்தோடு அணுகி இது சரி. இது தவறு, இதற்கு மாற்று இருக்கிறதா? ஏனப் பகுத்தாய்ந்து சமூக வளமைக்கான, விடுதலைக்கான சூழலை உருவாக்க மாணவர்கள் தங்களைத் தயார் செய்து கொள்ள கல்வி வழிகாட்டத் தவறுகிறது.

மும்மொழிக் கொள்கைக்கு மூன்றாம் வகுப்பிலேயே முக்கியத்துவம் கொடுக்கின்ற இக்கொள்கை சுழ்நிலையியல் கல்வி, வரலாறு இப்பாடங்களைப் புறக்கணிக்கப்பட்டுள்ளதைப் பார்க்கமுடிகிறது. மனித வளமைக்கு தாய்மொழி எவ்வளவு அவசியமோ அதனைப்போன்று சுற்றுச்சூழல் மிகமுக்கியமானது என்பதை சிறுவயதிலிருந்தே அறிந்து கொள்ளும் மாணவர்களால் இயற்கைக்கு எதிரான அரசுநடவடிக்கைகளை ஒவ்வொருவரும் கல்விவழியாக அறிய முடியும். அதன்வழியாக மனிதவளமைக்கானது எது என்பதை அறிய முடியும்.

 இன்றைய சூழலில் புதிய கல்விக்கொள்கையில் மாணவர்களின் சமூக உணர்ச்சியை கட்டுப்படுத்த நினைப்பதும், மாணவர்களைக் கண்காணிப்பதற்கு குழு அமைக்க வலியுறுத்துவதும் பின்தங்கிய மாணவர்களுக்குத் திறன்மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது என்பதும் குலத்தொழிலை வழிமொழிவதாகவும் சமூகநீதிக்கு எதிரான முதலாளித்துவ தாராளமய உலகமய வலைக்குள் சிக்கித்தவிக்கும் நிலை உருவாகும் என்பதே என் எண்ணம்.

  புத்தகச் சுமை, பாடச்சுமை மாணவர்களுக்கு சோர்வைத் தருகின்றது என்கிற காரணங்களால் பள்ளி மாணவர்களுக்கு பருவமுறை அடிப்படையில் பாடம் கற்பித்தல். தேர்வு நடத்துதல் என்பது சிறந்த முறையாக இருந்தாலும் அது தொடர்செயல்பாட்டுக்கானதாக மாணவர்களைத் தயார் செய்தல் வேண்டும். இச்சூழலில் புத்தகத்தை சோர்வு தரக்கூடிய பொருளாகவே பார்க்கும் வழக்கம் நடைமுறையிலுள்ளது. இருப்பினும் மாணவர்களின் குடும்பச் சூழல் காரணமாகும். மேலும் டிஜிட்டல் வழிக் கற்றலும் கற்பித்தல் என்பது ஏழை எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு எவ்வாறு சாத்தியமாகும்?அடிப்படை வசதியில்லாத பள்ளிகளே தமிழகத்தில் நிறைந்திருக்கும் இன்றைய சூழலில் மாணவர்களுக்கு டிஜிட்டல் கற்பித்தல் எவ்வாறு சாத்தியப்படும். டிஜிட்டல் வழிக் கற்றல் ஆசிரியர்-மாணவர்களிடம் ஆரோக்கியமான தொடர்ச்சியான நல்லுறவிற்கான உரையால் இல்லாமல் ஆக்குவதோடு அச்சுவழியான வாசிப்புமுறையை நீர்த்துப் போகச் செய்யக்கூடும். ஆகவே முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களின் வாழ்வியல், பொருளாதாரச் சூழலுக்கு இம்முறை ஒவ்வாததாகும்.

               மாணவர், ஆசிரியர் உறவு நிலையில் விரிசல் இருவருக்குமான உறவு நிலை நெருங்கிய தொடர்பு, தோழமை உணர்வு இல்லாததால் ஆசிரியர் மேல் மாணவரும், மாணவரின் மேல் ஆசிரியர்களும் வன்மத்தை கைக்கொள்பவர்களாக உருவாகிறார்கள். இவை மாற வேண்டும், ஆசிரியர் மாணவர்களின் மேல் அக்கறை கொள்ளும் மாற்றுக் கல்வி சிந்தனையாளர் பாவ்லோ ப்ரைரெ வழியுறுத்தும் ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களிடம் விடுதலைக் கல்வியை வலியுறுத்துவதை இன்றைய சூழலில் கவனம் கொள்ளத் தேவையாக உள்ளது. வங்கியில் பணத்தை டெபாஸிட் செய்வதைப் போல் ஆசிரியர் மாணவர்களின் தலையில் தகவல்களை இட்டு நிரப்பும் முரட்டு கல்வி முறையை ப்ரைரெ கடுமையாக சாடுகிறார்.

