Showing posts with label விடய அறிவு. Show all posts
Showing posts with label விடய அறிவு. Show all posts

Sunday, September 8, 2019

இலங்கை திட்டமிடல் சேவை

இலங்கை திட்டமிடல் சேவை


பணிநோக்கு

நிர்வாக ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்குவிதிகள் உரிய முறையில் செயற்படுத்துதல் மற்றும் புதிய கொள்கைகளினை அறிமுகப்படுத்துதல், உத்தியோகத்தர்களின் இயலளவினை அபிவிருத்தி செய்வதன் மூலம் உற்பத்தித்திறன் வாய்ந்த திட்டமிடல் சேவையினை நாட்டிற்குப் பெற்றுக்கொடுத்தல்.

நோக்கம்

திட்டமிடல் சேவையில் மனிதவள முகாமைத்துவக் கொள்கைகளினை தயாரித்தல்​

பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், வினைத்திறனுள்ள திட்டமிடல் சேவையொன்றினை உருவாக்குதல்.

பிரதான நடவடிக்கைகள்
ஆட்சேர்ப்பு செய்தல்
சேவையினை நிரந்தரமாக்குதல்
பதவியுயர்வுகளை பெற்றுக்கொடுத்தல்
​​​​இடமாற்றங்களை பெற்றுக்கொடுத்தல்
வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைகளை நடாத்துதல்
சேவையினை நீடித்தல் மற்றும் ஓய்வு பெறச்செய்தல்


ஆட்சேர்ப்புச் செய்தல்

பதவி மற்றும் நிறுவனம் அடிப்படையில் வெற்றிடங்களை இனங்காணுதல்
முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதியினைப் பெற்றுக்கொள்ளல்.
ஆட்சேர்ப்பிற்கான வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுதல்
>தெரிவிற்கான பரீட்சைகளினை நடாத்துதல்
நேர்முகப்பரீட்சையின் மூலம் விண்ணப்பதாரியின் தகைமைகளைப் பரீட்சித்து உறுதிப்படுத்திக் கொள்ளல்
அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அனுமதியினைப் பெற்றுக்கொள்ளல்


சேவையினை நிரந்தரமாக்குதல்


  • சேவை வழங்குனரினால் சேவை தளத்திலிருந்து பரிந்துரையினைப் பெற்றுக்கொடுத்தல்
  • அரசாங்க நிர்வாக செயலாளரின் பரிந்துரையினை அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்குப் பெற்றுக்கொடுத்தல்


பதவியுயர்வுகள்

​சேவை வழங்குனரினால் சேவை தளத்திலிருந்து பரிந்துரையினைப் பெற்றுக்கொடுத்தல்
அரசாங்க நிர்வாக செயலாளரின் பரிந்துரையினை அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்குப் பெற்றுக்கொடுத்தல்


இடமாற்றங்களை பெற்றுக்கொடுத்தல்

வருடாந்த இடமாற்றக் கொள்கைகளினைச் செயற்படுத்துதல்
சேவை அவசியங்களி​​னை கருத்திற் கொண்ட இடமாற்றம் செய்தல்


வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைகளை நடாத்துதல்

வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைகளின் பெறுபேறுகளை வெளியிடுதல்​
பதவியுயர்வுகளைப் பெற்றுக்கொடுத்தல்


சேவையினை நீடித்தல் மற்றும் ஓய்வு பெறச்செய்தல்

சேவை வழங்குனரினால் சேவை தளத்திலிருந்து பரிந்துரையினைப் பெற்றுக்கொடுத்தல்
அரசாங்க சேவை ஆணைக்குழுவின் பரிந்துரையினை பெற்றுக்கொடுத்தல்
இலங்கை கணக்காளர் சேவையின் வரலாறு

இலங்கை கணக்காளர் சேவையின் வரலாறு

இரண்டாம் உலக யுத்தத்தின் போது அரச துறையில் கடமைப் பரப்புக்கள் விரிவடைந்தமை, முற்பணக் கொடுப்பனவுச் செயற்பாடுகள் அதிகரித்தமை, கணக்கீட்டு முறைகளை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் ஏற்பட்டமை என்பவற்றின் அடிப்படையில் 1946 ஆம் ஆண்டில் இலங்கை கணக்காளர் சேவை ஆரம்பிக்கப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. அதன் பின்னர், அரச பொறிமுறையில் நிகழும் மாற்றங்களுக்கு தோல்கொடுத்து கணக்காளர் சேவையும் தற்போதுள்ள நிலைக்கு வளர்ச்சியடைந்துள்ளது. அந்தப் பயணத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இச்சேவையின் நிருவாக நிலையம் காலத்துக் காலம் மாற்றமடைந்துள்ளது.

அதற்கிணங்க, நிதி அமைச்சின் கீழ் காணப்பட்ட கணக்காளர் சேவை 2015.06.18 ஆந் திகதி முதல் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டதால் தற்போது இலங்கை கணக்காளர் சேவை பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் நிருவகிக்கப்படுகின்றது.

நாடளாவிய சேவையொன்றாகக் கருதப்படும் இலங்கை கணக்காளர் சேவையின் உத்தியோகத்தர்கள் நாடு முழுவதிலும் சேவையில் ஈடுபட்டுள்ளனர். அந்த உத்தியோகத்தர்களை சுய கட்டுப்பாடுடைய மதிநுட்பமுள்ள மற்றும் தொழில்சார் தேர்ச்சிகள் நிரம்பிய உத்தியோகத்தர்களாக உருவாக்குவது, பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கணக்காளர் சேவையின் பொறுப்பாகும். அதற்காக எதிர்காலத்தில் பின்வரும் விதத்தில் அபிவிருத்தி மற்றும் பயிற்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

  • கணக்காளர்கள் நிதி முகாமைத்துவத்தில் ஈடுபட்டுள்ளவர்களாக இருப்பதனால் சுய நிர்வாகம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி தேவையான மனப்பாங்கு மாற்றங்களைக் கட்டியெழுப்புதல் (SLIDA போன்ற நிறுவனங்களின் கீழ்).
    • ஒழுக்காற்றுப பிரச்சினைகள் குறையும் விதத்தில் கெளரவத்துடன் கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அறிவையும் மனப்பாங்குகளை உத்தியோகத்தர்களிடத்தில் உருவாக்குதல்.
    • இலங்கை கணக்காளர் சேவை உத்தியோகத்தர்களிடம் காணப்பட வேண்டிய தேர்ச்சிகளைப் பெறுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளுக்கு அவர்களை அனுப்புதல்.
    • சமகாலத் தேவைகளை அடையாளம் கண்டு கணக்காளர்களை திறன் விருத்தி நிகழ்ச்சிகளில் (Capacity Building) பங்கேற்கச் செய்தல்.
    • அபிவிருத்திப் பணிகளின் வெற்றியில் சரியான நிதி எதிர்வுகூறல் முக்கியான இடத்தை வகிப்பதனால் அதனுடன் தொடர்புடைய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உத்தியோகத்தர்களை ஊக்குவித்தல், ஆய்வுப் பின்னணியொன்றை உருவாக்குதல், அவற்றின பெறுபேறுகளை பயன்படுத்துதல்.
    • கணக்காளர்களை வாண்மைத் தொழிலாளர்களாக உருவாக்குவதற்குத் தேவையான உபாய முறைகளை உருவாக்குதல்.

    Tuesday, August 27, 2019

    இலங்கையின் சிவில் நிர்வாகம்.

    இலங்கையின் சிவில் நிர்வாகம்.

    1796ஆம் ஆண்டு பிரித்தானியக் காலனித்துவத்திற்குள் இலங்கை கொண்டு வரப்பட்டு, 1802ஆம் ஆண்டு முடிக்குரிய காலனியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுவரையில் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் நிர்வாகத்தின் கீழ் இலங்கை நிர்வகிக்கப்பட்டது.

    1815ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் பிரித்தானியர்களால் கைப்பற்றப்படுவதோடு இலங்கை முழுவதும் காலனித்துவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. 1802ஆம் ஆண்டு கரையோர மாகாணங்களின் அறிமுகத்தோடு, பிரித்தானிய சிவில் நிர்வாக முறைமை ஆரம்பமாகின்றது. கரையோர மாகாணங்களை நிர்வாகப் பிரதேசமாகக் கொண்ட அரசாங்கம் ஏறக்குறைய 30 வருடங்கள் செயற்பட்டது. இக்கால கட்டத்தில் இலங்கையானது “எடுத்துக்காட்டான முடிக்குரிய காலனியாக ( Typical Crown Colony) இருந்தது.

    சட்ட, நிர்வாக, நீதித்துறை சார்ந்த சகல அதிகாரங்களும் ஆளுநரிடமே இருந்தன. இவர் காலனித்துவ அரச செயலாளரூடாகப் பிரித்தானியப் பாராளுமன்றத்திற்குப் பதிலளிக்க வேண்டியவராக இருந்தார்.

    ஆளுநருக்கு ஆலோசனை வழங்குவதற்குச் சபை (Council) ஒன்று இருந்தது. ஆனால் சபையின் ஆலோசனையை ஆளுநர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கவில்லை. இவர் இக்காலத்தில் தன் விருப்பத்திற்கு ஏற்ப இலங்கையை நிர்வகிக்க முடிந்தது. கண்டி மாகாணத்தைப் பொறுத்த வரையில் அதன் நிர்வாகம் தனியாக நிர்வகிக்கப்பட்டதுடன், இதற்கான தனி ஆணைக்குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது.

    இவ் அத்தியாயத்தின் முதற்பகுதி இலங்கையின் சிவில் சேவை வளர்ச்சிக்கு கோல்புறூக், டொனமூர், சோல்பரி சீர்திருத்தங்கள் ஆற்றிய பங்களிப்புக்களை பரிசீலனை செய்கின்றது. அடுத்த பகுதி, சுதந்திர இலங்கையின் சிவில் சேவையில் பொதுச்சேவை ஆணைக்குழுவின் முக்கியத்துவத்தினையும், 1956ஆம் ஆண்டின் பின்னர் சிவில் சேவையில் ஏற்பட்ட முரண்பாடுகள், மாற்றங்களையும் பரிசீலனை செய்கிறது. இறுதியாக, சமகால சிவில் சேவைக் கட்டமைப்பில் அரசியல் கட்சிகள் செலுத்தும் செல்வாக்குகளும் சிவில் சேவை தொடர்பான சமகால சிந்தனைகளும் பரிசீலிக்கப்படுகிறது.

    சிவில் சேவைத் திணைக்களங்களும்,சிவில் நிர்வாக மாகாணங்களும்

    பிரித்தானிய காலனித்துவத்தின் கொள்கை, இலங்கை மக்களிடம் வரியை அறவிட்டு அதன் மூலம் இலங்கையை நிர்வகிப்பதாகவே இருந்தது. இது இலங்கை மக்கள் மீது தேவையற்ற வரிச் சுமைகளைச் சுமத்தி, அவர்களின் வாழும் உரிமைகளை மீறும் செயலாகவே இருந்தது. வரியை அறவிடும் நோக்கத்திற்காக இலங்கையில் இரண்டு சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டன.

    சிவில் சேவைத் திணைக்களங்கள்
    மாகாண சிவில் நிர்வாகக்கட்டமைப்பு
    சிவில் சேவைத் திணைக்களங்கள்

    1798ஆம் ஆண்டின் பின்னர் பல்வேறு சிவில் சேவைத் திணைக்களங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் கணக்காய்வாளர் நாயகத் திணைக்களம், நில அளவையாளர் திணைக்களம், மருத்துவத் திணைக்களம், காணிப்பதிவுத் திணைக்களம் போன்றவற்றைக் கூறிக் கொள்ளலாம்.

    சேர் தோமஸ் மெயிற்லாண்ட் (Sir Thomas Maitland) ஆளுநராக இருந்த 1805ஆம் ஆண்டுக்கும் 1811ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சிவில் சேவைத் திணைக்களங்கள் மீள் ஒழுங்கமைக்கப்பட்டதுடன், புதிய சிவில் சேவைத் திணைக்களங்கள் சில உருவாக்கப்பட்டன. காணிப்பதிவுத் திணைக்களம் செயலிழந்தது. அதேநேரம், சுங்கத் திணைக்களம், உப்புத் திணைக்களம் என்பன புதிதாக உருவாக்கப்பட்டன.

    மாகாண சிவில் நிர்வாகக்கட்டமைப்பு

    சிவில் சேவை நிர்வாகக் கட்டமைப்பின் முதுகெலும்பாக மாகாண நிர்வாகமே காணப்பட்டது. அதிகார மையப்படுத்தப்பட்ட அரசாங்க முறைமை நாடு முழுவதும் செயற்படப் படிநிலை அமைப்பு ஊடான மாகாண சிவில் நிர்வாக முறைமை வாய்ப்பாக இருந்தது. மாகாண சிவில் நிர்வாக முறைமைக்கான சிந்தனை 1796-1798ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஆரம்பமாகியிருந்தது. இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் மூன்று சிவில் நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, புதிய மூன்று மாகாணங்கள் உருவாக்கப்பட்டன. அவையாவன:

    யாழ்ப்பாணம், மன்னார்
    கொழும்பு, காலி
    திருகோணமலை, மட்டக்களப்பு
    மூன்று மாகாணங்களையும் நிர்வகிப்பதற்கு வதிவிட இறைவரி அத்தியட்சகர் (Resident and Superintendent of Revenue) ஒருவர் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் மூன்று மாகணங்களுக்கும் வரி சேகரிப்பாளர்கள் நியமிக்கப் பட்டார்கள். இதுவே பிரித்தானியர் அறிமுகப்படுத்திய மாகாண சிவில் நிர்வாக முறைமையாகும். 1815ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட கண்டி இராச்சியம், 1833ஆம் ஆண்டு வரை தனி சிவில் நிர்வாக மாகாணமாக நிர்வகிக்கப்பட்டது.

    கோல்புறூக் சீர்திருத்தமும், சிவில் நிர்வாகக் கட்டமைப்பும்.

    இலங்கையின் சிவில் நிர்வாகக் கட்டமைப்பு கோல்புறூக் சீர்திருத்தத்துடன் புனரமைக்கப்பட்டது. கோல்புறூக் சீர்திருத்தம் இலங்கை முழுவதையும் முடிக்குரிய நாடாக மாற்றியதுடன், பிரித்தானிய ஆளுநரின் கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டு வந்தது. பொது நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு, மையப்படுத்தப்பட்டது. அரசாங்க அதிகாரத்தின் மையமாகக் கொழும்பு நகரம் உருவாக்கப்பட்டது.

    கோல்புறூக் சீர்திருத்தத்தின் கீழ் இலங்கையின் சிவில் நிர்வாகக் கட்டமைப்பின் உச்சியில் காலனித்துவச் செயலாளர் காணப்பட்டார். இவர் இலங்கையின் சிவில் நிர்வாக விடயங்கள் தொடர்பாக ஆளுநருக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டியவராகக் காணப்பட்டார். இதனால் பொது நிர்வாகமானது காலனித்துவச் செயலாளரால் அடக்கியாளப்படுவதாக இருந்தது. எல்லாச் சிவில் நிர்வாகச் செயற்பாடுகளும் காலனித்துவ செயலாளரினாலேயே நெறிப்படுத்தப்பட்டது. அத்துடன், இலங்கை சிவில் சேவையின் (Ceylon Civil Service – CCS) சிரேஷ்ட அங்கத்தவர்கள் அனைவரும் இவருக்குக் கட்டுப்பட்டுச் செயற்பட்டனர். காலனித்துவச் செயலாளர் பொது நிர்வாகத்தின் மையமாகச் செயற்பட்டார்.

    மாகாண சிவில் நிர்வாகம்

    கோல்புறூக் சீர்திருத்தத்தின் கீழ் இலங்கை ஐந்து சிவில் நிர்வாக மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன. அவையாவன:

    வடமாகாணம்
    கிழக்கு மாகாணம்
    மேற்கு மாகாணம்
    தெற்கு மாகாணம்
    மத்திய மாகாணம் என்பவைகளாகும்.

