Showing posts with label History. Show all posts
Showing posts with label History. Show all posts

Sunday, September 8, 2019

இலங்கை கணக்காளர் சேவையின் வரலாறு

இலங்கை கணக்காளர் சேவையின் வரலாறு

இரண்டாம் உலக யுத்தத்தின் போது அரச துறையில் கடமைப் பரப்புக்கள் விரிவடைந்தமை, முற்பணக் கொடுப்பனவுச் செயற்பாடுகள் அதிகரித்தமை, கணக்கீட்டு முறைகளை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் ஏற்பட்டமை என்பவற்றின் அடிப்படையில் 1946 ஆம் ஆண்டில் இலங்கை கணக்காளர் சேவை ஆரம்பிக்கப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. அதன் பின்னர், அரச பொறிமுறையில் நிகழும் மாற்றங்களுக்கு தோல்கொடுத்து கணக்காளர் சேவையும் தற்போதுள்ள நிலைக்கு வளர்ச்சியடைந்துள்ளது. அந்தப் பயணத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இச்சேவையின் நிருவாக நிலையம் காலத்துக் காலம் மாற்றமடைந்துள்ளது.

அதற்கிணங்க, நிதி அமைச்சின் கீழ் காணப்பட்ட கணக்காளர் சேவை 2015.06.18 ஆந் திகதி முதல் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டதால் தற்போது இலங்கை கணக்காளர் சேவை பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் நிருவகிக்கப்படுகின்றது.

நாடளாவிய சேவையொன்றாகக் கருதப்படும் இலங்கை கணக்காளர் சேவையின் உத்தியோகத்தர்கள் நாடு முழுவதிலும் சேவையில் ஈடுபட்டுள்ளனர். அந்த உத்தியோகத்தர்களை சுய கட்டுப்பாடுடைய மதிநுட்பமுள்ள மற்றும் தொழில்சார் தேர்ச்சிகள் நிரம்பிய உத்தியோகத்தர்களாக உருவாக்குவது, பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கணக்காளர் சேவையின் பொறுப்பாகும். அதற்காக எதிர்காலத்தில் பின்வரும் விதத்தில் அபிவிருத்தி மற்றும் பயிற்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

  • கணக்காளர்கள் நிதி முகாமைத்துவத்தில் ஈடுபட்டுள்ளவர்களாக இருப்பதனால் சுய நிர்வாகம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி தேவையான மனப்பாங்கு மாற்றங்களைக் கட்டியெழுப்புதல் (SLIDA போன்ற நிறுவனங்களின் கீழ்).
    • ஒழுக்காற்றுப பிரச்சினைகள் குறையும் விதத்தில் கெளரவத்துடன் கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அறிவையும் மனப்பாங்குகளை உத்தியோகத்தர்களிடத்தில் உருவாக்குதல்.
    • இலங்கை கணக்காளர் சேவை உத்தியோகத்தர்களிடம் காணப்பட வேண்டிய தேர்ச்சிகளைப் பெறுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளுக்கு அவர்களை அனுப்புதல்.
    • சமகாலத் தேவைகளை அடையாளம் கண்டு கணக்காளர்களை திறன் விருத்தி நிகழ்ச்சிகளில் (Capacity Building) பங்கேற்கச் செய்தல்.
    • அபிவிருத்திப் பணிகளின் வெற்றியில் சரியான நிதி எதிர்வுகூறல் முக்கியான இடத்தை வகிப்பதனால் அதனுடன் தொடர்புடைய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உத்தியோகத்தர்களை ஊக்குவித்தல், ஆய்வுப் பின்னணியொன்றை உருவாக்குதல், அவற்றின பெறுபேறுகளை பயன்படுத்துதல்.
    • கணக்காளர்களை வாண்மைத் தொழிலாளர்களாக உருவாக்குவதற்குத் தேவையான உபாய முறைகளை உருவாக்குதல்.

    Sunday, August 18, 2019

    இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

    இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு


    • இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது 1996ம் ஆண்டின் 21ம் இலக்கச் சட்ட மூலத்தின் ஊடாக ஆணைக்குழு தாபிக்கப்பட்டது.

    • இவ் ஆணைக்குழு 05 உறுப்பினர்களைக் கொண்டது.

    • ஆணைக்குழு உறுப்பினர்கள் அரசியல் யாப்பின் 18ம் திருத்தத்திற்கமைய பாராளுமன்ற பேரவையின் அவதானிப்பின் மூலம் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்.

    • இவ்ஆணைக்குழு உறுப்பினர்களில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார்.

    • மரபு சார் நீதித்துறை முறையில் இருந்து வேறுபட்ட பிணக்குகளைத் தீர்க்கும் ஒரு நிறுவனம்.

    • பணிகள்:

    • அடிப்படை உரிமைகள் மீறுதல் மீறப்படுதலுக்கு அண்மியதாக இருக்கும் நிலைமை தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்தலும் புலன் விசாரணை செய்தலும் இணக்கப்படுத்தல் ஒற்றுமைப்படுத்தல் மூலம் அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுத்தல்.
    • அடிப்படை உரிமைகளை மேம்படுத்தல் விருத்தி செய்தல் பாதுகாத்தல் தொடர்பான சட்ட நிர்வாக ரீதியான கட்டளைகளை அமைப்பதற்கான ஆலோசனைகளை அரசாங்கத்திற்கு வழங்குதல்.
    • தேசிய சட்டங்கள் நிர்வாகக் கொள்கைகள் சர்வதேச மனித உரிமைதரக் கட்டுப்பாடுகளை உறுதிப்படுத்துவதற்காக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றி அரசாங்கத்திற்கு விதந்துரைகளை செய்தல்.
    • மனித உரிமைகள் துறையில் ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச ரீதியில் பங்களிப்புச் செய்யும் உடன்பாடுகளின் அவசியம் பற்றி அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்தல்.
    • மனித உரிமைகள் தொடர்பாக அறிவூட்டல் விருத்தி செய்தல் மற்றும் மனித உரிமைகளுக்கு இயைபாக ஆய்வுகளை நடத்துதல்.
    சனத்தொகை வளர்ச்சியும் சவால்களும்.

    சனத்தொகை வளர்ச்சியும் சவால்களும்.

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் புகழ்பெற்ற பொருளாதாரவாதியான மால்துஸ் பற்றி அறிந்திருக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. ஆம் இவருடைய புகழ்பெற்ற மக்கட்தொகை கோட்பாடு எல்லாப் பாடப் புத்தகங்களிலும் இன்றும் போதிக்கப்பட்டு போற்றிப் புகழப்படுகிறது. 

     அவரது கோட்பாட்டின் சுருக்கம் இதுதான்…

     “தற்பொழுது ஏற்பட்டுவரும் மக்கட் தொகை பெருக்கத்தின் விளைவாக அனைவருக்கும் உணவு கிடைப்பது மட்டுப்பட்டு, மக்கட் தொகை பெருக்கம் கட்டுப்பாட்டுக்குள் வரும்” “உணவு உற்பத்தியின் வளர்ச்சியானது கூட்டல் தொடரிலும் மக்கட்தொகை பெருகுவது பெருக்கல் தொடரிலும் நடைபெறுவதால். ஒரு கட்டத்தில் மக்கட் தொகையானது உணவு கிடைப்பை தாண்டிச் செல்லும்” இதன் விளைவாக உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு பஞ்சம் பசி பட்டினி நோய் ஆகியவற்றால் பெருமளவு மரணம் ஏற்பட்டு மக்கட் தொகையானது கட்டுக்குள் வரும்.

     உலகில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக தேவைகளும் பெருகிவிட்டன. இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியேத் தொடர்ந்தால் வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்னும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் மழை இல்லை என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன.

     இவ்வாறான நிலையிலேயே உலக சனத்தொகை தினம் ஒவ்வொரு வருடமும் ஜூலை11  ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபை, இளைஞர்களுக்கான முதலீடு என்ற தொனிப்பொருளில் இம்முறை அனுஷ்டிக்கின்றது.

     21 ஆம் நூற்றாண்டில் உலகம் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளுள் முக்கியமான பிரச்சினைகளாக குடித்தொகை அதிகரிப்பு அமைய உள்ளதோடு, அதிகரிக்கும் சனத்தொகைக்கு அவசியமான உணவு, குடிநீர், உறைவிடம். மருத்துவவசதி, மற்றும் வேலை வாய்ப்புக்கள் பெற்றுக்கொடுத்தல் என்பனவும் அதனுடன் இணைந்து கொள்ளவுள்ளன. 

     சனத்தொகையின் வளர்ச்சி வேகம்

     இதனை உறுதி செய்வதாகMedindia – calculators World Population Clock  கணிப்புக்கள் அமைகின்றது. அதாவது சனத்தொகையின் வளர்ச்சி வேகமானது வருடத்திற்கு77,760,000  ஆகவும், மாதாந்த வளர்ச்சி வேகம்648,000 ஆகவும், நாளொன்றுக்கு2,116,000 ஆகவும், மணித்தியாலத்திற்கு 9,000 ஆகவும், நிமிடத்திற்கு 150  ஆக காணப்படுகின்ற நிலையில் சனத்தொகையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிதாக சிலர் சேர்த்துக்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

     பாரிய அழிவுகளை சந்திக்கும் 

     இந்நிலை தொடருமாயின் ஒவ்வொரு பதினொரு வருடத்திற்கு ஒரு தடவையும் உலகின் குடித்தொகையில் ஒரு பில்லியன் மக்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என எதிர்வு கூறப்படுகின்றது. இதனால் அவர்களது அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதோடு மட்டுமல்லாது இந்நிகழ்வினால் சுற்றுப்புறச் சூழலும் பாரிய அழிவுகளை சந்திக்கும் என்பது திண்ணமாகும். 

     இவற்றினை கருத்திற் கொண்டு குடித்தொகை தொடர்பான விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதோடு மகாநாடுகளும் ஒழுங்கமைப்பட்டிருக்கின்றன. அந்தவகையில் உலகின் முதலாவது சர்வதேச குடித்தொகை மாநாடு1974 ஆம் ஆண்டு புச்சாறெஸ்ட்டில் “உலகிக் துரித குடித்தொகை வளர்ச்சி” என்ற கருப்பொருளில் நடைப்பெற்றது. 

     சர்வதேச மாநாடுகள்

     1984 ஆம் ஆண்டில் இரண்டாவது சர்வதேச மாநாடு மெக்சிகோசிலும், மூன்றாவது மாநாடு1994 இல் கெய்ரோவில் குடித்தொகையும் அபிவிருத்தியும் என்ற கருப்பொருளில் நடைபெற்றது. நான்காவது மாநாடு1995 ஆம் ஆண்டில் பிஜிங்கில் நடைபெற்றது. 

     2000 ஆண்டில் மிலேனியம் உச்சி மாநாடு மிலேனியன் அபிவிருத்தி இலக்குகளும் எனும் தொனிப்பொருளில் அமைந்ததை காணலாம். இவ்வாறு சனத்தொகை தொடர்பான மகாநாடுகள் தொடர்ந்து கொண்டிருப்பதன் மூலம் சனத்தொகை வளர்ச்சி பற்றிய ஆய்வின் முக்கியத்தும் உணர்த்தப்படுவதோடு அப்பிரச்சினைக்கான தீர்வு இன்றும் முன்வைக்கப்படாதும் உள்ளமை கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.

     துண்டுப்பிரசுரம்

     சனத்தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் புவியில் வாழும் மனிதர்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பதாகும். கிரேக்க, உரோம காலத்தில் ஆராயப்படாத இத்துறையானது  17 ஆம் நூற்றாண்டில் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப ஏனைய துறைகளும் வளர்ச்சியடைகின்றன என்பது சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து முக்கியத்துவம் பெறலானது.

     குடித்தொகை கல்வியின் தந்தையாக கருதப்படுகின்ற ஜோன் கிரான்ட  (John Graunt)   தமது அனுபவங்களை கருத்திற் கொண்டு  (Natural and Political Observations made upon the bills of Motality ) என்ற துண்டுப்பிரசுரத்தின் வாயிலாக லண்டன் மாநகரின் இறப்புக்கள் பற்றிய விபரங்களை1622 ஆம் ஆண்டு வெளியிட்டார். 

     கறுப்பு மரணம்

     அன்று முதல் சனத்தொகை பற்றிய கவனம் முதன்மைப் பெறத்தொடங்கியது. 1400  ஆண்டில் நிகழ்ந்த கறுப்பு மரணத்தின் முடிவிலிருந்து உலக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 20 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த விரைவான மக்கள் தொகை வெடிப்பு காரணமாக புவியில் மக்களின் வாழ்க்கை பாதிப்படைவதைக் குறித்து ஆதங்கங்கள் எழுப்பப்பட்டுள்ளன. 

     கி.மு70,000 காலகட்டத்தில் ஏற்பட்ட சனத்தொகையின் அதிகரிப்பினால் பேரழிவுகள் உருவானதாக கூறுகின்ற அறிவியலாளர்கள் இதற்காக டோபா பேரழிவினை உதாரணமாகக் காட்டுகின்றனர். அம்மை இன்ஃப்ளுவன்ஸா போன்ற நோய்களும் ஆரம்பகால சனத்தொகையினை கட்டுப்படுத்தும் காரணிகளாக அமைந்தன.

     உலக மக்கள் தொகை ஒன்று மற்றும் இரண்டு பில்லியன் குறிகளைக் கடந்த சரியான நாள் மற்றும் மாதம் பற்றிய கணக்கீடு எதுவும் இல்லை. மூன்று மற்றும் நான்கு பில்லியனை எட்டிய நாட்கள் அதிகாரபூர்வமாக கொண்டாடப்படவில்லை. 