மாணவர்களிடம் ஆசிரியர் சொற்பொழிவினை நிகழ்த்துவதையும் மாணவர்களை இறுக்கப்படுத்தி கட்டுப்பாட்டிற்குள் வைக்காமலும் அவர்களை மௌனமாக்காமலும் ஆற்றலோடு செயல்பாட்டினில் ஈடுபட வைக்க வேண்டும். மாணவர்களை சுதந்திரமாகவும் ஜனநாயகமாகவும் கேள்வி கேட்கும் மனப்பான்மையை வளர்த்தல் வேண்டும். வாழ்க்கை அனுபவங்களையும் குடும்பப் பிரச்சனைகளைப் பகிர்தல், ஒவ்வொரு முறையும் கற்கும் போது சமூக இயங்கியல் குறித்த திறனாய்வுப் பார்வை மாணவர்களுக்கு வேண்டும். இவைகளை உள்ளடக்கிய கல்வி முறையே சமூக மாற்றத்தை உண்டு பண்ணக்கூடியதாக இருக்கும். இவ்வாறான சூழலை இன்றைய கல்வி முறையின் கொள்கையாக கடைப்பிடிக்கப் வேண்டும். கல்வி முறையில் பல மாற்றங்கள் கொண்டிருந்தாலும் ஆசிரியர் மாணவர் எனும் உறவு முறையிலும் பாடம் நடத்தும் முறையிலும் ஒடுக்கு முறையையும் ஏற்றத்தாழ்வினை ஆசிரியர் கையாள்வதைத் தவிர்க்க முடியாமல் இருக்கிறது. மேலும் மாணவர்களின் கல்வித்தர முன்னேற்றத்தை ஆரோக்கியமாக வளர்த்துச் செல்வதில்லை. இடைநிலை கடைநிலை மாணவர்களை புழுக்களுக்கும் கீழாய் அணுகுவது மேலும் மாணவர்களை ஒடுக்குமுறைக்கு இட்டுச் செல்கிறது. இவை மாற்றப் படவேண்டும். மாணவர்களை தங்கு தடையின்றி பய உணர்வின்றி இயங்கவும் சமத்துவத்தை நிலைநாட்ட உரையாடவும் முன்னேற்றப் பாதையை நோக்கியே பயணிக்க வைக்கும் கல்வியே தேவையாக உள்ளது.

               மாற்றுக் கல்வியின் நோக்கமாக முதலில் முன்வைப்பது சமூக விடுதலைக்கானதாக இருக்க வேண்டும். ஆனால் இவை புதிய கல்விக்கொள்கையில் இல்லை. மேலும் சமூக வளர்ச்சி சார்ந்தும் மக்கள் வாழ்வாதாரம் சார்ந்தும் புதிய கல்விக் கொள்கை அமையவேண்டும். கல்வி-ஆசிரியர்-மாணவர்-சமூகம் என கூட்டுறவைப் பேணும் வகையில் சமூக விடுதலையை மையப்படுத்தியே சமூக அக்கறையோடு பொதுநலம் கொண்ட மாணவர்களை உருவாக்க வேண்டும். வெறுமனே சேமிப்புக் கிடங்குபோல் அறிவாளிகளை சேமித்து வைப்பதை விட்டு விட்டு அவ்வறிவாளியை சமூக விடுதலைக்காகவும் சமூக விருத்திக்காகவும் பயன்பெறும் வகையில் கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும். பார்ப்பனமயமாதல்-குலவழிக் கல்வி, வீட்டுப் பள்ளி எனும் சனாதன வலைக்குள் புதிய கல்விக்கொள்கையின் வரைவு அமைந்துள்ளது. இதிலிருந்து விடுபட்டு ஜனநாயகத்தை முன்மொழியும் கல்வியாக, படைப்பாக்கத் திறனை வளர்க்கக் கூடிய, கலைகளில் மாணவர்கள் கற்பதற்கு கல்வியோடு இணைக்க வேண்டும்.