    ஓவ்வொரு மாகாண சிவில் நிர்வாகமும் ஒவ்வொரு அரசாங்க அதிபரின் கீழ் (Government Agent – G.A) விடப்பட்டது. மாகாண சிவில் நிர்வாகத்தின் செயற்பாட்டிற்காக ஒவ்வொரு மாகாணத்திலும் கச்சேரி உருவாக்கப்பட்டது. மத்திய அரசாங்கத்தின் சிவில் சேவைத் திணைக்களங்களும்,முகவரகங்களும் கச்சேரிகளில் உருவாக்கப்பட்டு, அரசாங்க அதிபரால் இணைக்கப்பட்டுக் கட்டுப்படுத்தப்பட்டன. எல்லாக் கச்சேரி சிவில் நிர்வாகங்களையும் காலனித்துவச் செயலாளர் கொழும்பிலிருந்து இணைத்துக் கட்டுப்படுத்தியிருந்தார்.

    ஓவ்வொரு சிவில் நிர்வாக மாகாணங்களும் பல உப பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இந்தப் பிரிவுகள் ஒவ்வொன்றும் சிவில் நிர்வாக மாவட்டங்கள் என அழைக்கப்பட்டன. ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபரின் கீழே செயற்பட்டது. ஆயினும், அரசாங்க அதிபரே மாவட்ட சிவில் நிர்வாகத்திற்கும் முழுமையாக மாகாண சிவில் நிர்வாகத்திற்கும் பொறுப்பானவராவார்.

    முகாமைத்துவ நுட்ப ரீதியாக அரசாங்க அதிபர் இறைவரி அறவிடும் அலுவலர் ஆவார். இதனடிப்படையில் இவர் ஆரம்பத்தில் இறைவரித் திணைக்களத்துக்கே பொறுப்பாக இருந்தார். எவ்வாறாயினும், அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிகரிக்க, அரசாங்க அதிபர்கள் அரசாங்க முகவர்களாக மாற்றம் அடைந்தனர்.

    அதிகார ஒழுங்கைப் பார்க்கின்ற போது மையத்திலிருக்கும் காலனித்துவச் செயலாளரிடமிருந்து அதிகாரம் கீழ் நோக்கிச் செல்கின்றது. மாகாணமட்டத்தில் அரசாங்க அதிபர் காணப்படுகின்றார். கீழ்மட்டத்தில் சுதேசிய மட்ட உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றார்கள். இது கிராமிய மட்டம் வரை தொடர்கின்றது. போர்த்துக்கேயர், டச்சுக்காரர் போன்று பிரித்தானியர்களும் சுதேசிய நிர்வாகிகளாகிய முதலியார்கள், விதான – ஆராய்ச்சி (Vidane- Arachchis) போன்ற கிராமியத் தலைவர்களைச் சிவில் சேவையாளர்களாகப் பயன்படுத்தினார்கள்.

    சிவில் சேவை மறுசீரமைப்பு 1856-1928

    1856ஆம் ஆண்டில் காலனித்துவ சிவில் சேவை அமைப்பு மீள் ஒழுங்கமைக்கப்பட்டது. சிவில் சேவை ஆட்சேர்ப்பு முறைமை, போட்டிப் பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டது. பல்கலைக்கழகப் பட்டதாரிகள் சிவில் சேவைக்கான ஆட்சேர்ப்பில் மிகவும் காத்திரமானவர்களாகக் கருதப்பட்டார்கள். 1870ஆம் ஆண்டு சிவில் சேவை ஆட்சேர்ப்புக்கான பரீட்சை கொழும்பில் நடாத்தப்பட்டது. பிரித்தானிய பல்கலைக்கழகக் கல்வியை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெற்றுக்கொண்ட இலங்கையர்களால் சிவில் சேவையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இணையக்கூடியதாக இருந்தது. இதனால் இலங்கையின் சிவில் சேவையானது பிரித்தானியர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதொன்றாக இருந்தது. ஆகவே பிரித்தானிய அரசாங்கம் 1880ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மட்டும் பரீட்சையை நடாத்துவது எனத் தீர்மானித்தது. இதனால், இலங்கையர்கள் சிவில் சேவை ஆட்சேர்ப்பு பரீட்சையினை இங்கிலாந்து சென்று எழுத வேண்டியேற்பட்டது.

    இலங்கையர்கள் சிவில் சேவையில் நுழைவதற்கான கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கினர். இக் கோரிக்கைகளால் 1891ஆம் ஆண்டு சிவில் நிர்வாக சேவையில் உள்ளூர்ப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டது. இது சிவில் நிர்வாக சேவையின் கீழ்மட்ட அலகாகச் செயற்பட்டது. இவர்களுக்கான அறிவுறுத்தல்களும், வழிகாட்டல்களும் ஐரோப்பிய சிவில் சேவை மேலதிகாரிகளால் வழங்கப்பட்டன.

    1928ஆம் ஆண்டில் மாகாண சிவில் நிர்வாகமானது மீள் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டதுடன் மாகாணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மாகாணங்களின் எண்ணிக்கை ஒன்பதாகவும், மாவட்டங்களின் எண்ணிக்கை பத்தொன்பதாகவும் அதிகரித்தது. இதனை விட நூற்றுப் பத்து பிரதான தலைவர் (Chief head men’s ) பிரிவுகளும் அறுநூற்றுப் பதின்மூன்று மேல் நிலை தலைவர் (Superior head men’s) பிரிவுகளும் நான்காயிரம் கிராமியத் தலைவர் (Village head men’s ) பிரிவுகளும் தோற்றுவிக்கப்பட்டன.

    அரசாங்க அதிபர் தொடர்ந்தும் வரி சேகரிப்பவராக இருந்தாலும், அவருடைய பணிகள் பல நிலைகளிலும் விரிவடைந்து சென்றிருந்தன. சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்க அதிபரிடம் விடப்பட்டிருந்தது. சட்ட, நிர்வாக, நீதித்துறை சார்ந்த கடமைகளைப் படிப்படியாக மாகாணமட்டத்தில் மேற்கொள்ள வேண்டியிருந்ததுடன், பொதுவான சிவில் நிர்வாகப் பொறுப்புக்களையும் இவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

    டொனமூர் சீர்திருத்தமும், சிவில் நிர்வாகமும்

    1931ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டொனமூர் சீர்திருத்தம் ஏனைய துறைகளில் ஏற்படுத்திய தீவிர மாற்றம் போன்று சிவில் நிர்வாக அமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் நூறு வருடங்களாக மாற்றமின்றியிருந்த சிவில் நிர்வாக ஒழுங்கமைப்பு மாற்றத்துக்குள்ளாகியது. அதாவது சிவில் சேவையின் செயற்பாடு, வடிவம், அமைப்பு என்பவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன. சிவில் நிர்வாகக் கட்டமைப்பின் உச்சியில் இவ்வளவு காலமும் இருந்த காலனித்துவ செயலாளருக்குப் பதிலாகப் பத்து அமைச்சர்கள் உருவாக்கப்பட்டனர். காலனித்துவச் செயலாளரின் அதிகாரங்கள் இல்லாதொழிக்கப்பட்டு அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஒவ்வொரு அமைச்சும் சுதந்திரமாகச் செயற்பட்டதுடன், அமைச்சரின் கட்டுப்பாட்டுக்குள்ளும் விடப்பட்டது. அமைச்சர்களுக்குக் கீழான சிவில் சேவைத் திணைக்களங்கள் உருவாக்கப்பட்டமை பெரும் சிவில் நிர்வாக வலைப்பின்னலை உருவாக்கியது. சிவில் நிர்வாகத்தில் ஏற்பட்ட இம் மாற்றம் நிர்வாக உச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தியதுடன், சுதந்திரம் பெறும் வரை இது தொடர்ந்திருந்தது.

    காலனித்துவ செயலாளருக்குப் பதிலாக அமைச்சர்கள் உருவாக்கப்பட்டமை சிவில் நிர்வாக அமைப்பில் பல வழிகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது. மத்திய அரசாங்கம் ஆளுநரையும் சர்வஜன வாக்குரிமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 50 அரசாங்க சபை உறுப்பினர்களையும் கொண்டிருந்தது. இவர்களை விட 08 நியமன உறுப்பினர்களையும், பிரதம செயலாளர், நிதிச் செயலாளர், சட்டச் செயலாளர் ஆகிய 03 உத்தியோகத்தர்களையும் கொண்டிருந்தது. அரசாங்க சபை சட்டத்துறையின் கடமைகளையும், நிறைவேற்றுத்துறையின் கடமைகளையும் மேற்கொண்டு வந்தது.

    அரசாங்க சபையில் இயங்கிய ஏழு நிர்வாகக் குழுக்களின் தலைவர்களும், ஏழு அமைச்சர்களாக இயங்கினர். இவர்கள் கூட்டாக வரவு செலவுத் திட்டத்துக்;குப் பொறுப்பானவர் களாவார். அத்துடன், ஒவ்வொரு அமைச்சர்களும் தனித்தனியாக ஒதுக்கப்பட்ட சிவில் நிர்வாகத் திணைக்களத்திற்கு பொறுப்பானவர்களாவார்.

    காலனித்துவ செயலாளருக்குப் பதிலாக அமைச்சர்களை அறிமுகப்படுத்தியமையானது இலங்கையின் சிவில் நிர்வாக அமைப்பில் பல வழிகளிலும் புரட்சியை ஏற்படுத்தியது.

    அதிகாரங்கள் புதிய அமைச்சர்களிடம் வழங்கப்பட்டன. இதனால் சிவில் நிர்வாகத்தின் வடிவமும், அமைப்பும் மாற்றமடைந்ததுடன் அதிக எண்ணிக்கையிலான அரசாங்க சிவில் நிர்வாகத் திணைக்களங்கள் தோற்றமடைந்தன. சிவில் நிர்வாகத் திணைக்களங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமை இயல்பாகவே அரசின் செயற்பாட்டை விஸ்;தரித்திருந்தது. மறுபக்கத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட சிவில் நிர்வாகத் திணைக்களங்களையும், அமைச்சர்கள் மேற்பார்வையிடுவது கடினமானதாக இருந்தது.

    அமைச்சர்கள் உருவாக்கம் என்பது ஒவ்வொரு அமைச்சின் சிவில் சேவைத் திணைக் களத்துக்குள்ளும் அதிகாரம் மையப்படுத்தலை ஏற்படுத்தியது. முக்கியமான தீர்மானங்கள் யாவும் சிவில் நிர்வாகத் திணைக்களத் தலைமை யகத்தினால் இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்டன.

    சிவில் நிர்வாக அமைப்பில், திணைக்களங்கள் உருவாக்கப்பட்டமையானது பகுதிகள், பிரிவுகள் உருவாவதற்குக் காரணமாயிருந்தது. அத்துடன் நிலைக்குத்து வடிவிலான சிவில் நிர்வாகக் கட்டமைப்பு அரைகுறைத் தன்னாட்சியுடன் (Semi- Autonomous) இயங்கும் நிலை உருவாகியது. படிநிலை அமைப்பின் உச்சியில் அமைச்சர்களும், அவர்களுக்குக் கீழ்ப் பல பகுதிகள், பிரிவுகள் உருவாக்கப்பட்டு, இறுதியில் சிவில் நிர்வாகம் கிராமங்கள் வரை பரந்து விரிந்து சென்றது.

    சர்வஜன வாக்குரிமையை அடிப்படையாகக் கொண்டு எழுச்சியடைந்த அரசியல் நிறுவனங்கள் ஓரளவு சுய அரசாங்க இயல்பைப் பிரதிபலிக்கின்றவைகளாகக் காணப்பட்டன. இதற்கு ஏற்ப சிவில் சேவையின் இயல்புகளும்,பங்களிப்புக்களும் பூரணமாக மாற்றிக் கொள்ளப்பட்டன. சிவில் சேவையாளர்கள் மக்களிடம் இருந்து தோற்றம் பெறும் அரசியல் அதிகாரத்துகுப் பொறுப்புக் கூற வேண்டியவர்களாக இருந்தனர். இவ்விடத்தில் நாம் தர ரீதியான மாற்றத்தை (Qualitative Change) சிவில் சேவையில் அவதானிக்க முடிந்தது. அதாவது, சிவில் சேவையானது, காலனித்துவப் பண்பு கொண்ட நிலையில் இருந்து, மக்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய சிவில் சேவை அமைப்பாகப் புனரமைக்கப்பட்டது. இம்மாற்றம் அரசாங்கச் செயற்பாட்டில் ஒரு திருப்திகரமான நிலையை ஏற்படுத்தியிருந்தது. தேர்தல் தொகுதி மூலம் தெரிவு செய்யப்பட்ட சட்ட சபையானது, சட்டம், ஒழுங்கு,வருமானவரி சேகரிப்பு என்பவற்றில் அதிக கவனம் செலுத்துவதில் இருந்து, விடுபட்டு, மக்களுடைய சமூக, பொருளாதார வளர்ச்சியில் இயல்பாகவே கவனம் செலுத்துகின்ற அமைப்பாக அபிவிருத்தியடைந்தது.

    சிவில் சேவையில் திட்ட அமுலாக்கல் செயற்பாடு மிகவும் தெளிவான ஒன்றாகக் காணப்பட்டது. சிவில் சேவையானது, அரசாங்க சமூக, பொருளாதார நலன்புரித் திட்டங்களை அமுலாக்குகின்ற நிறுவனமாக மட்டும் நின்று கொள்ளாமல், அரசாங்கத்தின் சமூக, பொருளாதார, நலன்புரிக் கொள்கைகளுக்கு ஆலோசனை கூறுகின்ற நிறுவனமாகவும் மாற்றிக் கொள்ளப்பட்டது. இது காலனித்துவ அரசாங்கத்தின் வரி சேகரிப்பு, சட்டம், ஒழுங்கு என்பவைகளைப் பேணுகின்ற நிறுவனம் என்ற பண்பிலிருந்து அபிவிருத்திப் பண்பு கொண்ட அமைப்பாகச் சிவில் சேவை மாறுவதற்கு உதவியிருந்தது. இம்மாற்றமானது சிவில் சேவை விஸ்தரிப்பின் அவசியத்தை உணர்த்தியதுடன், இக்காலப்பகுதி சிவில் சேவை விஸ்தரிப்புக் காலப்பகுதி எனவும் அழைக்கப்பட்டது.

    இவற்றை இலகுபடுத்தும் வகையில் டொனமூர் அரசியல் திட்டத்தின் கீழ்,1933ஆம் ஆண்டு சிவில் சேவை தொடர்பாக ஒரு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இச்சீர்திருத்தம், திறைசேரியை மீள் ஒழுங்கமைப்பது தொடர்பான விடயங்களை உள்ளடக்கியிருந்தது. பிற்காலத்தில் சிவில் சேவையானது அபிவிருத்தி அடைவதற்கு இச்சீர்திருத்தம் பெரும் பங்காற்றியிருந்தது. திறைசேரியில் நிதியும், விநியோகமும் என்று ஒரு பிரிவும், நிறுவனம் (Establishments), என்று ஒரு பிரிவும் உருவாக்கப்பட்டது. நிதியும், விநியோகமும் என்ற பிரிவு, களஞ்சியங்களுடன் தொடர்புடைய விடயங்கள், ஒப்பந்தக்காரர்கள், கேள்விப்பத்திரம் (Tenders) போன்ற விடயங்களுக்குப் பொறுப்பாக்கப்பட்டது. நிறுவனக்கிளை ஊதியம், ஓய்வூதியம்,விடுமுறை ஒழுங்குகள் போன்ற விடயங்களை நெறிப்படுத்தும் அலகாகத் தொழிற்பட்டது. சிவில் சேவையில் திறைசேரியின் கட்டுப்பாடு, அல்லது செல்வாக்கு என்பது தவிர்க்க முடியாத ஓர் இயல்பாகக் காணப்பட்டிருந்தது. திறைசேரியின் கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாக இயங்கும் சிவில் சேவையாக இது இருக்கவில்லை.