     ஆனால் அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் செயலகத்தின் பன்னாட்டுத் தரவுதளம் அவற்றை ஜூலை1959 மற்றும் ஏப்பிரல்1974 என்று குறிப்பிடுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பிக் கணிப்பீட்டின் படி சனத்தொகை5 பில்லியனை எட்டிய நாளாக(11 ஜூலை1987) இனையும், மற்றும்6 பில்லியனை எட்டிய நாளாக(12 அக்டோபர்1999) இணையும் வரையறுத்துக் கொண்டாடியது. 

     அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் செயலகத்தின் அகில உலக திட்டப்பிரிவு 1999 ஏப்ரல் 21 அன்று (அதிகாரபூர்வ ஐக்கிய நாடுகள் அமைப்பின் நாடுகள் அமைப்பின் நாளுக்குப் பலமாதங்கள் முன்னதாகவே) உலகம் ஆறு பில்லியனை அடைந்ததாகக் கணக்கிட்டது. அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள் தொகை கணக்கெடுப்புச் செயலகம் ஜூலை2012 ஆம் ஆண்டை7 பில்லியனை எட்டும் நாளாக குறிப்பிட்டது.

     2024 ஆம் வருடத்தில்…

     இருப்பினும் சனத்தொகையின் ஒவ்வொரு மைல் கற்களும் கடக்கப்பட்ட விதம் இவ்வாறு காட்டப்படுகின்றது. 1 பில்லியன் 1804,2 பில்லியன் 1927,3 பில்லியன்1960, 4 பில்லியன்1974,5 பில்லியன்1987,United Nations  கணிப்பீட்டின் படி சனத்தொகையானது 7 பில்லியன்களாக மாறிய வருடமாக ஒக்டோபர்12. 1999 கொண்டாடப்பட்டது. சனத்தொகையானது 7 பில்லியன்களாக மாறிய வருடமாக2011  ஆம் ஆண்டு குறிப்பிட்டுள்ளது. இந்நிகழ்வானது கடந்த வருடம் ஒக்டோபர்31, 2011 நடைப்பெற்றது. United Nations கணிப்பீட்டின் படி சனத்தொகையானது 8 பில்லியன்களாக மாறக்கூடிய வருடமாக2024 ஆம் ஆண்டினை குறிப்பிட்டுள்ளது.

     விழிப்புணர்வை வழங்கும் நாள்

     இவ்வாறான சனத்தொகை வளர்ச்சியினால் ஏற்படுகின்ற மற்றும் ஏற்படவுள்ள பாதிப்புக்களை இனங்கண்ட உலக நிறுவனங்கள் அவற்றினை குறைப்பதற்கான நடவடிக்கைகள் பற்றியும் கவனம் செலுத்தி வருகின்றன. இதன் முக்கிய நிகழ்வாக அமைவதே உலக மக்கள் தொகை நாள் ஆகும்.  ஆண்டுதோறும் ஜூலை மாதம்11 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை வழங்குவதாக இந்நாள் அமைந்துள்ளது. 

     உலகின் குடித்தொகையானது கி.பி1600 ஆம் ஆண்டுக்காலப்பகுதிகளில் 400 மில்லியன்களாக இருந்தது. இத்தொகையானது1900 ஆம் ஆண்டளவில்1610 மில்லியன்களாக அதிகரித்ததோடு, 1950 இல் 2.5 பில்லியன்களாக காணப்பட்டதோடு சனத்தொகையானது 2025 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் 8.0 பில்லியன்களாக அதிகரிக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அண்மைக் காலப்பகுதிகளில் ஏற்பட்ட உற்பத்தி மற்றும் சுகாதார விருத்தியின் காரணமாக சனத்தொகை அதிகரித்த போக்கினை காட்டி வருகின்றது. எதிர்வுக்கூறப்படுகின்ற முறையினையே வரைபு காட்டுகிறது.

     ஓராண்டில் உலகின் குடித்தொகையானது 5.5 கோடியாக அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து சனத்தொகை அதிகரிப்பு எனும் பதமானது சனத்தொகை வெடிப்பு என மாற்றமடையத் தொடங்கியது. இவ்வாறாக சனத்தொகையில் ஏற்பட்டு வருகின்ற மாற்றமானது புவியில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும் என்பதனை அறிவிக்கும் முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் இத்தினம் உலக மக்கள் தொகை தினமாக1987 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு (World Population Day, recognized by the UN )   1989 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டும் வருகின்றது. மக்கள் தொகை பெருக்கத்தின் தீமைகளையும் சிறுகுடும்ப நெறியின் நன்மைகளையும் எடுத்துரைப்பது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

     பிரதேச வாரியாக மக்கள் தொகையின் வளர்ச்சியினை கீழே உள்ள அட்டவணையும், வரைப்படமும் காட்டி நிற்கின்றது. காட்டி நிற்கின்றது. வரலாற்று மற்றும் வரும் காலங்களுக்கான உத்தேச மக்கள் தொகை எண்ணிக்கையை இவை மில்லியன்களில் காட்டுகிறன. வரலாற்றில் மக்கள் தொகை எண்ணிக்கையின் கிடைக்குந்தகைமை பிரதேசங்களுக்கு ஏற்ப மாறுபட்டமைகின்றது. பல்வேறு கண்டங்களில் மக்கள் தொகை பரிணாம வளர்ச்சி நிலைக்குத்து அச்சு மடக்கையாகவே காணப்படுகின்றது. அது மட்டுமல்லாது மக்கள் தொகையின் நிலையும் அவ்வாறானதே. 20 ஆம் நூற்றாண்டில் மருத்துவ முன்னேற்றத்தாலும் மற்றும் பசுமைப்புரட்சியின் காரணமாகவும் விவசாயத்தின் பெருக்கத்தாலும் பல நாடுகளில் இறப்பு விகிதம் குறைந்ததால் மனித வரலாற்றிலேயே மிக அதிகமான மக்கள் தொகை பெருக்கத்தினை உலகம் பார்த்தது.    

     1989 ஆம் ஆண்டில் ஓராண்டுக்கான88 மில்லியன் மக்கள் தொகை அதிகரிப்பிலிருந்து குறைந்து 2000 ஆம் ஆண்டில் ஏறத்தாழ75 மில்லியன்களாக உலக மக்கள் தொகை அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டிருந்தது. 2000 ஆம் ஆண்டில் பூமியின் சனத்தொகையானது கடந்த300 வருடங்களுக்கு முன்னால் இருந்த மக்களை விட10 மடங்கு அதிகமானவர்கள் உள்ளனர் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

     பெண்களின் கருவளம் 

     உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கான பிரதான காரணம் பிறப்பு வீதம். இறப்பு வீதம் என்பனவாகும். பெண்களின் கருவளம் பிறப்பு வீதத்தினை நிர்ணக்கின்றது. இனப்பெருக்க திறன் கொண்ட பெண்கள் பெறும் உயிருள்ள குழந்தைகளின் எண்ணிக்கை கருவளம் எனப்படும். ஓராண்டில் ஆயிரம் மக்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை பிறப்பு வீதம் எனப்படும். பிறப்பு வீதத்தினை நிர்ணயிக்கும் காரணிகளாக வயது,மதம்,கல்வி, பொருளாதாரம் என்பன அமைகின்றன.

     இறப்பு வீதம் 

     குறித்ததொரு ஆண்டில் ஒரு நாட்டில் வாழ்கின்ற மக்களில் ஆயிரம் பேருக்கு மரணம் அடைகின்றோரின் எண்ணிக்கை இறப்பு வீதம் எனப்படும்.  நாடுகளின் இறப்பு வீதம் எனும் போது இறந்தோரின் மொத்த எண்ணிக்கையினை ஆயிரத்தினால் பெருக்கி நாட்டின் மொத்த சனத்தொகையால் வகுப்பதன் மூலம் பெறப்படுகின்றது. பொதுவாக இறப்பு வீதத்தினை விட பிறப்பு வீதம் அதிகமாகக் காணப்படுவதே குடித்தொகை பெருக்கத்திற்கு காரணமாகின்றது. நவீன காலத்தில் மருத்துவத்துறையின் முன்னேற்றமே இதற்கு காரணமாக அமைகின்றது.

     எதிர்மறையான வளர்ச்சி

     உலகளவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் சீரான அளவினைக் காட்டினாலும் இலத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் துணை சகார ஆபிரிக்கா பகுதிகளில் இதன் வளர்ச்சி உயர் மட்டத்திலேயே காணப்படுகிறது. சில நாடுகளில் எதிர்மறையான வளர்ச்சிகளும் காணப்படுவதை அவதானிக்கலாம். அவ்வாறான நாடுகளில் காலப்போக்கில் குடித்தொகை எதிர்மறையான மக்கள் பெருக்கம் ஆபத்தினை எதிர்நோக்கும் அபாயத்தில் உள்ளன. உதாரணமாக கிழக்கு ஐரோப்பா. யப்பான்,  மேற்கு ஐரோப்பாவின் சில நாடுகள என்பவற்றைக்கூறலாம். 

     2006  ஆண்டில் மக்கள் இனப்புள்ளி நிலைமாற்றங்களின் காரணமாக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதை ஐக்கிய நாடுகள் சுட்டிக்காட்டியது. 

     உலகின் சனத்தொகை வளர்ச்சி வீதமானது வருடத்திற்கு1.14 சதவீதம் என கணிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும்80 மில்லின்களாக சனத்தொகையில் அதிகரிப்பு ஏற்படுகிறது. 1960 ஆம் ஆண்டுகளில் சனத்தொகை வளர்ச்சி வீதமானது2 வீதத்தினை தாண்டியதோடு, 1963 ஆம் ஆண்டில் இவ்வளவு2.19 சதவீதமாக அதிகரிப்பினை காட்டியது. எவ்வாறாக இருப்பினும் இவ்வளர்ச்சி சதவீதமானது எதிர்வரும் காலங்களில் ஒரு சரிவினை நோக்கிச்செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதாவது 2020 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் 1 விதமாகவும் 2050 ஆம் ஆண்டுகளில்0.5 வீதமாகவும் குறைவடையலாம் என கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. 

     ஏறக்குறைய 3.8 பில்லியன் மக்களுடன் ஆசியா காணப்படுவதோடு, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து உலக மக்கள் தொகையில் பெரும் பங்கிற்கு வகைகுறித்து நிற்கின்றன. உலக மக்கள் தொகையில்12 சதவீதம் ஆன1 பில்லியன் மக்களுடன் ஆபிரிக்கா தொடர்கிறது. ஐரோப்பாவின்731 மில்லியன் மக்கள் எண்ணிக்கை உலக மக்கள் தொகையில்11 சதவீதம் ஆகும். வட அமெரிக்கா514 மில்லியனுக்கும், தென்னமெரிக்கா 371 மில்லியனுக்கும் அவுஸ்திரேலியாக 21 மில்லியனுக்கும் இருப்பிடமாக உள்ளது.

     இலங்கையில் சனத்தொகை

     இலங்கையின் தற்போதைய சனத்தொகை இரண்டு கோடி இரண்டு லட்சத்து71 ஆயிரத்து464 பேர் என்று கடந்த வருடம்(2013.12.31) மேற்கொள்ளப்பட்ட குடிசன மற்றும் குடிமனை மதிப்பீடுகளின் போது தெரியவந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

     இந்த எண்ணிக்கையில் 77.3 சத வீதம் கிராமப்புறங்களிலும் 18.3 வீதம் நகரப்புறங்களையும் உள்ளடக்கியுள்ளது.அத்துடன்4.4 சதவீத மக்கள் பொருந்தோட்டங்களில் வசிக்கின்றனர். இறுதியாக1981 ஆம் ஆண்டு சனத்தொகை மதிப்பிடு மேற்கொள்ளப்பட்டதிலிருந்து இன்று வரை36% சனத்தொகை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. அதிகரித்தத் தொகையானது54 இலட்சத்து24 ஆயிரத்து714 ஆகும். மக்கள் செறிவுக்கு இணங்க ஒரு வர்க்க கிலோமீற்றரில் வாழும் சனத்தொகையின் எண்ணிக்கை323 என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

     இதன்படி கொழும்பிலேயே அதிகளவாக ஒரு வர்க்க கிலோமீற்றரில் 3417 பேர் வசிக்கின்றனர். மிகக் குறைந்த சனத்தொகை செறிவு முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவுகின்றது. அங்கு ஒரு வர்க்க கிலோமீற்றரில் 38 பேர் மாத்திரமே வாழ்கின்றனர். ஆண் மற்றும் பெண் என்ற அடிப்படையில் சனத்தொகை மதிப்பிடலின் போது100 பெண்களுக்க94 ஆண்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர வயது அடிப்படையில் கணக்கிடும் போது18 வயதுக்கு குறைந்த சிறார்களை கவனத்தில் கொள்ளும் போது102 பெண்களுக்கு100 ஆண் பிள்ளைகள் என்று தெரியவந்துள்ளது.

     உலகின் சனத்தொகை7 பில்லியனை எட்டிவிடும் என்பதால் இயற்கை வளங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அமெரிக்க அரசாங்கம் எதிர்வு கூறியுள்ளது. அமெரிக்காவானது உலகில் மூன்றாவது சனத்தொகை அதிகமான நாடாக காணப்படுவதோடு ஏனைய இடங்களை இந்தியாவும்,சீனாவும் பெற்றிருப்பதைக் காணலாம். 