தொடக்கக் கல்வியிலிருந்தே நிகழ்த்துதலோடு கல்வி கற்றுத்தர வேண்டும். அதுவும் தாய்மொழியிலேயே கல்வி கற்றுத்தர வேண்டும். மொழி உணர்வையும், தமிழின உணர்வையும் மேம்படுத்தும் வகையில் கல்வி அமைய வேண்டும். பெண் - ஆண் முரண்பாடுகளை முன்வைக்கும் தன்மையிலிருந்து விடுபட்டு கல்வியின் வழி சமத்துவத்தையும், தோழமையையும் கொண்டு வரவேண்டும். இவைகளை புதிய கல்விக் கொள்கையில் இல்லாமல் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. மொழிப்பாடம் கற்றுத்தருவது குறித்துப்பேசும் போது மொழிவழி கல்வியை வலியுறுத்துவதுபோல கூறிவிட்டு பின்னர் பொதுமொழியில் கற்றலாம் என்று கூறுவது தாய்மொழிக்கல்வி வழங்குவது அவசியமில்லை என்பதான தொனி வெளிப்பட்டுள்ளது. மேலும் தகுதிவாய்ந்த மொழியாசிரியர் இல்லையென்றால் ஓய்வுபெற்ற ஆசிரியர்களைப் பயன்படுத்துக் கொள்ளலாம் என்பது இளம்தலைமுறை படித்தோர்க்கு எதிரானதாகும்.

  இக்கல்விக் கொள்கைக்கு முன்னதாக “1985இல் கல்வி : ஓர் அறைகூவல் நுனரஉயவழைn : யு நஒஉநடடநnஉந எனும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய கல்விக் கொள்கைக்கான ஆவணத்தை வெளியிட்டு அதன் பின் நாடு தழுவிய அளவில் 1986இல் புதிய கல்விக் கொள்கையை வெளியிடப்பட்டது. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்கப் போகும் இந்திய திருநாட்டை பொருளாதாரப் பாதையிலும் அறிவியல் பாதையிலும் வளம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் புதிய கல்விக் கொள்கை புகுத்தப்படுகிறது என்று அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி புதிய கல்விக் கொள்கை குறித்து நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கிறார். ”(கோகிலாதங்கசாமி, 2012) இக்கொள்கையில் அனைவருக்கும் கல்வி, கரும்பலகை இயக்கம், மாதிரிப்பள்ளிகள், முன்னோடி பள்ளிகள், மதிப்பு உணர்வு கல்வி;, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் என்கிற தன்மையில் புதிய கல்விக் கொள்கை (1986) திட்டம் அமைந்தது. இதன் சாராம் இந்தியா என்கிற ஓர் மனம் என மதிப்பை உருவாக்க நினைத்து இருப்பதைப் பார்க்க முடிகிறது பார்க்க முடிகிறது.” எனும் நோக்கத்ததைப் போன்றே “அனைவருக்கும் உயர்தர கல்வியை வழங்குவதன் மூலம் நமது தேசத்தை ஒருங்கிணைந்த மற்றும் துடிப்பான அறிவு மிக்க சமுதாயமாக மாற்றுவதற்கு நேரடியாக பங்கு அளிக்கும் விதமாக இந்தியாவை மையம் கொண்ட கல்வி முறையாக தேசிய கல்வி கொள்கை 2019 வரைவு கருதப்படுகிறது” புதிய கல்விக் கொள்கையின் குறிக்கோள் அமைந்துள்ளது. இந்தக் குறிக்கோள் நாடு தழுவிய கல்வியைக் கல்விக் கொள்கையாகக் கொண்டு வர நினைப்பது என்பது பன்முகப்பட்ட தேசிய இனங்களைக் கொண்டுள்ள இந்தியாவில் சாத்தியமற்றதாகும்.

 இந்திய அரசியலமைப்புச் சட்டம் கல்வி மாநிலக்கட்டுப்பாட்டிற்குள் இருப்பதே சரியானதாகச் செயல்பட முடியும் என்று கூறுகிறது. புதிய கல்விக் கொள்கை நாடு தழுவிய ஒரே கல்வி என மத்திய அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நினைப்பது மாநிலங்களின் சுயாட்சியைப் பறித்துவிட்டு கல்வியை இந்தியா எனும் போர்வைக்குள் கொண்டுவருவது தவறானதாகும்.