    டொனமூர் சீர்திருத்தம் சிவில் சேவையில் இலங்கையர் மயவாக்கம் ஏற்படுவதைத் துரிதப்படுத்தியிருந்தது. இலங்கையின் பொருளாதாரம் அபிவிருத்தியடைய வேண்டுமாயின், காலனித்துவ அரசாங்கத்தின் சிவில் சேவையானது இலங்கையர்களை முழுஅளவில் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற கருத்து வலுப் பெறலாயிற்று. இலங்கையர் மயவாக்கம் என்ற சிந்தனையை உள்வாங்கி சிவில் சேவையை நோக்குகின்றபோது, இலங்கையர்கள் கொள்கை உருவாக்கம் மீது ஏற்கனவே பாரிய கட்டுப்பாட்டினைக் கொண்டிருந்தமை புலனாகும். உண்மையில் இலங்கையர் மயவாக்கக் கொள்கையானது இலங்கையர்கள் உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கின்ற ஒரு செய்முறையாகக் காணப்பட்டது. தேசிய சிவில் சேவையின் எழுச்சிக்கு இது மிகவும் அவசியம் என்பது உணரப்பட்டது. இவ்வுணர்வானது ஏற்கனவே ஆங்கிலம் கற்ற சிறியளவிலான உயர்குழாமிலிருந்து எழுச்சியடைவதாகவும் இருந்தது. இதன் விளைவாக 1939ஆம் ஆண்டு சிவில் சேவையில் இலங்கையர்களுடைய எண்ணிக்கை 78 % மாகக் காணப்பட்டது எனப் பேராசிரியர் விஸ்வவர்ணபால குறிப்பிடுகின்றார்.

    டொனமூர் அரசியல் திட்டம் பொதுச் சேவைகள் ஆணைக்குழு ஒன்றை உருவாக்கியது. இவ்வமைப்பானது சிவில் சேவை உத்தியோகத்தர்களின் நியமனம், பதவியுயர்வு, மாற்றம், நீக்கம், ஒழுக்கக்கட்டுப்பாடு என்பவற்றிற்குப் பொறுப்பாக இருந்தது. மேலும் ஆளுநருக்கு இவ்விடயங்கள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கும் நிரந்தர அமைப்பாகவும் இது செயற்படும் என அரசியல் திட்டம் கூறியது. உண்மையில் டொனமூர் உருவாக்கிய நிர்வாகக் குழுமுறையுடன் தனது செயற்பாட்டைப் பகிர்ந்து கொள்கின்ற ஓர் அமைப்பாகவே பொதுச் சேவை ஆணைக்குழு காணப்பட்டிருந்தது.

    மாகாண நிர்வாகம்

    டொனமூர் சீர்திருத்தம் அரசாங்க அதிபரிடம் விடப்பட்டிருந்த மாகாண நிர்வாகத்தை மீளப் பெற்றிருந்தது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள் திணைக்களங்களுக்குத் தலைவர்களாக்கப்பட்டு, அவற்றின் செயற்பாடுகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனால் ஒவ்வொரு அமைச்சர்களும் தமக்குரிய சிவில் நிர்வாகத் திணைக்களத்தின் செயற்பாடுகளைத் தாமே நெறிப்படுத்தினர். இதற்காக அரசாங்க அதிபர் பயன்படுத்தப்பட்டிருந்தார். அரசாங்க அதிபர் உள்விவகார அமைச்சினால் (Home Affairs) நெறிப்படுத்தப்பட்டுக், கட்டுப்படுத்தப்பட்டிருந்தார். 1931ஆம் ஆண்டுக்கும் 1946ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டகாலத்துக்குள் அரசாங்க அதிபர் சிவில் நிர்வாகத் திணைக்களங்களை இணைக்கின்ற இணைப்பாளராக மாற்றப்பட்டார். இவருடைய இணைப்புக்கடமையானது மாகாண மட்டத்திலிருந்து, மாவட்ட மட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னர் அரசாங்க அதிபரால் மேற்கொள்ளப்பட்ட கடமைகள் யாவும் தற்போது சிவில் நிர்வாகத் திணைக்களத் தலைவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் அரசாங்க அதிபரின் கடமைகளும் பொறுப்புக்களும் குறைக்கப்பட்டதுடன் இவர் தனித்து இணைப்பாளராகச் செயற்படக்கூடியவராகவுள்ளார்.

    அமைச்சரவை முறை அறிமுகப்படுத்தப்பட்டுத் திணைக்களங்கள் உருவாக்கப்பட்டமை அதிகளவு துணை நிர்வாகப்பிரிவுகள் உருவாக்கப்படுவதற்குக் காரணமாயிருந்தது. டொனமூர் சீர்திருத்தம் நிலைக்குத்து வடிவிலான நிர்வாக அமைப்பினைத் தோற்றுவித்தது. திணைக்களங்களும், துணை நிர்வாகப் பிரிவுகளும் தமது தலைமையகங்களைக் கச்சேரிகளில் நிறுவிச் செயற்படத் தொடங்கின.

    ஓவ்வொரு பாரிய திணைக்களங்களும் தமக்குத் தேவையான மேலதிகக் கிளைகளை அல்லது பகுதிகளை நிறுவிச் செயற்பட்டன. இக்காலத்தில் ஒவ்வொரு திணைக்களங்களும் தமக்கான கிளைகளை ஒவ்வொரு பிராந்தியங்களிலும் கொண்டிருந்தன. இவ்வகையில், 1939 ஆம் ஆண்டு அளவைத் திணைக்களம் ஏழு பிராந்திய அலுவலகங்களையும், பொது வேலைத் திணைக்களம் ஒன்பது பிராந்திய அலுவலகங்களையும், வனத்திணைக்களம் நான்கு பிராந்திய அலுவலகங்களையும், நீர்ப்பாசனத் திணைக்களம் ஆறு பிராந்திய அலுவலகங்களையும், கல்வித் திணைக்களம் நான்கு பிராந்திய அலுவலகங்களையும், சுகாதாரத்திணைக்களம் ஒன்பது பிராந்திய அலுவலகங்களையும் கொண்டிருந்தன.

    இவைகள் தேவைப்படும் போது மாவட்டத்தில் மேலும் பல உப பிரிவுகளைக் கொண்டிருந்தன. உதாரணமாக பொது வேலைத் திணைக்களம் முப்பத்து நான்கு உப பிரிவுகளைக் கொண்டிருந்தது. உள்ளுராட்சித் திணைக்களம் 1946ஆம் ஆண்டு தனக்கான பிராந்திய திணைக்களங்களை உருவாக்கிக் கொண்டது. இதன் அதிகாரங்களை இவ்வளவு காலமும் அனுபவித்து வந்த அரசாங்க அதிபர், இவ் வாண்டில் அதனை உள்ளூராட்சி உதவி ஆணையாளரிடம் ஒப்படைத்தார்.

    உண்மையில் மாகாண மட்ட நிர்வாகத்தில் ஏற்பட்ட இம்மாற்றமானது அபிவிருத்திச் செயற்பாட்டுக்;கான ஒழுங்கமைப்பில் சிறப்பான ஒரு நிலையை ஏற்படுத்தியிருந்தது. இதுவரைகாலமும் “நிர்வாக இணைப்பு” என்பதில் காணப்பட்டு வந்த சிக்கல் என்பது இதன் மூலம் தீர்த்து வைக்கப்பட்டது. மேலும் நிர்வாக ஒழுங்கமைப்பு முறைமையானது புதியதொரு வடிவத்தைப் பெறக்கூடியதாகவும் இருந்தது. மையவாக்க நிர்வாக அமைப்புக்குள் பிரமிட் வடிவிலான அல்லது படிநிலை அமைப்பிலான நிர்வாகப் பரவலாக்க வடிவத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது.

    தேசிய சிவில் சேவையின் உறுதியான வளர்ச்சியையும், விஸ்தரிப்பினையும் சோல்பரி அரசியல் திட்டத்தின் பின்னரே அவதானிக்க முடிந்தது. அதாவது, 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதுடன் தேசிய சிவில் சேவையின் சகாப்தம் என்பதும் எழுச்சியடையலாயிற்று. சுதந்திர அரசாங்கத்தைப் பொறுத்த வரை அரசியல் அதிகாரத்தைப் பொறுப்பேற்பதுடன், பொருளாதார முகாமைத்துவப் பொறுப்பையும், சமூக நல உயர்வுக்கான பொறுப்பையும் ஏற்க வேண்டியிருந்தது. மக்கள் ஆதரவுடன் தெரிவுசெய்யப்படும் ஓர் அரசாங்கத்துக்கான இப்பொறுப்புகள் யாவும் சிவில் சேவையினாலேயே நிறைவேற்றப்பட வேண்டியிருந்தது. இது சிவில் சேவையின் கடமையைத் தார்மீகத் தன்மை பொருந்திய ஒன்றாக ஆக்கியதுடன், இலங்கையின் சிவில் சேவை அபிவிருத்தியின் புதிய பாதைக்கான அரசியல் சூழ்நிலை ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. புதிய அரசாங்கம் சமூக,பொருளாதார விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்தது. குறிப்பாகக் காலனித்துவப் பண்பில் வளர்ச்சியடைந்த பொருளாதார அமைப்பினைத் தேசிய பொருளாதாரப் பண்பில் வளர்த்தெடுக்க வேண்டியிருந்தது. இது எவ்வித சந்தேகமுமின்றி சமூக, பொருளாதார அபிவிருத்தியையும், நலன்புரித் திட்டங்களையும் செயற்படுத்தும் பாரிய பொறுப்பினைச் சிவில் சேவைக்கு வழங்கியது. தேசத்தினைக் கட்டியெழுப்புவதில் சிவில் சேவையின் பங்கு உயர்ந்ததாக மதிப்பிடப்பட்டது.

    சோல்பரி சீர்திருத்தமும், சிவில் நிர்வாக அமைப்பும்.

    சுதந்திர அரசின் புதிய அரசாங்கம் பாராளுமன்ற அரசாங்க முறையினை அறிமுகப்படுத்தியது. பாராளுமன்றம், அமைச்சரவை ஆகிய அரசியல் நிறுவனங்கள் இரண்டும் கொள்கை உருவாக்கம், அமுலாக்கம் ஆகியவற்றிற்குப் பொறுப்புடையதாக்கப்பட்டது. பாராளுமன்ற அரசியல் முறை இயல்பாகவே முக்கியமான இணைப்புக் கடமைகளை ஆற்றுகின்ற நிறுவனமாகக் காணப்பட்டது. இவ்விணைப்பானது ஒரு முனையில் அரசியலுக்கும், நிர்வாகத்துக்கும் இடையிலான உறவினைத் தீர்மானித்தது. நிர்வாகப் பொறுப்பைச் சம்பிரதாயமாகக் கொண்டிருக்கும் அமைச்சர்கள் ஒவ்வொரு அமைச்சுக்கும் பொறுப்பானவர்களாகக் காணப்பட்டார்கள். ஒவ்வொரு அமைச்சும் பல திணைக்களங்களை உருவாக்கியது. இச் செய்முறையானது சுதந்திரத்துக்கு முன்பிருந்த நிலையை விட முற்றிலும் வேறுபட்ட நிலையாகவே காணப்பட்டது. அமைச்சர்கள் அரசியல்வாதியாக மட்டுமன்றித், தனது அமைச்சின் நிர்வாகத் தலைவர்களாகவும் இருந்தனர்;. ஒவ்வொரு அமைச்சுகளும் நிரந்தர செயலாளர்களைக் கொண்டிருந்தன. இச்செயலாளர்,நிர்வாகத்தின் உயர்நிலையில் இருந்து சிவில் நிர்வாகக் கடமைகளை மேற்பார்வை செய்பவராக இருந்தார். இவரே அமைச்சுத் திணைக்கள நிர்வாகப் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றினார். ஆயினும்,பொதுவான வழிகாட்டல்களும், கட்டுப்பாடுகளும் செயலாளர்களுக்கு அமைச்சர்களால் வழங்கப்பட்டன.

    நிர்வாகச் செயற்பாடுகள் சிவில் நிர்வாகத் திணைக்களங்களை அடிப்படை அலகாகக் கொண்டு நடைபெற்றன. இத்திணைக்களங்கள் எண்ணிக்கையில் பலவாக காணப்பட்டாலும், அமைப்பு ரீதியாக இவைகளைப் பின்வருமாறு பட்டியல் படுத்த முடியும். அவையாவன: அபிவிருத்தித் திணைக்களம், சமூக சேவைத் திணைக்களம், விஞ்ஞானத் திணைக்களம், நிர்வாகத் திணைக்களம் என்பவைகளாகும். இத் திணைக்களங்கள் நிர்வாகச் செயற்பாட்டுக்கான சுதந்திர நிர்வாக அலகுகளாகும். இவற்றை மையமாகக் கொண்டு பல எண்ணிக்கையிலான திணைக்களங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

    இவ்வாறு பல எண்ணிக்கையில் திணைக்களங்கள் தோற்றுவிக்கப்பட்டமை சிவில் சேவையில் பல பிரச்சினைகளைத் தோற்றுவித்திருந்தது. அதாவது,திணைக்களங்களுக்கிடையில் இணைப்பு என்பது சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை புதிய, பழைய திணைக்களங்களுக்கு இடையில் நிலவிய போட்டி, பூசல்கள் அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதில் காலதாமதத்தை ஏற்படுத்தின.

    சுதந்திர அரசின் சிவில் நிர்வாக சேவையில் திறைசேரியின் முக்கியத்துவம் தொடர்ந்தும் பேணப்பட்டே வந்தது. அதாவது திறைசேரியை மையமாகக் கொண்ட சிவில் நிர்வாக அமைப்பே தோற்றுவிக்கப்பட்டது. இது நிர்வாக அதிகாரத்தில் திறைசேரி முதன்மையான சக்தியாக எழுச்சியடைவதை வெளிப்படுத்துவதாகவும் இருந்தது. திறைசேரியின் நெறிப்படுத்தும் பொறுப்பு நிதி அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்தது. திறைசேரி, திணைக்களங்களின் செலவீனங்களை மேற்பார்வையிடும் பொறுப்பைக் கொண்டிருந்தது. இதனால் செலவீனங்களுக்கான பிரேரணைகள், பொருளாதார மேம்பாட்டுக்கான செலவீனங்கள் அனைத்திற்கும் முறையான கணக்குகளைப் பேணமுடிந்தது. அத்துடன் எல்லாத் திணைக்களங்களதும் நிதி நிலையை உயர் நிலையில் பேணவும் முடிந்தது.

    மறுபக்கத்தில், சிவில் வேலைத்திணைக்களங்கள் அதிகரிக்க சிவில் சேவையாளர்களும் சிவில் சேவை நிபுணர்களும் அதிகரித்தனர். இலங்கையில் சிவில் சேவை “உயர் வர்க்கப் பணிக்குழுவாக” மாற்றமடைந்தது. மேலும் ஒதுக்கப்பட்ட பல உயர் பதவிகளையும் உருவாக்கிக் கொண்டது. அதாவது கணக்காளர் சேவை, இலிகிதர்சேவை போன்ற நிபுணத்துவ சேவைகள் உருவாக்கப்பட்டன. இப்பண்பு சிவில் சேவையை “நிபுணத்துவ சிவில் சேவையாக மாற்றியதுடன் சிவில் சேவை நிபுணர்கள் உருவாக்கப்படுவதற்கும் துணை புரிந்தது.