     இந்தியாவுக்கு அபாயம்

     இலங்கை 53 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் சனத்தொகை அதிகரிப்புக்கு முன்னேற்றம் கண்டிருக்கும் மருத்துவ மற்றும் போசாக்கு போன்றவற்றில் இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஏற்பட்ட அபிவிருத்தி காரணமாக அமைந்தன என அமெரிக்க அறிவியலாளரான ஹஊப் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாது கலாசார மாற்றங்களையும், பெண்கள் வேலைக்குச் செல்வதையும், பாடசாலைக்குச் செல்வதையும் காரணம் காட்டினார். இதனடிப்படையில் எதிர்காலத்தில் அதிக சனத்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.

     பூமியில் எத்தனை பேர் வாழ முடியும் என்பது பற்றிய கணிப்பீடுகள் இதுவரை கணிக்கப்படவில்லை என வொஷிங்டனில் செயற்படும் பூருக்கிங்ஸ் நிறுவனத்தின் நிபுணர் வில்லியம் ப்ஃரே தெரிவித்துள்ளார். பூமியில் காணப்படும் வளங்களை மக்கள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதனை பொறுத்தே வாழக்கூடிய மக்கள் தொகை தீர்மானிக்கப்படும் என்பதாக அவர் தெரிவித்தருந்தார். ஆபிரிக்க,ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பாலான பெண்கள் சராசரியாக6 ற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்றனா எனவும் அவரது ஆய்வுகள் சுட்டி நிற்கின்றன. 

     முதியோர் தொகை அதிகரிப்பு

     சனத்தொகை அதிகரிப்பானது இலங்கையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் தெரிவித்துள்ளது. சனத்தொகை அதிகரிப்பதனால் வேலையின்மை, சுகாதாரப்பிரச்சினைகள் எதிர்கொள்ள நேரிடுமென ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் சனத்தொகையில் முதியோர் தொகை அதிகரிப்பும் முக்கிய பிரச்சினையாக அமைய உள்ளது. இலங்கையில் சனத்தொகையில்10 வீதத்தினர்60 வயதிலும் கூடியவர்களாக உள்ளனர். 2020 ஆம் ஆண்டில் இத்தொகை20 வீதமாக அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதே வேளை ஆண்களை விட பெண்களின் தொகை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
     குடும்பக் கட்டுப்பாடு

     கட்டிளமைப் பருவத்தினரும் இளைஞர்களும் மக்கள் தொகையில்26 சதவீதமாக உள்ளனர். இலங்கையில்15-24 வயதிற்கிடையில் உள்ளோர்5.6 மில்லியன்களாகும் என கூறும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் கூறியுள்ளது. எனவே இவர்களுக்கு அறிவை ஊட்டி குடும்பக் கட்டுப்பாடு பற்றிய தெளிவை ஏற்படுத்தல் அவசியமாகின்றது. ஐக்கிய நாடுகள் சார்ந்த அமைப்புக்கள் சனத்தொகை அதிகரிப்பைத் தடுப்பதற்காக பல விழிப்புணர்வுகள் கருத்தரங்குகள் திட்டமிட்ட குடும்ப அமைப்புகள், கருத்தடைச்சாதன உபயோகிப்பின் அவசியம், குழந்தைகள் சுகாதாரம் போன்ற விடயங்களில் கவனத்தினை செலுத்தினாலும் சனத்தொகை அதிகரிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

     உலக சனத்தொகையில் அரைவாசி மக்கள் இன்று25 வயதில் இருப்பதனால் குறுகிய காலத்தில் சனத்தொகையை கட்டுப்படுத்தவது சாத்தியமற்றதாகும். உலகில்925 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். வருடத்திற்கு25 மில்லியன் குழந்தைகள் பட்டினியால் இறக்கின்றனர். போசாக்கின்மையினால் 170 மில்லியன் குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக காணப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் சனத்தொகை அதிகரிக்கின்ற போது பட்டினி இறப்புக்களும் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பிறப்பும் காணப்படும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே திட்டமிட்ட முறையில் குழந்தைகளைப் பெற்று அவர்களை ஆரோக்கியத்துடன் வளர்த்தெடுக்க இத்தினத்தில் திடசங்கட்பம் கொள்வது அவசியமாகும்.

     ஆண்களின் வயதெல்லையும் பெண்களின் வயதெல்லையும்

     இலங்கையின் இயற்கை அதிகரிப்பு வீதம்1.1 ஆகவும் பிறப்பு வீம்1000 பேருக்கு17.9வீதமாகவும். இறப்பு விதம்1000 பேருக்கு6.6 விதமாகவும் காணப்படுகிறது. இலங்கையின்2001 ஆம் ஆண்டு மதிப்பிட்டின் படி18,797,257 ஆகவும்,2007 ஆம் ஆண்டில்20,010,000 ஆகவும் காணப்பட்ட தொகையானது2009 ஆம் ஆண்டில்   21,128,772 ஆகவும் இன்று 2.271.464 என அதிகரித்துமுள்ளது. ஆண்களின் சராசரி வயதெல்லை71 ஆக காணப்பட பெண்களின் வயதெல்லை78 என கூறப்பட்டுள்ளது. 

     இலங்கையின் சராசரி வளர்ச்சி வீதம்(1995. 2000) 1.1 இலிருந்து (2045) 0.45 குறையுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. கருவள வீதத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன். இதற்கு காரணம் பெண்கள் கல்வியில் ஈடுபடுதல், பெண்கள் தொழில்வாய்ப்புப் பெருதல், திருமண வயதில் ஏற்பட்ட மாற்றம், குடும்பக்கட்டுப்பாடு விழிப்புணர்வு என்பனவாகும்.

     பூமிக்கு நாமே பாரமாகிவிட்டோம்

     பூமியில் உள்ள வளங்கள்200 கோடி மக்களுக்கு மட்டுமே போதுமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகப்படியான மக்கள் தொகையால் சமூக, பொருளாதார, சுற்றுப்புறச்சூழல் பிர்சசினைகள் அதிகரிக்கின்றன. ஒவ்வொரு நாளும் பூமியின் வளங்களை புதிதாக2 இலட்சம் பேரோடு பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. நாம் வாழும் பூமிக்கு நாமே பாரமாகிவிட்டோம் என்ற உணர்வு அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

      சனத்தொகையானது பூமியிலுள்ள பயன்பாட்டிற்குரிய வளத்தை விட அதிகரிப்பதனால் குடிநீர் மற்றும் உணவு வளப்பிரச்சினைகள் விரைந்து அதிகரிக்கின்ற நிலை தோன்றியுள்ளது. இதனை ஈடுசெய்யவதற்கு நீர் முகாமைத்துவம் மற்றும் மரபணு மாற்றங்கள் பயன்படுத்தப்படவேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. 

     சனத்தொகை அதிகரிப்பானது பூமியின் கொள்ளளவை விட விஞ்சிவிட்டதனால் அதனை கட்டுப்படுத்தவேண்டிய அவசியம் காணப்படுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். மக்கள் தொகை பெருக்கமானது அபிவிருத்தியடைந்த நாடுகளை விட அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளிலேயே தாக்கத்தினை ஏற்படுத்தும் என கருத்து வெளியிடப்பட்டுள்ளது. அதாவது உலக சனத்தொகையில்80 விதத்தினை கொண்டுள்ள இவர்கள்20 விதமான வளத்திற்கே உரித்துடையவர்களாக காணப்படுகின்றனர். இதற்கு மாறான நிலையே அபிவிருத்தியடைந்த நாடுகளில் காணப்படுகின்றது.

     பட்டினிச்சாவு ஏற்படும்

     ஜூன் 2009 ஆம் ஆண்டு கூட்டப்பட்ட ஜி8 மாநாட்டில் உரையாற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ஜொசெரின் கூற்றிற்கு ஏற்ப உலகில்  6 பேரில் ஒருவர் பசியின் கொடுமைக்கு உள்ளாகின்றனர். பலர் போசாக்கின்னையினால் பாதிக்கப்படுகின்றனர் ஆபரிக்க நாடுகளில் இந்நிலை அதிகமானதாகும்.  இந்நிலை இதற்கு முன்னர் காணப்படவில்லை என கூறும் இவர், இந்த நிலை நீடித்தால் பட்டினிச்சாவு ஏற்படுவதோடு மனிதாபிமானத்தின் அவலத்திற்கு பூமி வற்துவிடும் என்கிறார். பெண்ணொருவருக்கு 2.5 பிள்ளைகள் என காணப்படும் நிலை தொடருமாயின்2050 ஆம் ஆண்டில்21 வீதத்தில் பிறப்பு வீதம் விழ்ச்சியடையும் எனவும் கூறுகின்னறார்.

     வறுமை. வேலையின்மை அடிப்படை சுகாதார வசதியில்லை. சுற்றுப்புறச்சூழல் கேடு, தண்ணீர்ப் பஞ்சம். போன்றவற்றிலிருந்து வன்முறை,கொலை,கொள்ளை வலையிலான அனைத்தும் பெருக்கமடையும் அபாயம் இருப்பதாக கூறபபடுகின்றது.மக்கள் தொகை பெருக்கத்தினால் வனவளம் அருகி மண் அரிப்பு பெருகி சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படும். கட்டிடவாக்கத்தன் விருத்தியினால் பயிர்செய்கைக்கான நிலம் குறைவடைந்து வருகிறது கிராம மக்கள் நகரங்களைநோக்கி இடம்பெயர்கின்றனர். எனவே, அங்குள்ள சூழல் பாதிக்கப்படுகின்றது அவ்விடத்தில் சுற்றுப்புறச்சூழல் சீர்கெடுகிறது. குடிநீர்ப்பற்றாக்குறை, மின்சாரப் பற்றாக்குறை, போக்குவரத்து நெரிசல், மருத்துவனைகளில் கூட்டம், பள்ளிக்கூடங்களில் இடமின்மை, போன்ற பல்வேறு பிரச்சினைகளால் நகரங்கள் நரகங்களாகும் அபாயத்தினை உலகம் எதிர்நோக்கியுள்ளது.

     சோறிட வேண்டும்

     மக்கள் தொகைப் பெருக்கம் குறித்த இரு வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. அதாவது பிறக்கும் குழந்தைகள் வயிரோடு மட்டும் பிறக்கவில்லை உழைப்பதற்கு இரு கரங்களோடு பிறக்கிறது. இது சமவுடமைவாதிகளின் கருத்தாகும். சமவுடமை வாதிகள் சனத்தொகையினை வளமாகக் கருதுகின்றனர். ஒரு சோடிக்கரங்கள் பல சோடி வயிற்றுக்கு காலமெல்லாம் சோறிட வேண்டும் என்பதனால் ஒவ்வொரு குழந்தைகளையும் முதலாளிததுவம் சுமையாகக் கருதுகின்றது.

     அறியப்பட்ட வளங்களை கணக்கில் கொண்டு உலக மக்கள் தொகை மிகையாக கருதப்படுகிறது. நானைய தினம் மனிதனின் அறிவியல் தொழிநுட்ப வளர்ச்சியால் இயற்கையின் இரகசியங்கள் முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட்டு புதுப:புது வளங்கள் கண்டறியப்படுமானால் இருக்கும் இந்த மக்கள் தொகை குறைவானதாக கருதப்படும் நிலை தோன்றலாம். 

     பேராபத்தினை ஏற்படுத்தக்கூடும்

     மக்கள் தொகை அதிகரிப்பானது கேடானதாக மாறும் நிலை காணப்படுவதோடு குறைவும் பேராபத்தினை ஏற்படுத்தக்கூடும். அதாவது எதிர்க்காலத்தில் உழைக்கும் வர்க்கத்தினரின் எண்ணிக்கையினை குறைத்துவிட்டு தங்கிவாழ்வோரின் அளவினை அதிகரிக்குமாயின் உற்பத்தி முடக்கத்திற்கும் வழிவகுக்கலாம். எவ்வாறாக இருப்பினும் எதிர்காலத்தின் ஆபத்தினை குறைப்பதற்கான நடவடிக்கைகள் அரசும் தனியாரும் எடுக்கவேண்டிய கட்டாயத்தினை சனத்தொகை அதிகரிப்பானது ஏற்படுத்தியிருப்பதை உலக மக்கள் தொகை தினங்கள் உணர்த்தி நிற்பதைக் காணலாம்.
    தகவல் அறியும் உரிமைச் சட்டம்

    தகவல் அறியும் உரிமைச் சட்டம்

    ஒரு நாட்டில் ஜனநாயகம் என்பது எதன் அடிப்படையில் முழுமையடைகிறது? வளர்ச்சி, முன்னேற்றத்தின் மூலம் என்றால் அதை மன்னராட்சியால் கூட சாத்தியப்படுத்த முடியும். அடிப்படை உரிமைகள் என்றால் அது கூட பல ஜனநாயகமற்ற நாடுகளில் படிப்படியாகப் போராடிப் பெறப்படுகிறது. அப்படியானால் மற்ற அரசு முறைகளிலிருந்து மக்களாட்சி எந்த தளத்தில் வேறுபட்டு நிற்கிறது? அதுதான் வெளிப்படைத்தன்மையான அரசாங்கம். மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மக்களாட்சியின் நிர்வாகம், எப்பொழுது அந்த மக்களிடம் உண்மையாக ஒளிவு மறைவின்றி நடந்து கொள்கிறதோ, அப்பொழுதுதான் அங்கு ஜனநாயகம் முழுமையடைகிறது. அப்படி இந்தியாவில் ஜனநாயகத்தை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சியில் அமல்படுத்தப்பட்டதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

              இதை சாமானியரின் பார்வையிலும் அணுகலாம். ரேஷன் அட்டையைப் புதுப்பிக்கவேண்டி விண்ணப்பித்தவர், அது என்ன ஆனது என்று அரசு அலுவலகத்தில் காத்திருக்கும் காட்சியை நம்மால் பலமுறை காண முடியும். பிறப்புச் சான்றிதழ் என்ன ஆனது, புது வீட்டிற்கு மின் இணைப்பு எப்பொழுது கிடைக்கும்; நடவடிக்கை எடுக்கிறோம் என்கிறார்களே, குறைந்த பட்சம் அது எந்த நிலையில் இருக்கிறது; ஒரு ஜனநாயக நாட்டில் இந்த கேள்விகளுக்கெல்லாம் எளிதில் பதில் கிடைப்பதில்லை என்றால் அங்கு வெளிப்படையான நிர்வாகம் இல்லையென்று பொருள். என்னதான் நடக்கிறது என்று மக்களுக்குத் தகவல்கள் சென்றால் நிர்வாகம் விரைந்து பணி புரியும். மேலும் அப்படி தகவல்கள் பெறுவது மக்களாட்சி என்ற கோட்பாட்டில் மிக முக்கியமான உரிமையும் கூட. இந்த தர்க்கத்தின் அடிப்படையில் உருவானதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். சரி, இது உருவானதன் பின்னணி என்ன?