  புதிய கல்விக் கொள்கை நடைமுறையில் இருக்கின்ற யுஜிசி நிர்வாக அமைப்பை காரணமின்றி நிராகரிக்கின்றது. கல்லூரி, பல்கலைக்கழகங்களை யுஜிசி எனும் பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைமையிலேயே அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்றது. இதன் தலைவராக ஒருவரும், ஒரு துணைத்தலைவரும் கொண்ட 10 உறுப்பினர்களை இவ்வாணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். இவர்கள் இந்திய அரசால் நியமனம் செய்யப்பட்டாலும் நடுவண் அரசு மாநில அரசு பணிகளில் இல்லாத ஒருவரை இதன் தலைவராக நியமிக்கப்படுவதுண்டு. மொத்தமுள்ள 10 உறுப்பினர்களில் நான்கு உறுப்பினர்களும் மாநிலவாரியான பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்களைத் தேர்வு செய்யப்படுவர். துறைசார்ந்த ஆற்றல் மிகுந்த கல்வியாளர்கள் என மீதமுள்ள நான்கு பேரை தேர்ந்தெடுக்கப்படுவர் . இதில் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பணியாற்றுவர். துணைத்தலைவர் 3 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பணியாற்றலாம் ஏனைய உறுப்பினர்கள் மூன்றாண்டுகள் பணியாற்றலாம். ஒருவரே இரண்டு முறை தலைவராக ஒரு துணை தலைவராகவும் நியமனம் செய்யலாம் என்கிற விதிமுறையை கொண்டு யுஜிசி நிர்வாக அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த நிர்வாக அமைப்பினை புதிய கல்விக் கொள்கையை நிராகரித்து ஏற்கனவே இருந்த கட்டுமானத்தை உடைத்து உயர் கல்வி ஆணையம் எனும் புதுக்கட்டுமானத்தை உருவாக்குவதன் தேவை என்ன என்பதை நன்கு விளக்கப்படாமலே உயர் கல்வி ஆணையம் அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

மேலும் ராஷ்ட்ரிய சிக்சா அயோக் எனும் கொள்கை பிரதமரின் கட்டுப்பாட்டிற்குள் மாநிலங்களின் தலைமைத்துவத்தை சுயாதீனத்தைப் பறித்து இந்தியப்பிரதமரின் கீழ் இயங்கும் குழுவே கல்வித்துறையை கல்வி சார்ந்த நிறுவனத்தை கண்காணிக்கும் அதிகாரம் பெறக்கூடியதாக இருக்கும் என்பது பாசிச தன்மையானதாகும. ; இதனால் மாநிலங்களின் பிரதிநித்துவம் இழக்கநேரிடும். அரசு சார்ந்த பள்ளிகளையும் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் தனியாரிடம் தாரைவார்க்க பார்க்கக்கூடியதாக மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அமைந்துள்ளது. நேஷனல் டெஸ்டிங் அகடமி மூலமாக மாணவர்களுக்கு தகுதித்தேர்வு வழங்கிய பின்னரே அந்தத் தேர்வின் மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு பட்டப்படிப்பு பட்டமேற்படிப்பு வழங்கப்படும் என்பது பிற்போக்குத்தனமானதாகும். பாடத்திட்டம் சார்ந்த கல்வி கற்ற பின்னர் தகுதித்தேர்வு வைத்தே ஒரு மாணவனைத் தகுதியானவன் என்று கூறுவது மாணவர்களின் சுய அறிவுயை, சுய சிந்தனையை, சுய செயல்பாட்டைக் கட்டுப்படுத்துவதாக அமையும். மாணவர் விரும்பும் பாடத்தை படிக்க முடியாமல் தகுதித்தேர்வில் எடுத்த மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு பட்டப்படிப்பு தீர்மானிக்கப்படும் என்பது மாணவர் விருப்ப அடிப்படை பாடத்தை தேர்ந்தெடுப்பது முடியாமல் போகிறது.