    சுதந்திர அரசியல் திட்டத்தின் கீழ் பொதுச்சேவை ஆணைக்குழு மறு பரிசீலனைக்குட்படுத்தப்பட்டிருந்தது. சிவில் சேவையாளர்களின் நியமனம், மாற்றம், பதவிநீக்கம், ஒழுக்கக்கட்டுப்பாடு ஆகிய விடயங்களை உருவாக்கும் மைய அதிகார சபையாக இது மாற்றப்பட்டது. பொதுச் சேவை ஆணைக் குழுவின் சுதந்திரமான செயற்பாடு, சுதந்திர இலங்கையில் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் சட்ட சபையானது சிவில் சேவையில் தலையீடு செய்யலாம் என்பது முன்னுணரப்பட்டதனால், இதன் வழி சிவில் சேவைக்கு ஏற்படக் கூடிய பாதிப்பைத் தடுக்கும் நோக்குடன் சுதந்திர பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயற்பாடு எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அரசியல் சார்பற்ற ஒரு பொதுச் சேவையை மக்களுக்கு வழங்க முடியும் எனவும், சிவில் சேவைமீது பொதுச் சேவைகள் ஆணைக்குழு மாத்திரமே செல்வாக்கும், கட்டுப்பாடும் செலுத்தும்; எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

    தொகுத்து நோக்குகின்ற போது சுதந்திர இலங்கையில் சிவில் சேவையில் இரண்டு பரிமாணங்கள் வெளிப்படுவதை அவதானிக்க முடிகின்றது. ஒன்று திறைசேரி நிர்வாகப் படிநிலை அமைப்பின் உச்சஅலகாகக் காணப்பட்டது. இது முழுநிர்வாகத்தின் மையமாகக் காணப்பட்டதுடன், எல்லாத் திணைக்களங்களுக்குமான பொது நிர்வாகப் பொறுப்பு, இணைப்புத் திறமையை உத்தரவாதப்படுத்துதல், முன்னேற்றம் என்பவற்றுக்குப் பொறுப்பாக இருந்தது. மற்றையது பொதுச் சேவைகள் ஆணைக்குழு சிவில் சேவையாளர்களின் நியமனம், மாற்றம், நீக்கம், ஒழுக்கக்கட்டுப்பாடு என்பவற்றைப் பேணுகின்ற அமைப்பாகக் காணப்பட்டது. சுதந்திரமான பொதுச் சேவைகள் ஆணைக்குழுவானது அரசியல் தலையீடு இல்லாத பாதுகாப்பான நடுவுநிலையான சிவில் சேவையின் தோற்றத்தை உத்தரவாதப்படுத்துவதாக இருந்தது.

    மாவட்ட மட்டநிர்வாகச் செயற்பாட்டைப் பொறுத்த வரையில் மாவட்டங்களின் சிவில் நிர்வாகத்திற்கான உப அலகுகள் உருவாக்கப்பட்டன. அரசாங்க அதிபர் முறைமை டொனமூர் காலத்துக்குப் பின்னர் நாடளாவிய ரீதியில் பலவீனம் அடைந்த ஒரு சிவில் நிர்வாக அலகாக மாற்றமடைந்தது. இது அரசாங்க அதிபரின் வரம்பெல்லைக்கு வெளியே பல திணைக்களங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருந்தது. இதனால் அரசாங்க அதிபர் மாவட்ட மட்டத்திலிருந்து தனது செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம் மாகாணமட்டத்தில் செயற்பட்ட அரசாங்க அதிபர் மாவட்ட மட்டத்திற்குக் கொண்டுவரப்பட்டமையேயாகும். மாகாண மட்டத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த இணைப்புச் செயற்பாடு என்பது தற்போது மாவட்ட மட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசாங்க அதிபர் தலைமையில், மாவட்ட சிவில் நிர்வாக அபிவிருத்திக்கான பங்களிப்பு வழங்க பட வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. இதன் போது அரசாங்க அதிபரது தலைமையின் கீழ் விவசாயக் குழு, மாவட்ட இணைப்புக் குழு என்பன கொண்டுவரப்பட்டிருந்தன. சுதந்திரத்துக்குப் பின்னரான மாவட்ட நிர்வாகமானது அரசாங்க அதிபரின் அபிவிருத்திச் செயற்பாட்டையும், மத்திய அரசாங்கத்துடனான மைய இணைப்புச் செயற்பாட்டையுமே வெளிப்படுத்தியிருந்தது.

    சிவில் சேவை முரண்பாடுகளும், மாற்றங்களும்

    1956ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததுடன் சிவில் சேவையின் இலக்கும், சிந்தனையும் மாற்றத்துக்குள்ளாகியது. இன்னொரு வகையில் கூறின் 1956ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றம் சமூக, அரசியல் தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இத்தாக்கமானது சிவில் சேவையின் அமைப்பு, தேவை, செயற்பாடு என்பவற்றின் ஊடாகவே பிரதிபலித்திருந்தது. இக்கால கட்டத்தில் அரசியல் நவீனத்துவமும், சிவில் சேவையும் சமூக, கலாசார தேவைகளை மையமாகக் கொண்ட கொள்கைகளையே உருவாக்கியது. அனுபவம், திறமை என்பன மழுங்கடிக்கப்பட்டன. அதேநேரத்தில் சமூக,பொருளாதார, அபிவிருத்தித் திட்டங்களை அமுலாக்குவதற்கான காலத்தேவையாக இது எடுத்துரைக்கப்பட்டது.

    பிரதமமந்திரி பொருளாதார அபிவிருத்திக்கான முக்கிய பொறுப்புக்களை நேரடியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 1965 இல் பிரதமமந்திரியின் கீழ் திட்டமிடல், பொருளாதார விவகாரங்கள் கொண்டுவரப்பட்டன. இதனால் பிரதமமந்திரி திட்டமிடல், இணைப்பு ஆகிய விடயங்களுக்குப் பொறுப்பு வாய்ந்தவராக்கப்பட்டார். நாடளாவிய ரீதியில் சமூக, பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது மாவட்ட மட்டத்தில் நிர்வாகப் பரவலாக்கல் செயல் முறையை வேண்டி நின்றது. மாவட்ட மட்டத்தில் திணைக்களங்கள் அதிகரிக்கப்படலாயிற்று. இதனால் திணைக்களங்களின் ஆட்சேர்ப்புக்கான தேவை அதிகரித்தது. இது சிவில் சேவையின் அபிவிருத்தியை மேலும் வளர்ப்பதாக அமைந்திருந்தது.

    ஒரு திணைக்களத்தின் ஊழியர்கள் இரு வகையில் தரப்படுத்தப்பட்டனர். ஒரு சாரார் உத்தியோகத்தர்கள் தரத்திலான ஊழியர்களாகவும், மறுசாரார் உத்தியோகம் சாராத ஊழியர்களாகவும் வகைப்படுத்தப்பட்டனர். உத்தியோகத்தர் தரத்தில் உள்ளவர்கள் மாவட்டத் திணைக்களங்களுக்கான தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். உத்தியோகம் சாராத தரத்தில் உள்ளவர்கள் பிரதேச, கிராமிய மட்டங்களில் கடமையாற்றுபவர்களாகக் காணப்பட்டார்கள்.

    சிவில் சேவையில் ஏற்படுத்தப்பட்ட இம்மாற்றங்களை இலகு படுத்தவும் வேலைவாய்ப்பின்மையைப் போக்கவும் 1956 ஆம் ஆண்டு அரசாங்க உத்தியோக மொழிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது சிவில் சேவையின் பரிமாணம், வளர்ச்சி, எதிர்காலம் என்பவற்றில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. நடைமுறையில் உத்தியோக மொழியாக இருந்த ஆங்கிலம் கைவிடப்பட்டு அதற்குப் பதிலாகச் சிங்களம் உத்தியோக மொழியாக்கப்பட்டது. ஒருவர் அரசாங்க உத்தியோகத்தராகக் கடமையாற்ற வேண்டுமெனின் ஆகக் குறைந்தது கல்வி பொது தராதரப்பத்திர சாதாரண தரத்தில் சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனக்கூறப்பட்டது. 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிங்கள மொழிச் சட்டம் ஆங்கிலத்தில் கற்ற பெரும்பான்மையான தமிழ் உத்தியோகத்தர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியது.

    1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிங்கள மொழிச் சட்டமானது நிர்வாக முறைமையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. ஆயினும், 1960 ஆம் ஆண்டு; பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தமானது,சிவில் சேவையில் உடனடியாக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அழுத்தத்தைக் கொடுத்திருந்தது. நிர்வாக ஒழுங்கமைப்பில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. இது சிவில் சேவையின் ஒழுங்கிலும், வழிமுறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் அடிப்படை நிர்வாக அமைப்பு முறைமையில் மாற்றம் ஏற்பட்டது.

    1963ஆம் ஆண்டு இலங்கையின் சிவில் சேவை அமைப்பு ஒழிக்கப்பட்டு, இதற்குப் பதிலாக இலங்கையின் நிர்வாக சேவை (Ceylon Administrative Service – CAS) என்பது தோற்றுவிக்கப்பட்டது. இது சிவில் சேவையில் ஏற்படுத்தப்பட்ட முதல் மாற்றமும், புதிய ஏற்பாடும் எனக் கூறப்படுகின்றது. பொது நிர்வாக முறைமையின் CAS உருவாக்கமானது அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாட்டில் மிகவும் திறமையான பங்களிப்பினைச் செய்யக் கூடியதாக இருந்தது. இதற்காகச் சிவில் சேவை விஸ்தரிக்கப்பட்டு, அதிகளவு சிவில் சேவையாளர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பொதுச்சேவை அமைப்பானது படிநிலை அமைப்பின் பலபகுதிகள், தரங்கள் கொண்டதாக உருவாக்கப்பட்டதுடன், ஒன்றுபட்டுச் செயற்படக் கூடிய தன்மையையும் பெற்றுக் கொண்டிருந்தது. இவ்வமைப்பு முறையை பின்பற்றியதன் மூலம், சிறப்பான தீர்மானம் எடுக்கும் செய்முறையைப் பேணவும், குறிப்பாக அபிவிருத்தி வேலைகளைத் துரிதப்படுத்தவும், முக்கியமான நிர்வாக விடயங்களைத் திறமையுடன் செயற்படுத்தவும் துணைபுரிந்ததாகக் கூறப்படுகின்றது.

    1960ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பொதுநிர்வாகமானது துரித வேலைத்திட்டங்களுக்கு ஏற்ற ஓர் அமைப்பாக வளர்ச்சி கண்டது. மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய பங்கு, அபிவிருத்திக் கொள்கைகள், திட்டங்களை அங்கீகரித்து அமுல்படுத்துவதாக இருந்தது. இவ்வாறு மாவட்ட நிர்வாகமானது மீள் ஒழுங்கமைக்கப்பட்டதன் மூலம் சில இலக்குகளை அடைய முடியும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

    மத்திய நிர்வாகத்திற்கும், அரசாங்க அதிபருக்கும் இடையில் நேரடியானதும் செயலூக்கம் மிக்கதுமான தொடர்பைப் பேணமுடியும்.
    கச்சேரி முறைமையில் மீள் ஒழுங்கமைப்பு ஏற்பட்டமை.
    அபிவிருத்தி ஒழுங்கமைப்பு முறைமை மாவட்ட அலுவலகச் செயற்பாட்டில் ஒருங்கிணைக்கப்பட்டது.

    அபிவிருத்திச் செயற்பாட்டில் வெகுஜனப் பங்குபற்றலுக்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது..

    நிர்வாக மீள் ஒழுங்கமைப்பில் காணப்பட்ட இறுதியான சிறப்பம்சம் யாதெனில், அரசாங்க முகாமைத்துவமானது வளப்படுத்தப்பட வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. முகாமைத்துவப்பயிற்சி, அலுவலக முகாமைத்துவ முறையின் வளர்ச்சி என்பன முதன்மையாக வளப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது. இதன்மூலம் ஏற்பட்ட முக்கிய பரிமாணம் யாதெனில் 1966களில் நிர்வாகக் கற்கைகளுக்கான நிலையம் (Academy of Administrative Studies) நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தில் முகாமைத்துவப் பயிற்சி, நுட்பங்கள் போதிக்கப்பட்டன.

    கூட்டு முன்னணி அரசாங்கம்

    1970ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் கூட்டு அரசாங்கம் ஒன்று வெற்றி பெற்றது. இவ் அரசாங்கம் கணிசமான அளவில் இடதுசாரி மனோபாவம் கொண்ட மாக்சிசவாதிகளைக் கொண்டிருந்தது. இவர்கள் அரசியல் முறைமையினை மாற்ற விரும்பி அரசியல் திட்டத்தினைப் புதிதாக வரைந்து கொண்டனர். 1948ஆம் ஆண்டு சுதந்திர அரசாங்கத்தின் அரசியல் திட்டமானது பொதுச் சேவை ஆணைக் குழுவைத் தோற்றுவித்திருந்தது. ஆயினும்,1956ஆம் ஆண்டின் பின்னர் சுதந்திரமான பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாடானது அமைச்சரவையின் கட்டுப்பாட்டுக்குள்ளாகியது. இச்செய்முறையானது பொதுச் சேவைகளின் நலனுக்கும் அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாட்டுக்கும் இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவித்தது. 1972ஆம் ஆண்டு அரசியல் திட்டமானது சிவில் சேவையாளர்களின் நியமனம், மாற்றம், நீக்கம், ஒழுக்கம் தொடர்பான பொறுப்புகளை அமைச்சர்களுக்கு வழங்கியிருந்தது. அமைச்சர்களுக்கு உதவியாகச் செயற்படுவதற்கென்று அரச சேவைகள் ஆலோசனைச் சபை ஒன்றைத் தோற்றுவிக்க அரசியல் திட்டம் ஏற்பாடு செய்திருந்தது. இதை விட அரச சேவை ஒழுக்காற்றுச் சபை ஒன்றையும் அரசியல் திட்டம் தோற்றுவித்திருந்தது. இச்சபையானது பொதுச்சேவைகள் ஆணைக்குழுவுக்குப் பிரதியீடாக உருவாக்கப்பட்ட ஆலோசனைச் சபையாகும். இச்செய்முறை மூலம் சுதந்திரமான பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாடு இல்லாதொழிக்கப்பட்டு, அமைச்சரவையின் நேரடியான கட்டுப்பாட்டுக்குட்பட்ட சிவில் சேவையை அரசியல் திட்டம் தோற்றுவித்ததுடன், அரசியல் மயப்படுத்தப்பட்ட சிவில் சேவையை இவர்கள் உருவாக்கியும் கொண்டார்கள்.

    ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம்

    1978ஆம் ஆண்டு அரசியல் திட்டமானது அடிப்படையில் எவ்விதமான பாரிய மாற்றங்களையும் சிவில் சேவையில் ஏற்படுத்தியிருக்கவில்லை. ஆயினும், 1972ஆம் ஆண்டு அரசியல் திட்டம் உருவாக்கிய இரண்டு ஆலோசனைச் சபைகளுக்கும் பதிலாக மீண்டும் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவைத் தோற்றுவித்துள்ளது. இவற்றை விட 1978ஆம் ஆண்டு பதவியேற்ற புதிய அரசாங்கம் “அபிவிருத்தியில் மக்கள் பங்கு பற்றல்” என்ற எண்ணக்கருவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முனைப்புடன் செயற்பட்டது. இது மாவட்ட நிர்வாக முறைமைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டிய தேவையை ஏற்படுத்தியது. இச் செய்முறை, திட்ட அமுலாக்கத்தின் முக்கிய அம்சமாக விளங்கும் எனவும் கூறப்பட்டது. மாவட்ட அபிவிருத்தி சபைகள் ஒவ்வொரு மாவட்டத்தினதும் உயர் நிர்வாக அலுவலகங்களாக மாற்றப்பட்டன. அரசாங்க அதிபர் ஒவ்வொரு மாவட்டத்தினதும் திட்ட அமுலாக்கத்திற்கும், முன்னேற்றத்திற்கும் பொறுப்பான வராக்;கப்பட்டார். இவர் மாவட்ட அமைச்சரின் செயலாளராக இருந்து பணிபுரிந்தமை இதற்கு வாய்ப்பாக அமைந்தது. இவ் ஏற்பாடுகள் அரசாங்க அதிபர் ஒவ்வொரு அமைச்சர்களுடனும் தொடர்புடைய விடயங்களைத் தேசிய திட்டமிடலுக்கு ஏற்ப மாவட்ட மட்டத்தில் வழிநடத்திச் செல்ல வாய்ப்பாக இருந்தது.

    மாவட்ட மட்டத்துக்கு அடுத்த நிலையில் பிரதேச அபிவிருத்திச் சபைகள் தோற்றுவிக்கப்பட்டன. இவை ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபர்; பிரிவுகளிலும் அபிவிருத்தித் திட்டமிடல் அமுலாக்கங்களில் ஈடுபடும் எனவும் கூறப்பட்டது. உதவி அரசாங்க அதிபர் இச்சபைகளின் செயலாளராக இருந்து பணிபுரிவார். இச்சபைகளின் செயற்பாடுகளாகப் பிரதேச அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்குவது, அபிவிருத்திச் செயற்பாடுகளை இணைப்பது, திட்ட அமுலாக்கங்களை மீளாய்வு செய்வது போன்ற விடயங்கள் கூறப்பட்டன.