              தகவல் அறியும் உரிமை பற்றி உச்ச நீதிமன்றம் 1976-ம் ஆண்டிலேயே சொல்லியிருக்கிறது. “ஒவ்வொரு குடிமக்களுக்கும் பேச்சுரிமை எழுத்துரிமை உண்டு என்கிறது அரசமைப்புச் சட்டத்தின் 19(1) பிரிவு. அதே பிரிவின்படி தகவல்களைப் பெறவும் உரிமையுண்டு. ஏனெனில், நம் நாடு மக்களாட்சி அடிப்படையில் இயங்குவதே”, என்றது உச்சநீதிமன்றம். அப்பிரிவு வெளிப்படையாகத் தகவல் அறியும் உரிமை பற்றிச் சொல்லவில்லை என்றாலும், தகவல்களை அறிந்துகொள்வது கருத்து சுதந்திரத்தின் ஒரு அங்கமே என்பதுதான் அதன் தர்க்கம்.

              இந்திரா காந்தி ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசர நிலை, திரும்பப் பெற்ற பிறகு 1977-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் “வெளிப்படையான நிர்வாகத்தைக் கொடுப்போம்” என்ற வாக்குறுதியுடன் ஜனதா கூட்டணி நின்று வெற்றி பெற்றது.  வெற்றி பெற்றதும் மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு ‘ரகசிய பாதுகாப்புச் சட்டம் 1923’ சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவதன் தொடர்பாகவும், அரசின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என்பது தொடர்பாகவும் ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமித்தது. ஆனால் குழு அமைத்ததோடு அந்த வேலை நின்று போனது. ஆட்சியும் மூன்று ஆண்டுகளுக்குள் கவிழ்ந்தது. அதன்பிறகு பத்தாண்டுகள் தகவல் அறியும் உரிமை தொடர்பாக அவ்வப்போது பேச்சுதான் நடந்தே ஒழிய செயலில் ஒன்றும் நடக்கவில்லை. பிறகு 1989 தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக தேசிய முன்னணி களத்தில் நின்றது. மீண்டும் ‘வெளிப்படையான நிர்வாகத்தைக் கொடுப்போம்’ என்ற வாக்குறுதியுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பிரதமர் வி.பி.சிங், “ரகசிய பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவோம், மக்களின் தகவல் பெறும் உரிமையை நிலை நாட்டுவோம்”, என்று அறிவித்தார். ஆனால் அவர் தலைமையிலான ஆட்சியிலும் அது குறித்து எதுவும் நடக்கவில்லை. பிறகு மீண்டும் பத்தாண்டுகளுக்கு முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால் பல ஆண்டுகளாக அரசியல் தலைவர்கள் இது குறித்துப் பேசி வந்ததால் தகவல் அறியும் உரிமைகள் பற்றி மக்களுக்குச் சிறிது விழிப்புணர்வு வர ஆரம்பித்திருந்தது.

              இப்படி இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பேச்சு அளவிலேயே முடங்கிப் போயிருந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் செயல்பாட்டுக்கு வர முதல் படி எடுத்து வைத்தது தமிழகம்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 1997-ல் அப்போதைய திமுக ஆட்சி, விழிப்புணர்வு அளவிலேயே இருந்த இக்கருத்தாக்கத்தை சட்டமாக்கி, தமிழகம் நோக்கி இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தது. ஆனால் ஜனாதிபதி ஒப்புதல் பெற்ற பின்பும் இது அமல்படுத்தப்படாமல் போனது. மேலும் இதில் போதாமைகளும் நிறைய இருந்தன. ஆனால் தமிழகம் துவக்கி வைத்தது இந்தியாவின் மற்ற பகுதிகளில் நிறைவேறத் துவங்கின. கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, கோவா, ஜம்மு-காஷ்மீர், மத்திய பிரதேசம், அசாம், ராஜஸ்தான் மாநிலங்களில் சிறு சிறு மாறுதல்களுடன் இச்சட்டம் நிறைவேறின. தகவல் தர மறுக்கும் அதிகாரிக்கு அபராதம் என்ற விதியை சட்டமாக்கியது மகாராஷ்டிரம். மேலும் மனித உயிர் தொடர்பான தகவல்கள் 24 மணி நேரத்திற்குள் தரப்பட வேண்டும் என்ற விதியையும் அறிமுகப்படுத்தினார்கள். இது இன்றைய தேசிய சட்டத்திலும் உள்ளன. 

              இச்சட்டத்தை பல மாநிலங்கள் தனித்தனியாக நிறைவேற்றினாலும், தேசிய அளவிலான சட்டம் நடைமுறைக்கு வர அதிகம் காரணமாக இருந்த மாநிலம் ராஜஸ்தான்தான். ஏனெனில் இச்சட்டம் வர அங்கு ஒரு மக்கள் இயக்கமே நடந்தது! அருணா ராயின் ‘மஸ்தூர் கிசான் சக்தி சங்காதன்’ என்ற தொழிலாளர்/விவசாய அமைப்பு, அரசு நிர்வாக வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று கடுமையாகப் போராடியது. அதன் விளைவாகத்தான் 2000-ல் ராஜஸ்தான் அரசு தகவல் பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றியது. பிறகு தேசிய சட்டம் ஒன்றைக் கொண்டு வர மத்திய அரசு பாராளுமன்ற நிலைக்குழு ஒன்றை அமைத்தபோது அதில் அருணா ராய் பங்கேற்று முக்கியப் பங்காற்றினார். அருணா ராயின் இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றியைப் பார்த்து மகாராஷ்டிராவில் அன்னா ஹசாரே போராட்டம் நடத்தினார்.

    அதன் விளைவாக 2002-ல் மகாராஷ்டிரா இச்சட்டத்தை நிறைவேற்றியது. 2001-ல் தில்லி மாநில அரசு இச்சட்டத்தை நிறைவேற்ற, அரவிந்த் கேஜ்ரிவால் தன்னுடைய ‘பரிவர்த்தன்’ என்ற இயக்கத்தின் மூலமாக இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு செய்ய ஆரம்பித்தார். மேலும் இச்சட்டத்தைப் பயன்படுத்தி அரசு ஊழல்களை வெளியே கொண்டுவரத் துவங்கினார்.

    இந்த இயக்கங்களோடு ‘தகவல் பெறும் உரிமைக்கான தேசிய மக்கள் பிரச்சார இயக்கம்’ என்ற இயக்கமும் சேர்ந்துக்கொள்ள, பிரச்சாரம் கடுமையானது. ஏற்கனவேயே 1997 மாநில முதல்வர்கள் மாநாடு இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தது. எனவே இச்சட்டம் குறித்த சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிக்க எச்.டி.சௌத்ரி என்பவரை நியமித்து, மாநிலங்கள் இச்சட்டம் குறித்துக் கருத்து தெரிவிக்கும் படி சுற்றறிக்கையையும் அனுப்பி வைத்தது மத்திய அரசு. எச்.டி.சௌத்ரியின் அறிக்கையையும் மாநிலங்களின் கருத்துகளையும் சேர்த்து ஆராய்வதற்காக மத்திய அரசு ‘செயலாளர்கள் குழு’வை நியமித்தது. சிறிய மாற்றங்களுடன் அதன் அறிக்கை தயாராக, அதன் அடிப்படையில் இச்சட்டத்திற்கான வரைவு மசோதா தயாரிக்கப்பட்டது.

    வாஜ்பாய் தலைமையிலான அரசு இருந்தபோது ‘தகவல் அறியும் சுதந்திரச் சட்டம் 2002’ இரு அவையிலும் நிறைவேறி ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்றது. ஆனால் போதிய பயன்களை இச்சட்டம் தராததாலும், அதை அமல்படுத்துவதற்கான கட்டமைப்புகளை சரியாக உருவாக்காததாலும், இச்சட்டம் மக்களுக்குப் பெரிதும் பயனில்லாமல் போனது.

              2004-ல் வாஜ்பாய் அரசின் காலம் முடிவுக்கு வர, “மக்கள் கேட்கும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை நிறைவேற்றுவோம்” என்ற வாக்குறுதியுடன் தேர்தல் களத்தில் இறங்கி, வெற்றியும் பெற்றது காங்கிரஸ். ஆனால் இம்முறை ஆட்சி அமைத்ததும் இச்சட்டம் நிறைவேற்றத் தேவையான பணிகள் முழு வீச்சில் நடைபெறத் துவங்கின. பரிந்துரைகள் பெறும் பொறுப்பு தேசிய ஆலோசனைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அது பல்வேறு அரசு சாரா நிறுவனங்களிடம் கருத்து கேட்டு, முக்கிய திருத்தங்களையும் கோரிக்கைகளையும் கொண்ட அறிக்கையைத் தயாரித்தது.

    அதன் அடிப்படையில் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2004’ என்ற மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மசோதாவை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் பொறுப்பு ‘பொதுமக்கள் குறைதீர்ப்பு, சட்டம் மற்றும் நீதித்துறை நாடாளுமன்ற’ நிலைக்குழுவிடம் தரப்பட்டது. தமிழக மாநிலங்களவை உறுப்பினர் திரு.சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் உருவான இந்நிலைக்குழு இச்சட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும் திரட்டி, தீவிரமாக ஆய்வு செய்து, பல பரிந்துரைகள் அடங்கிய ஒரு முழுமையான அறிக்கையை சமர்ப்பித்தது. இதனை பிரணாப் முகர்ஜி தலைமையிலான உயர்நிலைக்குழு ஆய்வு செய்தபின் மத்திய அரசவையும் இதற்கு ஒப்புதல் அளித்தது. இரு அவைகளும் இச்சட்டத்தை நிறைவேற்ற, 2005 ஜூன் 15-ம் நாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். அந்த ஆண்டு அக்டோபர் 15-ம் நாளிலிருந்து இச்சட்டம் ஜம்மு-காஷ்மீர் தவிர்த்து நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது. இதுதான் தகவல் பெறும் உரிமை இந்தியாவில் சட்டமான நெடும் வரலாறு.

    சரி, இச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.

    1. யாரிடமிருந்து தகவல்களைப் பெற முடியும்? மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றங்கள், அரசிடமிருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவி பெறும் நிறுவனங்கள், ஆகியவற்றிடமிருந்து தகவல்களைப் பெற முடியும். வெளிநாடு வாழ் இந்தியர்களாலும் கூட இச்சட்டத்தைப் பயன்படுத்த முடியும்.

    2. மனுவை விண்ணப்பிக்கும் கட்டணம் பத்து ரூபாய். பணமாகவோ, கேட்பு வரைவோலையாகவோ(demand draft), காசோலையாகவோ(cheque), செலுத்தலாம். செலான் என்றால் ரசீதை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். தமிழக அரசின் துறைகளிடம் தகவல்கள் பெற வேண்டுமென்றால் இன்னும் எளிது. விண்ணப்பத்தில் பத்து ரூபாய் court fee stamp வாங்கி ஒட்டிவிட்டால் போதும். மனுவை ‘பொதுத் தகவல் அதிகாரி(Public Information Officer)’க்கு எழுத வேண்டும். துறை மாறிச் சென்றாலும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விண்ணப்பம் சேர்ந்து விடும். கொரியர் மூலம் அனுப்ப வேண்டாம். பதிவுத் தபாலில் அனுப்பவும், அல்லது நேரடியாகச் சென்று சமர்ப்பிக்கவும். மறக்காமல் ரசீது வாங்கவும்.

    3. 30 நாட்களுக்குள் தகவல் தர வேண்டும். மனித உயிர் தொடர்பான தகவல்கள் 48 மணிநேரத்திற்குள் தர வேண்டும். தவறான முகவரிக்குச் சென்றால்  ஐந்து நாட்கள் அதிகமாகும். உதவித் தகவல் அதிகாரியிடம் விண்ணப்பம் சென்றால் மேலும் ஐந்து நாட்கள் ஆகும். மூன்றாம் தரப்பினர் குறித்த தகவல்கள் என்றால் உரிய அனுமதியோடு 40 நாட்களுக்குள் தகவல் தர வேண்டும்.