புதிய கல்விக் கொள்கை 2025, 2030 ஆம் ஆண்டு தரமான உள் கட்டமைப்பு கொண்ட கலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது என்றால் இன்றைய தேவை எதுவென அறிந்து அதனை இப்பொழுதே உட்கட்டமைப்பு ஆசிரியர் தகுதி மாணவர்களின் கல்வி மாணவ்களின்விருப்பம் இவைகளை இப்பொழுதே உணர்ந்து மாநில ரீதியான சுயாதீன செயல்பாட்டிற்கு அடித்தளமிடாமல் இந்தியா என்கிற ஒற்றைப் பண்பாட்டை உருவாக்குவது என்பது பன்முக மொழி ரீதியான பண்பாட்டைக் கொண்ட இந்தியாவிற்கு பொருத்தமானது இல்லை. ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே பண்பாடு, ஒரே உணவு, ஒரே வாழ்வியல் என்பது எவ்வாறு சாத்தியமாகும். சமூக இயங்கியலுக்கு இது முரணானதாகும். பன்முகம் கொண்ட மொழி வழியான அடையாளத்தை மீட்டெடுக்கவும் மொழி வழியான பண்பாட்டை அடையாளப்படுத்தவும் மொழிவழிக் கல்வியே சிறந்தது என்பதை புதிய கல்விக் கொள்கை வரைவில் பல திருத்தங்கள் கொண்டுவந்து அதனை நடைமுறைப்படுத்துவதே மக்களுக்கான, சமூகநீதி முன்வைக்கக்கூடிய புதிய கல்விக் கொள்கையாக இருக்கமுடியும். ஏற்கனவே நிலவுகின்ற போதாமையைப் போக்காமல் அடிப்படையை சீர் செய்யாமல், சமூக முரண்களை கவனம் கொள்ளாமல் பிற்போக்குத்தனத்தை மாற்றமால் புதியகல்விக் கொள்கை தினையளவும் சாத்தியமிலலை.

 தமிழகம் போன்ற பிற மாநிலங்களில் முதல் தலைமுறைப் பட்டதாரி என்பது முழுமையாக ஒழிக்கப்படாத சூழல் ஒருபுறமிருக்க, புதிய கல்விக் கொள்கையால் மேலும் கிராமப்புற ஏழை மாணவர்கள் கல்வியில் பின்தங்கிய சூழல் ஏற்படும் அபாயம் நம் கண்முன்னே இருக்கின்றது. மூன்றாம் வகுப்பு முதல் மேல்நிலைக்கல்வி வரை பொதுத்தேர்வு என்பது கிராமப்புற மாணவ்கள் கல்வி பயில்வதில் பின்னடைவு ஏற்படும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. மேலும் பின்தங்கிய மாணவர்களை என்டிபி, ஆர்ஐஏபி (National Tutors Programme, Remedial Institute Aides Programme) எனும் அமைப்புகள் கண்காணிக்க கூடியவர்களாக இருப்பார்கள் என்று கூறுவதும் பின்தங்கிய இடை நின்ற மாணவர்களுக்கு சந்தைக்கு தேவையான தொழிற்கல்வியைப் பயிற்றுவிப்பது என்பது பொருத்தமானதாக இருக்கமுடியாது. ஒரு மாணவன் கல்வியில் இடைநிறுத்தம் ஆகிறான் என்றால் அம்மாணவனின் சூழல், பொருளாதாரப் பின்னணி, சமூகப் பின்னணி, மாணவனின் மனநிலை இவைகளை ஆய்ந்தறிந்து நிறுத்ததிலிருந்து விடுவித்து தொடர்ந்து கல்வி வழங்க வாய்ப்புகளை வழங்குவது என்பது சாத்தியப்படுத்த பள்ளி முன்வேண்டுமேயொழிய அதைவிட்டுவிட்டு இடைநின்ற மாணவனுக்கு தொழிற்கல்வி சார்ந்து படிக்க செய்வது என்பது சரியானதாக இல்லை. ஒரு மாணவன் பள்ளி படிப்பைத் தொடர முடியாமல் போனதற்கு அவனுக்கு வாய்ப்பாக தொழிற்கல்வி அளிப்போம் என்பது பிற்போக்குத்தனமானதாகும்.

  கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இவைகளை வழிநடத்துவதும் பல்கலைக்கழக மானியக் குழு வழங்கும் பரிந்துரைகளை ஏற்று கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இயங்கும் தன்மையில் இருக்கும் நிலையினை புதிய கல்வி கொள்கை மாற்றம் உண்டு பண்ணுகிறது. பல்கலைக்கழக மானியக் குழு என்கிற அமைப்பு மனிதவள மேம்பாட்டுத்துறையோடு இணைந்து இருந்தாலும் அது அறிவு சார்ந்த முனைவர் ஆக திகழும் ஒருவரை தலைவராகக் கொண்டு நடுநிலையோடு சுயாதீனமாகச் செயல்படும் ஓர் அமைப்பே யுஜிசி எனும் அமைப்பாகும். பல்கலைக்கழக மானியக்குழு செயல்பட்டு வருவதை புதிய கல்வி கொள்கை வரைவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதைப் பார்க்கமுடிகிறது. யுஜிசி எனும் அமைப்பை மாற்றியமைத்து National education commission என்கிற புது அமைப்பினை உருவாக்குவதன் தேவை என்னவாக இருக்க முடியும்? இதன் தலைவராக இந்தியப் பிரதமரையும் இந்தியாவின் மிகப்பெரிய முதலாளி வர்க்கத்தினரே இக்குழுவில் இருப்பார்கள் என்பதான நிலை உருவாக்கின்ற தன்மையைப் பார்க்க முடிகிறது.

கல்வியாளர்களைக் கொண்ட யுஜிசி என்கிற அமைப்பு சுதந்திரமாக செயல்பட்ட தன்மை மாறி ஆளும்வர்க்கத்தின் மூலம் ஒரு சார்பாக மத்திய அரசின் கீழ் செயல்பட நேரடி கவனத்திற்கு கொண்டு வந்துள்ள, இச்செயல்பாடு மக்களின் வளர்ச்சிக்கான தாகவும் சமூக நீதிக்கான தாகவும் இல்லாமல் பாசிசத்திற்கு ஆளான நிலைக்கு தள்ளப்பட்டது மிகவும் மோசமானதாகும். மூன்றாம் வகுப்பில் தொடங்கும் பொதுத்தேர்வு 8 பொதுத் தேர்வாக நடத்துவதன் மூலமாக இந்தியா வல்லரசு ஆக முடியுமா? ஒரு குழந்தை தேர்ச்சி அடையவில்லை என்றால் மீண்டும் மூன்றாம் வகுப்பு தொடர்வதில் சிக்கல் ஏற்படும். இதனால்; வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தை மூன்றாம் வகுப்பிலேயே இடைநீக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்பொழுது பள்ளியின் உள்கட்டமைப்பு, கற்பிக்கும் கருவி, மேம்பாட்டுக்கான கல்வி முறை சார்ந்த கட்டமைப்பைக் கொண்டு வராமல் அடிப்படைத் தேவையான தண்ணீர், பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாத உள்கட்டுமானத்தை கொண்ட இன்றைய சூழலில் முன்னோக்கு பார்வையை கொண்டதாக புதிய கல்விக்கொள்கை இருக்கின்றது.

 பள்ளிகளைச் சீர்படுத்தவும் உள்கட்டமைப்பை வளமானதாகவும் அரசுப் பள்ளிகளை உயர்தரமானதாகவும் பள்ளிகளை உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்லவும், மாணவர்களின் சேர்க்கை தனியார் பள்ளிகளில் அதிகமாக இருப்பதை குறைக்கவும் அரசு பள்ளிகளில் சேருவதற்கு ஊக்குவிக்கவும் இளம் பருவக் கல்வி முதல் பட்டப்படிப்பு பட்டமேற்படிப்பு ஆராய்ச்சி படிப்பு இவைகள் அனைத்திலும் அந்தந்த மொழிவாரியான மாநிலங்களின் சுயாதீனதோடு தாய்மொழிக் கல்வியை வழங்குவது என்பது ஒரு நாட்டின் வளர்ச்சி சார்ந்ததாகும். இதனை கவனத்தில் கொண்டு மாநில அரசு மொழிவழிப் பண்பாட்டை அடையாளப்படுத்தி நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் கல்விவழி வளர்ச்சிப்பாதை அமைத்துத்தர எண்ணவேண்டும். தாய்மொழி வழிக்கல்வியை வழங்க வேண்டும் என்கிற தன்மையை புதிய கல்விக் கொள்கை முற்றிலும் புறக்கணிக்கிறது. விருப்பப்பாடமாக சமஸ்கிருதம் போன்ற பிற மொழிகளை கற்பிக்க வைப்பது என்பது கொள்ளாத வாயில் கொழுக்கட்டையை திணிப்பது போன்றதாகும். தாய்மொழியை அதன் வழியான கல்வி பயிலுதல் என்பது ஒரு மாணவருக்கு உகந்ததாக இருக்கும். இதை வழங்குவது என்பது ஒரு நாட்டின் கடமையும் கூட. தாய்மொழி வழி பாண்டித்தியம் பெறுவதற்கும் வழிவகை செய்தை விடுத்து மும்மொழிக் கொள்கை இருமொழிக் கொள்கை இன்னும் பிற மொழியை கற்று தேர்தல் இதன் திறன் மேம்பாடு என்பது வலிந்து திணிப்பதாகும். தானே முன் வந்து படிக்க விரும்பினால் மட்டுமே கற்பிக்க வழிவகை செய்ய வேண்டும். தாய்மொழிக் கல்வி வழியாக மருத்துவம், தொழில்நுட்பக் கல்விகளாவும் இலவசக்கல்வியாக வழங்குவது என்பது மிக அவசியமான ஒன்றாகும். ஆனால் உலகமயச் சூழலில் சந்தை கலாச்சார உலகில் அனைத்தும் வணிக நோக்காக ஆகிவிட்டதால் கல்வியையும் கார்ப்பரேட் கையில் ஒப்படைத்து வணிக சந்தைப் பொருளாக கல்வி மாற்றப்படும் அவலம் இனி வரும் காலங்களில் நிகழக்கூடும். இன்றைய சூழலில் இனி வரும் காலங்களிலும்; தண்ணீரை எவ்வாறு பொதுமை வெளியிலிருந்து அப்புறப்படுத்தி வணிக நோக்கில் ஆக்கப்பட்டது போன்றே கல்வியை மனிதனின் உரிமை கல்வியின் மூலமாக சமூக நீதி அடைய முடியும் என்கிற அண்ணலின் குரலுக்கு மாறாக முதலாளி கைகளில் கல்வி கடைச்சரக்காக்கி ஆகிவிடும் தருணத்திலேயே ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை அவதானிக்க முடிகிறது.