    இலங்கையின் இன்றைய சிவில் சேவையின் செயற்பாடானது இந்த நூற்றாண்டுக்குரிய அபிவிருத்திப்பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றி விடுவதேயாகும். காலனித்துவ அரசாங்கத்தின் கருவியாக மட்டும் செயற்பட்டு வந்த சிவில் சேவையானது இன்று தேசிய அபிவிருத்தியைத் துரிதப்படுத்துகின்றதும், முன்னெடுத்துச் செல்கின்றதுமான முகவரகங்களாக மாறியுள்ளன. சிவில் சேவையானது இதுவரைபெற்ற வளர்ச்சியும், மாற்றமும் சமூக பொருளாதாரச் சூழ்நிலைகளின் தாக்கத்தின் வழி முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பது கருத்தில் கொள்ளத்தக்கதாகும்

    Sunday, August 18, 2019

    இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

    இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு


    • இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது 1996ம் ஆண்டின் 21ம் இலக்கச் சட்ட மூலத்தின் ஊடாக ஆணைக்குழு தாபிக்கப்பட்டது.

    • இவ் ஆணைக்குழு 05 உறுப்பினர்களைக் கொண்டது.

    • ஆணைக்குழு உறுப்பினர்கள் அரசியல் யாப்பின் 18ம் திருத்தத்திற்கமைய பாராளுமன்ற பேரவையின் அவதானிப்பின் மூலம் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்.

    • இவ்ஆணைக்குழு உறுப்பினர்களில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார்.

    • மரபு சார் நீதித்துறை முறையில் இருந்து வேறுபட்ட பிணக்குகளைத் தீர்க்கும் ஒரு நிறுவனம்.

    • பணிகள்:

    • அடிப்படை உரிமைகள் மீறுதல் மீறப்படுதலுக்கு அண்மியதாக இருக்கும் நிலைமை தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்தலும் புலன் விசாரணை செய்தலும் இணக்கப்படுத்தல் ஒற்றுமைப்படுத்தல் மூலம் அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுத்தல்.
    • அடிப்படை உரிமைகளை மேம்படுத்தல் விருத்தி செய்தல் பாதுகாத்தல் தொடர்பான சட்ட நிர்வாக ரீதியான கட்டளைகளை அமைப்பதற்கான ஆலோசனைகளை அரசாங்கத்திற்கு வழங்குதல்.
    • தேசிய சட்டங்கள் நிர்வாகக் கொள்கைகள் சர்வதேச மனித உரிமைதரக் கட்டுப்பாடுகளை உறுதிப்படுத்துவதற்காக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றி அரசாங்கத்திற்கு விதந்துரைகளை செய்தல்.
    • மனித உரிமைகள் துறையில் ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச ரீதியில் பங்களிப்புச் செய்யும் உடன்பாடுகளின் அவசியம் பற்றி அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்தல்.
    • மனித உரிமைகள் தொடர்பாக அறிவூட்டல் விருத்தி செய்தல் மற்றும் மனித உரிமைகளுக்கு இயைபாக ஆய்வுகளை நடத்துதல்.
    சட்டம் பற்றிய அறிஞர்களின் வரைவிலக்கணங்கள்:

    சட்டம் பற்றிய அறிஞர்களின் வரைவிலக்கணங்கள்:





    • அரிஸ்ரோட்டில்: சமூக நலனுக்கு இடைஞ்சலான தனிப்பட்டவர்களின் விருப்பங்கள் அல்லது செயற்பாடுகள் மீது விதிக்கப்படும் ஒரு தடையே சட்டமாகும்.

    • ஸஸ்மன்ட்: நீதி நிர்வாகத்தை மேற்கொள்வதற்கு அரச அதிகாரத்துடன் நிறைவேற்றப்பட்டதும் நிறைவேற்றப்படுவதற்குமான கோட்பாடுகளின் தொகுதியே சட்டமாகும்.

    • தொமஸ்ஹொப்ஸ் : கீழ்ப்படிந்தாக வேண்டும் என்பதற்கான காரணக்கூறுடைய விதத்தில் ஒருவர் இடும் உத்தரவு தான் சட்டமாகும்.

    • ஹொல்ன்ட் : இறைமை அதிகாரம் கொண்ட அரசியல் நிறுவனத்தினால் மனிதனின் புற நடத்தையைக் கட்டுப்படுத்த செயற்படுத்தப்படும் விதிகளின் தொகுதி சட்டம் எனப்படும்.

    • ஒஸ்டின்: இறைமையின் கட்டளையே சட்டமாகும்.

    • கிறீன்: அரசாங்கத்தின் உரிமையையும் எண்ணத்தையும் பிரதிபலிக்கும் முறையே சட்டம் ஆகும்.

    • வில்சன்: வழக்கங்கள், வழக்காறுகள் ஆகிய ஒழுங்குபடுத்தும் விதிகள் அரசாங்கத்தின் சக்தியோடு இணைந்தால் அதுவே சட்டம் ஆகும்.

    • ஜோன்எர்ஸ்கின் : தன்னுடைய மக்களைக் கீழ்படிந்து நடக்கும்படி செய்ய ஓர் அரசன் பிறப்பிக்கும் வாழ்க்கைப் பொதுவிதி அடங்கிய ஆணை சட்டமாகும்.

    • வூட்றோ வில்சன்: சட்டம் என்பது அரசின் அதிகாரத்தையும் வலிமையையும் பக்கபலமாகக் கொண்டு ஒரே மாதிரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தெளிவான விதிமுறைகளாகும்.



    சட்டத்தின் பண்புகள்

    இறைமை அதிகாரத்தின் அடிப்படையில் அரசினால் பிறப்பிக்கப்படுவதாகக் காணப்படுதல்.

    மனிதரின் சமூக இருப்பின் வெளிவாரியான செயற்பாடுகளை மட்டும் கட்டுபடுத்துவதோடு தொடர்புபடுதல்.

    சமூகப் பொது நன்மையை மட்டும் இலக்காகக் கொண்டிருத்தல்.

    சட்டத்தை மீறினால் தண்டனைக்குட்பட வேண்டி இருத்தல்.

    மாற்றமுறும் சமூக நிலைகளுக்கேற்ப காலத்திற்கு காலம் மாற்றமடைதல்.

    சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருத்தல்.

    தனிப்பட்டவர்களின் தேவைகளுக்காக விரும்பியவாறு மாற்றியமைக்க முடியாதிருத்தல்.
    சட்டம் தெளிவாகவும் குழப்பமின்றியும் இருத்தல் வேண்டும்..

    சட்டம் சமூகத்திலிருந்து தோற்றம் பெறுகின்றது.

    சமயத்துடனும் ஒழுக்கத்துடனும் தொடர்பைக் கொண்டிருக்கின்றது.

    சட்டத்தின் மூலாதாரங்கள்
    சட்டமன்றம்
    நீதிமன்றத் தீர்ப்புகள்
    வழக்காறுகள்
    சட்டவல்லுனர்களின் கருத்துகள்
    மதம்
    நியாய அல்லது சமநீதி

    சட்டத்தின் வகைகள்

    தேசிய சட்டம்
    பொதுச்சட்டம்
    அரசியல் யாப்புச் சட்டம்
    குற்றவியல் சட்டம்
    நிர்வாக சட்டம்
    குடியியல் சட்டம் (தனியார் சட்டம்)
    சர்வதேச சட்டம்

    சட்டம் என்பது இறையின் ஆணையாகும். அவற்றிற்கு அடிபணியாவிட்டால் தண்டனைக்கு ஆளாக நேரிடும். அவ்வாறு தண்டிக்கப்படுவதற்குப் பயந்தே சட்டத்திற்கு அடிபணிகின்றனர்.


    தகவல் அறியும் உரிமைச் சட்டம்

    தகவல் அறியும் உரிமைச் சட்டம்

    ஒரு நாட்டில் ஜனநாயகம் என்பது எதன் அடிப்படையில் முழுமையடைகிறது? வளர்ச்சி, முன்னேற்றத்தின் மூலம் என்றால் அதை மன்னராட்சியால் கூட சாத்தியப்படுத்த முடியும். அடிப்படை உரிமைகள் என்றால் அது கூட பல ஜனநாயகமற்ற நாடுகளில் படிப்படியாகப் போராடிப் பெறப்படுகிறது. அப்படியானால் மற்ற அரசு முறைகளிலிருந்து மக்களாட்சி எந்த தளத்தில் வேறுபட்டு நிற்கிறது? அதுதான் வெளிப்படைத்தன்மையான அரசாங்கம். மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மக்களாட்சியின் நிர்வாகம், எப்பொழுது அந்த மக்களிடம் உண்மையாக ஒளிவு மறைவின்றி நடந்து கொள்கிறதோ, அப்பொழுதுதான் அங்கு ஜனநாயகம் முழுமையடைகிறது. அப்படி இந்தியாவில் ஜனநாயகத்தை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சியில் அமல்படுத்தப்பட்டதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

              இதை சாமானியரின் பார்வையிலும் அணுகலாம். ரேஷன் அட்டையைப் புதுப்பிக்கவேண்டி விண்ணப்பித்தவர், அது என்ன ஆனது என்று அரசு அலுவலகத்தில் காத்திருக்கும் காட்சியை நம்மால் பலமுறை காண முடியும். பிறப்புச் சான்றிதழ் என்ன ஆனது, புது வீட்டிற்கு மின் இணைப்பு எப்பொழுது கிடைக்கும்; நடவடிக்கை எடுக்கிறோம் என்கிறார்களே, குறைந்த பட்சம் அது எந்த நிலையில் இருக்கிறது; ஒரு ஜனநாயக நாட்டில் இந்த கேள்விகளுக்கெல்லாம் எளிதில் பதில் கிடைப்பதில்லை என்றால் அங்கு வெளிப்படையான நிர்வாகம் இல்லையென்று பொருள். என்னதான் நடக்கிறது என்று மக்களுக்குத் தகவல்கள் சென்றால் நிர்வாகம் விரைந்து பணி புரியும். மேலும் அப்படி தகவல்கள் பெறுவது மக்களாட்சி என்ற கோட்பாட்டில் மிக முக்கியமான உரிமையும் கூட. இந்த தர்க்கத்தின் அடிப்படையில் உருவானதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். சரி, இது உருவானதன் பின்னணி என்ன?

              தகவல் அறியும் உரிமை பற்றி உச்ச நீதிமன்றம் 1976-ம் ஆண்டிலேயே சொல்லியிருக்கிறது. “ஒவ்வொரு குடிமக்களுக்கும் பேச்சுரிமை எழுத்துரிமை உண்டு என்கிறது அரசமைப்புச் சட்டத்தின் 19(1) பிரிவு. அதே பிரிவின்படி தகவல்களைப் பெறவும் உரிமையுண்டு. ஏனெனில், நம் நாடு மக்களாட்சி அடிப்படையில் இயங்குவதே”, என்றது உச்சநீதிமன்றம். அப்பிரிவு வெளிப்படையாகத் தகவல் அறியும் உரிமை பற்றிச் சொல்லவில்லை என்றாலும், தகவல்களை அறிந்துகொள்வது கருத்து சுதந்திரத்தின் ஒரு அங்கமே என்பதுதான் அதன் தர்க்கம்.

              இந்திரா காந்தி ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசர நிலை, திரும்பப் பெற்ற பிறகு 1977-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் “வெளிப்படையான நிர்வாகத்தைக் கொடுப்போம்” என்ற வாக்குறுதியுடன் ஜனதா கூட்டணி நின்று வெற்றி பெற்றது.  வெற்றி பெற்றதும் மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு ‘ரகசிய பாதுகாப்புச் சட்டம் 1923’ சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவதன் தொடர்பாகவும், அரசின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என்பது தொடர்பாகவும் ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமித்தது. ஆனால் குழு அமைத்ததோடு அந்த வேலை நின்று போனது. ஆட்சியும் மூன்று ஆண்டுகளுக்குள் கவிழ்ந்தது. அதன்பிறகு பத்தாண்டுகள் தகவல் அறியும் உரிமை தொடர்பாக அவ்வப்போது பேச்சுதான் நடந்தே ஒழிய செயலில் ஒன்றும் நடக்கவில்லை. பிறகு 1989 தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக தேசிய முன்னணி களத்தில் நின்றது. மீண்டும் ‘வெளிப்படையான நிர்வாகத்தைக் கொடுப்போம்’ என்ற வாக்குறுதியுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பிரதமர் வி.பி.சிங், “ரகசிய பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவோம், மக்களின் தகவல் பெறும் உரிமையை நிலை நாட்டுவோம்”, என்று அறிவித்தார். ஆனால் அவர் தலைமையிலான ஆட்சியிலும் அது குறித்து எதுவும் நடக்கவில்லை. பிறகு மீண்டும் பத்தாண்டுகளுக்கு முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால் பல ஆண்டுகளாக அரசியல் தலைவர்கள் இது குறித்துப் பேசி வந்ததால் தகவல் அறியும் உரிமைகள் பற்றி மக்களுக்குச் சிறிது விழிப்புணர்வு வர ஆரம்பித்திருந்தது.

              இப்படி இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பேச்சு அளவிலேயே முடங்கிப் போயிருந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் செயல்பாட்டுக்கு வர முதல் படி எடுத்து வைத்தது தமிழகம்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 1997-ல் அப்போதைய திமுக ஆட்சி, விழிப்புணர்வு அளவிலேயே இருந்த இக்கருத்தாக்கத்தை சட்டமாக்கி, தமிழகம் நோக்கி இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தது. ஆனால் ஜனாதிபதி ஒப்புதல் பெற்ற பின்பும் இது அமல்படுத்தப்படாமல் போனது. மேலும் இதில் போதாமைகளும் நிறைய இருந்தன. ஆனால் தமிழகம் துவக்கி வைத்தது இந்தியாவின் மற்ற பகுதிகளில் நிறைவேறத் துவங்கின. கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, கோவா, ஜம்மு-காஷ்மீர், மத்திய பிரதேசம், அசாம், ராஜஸ்தான் மாநிலங்களில் சிறு சிறு மாறுதல்களுடன் இச்சட்டம் நிறைவேறின. தகவல் தர மறுக்கும் அதிகாரிக்கு அபராதம் என்ற விதியை சட்டமாக்கியது மகாராஷ்டிரம். மேலும் மனித உயிர் தொடர்பான தகவல்கள் 24 மணி நேரத்திற்குள் தரப்பட வேண்டும் என்ற விதியையும் அறிமுகப்படுத்தினார்கள். இது இன்றைய தேசிய சட்டத்திலும் உள்ளன. 

              இச்சட்டத்தை பல மாநிலங்கள் தனித்தனியாக நிறைவேற்றினாலும், தேசிய அளவிலான சட்டம் நடைமுறைக்கு வர அதிகம் காரணமாக இருந்த மாநிலம் ராஜஸ்தான்தான். ஏனெனில் இச்சட்டம் வர அங்கு ஒரு மக்கள் இயக்கமே நடந்தது! அருணா ராயின் ‘மஸ்தூர் கிசான் சக்தி சங்காதன்’ என்ற தொழிலாளர்/விவசாய அமைப்பு, அரசு நிர்வாக வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று கடுமையாகப் போராடியது. அதன் விளைவாகத்தான் 2000-ல் ராஜஸ்தான் அரசு தகவல் பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றியது. பிறகு தேசிய சட்டம் ஒன்றைக் கொண்டு வர மத்திய அரசு பாராளுமன்ற நிலைக்குழு ஒன்றை அமைத்தபோது அதில் அருணா ராய் பங்கேற்று முக்கியப் பங்காற்றினார். அருணா ராயின் இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றியைப் பார்த்து மகாராஷ்டிராவில் அன்னா ஹசாரே போராட்டம் நடத்தினார்.

    அதன் விளைவாக 2002-ல் மகாராஷ்டிரா இச்சட்டத்தை நிறைவேற்றியது. 2001-ல் தில்லி மாநில அரசு இச்சட்டத்தை நிறைவேற்ற, அரவிந்த் கேஜ்ரிவால் தன்னுடைய ‘பரிவர்த்தன்’ என்ற இயக்கத்தின் மூலமாக இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு செய்ய ஆரம்பித்தார். மேலும் இச்சட்டத்தைப் பயன்படுத்தி அரசு ஊழல்களை வெளியே கொண்டுவரத் துவங்கினார்.