    4. கோப்புகள், ஆவணங்கள், வரைபடங்கள், உத்தரவுகள், புகார்கள், இப்படிப் பலவும் தகவல்கள்தான். அவை காகிதமாகவோ, மின்னஞ்சலாகவோ, சிடியாகவோ இருக்கலாம். அவற்றை பெற கட்டணம் உண்டு. ஒரு A4 காகிதம் 2 ரூபாய். சிடி 50 ரூபாய். பதிவேடுகளைப் பார்வையிட முதல் ஒரு மணி நேரத்திற்குக் கட்டணமில்லை. அதன்பின் ஒவ்வொரு கால் மணி நேரத்திற்கும் 5 ரூபாய் கட்டணம் (தமிழக அரசுத் துறைகள் என்றால் ஒரு மணி நேரத்திற்கு ஐந்து ரூபாய்). தாழ்த்தப்பட்டவர்கள், மலைசாதியினர் மற்றும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருப்பவர்களுக்குக் கட்டண விலக்கு உண்டு. உரிய காலத்திற்குள் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றால் தகவல்கள் விண்ணப்பதாரரிடம் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் உண்டு.

    5. பெரும்பாலும் பெரிய பதில்களைக் கோரும் மேலோட்டமான ‘ஏன்’ கேள்விகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் கேள்வி தெளிவாக இல்லை என்று அவை நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. புகார் கொடுத்தும் உங்கள் தெரு விளக்கு இன்னும் எரியவில்லையா? அப்படியென்றால், இந்த நாளன்று புகார் அளித்தோமே ஏன் இன்னும் சரிபார்க்கவில்லை என்று கேட்கலாம். கூடவே எத்தனை பணியாளர்கள் உள்ளனர், புகார் கொடுத்த அன்று பணியாளர்கள் வராத காரணம் என்ன, அவர்கள் வேறு எங்கே பணியில் இருந்தார்கள், பணியிடங்கள் காலியாக உள்ளனவா, புகார் எந்த நிலையில் இருக்கிறது, என்று துணைக்கேள்விகள் மூலம் கிடுக்கிப்பிடி போடலாம். சாமானியரான நமக்கு கடைசியில் வேலை நடக்க வேண்டும் என்பதுதானே முக்கியம்? அது விரைவில் நடக்க என்ன மாதிரி கேள்விகள் கேட்கவேண்டுமோ அப்படி கேட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே வந்து வேலையை கவனிப்பார்கள். இந்தியாவில் பல இடங்களில் இது வெற்றிகரமாக வேலை செய்திருக்கிறது.

    6. எதற்காக இந்தத் தகவல் உங்களுக்கு வேண்டும் என்று யாரும் கேட்க முடியாது. நாமும் சொல்லத் தேவையில்லை. தகவல்கள் தருவதில் அரசே சில விதிவிலக்குகளை வைத்திருக்கிறது. எனவே அதுவே தரமுடியாது என்று சொல்லிவிடும். ஆனால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தரமுடியாது என்ற முடிவுக்கு என்ன காரணங்கள் என்று கேட்க முடியும்.

    7. நாள், இடம், பெயர், முகவரி, பெறுநர், கேள்விகள், கட்டணம் செலுத்தப்பட்டதற்கான ரசீது, இவை விண்ணப்பத்தில் இடம்பெற்றால் போதும். எங்கு வேலை பார்க்கிறோம் அதெல்லாம் தேவை இல்லை. அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி தர கட்டாயம் இல்லை. ஆனால் உங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பொதுத் தகவல் அதிகாரி உங்களைத் தொடர்பு கொள்ள அவை உதவியாக இருக்கும் என்று நினைத்தால் தரலாம்.

    இந்தத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நிறைவேறிய பின் ‘அரசு ரகசியச் சட்டம் 1923’ பின்னே போய் விட்டது. மற்ற சட்டங்களை விட தகவல் அறியும் உரிமைச் சட்டமே மேலோங்கி நிற்குமாறு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. உலகில் இந்தியா மட்டும்தான் இச்சட்டத்தை இயற்றியிருக்கிறதா என்றால் இல்லை. 1766-ம் ஆண்டிலேயே சுவீடனில் இது நிறைவேற்றப்பட்டுவிட்டது! 1966-ல் அமெரிக்கா கொண்டு வந்தது. 2005-ல் நாம் நிறைவேற்றியபோது 55 நாடுகளில் இச்சட்டம் நடைமுறையில் இருந்தது. இன்று 85-க்கும் அதிகமான நாடுகளில் உள்ளது. ஏழை நாடுகளிலும் உள்ளது, தோல்வியுற்ற அரசு என்று சொல்லப்படும் பாகிஸ்தானிலும் உள்ளது. இந்தியாவில் எத்தனையோ சட்டங்களுக்கு முன்னோடியாய் இருக்கும் தமிழகம்தான் இதற்கும் முன்னோடி என்பதை நாம் மகிழ்வுடன் கூறிக்கொள்ளலாம்.

    இக்கட்டுரை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வெறும் அறிமுகம்தான் செய்திருக்கிறது. இச்சட்டம் குறித்த மேலதிக தகவல்களுக்கு எஸ்.ஏ.எம்.பரக்கத் அலியின் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ என்ற நூலை வாசிக்கவும். அந்நூலின் துணையுடன்தான் இக்கட்டுரையை என்னால் எழுத முடிந்தது. விகடன் பிரசுரம் பதிப்பித்திருக்கிறது. இரும்புத் திரைகள் நீங்கி வெளிப்படையான முழுமையான ஜனநாயகம் அமைவதன் முக்கியப் படியே இச்சட்டம். இச்சட்டத்தை நாம் நல்ல குடிமக்களாக நன்றாகப் புரிந்துகொண்டு, இதை நல்ல நோக்கங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வோம்.

    Wednesday, August 14, 2019

    யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு 2019

    யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு 2019


    யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு

    ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட கோட்டை கட்டமைப்பில் மிக அற்புதமானதாகும். கீழைத்தேசத்தில்லுள்ள கோட்டைகள் யாவற்றிலும் யாழ்ப்பாணக் கோட்டை மிகப்பலமானதும் பாதுகாப்பானதும் என அனைத்துக் கட்டிடக்கலை விற்பன்னர்களாலும் விதந்துரைக்கப்பட்டது. யாழ்ப்பாணக் கோட்டை அமைக்கப்பட்ட காலத்தில் இந்து சமுத்திர நாடுகள் பலவற்றிலும் பலமான கோட்டைகள் கட்டப்பட்டிருந்தன. ஆனால் அவை எதுவும் யாழ்ப்பாணக்கோட்டையின் முழுமைக்கும் நிறைவுக்கும் தொழில்நுட்பத்திறனுக்கும்  நிகராகாது என பலரும் போற்றியுள்ளனர்
    யாழ்ப்பாணக்குடா நாட்டின் தென் விளிம்பில் யாழ்ப்பாணாக் கடனீரேரியின் கரையில் கம்பீரமாக யாழ்ப்பாணக் கோட்டை அமைந்த்திருந்த்தது. ஒல்லாந்தர் யாழ்ப்பாணக்கோட்டையை மீளப் புத்துப்பித்து கட்டிய போது ஐங்கோணவடிவில் வடிவமைத்தனர்.  முதன் முதலின் உள்கோட்டையின் ஐங்கோண வடிவம் கட்டப்பட்டத்தாக அறியப்படுகிறது.. இதனை அவர்கள் 1680ம் ஆண்டு கட்டிமுடித்தனர் என்பது கோட்டை வாயில் கதவில் பொறிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடுகின்றது. கோட்டையின் வெளியமைப்பு சுற்றுக்கட்டமைப்புகள் 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கி 1792ம் ஆண்டு நிறைவுற்றது என்பது கோட்டையின் வாயில் வளைவில்(வெளி?) பொறிக்கப்பட்டிருக்கும் ஆண்டு குறித்து நிற்கின்றது. இதில் அவதானிக்க வேண்டிய பரிதாபம் யாதெனில், ஒல்லாந்தர் இந்த ஐங்கோணக் கோட்டையை 1792இல் அதாவது பிரித்தானியரிடம் கோட்டையை பறிகொடுப்பதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பே பூரணமானது என்பதாகும். இந்த மாபெரும் கோட்டையை ஒல்லாந்த்தர் 1795ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி பிரித்தானியரிடமிழந்தனர்.
    யாழ்ப்பாணக்கோட்டை ஐந்து கொத்தளங்களை (Bastions) கொண்டிருந்தது. கடனீரேரி பக்கமாக இரண்டு கொத்தளங்களையும், நிலப்புறமாக மூன்று கொத்தளங்களையும் கொண்டிருந்தது. இந்த ஐந்து கொத்தளங்களும் தெளிவாகப் பெயரிடப்பட்டிருந்தன. கோட்டையின் வடபுறக் கொத்தளம் உற்றெச் (Utrecht) என அழைக்கப்பட்டது. வடகிழக்குப்புறக் கொத்தளம் ஹெல்டர்லாந்து(Gelderland) என்றும், தென்கிழக்குப் புறக் கொத்தளம் ஒல்லாந்த்து(Holand) என்றும் தென் மேற்குப் புறக் கொத்தளம் சீலாந்து(Zeeland) என்றும் வடமேற்குப்புறக் கொத்தளம் பிறிஸ்லாந்து(Friesland) என்றும் அழைக்கப்பட்டன. இந்த ஐந்து கொத்தளங்களும் நெடும் மதில்களினால் இணைக்கப்பட்டிருந்தன. கொத்தளங்களை இணைக்கின்ற மதில் ஒவ்வொன்றினதும் நீளம் ஏறத்தாள 554 அடிகளாகும். கொத்தளங்களின் சுற்றளவைத் தவிர்த்து சுற்று மதிலின் மொத்த நீளம் 3960 அடிகளாகும். முக்கோண வடிவினதான கொத்தளங்கள் ஐந்த்தினையும் உள்ளடக்கியதாக உட்கோட்டையின் சுற்றளவை பார்க்கில் 6300 அடிகளாகவுள்ளது.
    யாழ்ப்பாணக் கோட்டை மதில் உச்சியில் இருபது அடி அகலமானது அடித்தளதிற்கு அது நாற்பது அடிவரை அகன்று விரிந்து செல்கிறது. வெகு அற்புதமாக அம்மதில்களை அமைத்துள்ளனர். மதிலின் வெளிப்புறம் ஏறத்தாள ஆறடி அகலத்தில் முருகைக்கற்களினால் கட்டப்பட்டது. உட்பக்கம் நான்கு அடி அகலக்கட்டமைப்பை கொண்டுள்ளது. இவ்விரு கட்டுக்களுக்கும் இடைப்பட்ட பரப்பு மண்ணால் நிரவப்பட்டுள்ளது. இம்மதில்கல் அகழி மட்டத்திலிருந்து ஏறத்தாழ முப்பது அடிகள் கம்பீரமாக உயர்ந்து நிற்கின்றன. உண்மையில் இவை பலமான‌அரண்களே. எவ்வளவு வலிமைவாய்ந்த பீரங்கிகளாலும் தகர்ந்தெறியமுடியாத மதிற் சுவர்கள்.

    உட்கோட்டையைச் சுற்றி அமைந்துள்ள சுரியும் நீரும் கொண்ட அகழி அற்புதமான அழகும், பாதுகாப்பும் கொண்டது. உயர் கொத்தளப்பகுதியில் அகழியின் அகலம் 132 அடிகளாகவும், மதிலின் நடுப்பகுதியிலிருந்து நோக்கும் போது அகழியின் அகலம் 158 அடிகளாகவும் இருப்பதைக் காணலாம். 3960 அடிகள் நீளமான இக் கோட்டையின் சுற்றுமதிலைச் சூழ்ந்து 6400 அடிகள் நீளமான அகழியின் வெளிச் சாய் சுவர் அமைந்திருக்கிறது.

    அகழி வெளிமதிற் சாய் சுவரோடு, தாழ் கொத்தளங்கள் நான்கு அமைந்துள்ளன. இந்த தாழ் கொத்தளங்கள் கோட்டை மதில் ஒவ்வொன்றின் நடுப்பகுதிக்கு நேர் எதிரில் அகழுக்கு அப்பால் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை வடிவில் சிறிய கோட்டை அமைப்பின. அதனால் இவற்றினை சின்னக்கோட்டைகள்  எனவும் கூறுவர். முற்றவெளியின் முனியப்பர் கோயில் அருகே இத்தகை தாழ் கொத்தளக் கோட்டையுள்ளது. வடக்கில் வீரசிங்கம் மண்டபத்தை நோக்கியும், மேற்கில் பண்ணை பொலிஸ் விடுதியை நோக்கியும் சின்னக்கோட்டைகள் எனப்படும் தாழ் கொத்தளங்கள் உள்ளன. இன்னொரு தாழ் கொத்தளம் பிரதான வாயிலின் நுழை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்றது. இத்தாழ் கொத்தளங்கள் முருகைக்கற்களினால் கட்டப்பட்டு உட்புற ஒடுங்கிய பாதைகளைக் கொண்டனவாகவும் முருகைக்கற்களினால் மூடப்பட்ட கூரை கொண்டனவாகவும் உள்ளன.

    இத்தாழ் கொத்தளங்களில் ஒவ்வொரு காவலரண் கூடுகள் உள்ளன. உயர் கொத்தளங்களில் முக்கோணத்தின் முனைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்றாக மூன்று காவலரண்கள் இருந்த்தன. ஆக மொத்தமாக 19 காவலரண் கூடுகள் கோட்டையில் இருத்தன. அகழி வெளிச்சுவரின் மத்தியில் முற்றவெளியோடு அமைந்த பாதுக்காப்பற்ற தாழ் கொத்தளங்கள் எதிரிகளின் வருகையை முதலில் தடுக்கும் நிலைகளாகும். இத்தாழ் கொத்தளங்களினால் எதிரிப்படையை தடுக்க முடியாவிடில், உயர் கொத்தளங்கள் அடுத்து செயற்படும். தாழ் கொத்தளங்கள் நில மட்டத்தோடு அமைந்த்தவை உயர் கொத்தள்ங்கள் அகழிக்கு அப்பால் முப்பதடி உயரத்தில் பாதுகாப்பாக அமிக்கப்பட்டிருப்பவையாகும். இவற்றை விட மதிலில் பத்தடிக்கு ஒரு பீரங்கி பொருத்தக்கூடிய இடைவெளி அமைக்கப்பட்டிருந்தது.