 உயர்கல்விப் படிப்பினை தரமான தாராளமயம் நோக்கிய கல்வியாக வழங்க வேண்டும் என்கிற புதிய கல்விக் கொள்கையான முதலாளிகளுக்கானதாகும். இக் கல்விக்கொள்கை சமூக நீதிக்கு எதிராக இல்லாமல் சமூகநீதியை உருவாக்குமானால் கல்விக் கொள்கை எல்லோரும் ஆதரிப்போம். ஆனால் புதிய கல்விக் கொள்கை குருகுல கல்வியை ஆதரிப்பதும், இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருப்பதும், தனியார் கல்வி நிறுவனங்களை வளர்த்து விடுவதுமான செயலை கொண்டதாக இக்கொள்கையின் சாரத்தை உணர முடிகிறது. புதிய கல்விக் கொள்கையில் பஞ்சதந்திரம், ஜாதகம், கீதை உபதேசம் முதலிய கதைகளை மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும் என்று கூறுவது கருத்து முதல்வாதத்தையும் பிற்போக்குத்தனத்தையும் மூடப்பழக்கங்களையும் மாணவர்களின் மத்தியில் விதைப்பதாகும். அறிவார்ந்து செயல்படக்கூடிய தன்மையை விட்டு தெய்வீகத்தோடு இந்துத்துவத்தோடு இணைக்கும் கல்விக் கொள்கை மேலும் மாணவர்களை கல்வியின் மூலமாக பகுத்தறிவற்ற மூடத்தன மிகுதிப்பாட்டை பெற வழிவகை செய்யும்.

புதிய கல்விக் கொள்கை தற்பொழுது கல்வியாளர்கள் மத்தியிலும் முற்போக்கு இயக்கங்கள், சமூகச்செயற்பாட்டாளர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் விவாதப் பொருளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் சாதக-பாதகத்தை அறிந்து வினையாற்றுவது என்பது மிக அவசியமானதாகும். தேசிய இனம் சார்ந்த மொழிவழி அடையாளத்தையும் பண்பாட்டையும் முன் மொழியாமல் இந்தி, சமஸ்கிருத மொழிகளை முன்னிலைப்படுத்தி இந்தியா என்கிற ஒற்றைப் பண்பாட்டுத்தளத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அமைத்திருப்பது பிற்போக்குத்தனமானதாகும். இதில் பல திருத்தங்களை அறிந்து நடைமுறைப்படுத்துவதே சிறந்ததாகும். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே பண்பாடு எனும் தன்மையில் அமையும் கருத்துநிலை அடிப்படையில் ஒரே கல்வி என்ற ஓர்மைக்குள் கொண்டுவர நினைப்பது சரியானதாக இருக்க முடியாது.