    இந்த இயக்கங்களோடு ‘தகவல் பெறும் உரிமைக்கான தேசிய மக்கள் பிரச்சார இயக்கம்’ என்ற இயக்கமும் சேர்ந்துக்கொள்ள, பிரச்சாரம் கடுமையானது. ஏற்கனவேயே 1997 மாநில முதல்வர்கள் மாநாடு இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தது. எனவே இச்சட்டம் குறித்த சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிக்க எச்.டி.சௌத்ரி என்பவரை நியமித்து, மாநிலங்கள் இச்சட்டம் குறித்துக் கருத்து தெரிவிக்கும் படி சுற்றறிக்கையையும் அனுப்பி வைத்தது மத்திய அரசு. எச்.டி.சௌத்ரியின் அறிக்கையையும் மாநிலங்களின் கருத்துகளையும் சேர்த்து ஆராய்வதற்காக மத்திய அரசு ‘செயலாளர்கள் குழு’வை நியமித்தது. சிறிய மாற்றங்களுடன் அதன் அறிக்கை தயாராக, அதன் அடிப்படையில் இச்சட்டத்திற்கான வரைவு மசோதா தயாரிக்கப்பட்டது.

    வாஜ்பாய் தலைமையிலான அரசு இருந்தபோது ‘தகவல் அறியும் சுதந்திரச் சட்டம் 2002’ இரு அவையிலும் நிறைவேறி ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்றது. ஆனால் போதிய பயன்களை இச்சட்டம் தராததாலும், அதை அமல்படுத்துவதற்கான கட்டமைப்புகளை சரியாக உருவாக்காததாலும், இச்சட்டம் மக்களுக்குப் பெரிதும் பயனில்லாமல் போனது.

              2004-ல் வாஜ்பாய் அரசின் காலம் முடிவுக்கு வர, “மக்கள் கேட்கும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை நிறைவேற்றுவோம்” என்ற வாக்குறுதியுடன் தேர்தல் களத்தில் இறங்கி, வெற்றியும் பெற்றது காங்கிரஸ். ஆனால் இம்முறை ஆட்சி அமைத்ததும் இச்சட்டம் நிறைவேற்றத் தேவையான பணிகள் முழு வீச்சில் நடைபெறத் துவங்கின. பரிந்துரைகள் பெறும் பொறுப்பு தேசிய ஆலோசனைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அது பல்வேறு அரசு சாரா நிறுவனங்களிடம் கருத்து கேட்டு, முக்கிய திருத்தங்களையும் கோரிக்கைகளையும் கொண்ட அறிக்கையைத் தயாரித்தது.

    அதன் அடிப்படையில் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2004’ என்ற மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மசோதாவை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் பொறுப்பு ‘பொதுமக்கள் குறைதீர்ப்பு, சட்டம் மற்றும் நீதித்துறை நாடாளுமன்ற’ நிலைக்குழுவிடம் தரப்பட்டது. தமிழக மாநிலங்களவை உறுப்பினர் திரு.சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் உருவான இந்நிலைக்குழு இச்சட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும் திரட்டி, தீவிரமாக ஆய்வு செய்து, பல பரிந்துரைகள் அடங்கிய ஒரு முழுமையான அறிக்கையை சமர்ப்பித்தது. இதனை பிரணாப் முகர்ஜி தலைமையிலான உயர்நிலைக்குழு ஆய்வு செய்தபின் மத்திய அரசவையும் இதற்கு ஒப்புதல் அளித்தது. இரு அவைகளும் இச்சட்டத்தை நிறைவேற்ற, 2005 ஜூன் 15-ம் நாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். அந்த ஆண்டு அக்டோபர் 15-ம் நாளிலிருந்து இச்சட்டம் ஜம்மு-காஷ்மீர் தவிர்த்து நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது. இதுதான் தகவல் பெறும் உரிமை இந்தியாவில் சட்டமான நெடும் வரலாறு.

    சரி, இச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.

    1. யாரிடமிருந்து தகவல்களைப் பெற முடியும்? மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றங்கள், அரசிடமிருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவி பெறும் நிறுவனங்கள், ஆகியவற்றிடமிருந்து தகவல்களைப் பெற முடியும். வெளிநாடு வாழ் இந்தியர்களாலும் கூட இச்சட்டத்தைப் பயன்படுத்த முடியும்.

    2. மனுவை விண்ணப்பிக்கும் கட்டணம் பத்து ரூபாய். பணமாகவோ, கேட்பு வரைவோலையாகவோ(demand draft), காசோலையாகவோ(cheque), செலுத்தலாம். செலான் என்றால் ரசீதை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். தமிழக அரசின் துறைகளிடம் தகவல்கள் பெற வேண்டுமென்றால் இன்னும் எளிது. விண்ணப்பத்தில் பத்து ரூபாய் court fee stamp வாங்கி ஒட்டிவிட்டால் போதும். மனுவை ‘பொதுத் தகவல் அதிகாரி(Public Information Officer)’க்கு எழுத வேண்டும். துறை மாறிச் சென்றாலும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விண்ணப்பம் சேர்ந்து விடும். கொரியர் மூலம் அனுப்ப வேண்டாம். பதிவுத் தபாலில் அனுப்பவும், அல்லது நேரடியாகச் சென்று சமர்ப்பிக்கவும். மறக்காமல் ரசீது வாங்கவும்.

    3. 30 நாட்களுக்குள் தகவல் தர வேண்டும். மனித உயிர் தொடர்பான தகவல்கள் 48 மணிநேரத்திற்குள் தர வேண்டும். தவறான முகவரிக்குச் சென்றால்  ஐந்து நாட்கள் அதிகமாகும். உதவித் தகவல் அதிகாரியிடம் விண்ணப்பம் சென்றால் மேலும் ஐந்து நாட்கள் ஆகும். மூன்றாம் தரப்பினர் குறித்த தகவல்கள் என்றால் உரிய அனுமதியோடு 40 நாட்களுக்குள் தகவல் தர வேண்டும்.

    4. கோப்புகள், ஆவணங்கள், வரைபடங்கள், உத்தரவுகள், புகார்கள், இப்படிப் பலவும் தகவல்கள்தான். அவை காகிதமாகவோ, மின்னஞ்சலாகவோ, சிடியாகவோ இருக்கலாம். அவற்றை பெற கட்டணம் உண்டு. ஒரு A4 காகிதம் 2 ரூபாய். சிடி 50 ரூபாய். பதிவேடுகளைப் பார்வையிட முதல் ஒரு மணி நேரத்திற்குக் கட்டணமில்லை. அதன்பின் ஒவ்வொரு கால் மணி நேரத்திற்கும் 5 ரூபாய் கட்டணம் (தமிழக அரசுத் துறைகள் என்றால் ஒரு மணி நேரத்திற்கு ஐந்து ரூபாய்). தாழ்த்தப்பட்டவர்கள், மலைசாதியினர் மற்றும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருப்பவர்களுக்குக் கட்டண விலக்கு உண்டு. உரிய காலத்திற்குள் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றால் தகவல்கள் விண்ணப்பதாரரிடம் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் உண்டு.

    5. பெரும்பாலும் பெரிய பதில்களைக் கோரும் மேலோட்டமான ‘ஏன்’ கேள்விகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் கேள்வி தெளிவாக இல்லை என்று அவை நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. புகார் கொடுத்தும் உங்கள் தெரு விளக்கு இன்னும் எரியவில்லையா? அப்படியென்றால், இந்த நாளன்று புகார் அளித்தோமே ஏன் இன்னும் சரிபார்க்கவில்லை என்று கேட்கலாம். கூடவே எத்தனை பணியாளர்கள் உள்ளனர், புகார் கொடுத்த அன்று பணியாளர்கள் வராத காரணம் என்ன, அவர்கள் வேறு எங்கே பணியில் இருந்தார்கள், பணியிடங்கள் காலியாக உள்ளனவா, புகார் எந்த நிலையில் இருக்கிறது, என்று துணைக்கேள்விகள் மூலம் கிடுக்கிப்பிடி போடலாம். சாமானியரான நமக்கு கடைசியில் வேலை நடக்க வேண்டும் என்பதுதானே முக்கியம்? அது விரைவில் நடக்க என்ன மாதிரி கேள்விகள் கேட்கவேண்டுமோ அப்படி கேட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே வந்து வேலையை கவனிப்பார்கள். இந்தியாவில் பல இடங்களில் இது வெற்றிகரமாக வேலை செய்திருக்கிறது.

    6. எதற்காக இந்தத் தகவல் உங்களுக்கு வேண்டும் என்று யாரும் கேட்க முடியாது. நாமும் சொல்லத் தேவையில்லை. தகவல்கள் தருவதில் அரசே சில விதிவிலக்குகளை வைத்திருக்கிறது. எனவே அதுவே தரமுடியாது என்று சொல்லிவிடும். ஆனால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தரமுடியாது என்ற முடிவுக்கு என்ன காரணங்கள் என்று கேட்க முடியும்.

    7. நாள், இடம், பெயர், முகவரி, பெறுநர், கேள்விகள், கட்டணம் செலுத்தப்பட்டதற்கான ரசீது, இவை விண்ணப்பத்தில் இடம்பெற்றால் போதும். எங்கு வேலை பார்க்கிறோம் அதெல்லாம் தேவை இல்லை. அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி தர கட்டாயம் இல்லை. ஆனால் உங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பொதுத் தகவல் அதிகாரி உங்களைத் தொடர்பு கொள்ள அவை உதவியாக இருக்கும் என்று நினைத்தால் தரலாம்.

    இந்தத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நிறைவேறிய பின் ‘அரசு ரகசியச் சட்டம் 1923’ பின்னே போய் விட்டது. மற்ற சட்டங்களை விட தகவல் அறியும் உரிமைச் சட்டமே மேலோங்கி நிற்குமாறு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. உலகில் இந்தியா மட்டும்தான் இச்சட்டத்தை இயற்றியிருக்கிறதா என்றால் இல்லை. 1766-ம் ஆண்டிலேயே சுவீடனில் இது நிறைவேற்றப்பட்டுவிட்டது! 1966-ல் அமெரிக்கா கொண்டு வந்தது. 2005-ல் நாம் நிறைவேற்றியபோது 55 நாடுகளில் இச்சட்டம் நடைமுறையில் இருந்தது. இன்று 85-க்கும் அதிகமான நாடுகளில் உள்ளது. ஏழை நாடுகளிலும் உள்ளது, தோல்வியுற்ற அரசு என்று சொல்லப்படும் பாகிஸ்தானிலும் உள்ளது. இந்தியாவில் எத்தனையோ சட்டங்களுக்கு முன்னோடியாய் இருக்கும் தமிழகம்தான் இதற்கும் முன்னோடி என்பதை நாம் மகிழ்வுடன் கூறிக்கொள்ளலாம்.

    இக்கட்டுரை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வெறும் அறிமுகம்தான் செய்திருக்கிறது. இச்சட்டம் குறித்த மேலதிக தகவல்களுக்கு எஸ்.ஏ.எம்.பரக்கத் அலியின் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ என்ற நூலை வாசிக்கவும். அந்நூலின் துணையுடன்தான் இக்கட்டுரையை என்னால் எழுத முடிந்தது. விகடன் பிரசுரம் பதிப்பித்திருக்கிறது. இரும்புத் திரைகள் நீங்கி வெளிப்படையான முழுமையான ஜனநாயகம் அமைவதன் முக்கியப் படியே இச்சட்டம். இச்சட்டத்தை நாம் நல்ல குடிமக்களாக நன்றாகப் புரிந்துகொண்டு, இதை நல்ல நோக்கங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வோம்.
    பொது உரிமையியல் சட்டம்

    பொது உரிமையியல் சட்டம்

    பொது உரிமையியல் சட்டம் அல்லது பொது சிவில் சட்டம் (Uniform civil code) என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொதுவான உரிமையியல் மற்றும் தண்டனைச் சட்டங்களைக் குறிக்கிறது.

    உலகில் பெரும்பான்மை நாடுகளில் அனைத்து சமயத்திற்கான பொது உரிமையில் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் சில நாடுகளில், குறிப்பாக இசுலாமியப் பெரும்பாண்மை கொண்ட நாடுகளான சௌதி அரேபியா, ஏமன், இரான், ஜோர்டான், சிரியா, லெபனான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மட்டுமே உரிமையியல் மற்றும் தண்டனைச் சட்டங்களில், ஷரியத் சட்டம் முழுமையாக நடைமுறையில் உள்ளது.

    சில நாடுகளில் இசுலாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் மட்டுமே ஷரியத் சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் இசுலாமியர்களுக்கான உரிமையியல் சட்டத்தைப் பொருத்தவரை, ஷரியத் சட்டமே மூலமாக அமைந்துள்ளது.
    இலங்கை அரசாங்கம் அவசரகால அதிகாரங்களை புதிய வடிவில் புதுப்பிக்கின்றது

    இலங்கை அரசாங்கம் அவசரகால அதிகாரங்களை புதிய வடிவில் புதுப்பிக்கின்றது

    இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, நீண்டகாலமாக அமுலிலிருந்த அவசரகால விதிகள் கடந்த மாதம் காலவதியாகியதைத் தொடர்ந்து, பாதுகாப்பு படைகளுக்கு அதே ஒடுக்கு முறை அதிகாரங்களை வழங்குகுவதற்காக, புதிய விதிகளை  அமுல்படுத்தியுள்ளதோடு பழைய பொலிஸ்-அரச சட்டங்களை புதுப்பித்துள்ளார்.



    முதலாவதாக, விசாரணையின்றி நீண்ட நாட்கள் தடுத்து வைக்க அனுமதிக்கும் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் புதிய விதிகளை சேர்ப்பதாக ஜனாதிபதி ஆகஸ்ட் 29 திகதியிடப்பட்ட நான்கு அறிவித்தல்களை விடுத்தார். 2009ல் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பதும், மற்றும் புனர்வாழ்வு முகாங்கள் என சொல்லப்படுபவற்றில் “புலி சந்தேக நபர்களாக” உள்ள தமிழ் இளைஞர்களை தடுத்துவைப்பதை நீடிப்பதும் இந்த பிரகடனங்களில் அடங்கும்.



     “புணர்வாழ்வுக்காக” கிட்டத்தட்ட 6000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். எவர் மீதும் எந்தக் குற்றமும் சுமத்தப்படவில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், பலவந்தமாக பெற்றுக்கொள்ளும் ஒப்புதல் வாக்குமூலத்தை “சந்தேக நபர்களுக்கு” எதிராக நீதி மன்றத்தில் உபயோகிக்க முடியும். அத்தகைய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவருக்கே உண்மையை நிரூபிக்கும் பொறுப்பு உண்டு –வேறு வார்த்தைகளில் சொன்னால், தாம் அப்பாவி என்பதை அவர்கள் நிரூபிக்கத் தவறினால், அவர்கள் மீது குற்றத் தீர்ப்பளிக்கப்படும்.  



    அரசாங்கம் அரசியலமைப்பையும் சட்ட முறைமையையும் அலட்சியம் செய்வதை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில், ஜனாதிபதியின் அறிவித்தல்கள் வெறுமனே விடுக்கப்பட்டதோடு கடந்த வாரம் வரை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு முறையாக வர்த்தமாணியில் பிரசுரிக்கப்பட்டிருக்கவில்லை. 



    இரண்டாவதாக, இராஜபக்ஷ செப்டெம்பர் 3 அன்று இன்னுமொரு பொது அறிவித்தலை விடுத்தார். அரசுக்கு சொந்தமான பிரதான சக்தி விநியோகிஸ்தரான இலங்கை மின்சார சபையை கட்டாய சேவையாக பிரகடனப்படுத்தி, அதன் மூலம்  மின்சார சபை ஊழியர்களின் சகல தொழிற்சங்க நடவடிக்கைகளையும் சட்ட விரோதமாக்கினார். அருந்தையாக பயன்படுத்தப்பட்டிருந்த 1979ம் ஆண்டு அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் கட்டளை ஒன்றை பிறப்பித்த ஜனாதிபதி, மின்சாரசபை தொழிற்சங்கம் செப்டெம்பர் 7 அன்று திட்டமிட்டிருந்த ஒருநாள் வேலை நிறுத்தத்தையும் தடை செய்தார்.