    போர்த்துக்கேயரினாலும் ஒல்லாந்தராலும் கட்டப்பட்ட கோட்டைகள் உண்மையில் பலம் வாய்ந்தவை. பெரும்பாலான கோட்டைகள் முருகைக்கற்களால் உருவாக்கப்பட்டன. முருகைக்கற்களை தாம் விரும்பியவடிவத்திற்கு கற்தற்சர்களால் வெட்ட முடிந்தது. முருகைக்கற்கள் இலகுவில் நொருங்குந்தன்மையற்றவை; அழுத்த நெகிழ்ச்சி கொண்டவை. முருகைக்கற்களை சுவர்கற்களாக கனவடிவில் வெட்டுவது இலகுவாக இருந்தது. பின்னர் சுவர்களில் பொருத்தப்பட்டன.
    இவர்களால் அமைக்கப்பட்ட கோட்டைகள் அனைத்தும் கடற்கரையோரங்களில் அமைந்திருந்தன. யாழ்ப்பாணக் கோட்டை ஊர்காவல்துறை கெமன் ஹீல் கோட்டை, காங்கேசன் துறை கோட்டை, வெற்றிலைக்கேணியிலிருந்த பாஸ் பைல்(Parss Pyl) கோட்டை ஆகியன கடற்கரையோரங்களிலும், இயக்கச்சி பெஸ் சுட்டர் கோட்டை, ஆனையிறவுக் கோட்டை, பூநகிரிக் கோட்டை என்பன பாதைக் கடவைகளிலும் அமைந்திருந்தன. இத்தகைய முக்கியத்துவத்தினால் கடலில் இருந்தும் தரையிலிருந்தும் வரும் எதிரிகளின் தாக்குதலை எதிர்கொண்டு முறியடிப்பது இலகுவாக இருந்தது.

    யாழ்ப்பாணக்கோட்டை சுண்ணக்கற்களாலும் முருகைக்கற்களாலும் அடுக்கிக் கட்டப்பட்டது. கொத்தளங்கள்(Bastion) அரன் சுவர்கள்(Rampart), அரண் சுவரிலிருந்து இறங்கும் படிகள்(Ramp) என்பன அனைத்தும் கட்டிமுடிக்கப்பட்டன. ஐங்கோணவடிவில் யாழ்ப்பாணக் கோட்டை கம்பீரமாக எழுந்து நின்றது. இராணுவப் பாதுகாப்புக்கும் நிர்வாக நடவடிக்கைகளுக்கும் உரிய கட்டிடங்கள் கோட்டைக்குள் அமைந்திருந்தன. ஒல்லாந்தரின் வதிவிட நகரமாக கோட்டைக்கு வெளியே பறங்கிதெரு அமைந்திருந்தது. 

    இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒல்லாந்தர் காலத்தில் பல கோட்டைகள் இராணுவ முக்கியத்துவத்துடன் விளங்கியிருந்தன. ஆனால் அவற்றில் எதுவும் யாழ்ப்பாணக்கோட்டையின் தொழில் நுட்ப நேர்த்திக்கும் முழுமைக்கும் ஈடாகாது என டபிள்யு ஏ நெல்சன் குறிப்பிட்டுள்ளார்.

    கோட்டையின் வாயில் கதவு ஆறுஅங்குலத்திற்கு மேல் தடிப்பான மரக்கதவு ஆகும். அதில் போர்யானைகள் முட்டி பிளக்காதிருக்க வேண்டி  கூரான ஈட்டி முனைகள் பொருத்தப்பட்டிருந்தன. வில்வளைவான வாயில் கடவையில் இருந்து அகழியைக்கடப்பதற்கு தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்த்து. இக்கதவில் கோட்டை கட்டிமுடிக்கப்பட்ட ஆண்டான 1680 குறிக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஒலாந்தக்கம்பனியின் ”VOC” யோடு கூடிய சின்னமும் பொறிக்கப்பட்டிருந்த்து. கோட்டையின் வெளிச்சுற்று வேலைகள் 18ம் நூற்றாண்டு ஆரம்பத்திலிருந்து கட்டமைக்கப்பட்டு 1792இல் முடிவடைந்த்தன. 

    கோட்டைக்குள் ஒல்லாந்த லெப்ரின்ண்ட் கவர்னர்களின் பங்களா பின்னர் ராணி மாளிகை(Queens House) அமைந்த இடத்தில் கட்டப்பட்ட்து. போர்த்துக்கேயரின் கத்தோலிக்க தேவாலயம் ஒல்லாந்த்தரால் புதுப்பிக்கப்பட்ட்து டன் சதுரங்கப்பலகை வடிவத்தையும் பெற்றது. இத் தேவாலயம் கோட்டையினுள் வடபகுதியில் காணப்பட்ட்து. சிறைக்கூடங்கள், அதிகாரிகளின் நிர்வாகப் பகுதிகள் என்பன கோட்டையினுள் அமைந்திருந்தன. கோட்டையின் மையம் ஏறத்தாள நான்கு ஏக்கர் பரப்பளவினைக்கொண்ட மைதானமாகும், அது படையணியினரின் பயிற்சிக்கும் நடைபவனிக்கும் உதவியது.

    கோட்டை இரண்டு வாயில்களை கொண்டிருந்த்து ஒன்று நீர்வழி (Water Gate), மற்றையது நிலவழி (Land Gate). கோட்டையின் தென்மதிற் சுவரில் நீர் வழி அமைந்திருந்த்து. கடனீரேரியூடாக வரும் ஒருவர் கோட்டையின் மதிலருகில் சிறு கலத்தினை நிறுத்தி விட்டு, நீர்வழியூடாக, காவலர்கள் அனுமத்தித்தால் கோட்டைக்குள் நுழையமுடியும்(இந்த நீர் வழியூடாகத்தான் இரண்டாம் ஈழயுத்தம் ஆரம்பமான போது இராணுவத்தினர் வெளியேறினர்). நிலவழி தொங்கு பாலத்தினூடாக இணைக்கப்பட்ட பிரதான வாயில்புறமாகும். ஒல்லாந்தர் அப்பாலத்தை உள்மதிலோடு தூக்கி பாதையைத் துண்டிக்கவும், தேவையான போது பாலத்தை இறக்கி இணைக்கவும் வசதிகளைக் கொண்டிருந்தனர். வாயில் சுவரின் மேல் மணிக்கோபுரம் ஒன்று கட்டப்பட்டிருந்த்து. அதில் பிணைக்கப் பட்டிருந்த காண்டாமணி தேவாலய வழிபாட்டு நேரத்தையும், கால நேரத்தையும் ஒலி எழுப்பி அறிவித்து வந்தது. கோட்டைக்குள் இருந்த சதுரங்க வடிவத் தேவாலயம் குருய்ஸ் கேர்க் (Kruys Kerk) எனப்பட்டது. இது சமவளவான பக்கங்களைக் கொண்ட கிரேக்கச் சிலுவை(Grees Cross) வடிவினது. இக் கிரேக்கச் சிலுவை வடிவை “குருய்ஸ் கேர்க்” என்பர். கோட்டையின் தென் கிழக்கு பகுதியில் இத் தேவாலயம் அமைந்திருந்தது. இதன் பிரதான வாயில் மேற்குப் பக்கத்தில் அமைந்திருந்தது. வடக்கு வாயில் ஊடாகவும் தெற்கு வாயில் ஊடாகவும் ஆலயத்தினுள் பிரவேசிக்க முடியும். தேவாலயத்தினுள்ளே 1660ஆம் ஆண்டுக்குரிய கல்லறைக் கற்களைக் காணலாம். ஆனால் பிரதான வாயிலின் இந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்ட்து 1706ஆம் ஆண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தேவாலயம் அடம் வன் டேர் டுயின் (Adem Van Der Duyn) என்ற கம்மாந்தர் காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட்து. இத் தேவாலயம் இருபாலையில் இதற்கென அரியப்பட்ட செங்கற்களைப் பயன்படுத்தியது. இச் செங்கற்களுக்கு ஆயிரத்து மூன்றரைப் பணம் கொடுக்கப்பட்ட்து என்பதும் குறிப்பிடத்தக்கது. 


    இத் தேவாலயத்தில் இரு பாரிய மணிகள் பொருத்தப்பட்டிருந்த்தன. அவை போர்த்துக்கேயர் காலத்தவை என்பது அவற்றில் பொறிக்கப்பட்டிருக்கும் “N.S. Dos Milagres De Jaffnapatao 1648” என்ற எழுத்துக்கள் சான்று பகிர்கின்றன. ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட அற்புதமான யாழ்ப்பாணக் கோட்டை வாயிலில், ஒல்லாந்தர் கம்பனியைக் குறிக்கும் “VOC” என்ற எழுத்தோடு கூடிய யாழ்ப்பாணக் கம்மாந்தரின் ஆள் புலத்திற்குரிய கேடயச் சின்னம் (Shield) பொருதப்பட்டிருந்த்து. அந்த கேடயச்சின்னத்தில் யாழ்ப்பாணப் பிரதேசத்தின் கற்பகதருவான பனை மரம் வரையப்பட்டிருந்த்து. இது இந்த ஆள் புலத்தின் சரியான குறியீடாக விளங்குவதை 17ஆம் நூற்றாண்டில் இந்த மண்ணில் கால்பதித்து நிலைகொண்ட ஒல்லாந்தர் உணர்ந்திருந்தனர்




    கோட்டகமைக் கல்வெட்டு என்பது

    கோட்டகமைக் கல்வெட்டு என்பது



    கோட்டகமைக் கல்வெட்டு என்பது இலங்கையின் கேகாலை மாவட்டத்தில் கம்பளைக்கு அண்மையில் உள்ள கோட்டகமை என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு தமிழ்க் கல்வெட்டு ஆகும். 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கல்வெட்டு அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்தி வம்ச அரசன் ஒருவன் போரொன்றில் பெற்ற வெற்றியைக் குறிக்க எழுதுவிக்கப்பட்டது.

    உள்ளடக்கம்
    இக்கல்வெட்டு நான்கு வரிகளைக் கொண்ட ஒரு பாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. இப்பாடல் சிங்கையாரிய மன்னனின் பெருமை பேசுவதாக அமைந்துள்ளது. பாடல் தொடங்குவதற்கு முன் மேல் வரிசையில் "செது" என்னும் யாழ்ப்பாண மன்னர்களின் அடையாளச் சொல் காணப்படுகிறது. இதை, இக்கல்வெட்டு யாழ்ப்பாண அரசனின் ஆணையின்படியே வெட்டப்பட்டது என்பதற்குச் சான்றாகக் காட்டுகின்றனர். கல்வெட்டின் உள்ளடக்கம் அதில் இருக்கும் ஒழுங்கின்படி பின்வருமாறு

    "செது
    கங்கணம்வேற்கண்ணினையாற்காட்டினார்
    காமர்வளைப்பங்கயக்கைமேற்றிலதம்பாரித்தார்
    பொங்கொலிநீர்சிங்கைநகராரியனைச்செரா
    வனுரேசர்தங்கள்மடமாதர்தாம்"

    இங்கே சொற்களிடையே இடைவெளி இல்லாமலும் அடிகள் முறையாகப் பிரிக்கப்படாமலும் உள்ளது. ஆய்வாளர்கள் இதைப் பின்வருமாறு ஒழுங்குபடுத்தியுள்ளர்கள்

    "சேது
    கங்கணம் வேற்கண்ணினையாற் காட்டினார் காமர்வளைப் 
    பங்கயக்கை மேற்றிலதம்பாரித்தார் பொங்கொலிநீர்
    சிங்கைநகராரியனைச் சேராவனுரேசர்
    தங்கள்மடமாதர் தாம்"

    "சிங்கையாரியனுக்கு அடங்காத சிங்களத் தலைவர்களுடைய மனைவிமார் கண்ணீர் விட்டுத் தமது நெற்றியில் இருந்த பொட்டை அழித்தனர்"[3] என்பது இதன் பொருள். இது சிங்கையாரியன் சிங்கள நாட்டில் நடந்த போரில் வெற்றி பெற்றதைக் குறித்துக் காட்டுகிறது. சிங்கையாரியன் என்பது 13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தை ஆண்ட அரச வம்சத்தைச் சேர்ந்த அரசர்களுக்கான பொதுப் பெயர் என்பதால், இக்கல்வெட்டில் இருந்து குறிப்பாக எந்த யாழ்ப்பாண அரசன் வெற்றி பெற்றவன் என்பதை அறிய முடியாது.

    காலம்

    இக்கல்வெட்டை ஆய்வு செய்த காட்ரிங்டன், எழுத்தமைதியில் அடிப்படையில் அது 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கவேண்டும் என்றும், 6 ஆம் பரக்கிரமபாகுவின் காலத்தில் விசயநகரப் படையெடுப்புக்குப் பின்னர் ஆரியச்சக்கரவர்த்திக்கு இவ்வாறான ஒரு வெற்றி கிடைத்திருக்கக்கூடும் எனவும் கூறுகிறார். எழுத்தமைதியின் அடிப்படையில் காலத்தைக் கணிப்பது துல்லியமானது அல்ல என்றும், 1344 ஐச் சேர்ந்த இலங்காதிலகக் கல்வெட்டும் இது போன்ற எழுத்தமைதி கொண்டதே என்றும் சுட்டிக்காட்டிய பத்மநாதன், இதுவும் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறுகிறார்.