    கடந்த காலத்தில் அரசாங்கங்கள் அவசரகால சட்ட விதிகளை இதே நோக்கத்திற்காக பிரயோகித்துள்ளன. 1979 சட்டத்தைப் பயன்படுத்துவதில் உள்ள ஒரே வரையறை, அது பொதுத் துறை ஊழியர்களை மட்டுமே உள்ளடக்கியிருப்பதாகும்.



    புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள விதிகளின் கீழ், நிறுவனம் வழங்கிய வேலைக்கு “முட்டுக்கட்டை” இடும் வகையில் வேலை நிறுத்தம் செய்யும் எவரும், ஏனைய தொழிலாளர்களை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுமாறு அழுத்தம் கொடுக்கும் அல்லது “அத்தகைய ஒரு நடவடிக்கையை எழுத்து மூலம் மற்றும் பேச்சின் மூலம் தூண்டிவிடும்” எவரும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்.



    இரண்டு அல்லது ஐந்து ஆண்டு கடும் சிறைத்தண்டனை மற்றும்/அல்லது ரூபா 5,000 வரை தண்டமும் தண்டனையில் அடங்கும். குற்றவாளியாக்கப்படும் நபரின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் முடியும். தொழிற்சங்கத்தின் தீர்மானத்தை பின்பற்றியே ஊழியர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற கூற்றின் அடிப்படையிலான எந்தவொரு பாதுகாப்பையும் இந்தச் சட்டம் திட்டவட்டமாக நிராகரிக்கின்றது.  



    மூன்றாவதாக, சந்தேக நபர்களை தடுத்து வைத்திருக்கும் காலத்தை 24 முதல் 48 மணித்தியாலம் வரை நீடிக்க பொலிசுக்கு அதிகாரத்தை பலப்படுத்துவதற்காக நாட்டின் குற்றவியல் பிரிவில் திருத்தம் செய்ய அரசாங்கம் செப்டெம்பர் 5 அன்று முயற்சித்தது. இந்த திருத்தம் ஆரம்பத்தில் 2007ல் ஒரு தற்காலிக நடவடிக்கையாக நிறைவேற்றப்பட்டு 2009ல் கிடப்பில் வைக்கப்பட்டது. எதிர்க் கட்சி இந்த புதிய திருத்தத்தின் சட்டப்பூர்வத் தன்மையை எதிர்த்ததை அடுத்து, ஆளும் கூட்டணி பின்வாங்கிய போதும், இந்த நடவடிக்கையை அமுல்படுத்துவதற்கான விதிகளை துரிதமாக அமுல்படுத்த சபதம் பூண்டது.



    நான்காவதாக, இராஜபக்ஷ "பொது ஒழுங்கை பேணுவதற்காக" நாட்டின் 22 மாவட்டங்களிலும் முப்படைகளையும் அழைப்பதற்கு பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு கட்டளையை பிறப்பித்துள்ளதாக செப்டம்பர் 7 அன்று பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.



    இந்த கட்டளை, குறிப்பாக தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் போல், விளைபயனுள்ள ஒரு இராணுவ ஆக்கிரமிப்பை பேணுகின்றது. இந்த பொதுப் பாதுகாப்புச் சட்டம், யுத்த கால பாதுகாப்பு சோதனை நிலையங்களையும் ரோந்து நடவடிக்கைகளையும் தொடர்வதற்கும், பொது மக்களின் அமைதியின்மையை நசுக்குவதற்கு இராணுவத்தை பயன்படுத்தவும் அரசாங்கத்துக்கு அதிகாரமளிக்கின்றது. இந்த சட்டத்தின் கீழ் கடமைக்கு அழைக்கப்படும் இராணுவ உத்தியோகத்தர்களுக்கு தேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பரந்த அதிகாரம் உண்டு.



    இராஜபக்ஷ ஒரு இராஜதந்திர செப்படி வித்தையில் ஈடுபட்டுள்ளார். அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தது, அதற்கு ஜனநாயகத்தின் மீது திடீரென தோன்றிய அக்கறையினால் அல்ல. மாறாக, ஜெனீவாவில் திங்கட் கிழமை தொடங்கிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 18வது அமர்வுக்கு முன்னதாக, தனது யுத்தக் குற்றம் மற்றும் ஜனநாயக உரிமை மீறல்கள் பற்றிய சர்வதேச விமர்சனங்களை மழுங்கலாக்குவதற்காகவே அதைச் செய்தது.



    அரசாங்கம், புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தின் கடைசி மாதங்களில் இலங்கை இராணுவத்தல் செய்யப்பட்ட யுத்தக் குற்றங்கள் பற்றிய "நம்பகமான ஆதாரங்களை" கண்டுபிடித்த, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு முன்வைத்துள்ள அறிக்கையை கலந்துரையாடுவதை தவிர்ப்பதற்காக ஏங்கிக்கொண்டிருந்தது.



    இராஜபக்ஷவின் இனவாத யுத்தத்துக்கு ஆதரவளித்ததோடு பல ஆண்டுகளாக அதன் யுத்தக் குற்றங்களை கண்டும் காணாதது போல் இருந்த, அமெரிக்க, இந்திய மற்றும் ஐரோப்பிய சக்திகள், இலங்கையை சீனாவிடம் இருந்து விலகிக்கொள்ளுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் பேரில் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமான விவகாரத்தை பற்றிக்கொண்டன.



    அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும், அவசரகாலச் சட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறும் துஷ்பிரயோக குற்றங்கள் சம்பந்தமாக நம்பகமான விசாரணைகளை நடத்துமாறும் இராஜபக்ஷவுக்கு அறிவுறுத்தின. அரசாங்கம் நியமித்துள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது போலியானதாகும். அது யுத்தத்தின் போது அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் நடவடிக்கைகளை பூசி மெழுகுவதற்காக அது நியமித்துள்ளவர்களுடன் மூழ்கிப் போயுள்ளது.



    அவசரகாலச் சட்டத்தை ஓரங்கட்டியுள்ள இராஜபக்ஷவுக்கு, கால் நூற்றாண்டு கால யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட பரந்த பொலிஸ்-அரச இயந்திரத்தை கலைத்துவிடும் எண்ணம் கிடையாது. சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தும் போது, அது சமூகப் பிளவை ஆழப்படுத்துவதோடு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற, கிராமபபுற வறியவர்கள் மத்தியில் அதிருப்தியை குவிக்கும் என்பதையிட்டு அரசாங்கம் மிகவும் விழிப்புடன் இருக்கின்றது.



    குறிப்பாக, மின்சார சபை ஊழியர்கள் மீதான அத்தியாவசிய சேவை கட்டளையை அமுல்படுத்துவது, முழு தொழிலாள வர்க்கத்துக்கும் ஒரு எச்சரிக்கையாகும். யுத்த காலத்தில் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்தத் தயக்கம் காட்டாத அரசாங்கம், அத்தியாவசிய சேவைகளை பேணுதல் என்ற பெயரில் பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் மீண்டும் அதைச் செய்யும்.



    பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இராணுவத்தை நிலைகொள்ளச் செய்வது பற்றிய பாராளுமன்ற விவாதத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கையை நியாயப்படுத்திய அமைச்சரவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, "பொதுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த எதிர்காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல்களின் சாத்தியங்களை தவிர்ப்பதற்கு எமக்கு அவை [அத்தகைய சட்டங்கள்] தேவை," என்றார். மேலதிக நியாயப்படுத்தலாக, அமெரிக்க தேசப்பற்று சட்டத்தை மேற்கோள் காட்டிய அவர், "அதன் கீழ் யாரும் கைதுசெய்யப்பட்டால், அவருக்கு அல்லது அவளுக்கு என்ன நடக்கும் என்பது எமக்குத் தெரியாது" என சுட்டிக்காட்டினார்.



    மின்சார சபை ஊழியர்களுக்கு எதிரான அத்தியாவசிய சேவை கட்டளை அமுல்படுத்தப்பட்டதை எந்தவொரு தொழிற்சங்கமும் எதிர்க்கவில்லை. மின்சார சபை தொழிற்சங்கங்கள் மத்தியில் முன்னணியில் உள்ள, எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பீ.) கட்டுப்பாட்டிலான இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் சங்கமும் இதில் அடங்கும். இந்த தொழிற்சங்க கூட்டமைப்பு, கடந்த ஜனவரியில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சம்பள மிச்சத்தை கொடுப்பதாக அமைச்சர் வாக்குறுதியளித்துள்ளதாக தெரிவித்து, செப்டெம்பர் 7 அன்று வேலை நிறுத்தத்தை சாதாரணமாக முடிவுக்குக் கொண்டுவந்தது.



    புதிதாக விதிகளும் கட்டளைகளும் வரும்போது அவற்றை அடக்கமாக ஏற்றுக்கொள்வதே ஜே.வி.பீ. மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.) போன்ற எதிர்க் கட்சிகளின் பிரதிபலிப்பாக உள்ளது. அவர்கள் எப்போதாவது ஜனநாயக உரிமைகளை காப்பவர்களாக காட்டிக்கொள்வது முற்றிலும் வஞ்சகமானதாகும். அவர்கள் இனவாத யுத்தத்தை முழுமையாக ஆதரித்ததோடு புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், அவசரகாலச் சட்டம் மாதாமாதம் நீடிக்கப்படுவதற்கு வாக்களித்தனர். இரு கட்சிகளும் இப்போது தாம் எதிர்க்கும் பொலிஸ் அதிகாரங்களை விரிவுபடுத்துவதற்கு ஆதரவாக 2007ல் வாக்களித்தன. அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்ட ஒழுக்கங்களை பாதுகாப்பதற்கு கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தில் ஒருவரும் கிடையாது என்ற உண்மையையே இந்தச் சாதனைகள் கோடிட்டுக் காட்டுகின்றன.

    Saturday, August 17, 2019

    13.08.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருதமாறு:

    13.08.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருதமாறு:

    01. வருமானத்திற்கு சாத்தியமான முறையில் பயன்படுத்துவதற்காக நெல் உற்பத்தியாளர்கள் மத்தியில் உலர்த்தல் தொழில்நுட்பத்தை பிரபல்யப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 10ஆவது விடயம்)

    நெல்லைகுற்றிய பின்னர் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்துவதற்காக உயர் தரத்திலான ஈரலிப்புத் தன்மையுடன் அறுவடை செய்யப்பட்ட நெல் அறுவடையை உரிய வகையில் உலர்த்த வேண்டும். இருப்பினும் உலர்த்துவதற்கு தாமதமாதல் முழுமையற்ற வகையில் உலர்த்தல் சீரற்றதாக உலர்த்தல் என்ற அடிப்படையில் எதிர்பார்த்த தரம் இல்லாமையினால் நெல்லை குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலை விவசாயிகளுக்கு ஏற்படுகின்றது. இதனால் வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவையின் துணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய நியமிக்கப்பட்ட செயற்பாட்டு குழுவினால் சிபாரிசு செய்யப்பட்ட வகையில் உலர்த்தலுக்கான தொழில்நுட்பத்தை விவசாயிகள் அறிந்துகொள்ளுவதற்கான முன்னோடித்திட்டமொன்று உயர் தரத்திலான உற்பத்திக்கு உரிமைகோரும் வருடத்தில் 2 முறை நெல் உற்பத்தியில் ஈடுபடும் பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் மத்தியில் நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக நாடு தழுவிய ரீதியில் நெல் ஆலை உரிமையாளர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் விவசாய சேவை திணைக்களத்தினால் தெரிவுசெய்யப்பட்ட பொலன்னறுவை மாவட்டத்தின் 5 விவசாய அமைப்புக்களுக்கு வரியற்ற 3 மில்லியன் ரூபா பெறுமதியான 2 மெற்றிக் தொன் வலுவைக் கொண்ட நடமாடும் நெல் உலர்த்தி மற்றும் வட்டியற்ற 6 மில்லியன் ரூபா பெறுமதியான 6 தொன் வலுவைக் கொண்ட நிலையான உலர்த்தியொன்று வீதம் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்படும் செலவை மீண்டும் அறவிடும் பொறிமுறை ஒன்றுடன் வழங்குவதற்கு அமைச்சரவை அந்தஸ்து அற்ற பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய அதிமேதகு ஜனாதிபதி மைத்திராபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    02. தற்பொழுது உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாத்தல் மற்றும் இறால் உற்பத்தி மற்றும் உப்பளங்கள் போன்ற நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு உட்பட்ட சதுப்பு நிலங்களை புனரமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 11ஆவது விடயம்)
    அரசாங்கத்திற்கு உட்பட்ட ஈரலிப்புடனான வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்ப திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் காணியை ஏனைய அபிவிருத்திப் பணிக்காக விடுவிக்காதிருப்பதற்கும் நீர் உயிரின உற்பத்திக்காக தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காணி தொடர்பில் பணியாற்றும் பொழுது சம்பந்தப்பட்ட அமைச்சு திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்றின் மூலம் முறையான மதிப்பீடுகளை மேற்கொண்டு அதற்கமைவாக காணிகளை விடுவிப்பது தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவதற்கும் நீர்வாழ் உயிரின உற்பத்தி மற்றும் உப்பளங்கள் போன்ற பணிகளுக்காக அரசாங்கத்தினால் குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள காணிகளில் சம்பந்தப்பட்ட பணிக்காக பயன்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ள காணிகளுக்காக வழங்கப்பட்டிருந்த காணிகளின் குத்தகை ஒப்பந்தத்தை மேலும் நீடிக்காது இந்த காணிகளில் உள்ள ஈரலிப்புடனான வனப்பகுதியை ஸ்தாபிப்பதற்காக வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்களுக்கும் காணி ஆணையாளர் நாயகத்திற்கும் உத்தரவு பிறப்பிப்பதற்கும் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் ஈரலிப்புடனான காணியின் அளவை 10ஆயிரம் ஹெக்டர் ஆக அதிகரிப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அறிவிப்பதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


    03. சுற்றுலா துறையில் புரிந்துணர்வு தொடர்பில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசிக்கும் கம்போடியா அரசாங்கத்திற்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்ளல். (நிகழ்ச்சி நிரலில் 16ஆவது விடயம்)
    சமமான மற்றும் பரஸ்பர நலனடிப்படையில் சுற்றுலா துறையில் புரிந்துணர்வை மேம்படுத்துவதன் மூலம் இருநாடுகளுக்கிடையிலான தொடர்புகளை வலுவூட்டுவதற்காக சுற்றுலாத்துறை புரிந்துணர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் கம்போடியா அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்காக சுற்றுலா அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    04. மின்சக்தி தொழில்நுட்ப ஊழியர்களுக்கு அனுமதி பத்திரமுறையொன்றை அறிமுகப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 19ஆவது விடயம்)
    உரிய தரத்தைக்கொண்ட மின்சார கட்டமைப்பை அமைப்பதன் மூலம் மின்சார பாவனையாளர்களுக்கு பாதுகாப்புடனான சேவையை வழங்குவதைப் போன்று மின்சார தொழில்நுட்பவியலாளர்களுக்கு முறையான தொழிலாக அடையாளங்கண்டு அவர்களுக்கு கூடுதலான தொழில் வாய்ப்பிற்கான சந்தர்ப்பம் மற்றும் கோரிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் கொடகேன மின்சார தொழில்நுட்ப ஊழியர்களுக்கு (மின்சக்தி தொழில்நுட்பவியலாளர்கள்) தொழில் அனுமதிபத்திரமொன்றை 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த அனுமதி பத்திரமுறையை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை பொதுமக்கள் பயன்பாட்டு சபையும் நிர்மாணத்துறை அபிவிருத்தி நிறுவனங்களின் அங்கத்தவர்களைக் கொண்ட தொழில்நுட்ப அனுமதி பத்திர முறையை வலுப்படுத்துவதற்கும் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு குழுக்களை நியமிப்பதற்காக தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள் குடியமர்வு புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் அவர்கள் நிதியமைச்சர் அவர்கள் மற்றும் வீடமைப்பு நிரமாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஆகியோரினால் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு ஆலோசனைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    05. இடைக்கால கணக்கறிக்கை - 2020 (நிகழ்ச்சி நிரலில் 20ஆவது விடயம்)
    2019அம் ஆண்டுக்கான இறுதி காலாண்டில் ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்த வேண்டி இருப்பதினால் இதன் பின்னர் தெரிவாகும் புதிய அமைச்சரவைக்கு அமைவாகவும் அரசாங்கத்தின் புதிய கொள்கையை அடிப்படையாகக் கொண்டு 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிக்கக்கூடிய வகையில் 2020 ஆம்ஆண்டுக்கான வரவு செலவு திட்டப் பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஒத்திவைத்து 2020ஆம் ஆண்டில் முதல் 4 மாத காலப்பகுதிக்காக அரசாங்கத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான செலவை உள்ளடக்கி இடைக்கால கணக்கறிக்கை தயாரித்து பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக செயல்படுவதற்கென நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    06. நிதி திருத்த சட்ட மூலம் - 2019 (நிகழ்ச்சி நிரலில் 21ஆவது விடயம்)
    2019ஆம் ஆண்டு வரவு செலவ திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட வருமானம் குறித்த ஆலோசனைகளை உள்ளடக்கிய திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மோட்டார் வாகங்கள் மீது ஆடம்பர வரி அறவிடுவதற்காக வேன் தனிப்பட்ட கெப் வாகனம் இரட்டை கெப் வாகனம் மோட்டார் சைக்கிள் மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டி போன்ற பயணிகளின் போக்குவரத்து வாகனங்கள் லொறி வாகனங்கள் ட்ரக்டர் கை ட்ரக்டர் டெலர் முதலான பொருட்களை எடுத்துச்செல்வதற்கான வாகனங்கள் அம்புலன்ஸ் வாகனங்கள் மரண சடலங்களுக்கான வாகனங்கள் தவிர்ந்த எத்தகைய வாகனங்களையும் உள்ளடக்கிய வகையில் வரையறுத்துக் குறிக்கப்பட்ட மோட்டார் வாகனம் என்பது அர்த்தப்படுத்தும் திருத்தத்தை மேற்கொள்வதற்காகவும் கடன் ஆவணம் மற்றும் பொறுப்பேற்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவ செய்வதற்காக இலங்கைக்கு அப்பால் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவு அடிப்படையிலான 3.5 வீத வெளிநாட்டு வர்த்தக கொடுக்கல் வாங்கல் அடிப்படையில் அறவீட்டும் வரியை விதிப்பதற்காகவும் 2018ஆம் ஆண்டு இல 35 கீழான நிதி சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான நிதி திருத்த சட்டமூலத்திற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    07. ஸ்ரீலங்கன் கேட்டரிங் லிமிடட்டின் விமான சமையலை விரிவுபடுத்தும் திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 22ஆவது விடயம்)
    தற்பொழுது மேற்கொள்ளப்படும் விமான நிலைய விரிவுபடுத்தும் திட்டத்;திற்கு அமைவாக ஸ்ரீலங்கன் கேட்டரிங்கினால் 40ஆயிரம் சாப்பாடுகளை நாளாந்தம் விநியோகிக்கக்கூடிய வகையில் ஸ்ரீலங்கன் கேட்டரிங்கிற்காக விசேடமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன சமையலறையை விரிவுபடுத்தும் தேவை இருப்பதினால் ஸ்ரீலங்கன் கேட்டரிங் சுற்றாடலுக்கு அருகாமையில் மேலும் 150 பேர்ச் காணி யொன்றை இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் மூலம் பெற்றுக் கொண்டு விமான பயணிகளுக்கு உணவு முதலானவற்றை விநியோகிக்கும் தேவைக்காக விமான சமையலறையை விரிவுபடுத்துவதற்கு 250மில்லியன் ரூபாவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள திட்டத்தை நடைமுறைப்படத்துவதற்காக நிதியமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    08. பேராதனை பல்கலைக்கழகம் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் களனி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஊடாக வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ள மானிய உடன்படிக்கை (நிகழ்ச்சி நிரலில் 23ஆவது விடயம்)
    பேராதனை பல்கலைக்;கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் தாய்லாந்தின் தொழில்நுட்பம் தொடர்பான ஆசிய நிறுவனத்திற்கு இடையில் விஞ்ஞான மற்றும் தரவு அறிவியல் தொடர்பான கற்கைநெறியை மேம்படுத்துவது தொடர்பில் முக்கிய உடன்படிக்கை இரண்டையும் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் கிராஸ் பல்கலைக்கழகத்திற்கு இடையில் தெற்காசியாவிற்கான நடப்பு கற்பித்தல் ஆற்றல் தொடர்பில் முக்கிய உடன்படிக்கையிலும் களனி பல்கலைக்கழகம் மற்றும் இம்பிரியல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானம் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் தொடர்பான ஆய்வு அலுவலகத்திற்கு இடையில் பொருட்களை பரிமாறுவது தொடர்பிலான முக்கிய உடன்படிக்கையும் எட்டுவதற்காக இதன் பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக நகர திட்டமிடல் நீர்விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    09. இலங்கை உளவியல் சங்கத்தை கூட்டிணைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 25ஆவது விடயம்)
    இலங்கை உளவியல் சங்கத்தை கூட்டிணைப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால அவர்களினால் தனிப்பட்ட பாராளுமன்ற திருத்த சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக சட்ட வரைவு தொடர்பான அமைச்சரவையின் துணைக்குழுவின் சிபாரிசின் அடிப்படையில் திருத்த சட்ட வரைவு பிரிவினால் திருத்த சட்ட மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள உத்தேச திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் மும்மொழில் அரசாங்கத்தின் வர்த்தமானியில் வெளியிடுவதற்குமாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

    10. இரத்த சோகை மற்றும் இரத்த சோகை தொடர்பான பிரச்சினைகளை குறைத்துக்கொள்வதற்காக பொதுவாக பயன்படுத்தப்படும் முக்கிய இரும்பு சத்துடனான உணவு மற்றும் போலிக் அமிலம் பயன்படுத்தப்பட்ட போஷாக்குள்ள உணவை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 26ஆவது விடயம்)
    அமைச்சரவையினால் இதற்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த அங்கீகாரத்திற்கு அமைவாக அரிசி மற்றும் கோதுமை மாவில் இரும்பு சத்து மற்றும் போலிக் அமிலத்தை ஒன்று சேர்த்து போஷாக்குடனான உணவு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இரும்பு சத்து மற்றும் போலிக் அமிலத்தை பயன்படுத்தி அரிசி மற்றும் கோதுமை மா உள்ளிட்ட பிரதான போஷாக்குள்ள உணவை பாடசாலை பகலுணவு வேலைத்திட்டத்தில் முன்னெடுக்கப்படுவதை ஆய்வு செய்து பாராட்டுதல் மற்றும் போஷாக்குள்ள அரிசி முதலான தானியங்களை நாட்டில் உற்பத்தி செய்தல் தொடர்பிலான அந்தக் குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளத.

    11. நெல் உற்பத்தி காணிகளின் நீர் மற்றும் சுற்றாடல் கட்டமைப்பு தொடர்பாக சர்வதேச வலைப்பின்னலின் 17ஆவத செயற்பாட்டக் குழுவின் கூட்டம் மற்றும் மகாநாடு (நிகழ்ச்சி நிரலில் 39ஆவது விடயம்)
    நெல் உற்பத்தி காணிகளில் சுற்றாடல் கட்டமைப்பில் நம்பிக்கையுறுதியுடன் கவனம் செலுத்தி உரிய நீர்முகாமைத்துவம் ஒன்றை முன்னெடுக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நெல் உற்பத்தி காணிகளில் நீர் மற்றும் சுற்றாடல் கட்டமைப்பு தொடர்பான 'சர்வதேச நீர் வலைப்பின்னல் 2004' அமைக்கப்பட்டது. இந்த மன்றத்தின் 17ஆவது நடவடிக்கை குழுவின் கூட்டத்தையும் வருடாந்த மகாநாட்டையும் அமைப்பின் அங்கத்துவ நாடுகள் மற்றும் பிரதிநிதித்துவ நிறுவனங்களின் பங்களிப்புடன் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பில் நடத்துவதற்கும் அதற்குத் தேவையான நிதியை பெற்றுக் கொள்வதற்குமாக விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்பாசன மற்றும் கடற்றொழில் நீரியியல் வள அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    12. விலங்குகளின் உணவுக்காக தேவையான சோளத்தை இறக்குமதி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 40ஆவது விடயம்)
    2019ஆம் ஆண்டில் சோள உற்பத்தி போதுமானதாக இல்லை என்பதினால் மிருக உணவு உற்பத்திக்காக 80ஆயிரம் மெற்றிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கான தேவை இருப்பதாக அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்காக முதலாவதாக விவசாயம் கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியியல் வள அபிவிருத்தி அமைச்சரின் சிபாரிசின் அடிப்படையில் தேசிய உணவு மேம்பாட்டு சபையினால் 50ஆயிரம் மெற்றிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்து கால்நடை நிருவாகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் கோரிக்கையின் அடிப்படையில் விநியோகிப்பதற்கும் இரண்டாவதாக எஞ்சியுள்ள சோளத்தை தேவைப்படும் ஒவ்வொரு நிறுவனங்களினாலும் தயாரிக்கப்படும் விலங்கு உணவின் அளவு மற்றும் வளர்க்கப்படும் மிருகங்களின் அடிப்படையில் விலங்குகளின் உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட கால்நடை உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் கோழி விற்பனை வியாபாரிகளுக்கு 2020 ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இறக்குமதி செய்து கொள்வதற்கான அனுமதியை பெற்றுக் கொடுப்பதற்கும் இதற்காக 1 கிலோ சோளத்திற்கு 10ரூபா விசேட வர்த்தக பொருட்கள் வரியை விதிப்பதற்கும் விவசாய திணைக்களத்தின் மூலம் சோள உற்பத்தியில் ஈடுபடுவதற்கான ஊக்குவிப்பு முறையொன்றை ஏற்படுத்தி உற்பத்தியில் ஈடுவோருக்கு இலவசமாக விதைகளை வழங்குவதற்காகவும் விவசாயம் கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்பாசனம் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    13. தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் கிளை அலுலகத்திற்கு புதிய கட்டிடமொன்றை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 44ஆவது விடயம்)
    போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்குட்பட்ட சுயாதீன நிறுவனமாக செயற்படும் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் பணியாளர்கள் 2009அம் ஆண்டு தொடக்கம் பெற்றுக்கொண்ட டுiபாவ வாகன அனுமதி பத்திரத்தை புதுப்பித்தல் 2017ஆம் ஆண்டில் மார்ச் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டதினால் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் மிகவும் செயல்திறன் மிக்கதாகவும் பயனுள்ள சேவையை வழங்குவதற்காக நாடுமுழுவதிலுமுள்ள 25 கிளை அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் கம்பஹா வெரஹர குருநாகல் கண்டி மற்றும் அநுராதபுர கிளை அலுவலகங்களிற்காக கூடுதலான சேவை பயனாளிகள் வருகின்றனர். இதற்கமைவாக முறையான பெறுகை நடைமுறையை கடைபிடித்து தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் நிதியை பயன்படுத்தி வெரஹர குருநாகல் மற்றும் அநுராதபுரம் கிளைகளுக்காக முன்னர் அமைக்கப்பட்ட கட்டிடம் கம்பஹா மற்றும் கண்டி கிளைகளுக்காக நிரந்தர கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    14. பசுமை எரிசக்தி அபிவிருத்தி மற்றும் எரிசக்தி செயல்திறனை மேம்படுத்தும் முதலீட்டு வேலைத்திட்டத்தி;ன் கீழ் மொனராகலை நீர் மின் உற்பத்தியை நிலையத்தை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 65ஆவது விடயம்)
    மொரகொல்ல நீர் மின் உற்பத்தி நிலையத்தை அமைத்தல் - லோட் யு2 – பிரதான சிவில் பணிகளுக்கான கேள்வி மனு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழவின் சிபாரிசுக்கு அமைவாக ஊhiயெ புநணாழரடிய புசழரி உழ டiஅவைநன ழக வுழறநச கு. ழுஉநயn ஐவெநசயெவழையெட ஊநவெநச 2008 உலைரளெi டீநடைi ஊhயழலயபெ னுளைவசiஉவ . டீநதைiபெ ஊhiயெ என்ற நிறவனத்திடம் வழங்குவதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    15. உரப் பெறுகையை மேற்கொள்ளல் 2019 (செப்டம்பர் மாதம்) (நிகழ்ச்சி நிரலில் 67ஆவது விடயம்)வரையறுக்கப்பட்ட இலங்கை உர நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் செப்டம்பர் மாதத்திற்கான உரத்தின் தேவையை விநியோகிப்பதற்காக 30ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா (கிரனியுலா) வை 1 மெற்றிக் தொன் 315.80 அமெரிக்க டொலர் என்ற அடிப்படையிலும் அக்ரிபேர்ட் லைவன் இன்டர்னெஷனல் பிரைவட் லிமிடட்டிடமும் 20ஆயிரம் மெற்றிக்தொன் மியுரேட் ஒப் பொடேஸை 343.10 அமெரிக்க டொலர் வீதமும் சுவிஸ் சிங்கப்பூர் ஓவர்சீஸ் என்டர்பிரைஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமும் பெறகையை மேற்கொள்வதற்காக அனுமதியை பெற்றுக் கொள்ளும் பொருட்டு விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    16. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவியின் கீழ் கோபுர கட்டமைப்ப மீது நிர்மாணிக்கப்படும் துறைமுக நுழைவாயில் திட்டத்திற்கான சிவில் பணி ஒப்பந்தத்தை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 68ஆவது விடயம்)
    ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதி வழங்கப்படும் கோபுர கட்டமைப்பில் நிர்மாணிக்கப்படும் துறைமுக நுழைவாயில் வீதி திட்டத்தின் சிவில் பணி ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்கழுவின் சிபாரிசுக்கமைய ஊhiயெ ஊiஎடை நுபெiநெநசiபெ ஊழளெவசரஉவழைn ஊழசிழசயவழைnஇ ர்ரடிநi Pசழஎinஉயைட சுழயன யனெ டீசனைபந புசழரி ஊழ. டுவன யனெ ர்நயெn Pசழஎinஉயைட ஐளெவவைரவந ழக ஊழஅஅரniஉயவழைளெ Pடயnniபெ யனெ னுநளபைn ஐளெவவைரவந ஊழ. டுவன. என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கனிய வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    17. 2020ஆம் ஆண்டில் இலவசமாக விநியோகிப்பதற்கு தேவையான பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதற்காக அச்சகங்களிடம் கையளித்தல் (நிகழ்ச்சி நிரலில் 73ஆவது விடயம்)
    அச்சு நிறுவனங்களினால் 2020ஆம் ஆண்டுக்காக நூல்களை அச்சிடுவதற்காக பகிரங்க பெறுகை நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக கேள்வி மனுக்களை சமர்ப்பித்தவர்களுள் ஆகக்குறைந்த கேள்வி மனுக்களில் பேரம் பேசுதலுக்கு அமைவாக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் கேள்வி விலைக்கு கேள்வி மனுதாரர்களின் அச்சு வலு மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கு விநியோகித்தல் போன்ற விடயங்களும் அமைச்சரவை பெறுகைக்குழவின் சிபாரிசுகளை கவனத்தில் கொண்டு தெரிவுசெய்யப்பட்ட 29 அச்சு நிறுவனங்கள் ஊடாக பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதனால் 2020ஆம் ஆண்டுக்காக பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ள பாடப்புத்தகங்கள் அமைச்சரவை பெறுகைக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள பெறுகைக் கால அட்டவணைக்காக 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலைகளுக்கு விநியோகிகக்கக்கூடிய வகையில் மேற்படி 29 அச்சு நிறுவனங்களுக்கு வழங்கி 386 பாடப்புத்தக வகைகளின் 33 712 100 அளவிலான பிரதிகளை 398 2299 535.00 ரூபாவை ஒதுக்கீடு செய்து அச்சிடுவதற்காக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.