    பின்னணி

    14ம் நூற்றாண்டின் நடுப்பகுதியளவில் இலங்கையில் இருந்த அரசுகளில் யாழ்ப்பாண அரசு வலிமை பொருந்தியதாக இருந்தது. அக்காலத்தில் கம்பளை சிங்கள அரசின் தலைமையிடமாக விளங்கியது. உள் பிரச்சினைகளால் சிங்கள அரசு வலிமை குன்றியிருந்ததால், அதன் ஆட்சிப்பகுதி முழுவதிலும் முழுமையான கட்டுப்பாட்டை வைத்திருக்க முடியவில்லை. பராக்கிரமபாகுவின் மருமகன் கம்பளையிலும், முதலமைச்சர் அழகக்கோனார் இறைகமையிலும் இருந்தனர். யாழ்ப்பாண அரசர்கள் இவர்களிடம் இருந்து திறையும் பெற்றுவந்தனர். 1340களை அண்டி ஒரு அரசாகவே செயற்பட்டுவந்த அழகக்கோனார் இப்போது கோட்டே இருக்கும் பகுதியில் ஒரு கோட்டையைக் கட்டி அதைப் பலப்படுத்தினான். ஆயுதங்களையும் படைகளையும் திரட்டிப் போதிய வலிமை பெற்ற பின்னர் திறை கொடுக்க மறுத்து, யாழ்ப்பாணத்தில் இருந்து திறைபெறச் சென்ற தூதுவர்களைப் பிடித்துத் தூக்கில் இட்டான். யாழ்ப்பாண அரசன் சிங்கள அரசின் மேல் போர்ப்பிரகடனம் செய்து, நிலம் வழியாகவும், கடல் வழியாகவும் இரண்டு பிரிவுகளாகப் படைகளை அனுப்பினான். நிலம் வழியாகச் சென்ற படை மாத்தளையை அடைந்தது. சிங்கள அரசன் கம்பளையில் இருந்து தப்பிச் சென்றான். கடல் வழியாக வந்த படைகள் கொழும்பிலும், பாணந்துறையிலும் இறங்கின. சிங்கள நூலான இராசவழி, கடல்வழியாக வந்து இறங்கிய யாழ்ப்பாணப் படைகளை அழகக்கோனாரின் படைகள் எதிர்த்துப் போரிட்டுத் தோல்வியுறச் செய்ததுடன், பாணந்துறையில் நின்ற யாழ்ப்பாணக் கப்பல்களையும் எரித்துவிட்டன என்றும், மக்கள் ஒன்றிணைந்து மாத்தளையில் இருந்த யாழ்ப்பாணப் படைகளையும் தோற்கடித்தனர் என்றும் கூறுகிறது.

    கோட்டகமைக் கல்வெட்டின் உள்ளடக்கம் சிங்கள நூல்களின் கூற்றில் ஐயத்தை ஏற்படுத்துகிறது. மேற்குறித்த போரில் சிங்களப் படைகள் பெற்ற வெற்றி இராஜாவளியால் மிகைப்படுத்தப்பட்டது என்றே தெரிகிறது. யாழ்ப்பாணப் படைகள் சில இடங்களிலாவது வெற்றி பெற்றிருக்காவிட்டால் இவ்வாறான கல்வெட்டைப் பொறித்திருக்க முடியாது என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கம்பளைக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் யாழ்ப்பாணத்து அரசன் தான் பெற்ற வெற்றியைப் பதிவு செய்திருப்பதால், சிங்கையாரியனின் படைகள் மலைநாட்டுப் பகுதிக்குள் ஊடுருவிக் கம்பளை வரை சென்று அதன் அரசனையும் தோல்வியுறச் செய்திருக்கக்கூடும்.

    சிங்கையாரியனின் அடையாளம்

    மடவலை என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிங்களக் கல்வெட்டொன்று மூன்றாம் விக்கிரமபாகுவுக்கும் மார்த்தாண்டம் பெருமாள் என்பவனுக்கும் இடையில் சிங்களநாட்டில் யாழ்ப்பாண அரசு சார்பில் வரி வசூலிப்பதற்கு ஆட்களை நியமிப்பது தொடர்பான ஒப்பந்தம் பற்றியது. இங்கே குறிப்பிடப்பட்ட மார்த்தாண்டம் பெருமாள், யாழ்ப்பாணத்து இளவரசனான மார்த்தாண்டன் எனத் தெரிகிறது. இவனே பின்னர் மார்த்தாண்ட சிங்கையாரியன் என்னும் பெயரில் யாழ்ப்பாண அரசனானவன். ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்தில் தந்தையான வரோதய சிங்கையாரியன் யாழ்ப்பாணத்தின் அரசனாக இருந்தான். இந்த ஒப்பந்தமும், கோட்டகமைக் கல்வெட்டும் முன் குறித்த போரின் தொடர்ச்சியாகவே இடம்பெற்றிருக்க வேண்டும். எனின், கோட்டகமைக் கல்வெட்டில் குறிக்கப்படும் சிங்கையாரியன், வரோதய சிங்கையாரியனே எனலாம்.

    கோட்டகமைக் கல்வெட்டும் வேறு ஆய்வு முடிவுகளும்

    இக்கல்வெட்டில் "பொங்கொலிநீர் சிங்கை நகர்" என வரும் தொடரை, சிங்கை நகரும் நல்லூரும் ஒரே நகரம் அல்ல என்று காட்டுவதற்குச் சில ஆய்வாளர்கள் பயன்படுத்துகின்றனர். "பொங்கொலிநீர்" என்னும் சொல் அலை எறிந்து ஒலிக்கும் கடலைக் குறிக்கின்றது என்றும், எனவே சிங்கை நகர் கடற்கரையோரத்தில் இருந்திருக்கவேண்டும் என்றும் அவர்கள் கருதுகின்றனர். நல்லூர் கடலோரம் அமையாததால், நல்லூருக்கு முன்னர் சிங்கை நகர் என்னும் வேறொரு நகரம் யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது என்பது அவர்கள் கருத்து. எனினும் இதில் ஒருமித்த கருத்து இல்லை.
    முதலாம் சங்கிலிய மன்னன்

    முதலாம் சங்கிலிய மன்னன்

    முதலாம் சங்கிலிய மன்னன்  இந்த மன்னன் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தார்

    முதலாம் சங்கிலிய மன்னன்  

    சங்கிலி பண்டாரம் அல்லது முதலாம் சங்கிலி அல்லது ஏழாம் செகராசசேகரன் (இறப்பு: 1565) என்பவன் 1519 தொடக்கம் 1561 வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான்.

    போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவனை ஒரு கொடூரமான அரசனாகக் காட்டுகின்றன. இறுதிவரை பல வழிகளிலும் யாழ்ப்பாணத்துக்குள் புக முயன்ற போத்துக்கீசரைத் துணிந்து எதிர்த்து நின்றவன். இவனையும், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பின் சிறுவனான அரச வாரிசு ஒருவனுக்காகப் பகர ஆளுநராக (Regent) இருந்த சங்கிலி குமாரனையும் ஒன்றாக எண்ணிப் பலர் மயங்கினர். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையை எழுதிய மயில்வாகனப் புலவர், பெயர் ஒற்றுமையால், இவ்விருவருக்கும் இடையில் ஆட்சி செய்த அரசர்களைக் குறிப்பிடாது விட்டுவிட்டார். ஆனால், போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவர்கள் இருவரையும் தெளிவாக வேறுபடுத்துகின்றன.

    குடும்பம்

    முதலாம் சங்கிலி 1440 தொடக்கம் 1450 வரையும், பின்னர் 1467 தொடக்கம் 1478 வரையும் யாழ்ப்பாணத்தை ஆண்ட கனகசூரிய சிங்கையாரியனுக்குப்பின் யாழ்ப்பாணத்தை ஆண்ட அவனது மகனான பரராசசேகரனின் மகன் என யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. இதே நூலின்படி, பரராசசேகரனுக்கு இராசலட்சுமியம்மாள், வள்ளியம்மை என இரண்டு மனைவிகளும் மங்கத்தம்மாள் என ஒரு வைப்புப் பெண்ணும் இருந்தனர். இராசலட்சுமியம்மாளுக்கு சிங்கவாகு, பண்டாரம் என இரண்டு ஆண் மக்களும், வள்ளியம்மைக்கு பரநிருபசிங்கம் உட்பட நான்கு பிள்ளைகளும் பிறந்தனர். சங்கிலி மங்கத்தம்மாளுக்குப் பிறந்தவன்.

    எனினும் யாழ்ப்பாணத்தை நீண்டகாலம் ஆண்ட சங்கிலி வைப்பு பெண்ணின் மகன் என்பதைப் பல ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

    ரசனாதல்

    பரராசசேகரனின் பட்டத்தரசியின் மூத்தமகன் சடுதியாக இறந்தான். பின்னர் இளவரசுப் பட்டம் சூட்டிக்கொண்ட இரண்டாவது மகனும் வாளால் வெட்டிக் கொல்லப்பட்டான். இருவரையும் சங்கிலியே கொன்றான் என்றும், இரண்டாவது மனைவியின் மூத்த மகனான பரநிருபசிங்கத்தை ஏமாற்றி அரசுரிமையைச் சங்கிலி கைப்பற்றிக் கொண்டான் எனவும் வைபவமாலை கூறுகிறது.

    போத்துக்கீசருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஒல்லாந்தரின் சங்கிலியைப் பற்றிய குறிப்பு ஒன்றில் அவனைச் சியங்கேரி என்னும் பெயரால் குறித்துள்ளனர். இக்குறிப்பில் இவ்வரசன் 42 ஆண்டுகளுக்கு மேல் யாழ்ப்பாணத்தை ஆண்டதாகவும், பின்னர் போத்துக்கீசர் அவனது அரசாட்சியை அழித்துவிட்டு 97 ஆண்டுகள் ஆண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்தே சுவாமி ஞானப்பிரகாசர் சங்கிலி ஆட்சி 1519 ஆண்டிலிருந்து 1561 வரை இருந்ததாகக் கணித்துள்ளார்.

    சங்கிலியனும் போத்துக்கேயரும்

    சங்கிலியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலம், போத்துக்கேயர் இலங்கையில் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்த காலமாகும். இலங்கையின் அரசியலிலும் தலையிடத் தொடங்கியிருந்தனர். இவர்களுடன் வந்த கத்தோலிக்கக் குருமார்கள் சமயப் பிரசாரங்களிலும், மத மாற்றங்களிலும் ஈடுபட்டிருந்தனர். போத்துக்கீசர் இந்தியாவிலும், இலங்கையிலும் தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் படை பலத்தை மட்டுமன்றிக் கத்தோலிக்க சமயத்தையும், வணிகத்தையும் கூட ஆயுதங்களாகப் பயன்படுத்துவதை அறிந்திருந்த சங்கிலி, போத்துக்கீசரின் இத்தகைய எல்லா நடவடிக்கைகளையுமே கடுமையாக எதிர்த்து வந்தான். அவர்களின் இந்த நடவடிக்கைகளுக்குத் துணை போனவர்களையும் இரக்கம் பாராமல் தண்டித்தான். இதன் காரணமாகவே போத்துக்கீசர், முக்கியமாகப் போத்துக்கீச மத போதகர்கள் இவனை வெறுத்தனர். இதன் பின்னணியிலேயே சங்கிலியைப் பற்றிப் போத்துக்கீசர் எழுதிவைத்திருக்கும் குறிப்புக்களைப் புரிந்து கொள்ள வேண்டும். பிற நாட்டவரான போத்துக்கீசர் மிக மோசமாகச் சங்கிலி மன்னனைத் தூற்றி எழுதியதானது சங்கிலி நாட்டுப்பற்று மிக்கவனாகவும், அந்நியர் ஆதிக்கத்தை வெறுப்பவனாகவும் இருந்தான் என்பதையே காட்டுவதாகச் சில வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.

    இவன் மிகவும் தைரியமுள்ள, கடும்போக்கான மன்னன் என்பது அவர்களது கருத்து.

    சங்கிலி மன்னன் காலத்தின் முற்பகுதியிலும், அதற்கு முன்னரும் யாழ்ப்பாண அரசு கடலில் குறிப்பிடத்தக்க பலம் கொண்டதாக இருந்ததுடன், கடல் கடந்த வணிகத்தின் மூலமும் பெருமளவு வருமானம் பெற்று வந்தது. இப்பகுதியில் போத்துக்கீசரின் வணிக முயற்சிகள் யாழ்ப்பாண நாட்டின் நலனுக்குப் பாதகமானது என்பதை உணர்ந்திருந்த சங்கிலி, 1940 களில், போத்துக்கீச வணிகக் கப்பல்கள் முதன் முதலாக யாழ்ப்பாணத் துறைமுகங்களுக்கு வர முயன்றபோது தனது படைகளை அனுப்பிக் கப்பல்களையும் பொருட்களையும் பறிமுதல் செய்தான்.

    தான் போத்துக்கீசருக்கு எதிராகச் செயற்பட்டது மட்டுமன்றி, அவர்களுக்கு எதிராகச் செயற்பட்ட சிங்கள மன்னர்களுடனும் சங்கிலி சேர்ந்து செயற்பட்டான். போத்துக்கீசருக்கு எதிராகப் போராடிய தென்னிலங்கை சீதாவாக்கை இராச்சியத்தின் மன்னன் மாயாதுன்னை தென்னிந்தியாவிலிருந்து படைகளை வரவழைத்தபோது, அப்படைகள் யாழ்ப்பாண நாட்டினூடாகச் செல்ல சங்கிலியன் உதவினான்.

    அக்காலத்தில் கோட்டே அரசனான புவனேகபாகு போத்துக்கீசருடன் உறவு கொண்டு அவர்களுக்குத் தனது நாட்டில் பல வசதிகளையும் அளித்திருந்தான். அத்தோடு யாழ்ப்பாண அரசையும் தனதாக்கித் தந்தால் மேலும் பல சலுகைகளை அளிப்பதாகவும் உறுதி அளித்தான்.

    இதனால் கோட்டே அரசனின் உடன்பிறந்தானும், அவனுக்கு எதிரியுமாயிருந்த சீதாவாக்கை இராச்சியத்தின் அரசனான மாயாதுன்னையுடன் கூட்டுச் சேர்ந்து, சங்கிலி புவனேகபாகுவை எதிர்க்க முற்பட்டான். கண்டி அரசனான விக்கிரமபாகுவையும் தங்களோடு சேர்த்துக்கொண்டு 1545 ஆம் ஆண்டில் கோட்டே மீது இவர்கள் படையெடுத்தனர். ஆயினும் வெற்றி கிட்டவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தஞ்சாவூர் நாயக்க மன்னனிடம் இருந்து பெற்ற படை உதவியுடன் மாயாதுன்னையையும் சேர்த்துக்கொண்டு சங்கிலி மன்னன் கோட்டேயைத் தாக்கினான். தொடக்கத்தில் போர் நிலை யாழ்ப்பாண-சீதாவாக்கைக் கூட்டுப் படைகளுக்குச் சாதகமாக இருந்தது எனினும், இறுதி வெற்றி கிடைக்கவில்லை.

    1549ஆம் ஆண்டளவில் மாயாதுன்னை, கோட்டே அரசனுக்கு எதிராக போத்துக்கீசருடன் தொடர்பு வைத்துக்கொள்ள முற்பட்டான். போத்துக்கீசரும் கோட்டே அரசன் மீது ஐயுறவு கொண்டனர். இதை அறிந்த புவனேகபாகு, போத்துக்கீசருக்கு எதிராக இலங்கை அரசர்களை ஒன்றிணைக்க முற்பட்டான். அவனது வேண்டுகோளைப் பிற இலங்கை அரசர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனினும், சங்கிலியன் தான் இனிமேல் கோட்டேயைத் தாக்குவதில்லை எனப் புவனேகபாகுவுக்கு வாக்குக் கொடுத்தான். இவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து சங்கிலி மன்னனின் வெளியுறவுக் கொள்கை போத்துக்கீசரை எதிர்ப்பதையே மையமாகக் கொண்டிருந்ததை அறிய முடிகிறது.

    மன்னார்ப் படுகொலைகள்

    தாம் கைப்பற்ற எண்ணியிருக்கும் நாடுகளில் தமது மதத்தைப் புகுத்துவதன் மூலம் தமக்கு ஆதரவான மக்களை உள்நாட்டிலேயே உருவாக்கிக் கொள்ளும் உத்தியை போர்த்துகீசர் கொண்டிருந்தனர். தமது மத நிறுவனங்களைப் போர் நோக்கங்களுக்குப் பயன்படுத்தக்கூடியதாக வளர்த்து எடுத்தனர்; உள்நாட்டு அரசுகளைப் படைபலத்தின் மூலமாயினும் கட்டுப்படுத்தித் தமது செல்வாக்கை வளர்த்துக்கொள்வதில் போத்துக்கீசக் குருமார்கள் தீவிரம் காட்டினர்.

    இதை முன்னரே உணர்ந்து கொண்ட சங்கிலி மதமாற்ற முயற்சிகளுக்கு எதிராகவும் கடுமையாக நடந்து கொண்டான். யாழ்ப்பாண அரசைச் சேர்ந்த மன்னார்ப் பகுதியில் பெருமளவில் மதமாற்றம் நடைபெற்றதைக் கேள்வியுற்று, மன்னாரில் புனித சவேரியாரின் பாதிரியார்களால் கத்தோலிக்க மதத்துக்கு மாறியவர்களையெல்லாம் வெட்டிக் கொன்றான்.

    தமது மதமாற்ற முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கும் சங்கிலியைப் பழி வாங்கவேண்டும் என்பதில் போத்துக்கீசக் குருவான புனித சவேரியார் மிகவும் தீவிரமாக இருந்தார். கோவாவில் இருந்த போத்துக்கீச ஆளுநரைக் கண்டு தனது வேண்டுகோளை அவர் முன்வைத்தார். அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஆளுனர், அதை உடனடியாகச் செயல்படுத்த முடியாது என்றும் கூறிவிட்டார். இதனால் நேரடியாகவே லிசுப்பனில் இருந்த போத்துக்கலின் அரசனுக்குக் கடிதம் எழுதினார். தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் மீது படையெடுப்பதற்கான அனுமதி லிசுப்பனில் இருந்து கோவாவுக்கு அனுப்பப்பட்டது. எனினும் சவேரியாரின் விருப்பம் எளிதில் கைகூடிவிடவில்லை. தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுப்பதற்குச் சவேரியார் எடுத்துக்கொண்ட தீவிர முயற்சிகள் பற்றி குவைரோஸ் பாதிரியார் தனது நூலில் விபரமாகக் குறித்துள்ளார்.

    முதல் படையெடுப்பு முயற்சி

    1543 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கு எதிரான முதலாவது போர்த்துகீசப் படையெடுப்பு முயற்சி நடந்ததாகத் தெரிகிறது. மார்ட்டின் அல்போன்சோ தே சோசா என்னும் போத்துக்கீசப் படைத்தலைவனின் தலைமையில் வந்த கப்பல்கள் காற்றினால் திசைமாறி நெடுந்தீவை அடைந்தன. அவர்கள் அங்கே தங்கியிருந்தபோது, அதையறிந்த சங்கிலியால் ஏமாற்றப்பட்டதாகக் கருதப்படும் அவனது தமையனான பரநிருபசிங்கன், அங்கு சென்று சங்கிலியைப் பதவியிலிருந்து அகற்றித் தன்னை அரசனாக்கினால் அவர்களுடைய வணிக விருத்திக்கும், மத வளர்ச்சிக்கும் உதவுவதாக வாக்களித்து அவர்களது உதவியைக் கோரினான். அவ்வாறு செய்வதாக வாக்களித்து அவனிடம் இருந்து பெறுமதியான முத்துக்களைப் பெற்றுக்கொண்ட தளபதி, சங்கிலியுடனும் உடன்பாடு செய்துகொண்டு பெருந்தொகைப் பணம் பெற்றுக்கொண்டு திரும்பிவிட்டான்.

    உள்நாட்டுப் பிரச்சினைகள்

    தென்னிலங்கையில் அரசுரிமைப் போட்டிகள் காரணமாக எதிரெதிராகப் போரிட்டுக்கொண்டவர்கள் தமது நலனுக்காக போத்துக்கீசரின் உதவியை நாடினர். இந்த நிலைமையைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்ட போத்துக்கீசர், நாட்டிலே தமது செல்வாக்கைப் பலப்படுத்திக் கொண்டிருந்தனர். இந்நிகழ்வுகளால் தூண்டப் பெற்ற சிலர் யாழ்ப்பாண இராச்சியத்திலும் போத்துக்கீசரின் தலையீட்டைக் கொண்டுவர முயற்சி செய்தனர். முக்கியமாக, அவனது தமையனான பரநிருபசிங்கன் யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசுரிமையைத் தான் பெறுவதற்காகப் போத்துக்கீசரின் துணையை நாடினான். அத்துடன், மதம் மாறிக் கத்தோலிக்க மதத்தையும் தழுவிக்கொண்டான். எனினும், இவனுக்கு அரசுரிமையைப் பெற்றுக்கொடுக்கப் போத்துக்கீசரால் இயலவில்லை.

    1751 ஆம் ஆண்டில் திருகோணமலையை ஆண்டு வந்த வன்னியன் இறந்தான். அவனுடைய வாரிசான இளவரசன் எட்டு வயதே நிரம்பிய சிறுவனாக இருந்ததால், இன்னொரு வன்னியர் தலைவன் ஆட்சியை நடத்தலானான். திருகோணமலை வன்னிமை யாழ்ப்பாண அரசுக்குக் கட்டுப்பட்டது என்பதால் சங்கிலி இப்பிரச்சினையில் தலையிட்டான். ஆனால், வன்னியர் தலைவன் இளவரசனையும் கூட்டிக்கொண்டு இந்தியாவுக்குச் சென்றான். அங்கே ஏற்கனவே கத்தோலிக்கராக மாறிய பரதவர்களின் உதவியால் போத்துக்கீசருடன் தொடர்பு கொண்டு தானும் கத்தோலிக்கனாக மாறிப் போத்துக்கீசரின் உதவியைக் கோரினான். தொடர்ந்து 1000 பரதவர்களைக் கொண்ட படையுடன் திருகோணமலையில் இறங்கினான். ஆனால், சங்கிலி இந்த நடவடிக்கைகளை முறியடித்தான். இளவரசன் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பினான். சங்கிலியை யாழ்ப்பாண ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டுத் திருகோணமலை இளவரசனையே யாழ்ப்பாண இராச்சியத்துக்கு மன்னனாக்கவும் போத்துக்கீசர் எண்ணியிருந்ததாகத் தெரிகிறது.

    நல்லூர் வீழ்ச்சி

    1560 இல் கோவாவில் போர்த்துக்கேயப் பதிலாளுநனாக (Viceroy) இருந்த கொன்ஸ்டன்டீனோ த பிறகன்சா (Constantino de Braganca) என்பவன் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்து வந்தான். சிறப்பான போர் அனுபவம் கொண்டிருந்த போத்துக்கேயர் தலைநகரான நல்லூரை இலகுவாகக் கைப்பற்றினர். சங்கிலியன் தனது அரண்மனையை எரியூட்டிவிட்டு வன்னிப் பகுதிக்குப் பின்வாங்கினான். போத்துக்கேயப் படைகள் துரத்திச் சென்றும் அவனைப் பிடிக்கமுடியாமல் அங்கே முகாமிட்டிருந்தனர். போத்துக்கேயப் படைகள் அப்போது வன்னிப் பகுதியிலும், நல்லூரிலும், கடலில் நின்ற கப்பலிலுமாக மூன்று பகுதிகளாகப் பிரிந்திருந்தனர். அரசனைப் பிடிப்பதற்காக அவனைத் தொடர்ந்து வன்னி சென்ற படைகள் நோயாலும், பசியாலும் பெரிதும் வருந்தினர். நல்லூரும் போத்துக்கேயருக்குப் பாதுகாப்பானதாக இல்லை.

    சங்கிலியனின் தந்திரம்

    இந் நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சங்கிலியன் போர்த்துக்கேயப் பதிலாளுநனுக்குச் சமாதானத் தூது அனுப்பினான். சிக்கலான நிலைமையில் இருந்த ஆளுநன் சில நிபந்தனைகளுடன் அதற்கு உடன்பட்டான். போத்துக்கேயருக்குத் திறை செலுத்துவது உட்பட்ட இந்நிபந்தனைகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்வதற்காக, இளவரசன் ஒருவனையும், வேறொரு அதிகாரியையும் போத்துக்கேயர் பிணையாக வைத்திருப்பதற்கும் அரசன் இணங்கினான். சங்கிலி நல்லூருக்குத் திரும்பினான். போத்துக்கேயர், அரசன் தருவதாக உடன்பட்ட தொகையைப் பெற்றுக் கொள்வதற்காகக் காத்திருந்தனர். அதனைக் கொடாமல் போக்குக்காட்டிய சங்கிலி போத்துக்கேயரைத் தந்திரமாகத் துரத்திவிடுவதிலேயே கண்ணாக இருந்தான். ஒருநாள் அங்கேயிருந்த போத்துக்கேயருக்கு எதிராக ஒரே சமயத்தில் மக்கள் கிளர்ந்தனர். வெளியே சென்றிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தங்கியிருந்த இடங்கள் முற்றுகைக்கு உள்ளாயின. போத்துக்கேயர் பெரும் சிரமத்தோடு தப்பியோடினர். எனினும், பிணையாகக் கொடுத்திருந்த இளவரசனையும், அதிகாரியையும் மீட்கும் சங்கிலியின் முயற்சி வெற்றி பெறவில்லை. அவர்களைப் போத்துகேயர் கோவாவுக்குக் கொண்டு சென்றனர்.

    சங்கிலியின் முடிவு

    சங்கிலியனின் ஆட்சி எவ்வாறு முடிவுற்றது என்பதில் தெளிவில்லை. இவன் மக்களால் அகற்றப்பட்டதாகப் போத்துக்கேயப் பாதிரியாரான குவைறோஸ் குறிப்பிட்டுள்ளார். மக்கள் கலகம் செய்து சங்கிலியை அகற்றிவிட்டு அவனது மகனான புவிராச பண்டாரத்தை அரசனாக்கினர் என்றும், புவிராசன் ஆண்மையற்றவனாய் இருந்தமையால் சங்கிலியே ஆட்சியை நடத்தி வந்தான் எனவும் செ. இராசநாயகம் கூறுகிறார். இவரது கூற்றுப்படி சங்கிலி 1565 ஆம் ஆண்டு காலமானான்