Showing posts with label வினாக்கள். Show all posts
Showing posts with label வினாக்கள். Show all posts

Sunday, September 15, 2019

வினாக்கள்,  slasexam2019

வினாக்கள், slasexam2019

01. இலங்கையில் தோற்றம் பெற்ற முதலாவது அரசியல் கட்சி, ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?

02. இலங்கையின் தற்போதைய கட்டாயக் கல்வி வயதெல்லை.

03. இலங்கையில் தற்போது காணப்படும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை

04. சந்திரன் or நிலவு தொடர்பான ஆய்விற்கு ' சந்திராயன்' எனும் செயற்கைக் கோளை விண்ணுக்கு ஏவிய நாடு

05. இலங்கையின் முதலாவது ஒப்பங்கோடல் இடம்பெற்ற ஆண்டு

06. இலங்கையின் மிகப் பெரிய தானியக் களஞ்சியம் அமைந்துள்ள இடம்

07. இலங்கையின் முதலாவது ஒலிம்பிக் வெற்றி வீரர்

08. 2022 இல் ஆசிய விளையாட்டு இடம்பெறவுள்ள நாடு- நகரம்

09. 2018 ஆம் ஆண்டு இலங்கைத் தேயிலையை அதிகம் கொள்வனவு செய்த நாடு

10. உலகின் மகிழ்ச்சி மிக்க நாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு

11. 2016 ஒலிம்பிக் போட்டியில் அதிக தங்கப் பதக்கங்களை பெற்றுள்ள நாடு

12. 2016 பொதுநலவாய அமைப்பில் இருந்து வெளியேறிய நாடு

13. இலங்கையில் மிகக் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட மாவட்டம்

14. இலங்கையில் விளையாட்டுத் துறைக்காக வழங்கப்படும் உயரிய விருது

15. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இலங்கையர்

16. உலகில் அதி கூடிய பெறுமதியைக் கொண்ட உலோகம்

17. அமெரிக்காவின் காந்தி என அழைக்கப்படுபவர்

18. புகைபிடிக்காதவர் வாழும் நாடு

19. 2016 மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்

20. அமெரிக்காவின் மிகப் பெரிய மாநிலம்

21. இலங்கையில் குறைந்த கல்வி வலயங்களைக் கொண்ட மாகாணம்

22. குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி எந்த நாட்டு வீரர்

23. அமெரிக்க ஜனாதிபதியின் பதவிக்காலம்

24. 19 ஆம் சீர் திருத்தத்தின் பின்னர் இலங்கை ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலம்

25. இலங்கையின் இறுதி மன்னன்

26. இலங்கையின் இறுதி இராசதானி

27. கட்டுநாயக்க அதி வேக பாதை எந் நாட்டின் உதவியுடன் நிர்மானிக்கப்பட்டது.

28. உலக சுற்றுலா தினம்

29. மனித அபிவிருத்தி சுட்டியின் டிப்படையில் உயர்ந்த பெறுமானத்தைக் கொண்ட நாடு

30. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ' கச்சதீவு' ஒப்பத்தம் எத்தனையாம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது.

31. யுனஸ்கோ அமைப்பினால் " உலக மரபுரிமைகளை அதிகம் கொண்ட நாடு " என பிரகடனம் செய்யப்பட்ட நாடு

32. இலங்கையில் 2016 இல் உருவாக்கப்பட்ட " ரம்புட்டான் கிராமம்" எங்கு அமைந்துள்ளது.

33. உலகில் முதல் தோன்றிய இலக்கியம்

34. அதிக நாடுகளை எல்லையாக கொண்ட நாடு

35. நாணயங்கள் இல்லாத நாடு

Saturday, August 31, 2019

இலங்கை நிர்வாக சேவை வழி காட்டி 2019

இலங்கை நிர்வாக சேவை வழி காட்டி 2019


01. அரசாங்க தகவல் தினணக்களம்" எந்த அமைச்சின் கீழ் இயங்குகிறது?     அத்துடன் இந்த திணைக்களம் எத்தனையாம் ஆணடு இலங்கையில் நிறுவப்பட்டது?

    பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு. 1948

02.  இலங்கை அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களமானது தனது 100வது வருட நிறைவை எந்த ஆண்டில் கொண்டாடியது?
                  2004

03.  ரூபாய் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?
                      Srilanka,India

04.  அண்மையில் LMD சஞ்சிகையினால் "The 100 club" தரப்படுத்தலில் பாரிய சில்லறை விற்பனை நிறுவனமாக வர்த்தக துறையில் முன்னணி வகிப்பது    தொடர்பில் கௌரவப்படுத்தப்பட்ட நிறுவனம் எது?
                                Singer Sri Lanka PLC

05.  இலங்கையில் 1995ம் ஆண்டு 28.8% ஆக காணப்பட்ட வறுமை வீதமானது 2016ம் ஆண்டாகும்போது 4.1 வீதமாக குறைவடைந்துள்ளது. அதிகூடிய வறுமை வீதம் கூடிய மாகாணம் எது? ஆகக்குறைந்தளவு வறுமை வீதம் கொண்ட மாகாணம் எது?
   வறுமை கூடிய மாகாணம்-வடக்கு              வறுமை குறைந்தது-மேற்கு

06.  முதன்முதலில் குடியுரிமை பெற்ற ரோபோவின் பெயர் என்ன...?
      சோபியா சவுதி அரேபிய

07.  தனது தலைநகரை மாற்றவுள்ள நாடு எது?

       இந்தோனேசியா. போர்னியோ

08. "கிரிக்கெட்டில்" உலக அளவில் ஊழல்கள் நிதி மோசடிகள் நிகழும் நாடுகளில் முதன்மை இடத்தைக் கொண்ட நாடு எது?

           மேற்கிந்தியா

09.  தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது ?

       13

10. பிரான்ஸிய புரட்சியின் போது உடைக்கப்பட்ட சிறைச்சாலை எது?
             பஸ்டில் சிறைச்சாலை


Thursday, August 22, 2019

இலங்கை கல்வி நிர்வாக சேவை வழி காட்டி போட்டிப் பரீட்சை    வினாக்கள்  முக்கிய இணைப்புகள்2019

இலங்கை கல்வி நிர்வாக சேவை வழி காட்டி போட்டிப் பரீட்சை வினாக்கள் முக்கிய இணைப்புகள்2019



01. "இந்து சமுத்திரத்தின் நித்திலம் எனும் சிறப்புப் பெயரைக் தாங்கியுள்ள நாடு
    1 மாலைதீவுகள்        2. மொறிஷியஸ்       3. இலங்கை        4. சிங்கப்கபூர்

02. இலங்கையின் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இலங்கையில்
      வாழ்ந்தவர்களாகக் கருதப்பட்ட பூர்வீகக் குடிமக்கள்

    1. அரக்கரும் அசுரரும்                        2. இயக்கரும் நாகரும் 
    3. வேடரும் தோடரும்                       4. குறவரும் கின்னரரும்

03. திருகோணமலையின் பழைய பெயர்களுள் ஒன்று
      1. மாந்தோட்டம்                                  2. செரன்டிப்              
      3. ஜம்புகோளப் பட்டினம்                 4. கோகண்ணம்

04. இலங்கையருக்குச் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு
      1. 1931                  2. 1948                      3. 1972                     4. 1978

05. இலங்கைக் குடியரசு யாப்பின் 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் 
      அமைக்கப்பட்டவை
     1. பிரதேச சபைகள்                                      2. மாகாண சபைகள்
     3. மாநகர சபைகள்                                       4. கிராம எழுச்சிச் சபைகள்.

06. விஸ்வநாதன் ஆனந்த் எந்த விளையாட்டோடு சமந்தப்பட்டவர்?

07. மகாபாரதத்தில் அபிமன்யுவின் தாயாரின் பெயர் என்ன?

08. இந்தியாவின் தலைநகரமாக தில்லி நடைமுறைக்கு வந்த ஆண்டு?

 09. பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் யார்?

10.குறுந்தகவல் சேவையை கண்டுபிடித்தவர் யார்?

11. முதல் பெண் பாராளுமன்ற உறுப்பினர் யார்?

12. சமாதானத்துக்காக ஜானதிபதி விருது பெற்ற திரைப்படம்?

13. நோபல் பரிசு பெற்ற குடும்பம்?

14. சீனாவின் துயரம் என கூறப்படும் நதியின் பெயர்?

15. பொருளியலுக்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்?

16. இடி தாங்கியைக் கண்டுபிடித்ததவர் யார்?

17.ஒலிம்பிக்போட்டிகள் எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை இடம்பெறுகின்றது?

18. தேசிய கல்வியியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?

19. டெங்கு நோயை பரப்பும் நுளம்பின் பெயர்?

20.கிராமிய அபிவிருத்தி பாதை அபிவிருத்தி பொறுபான வேலைத்திட்டம்?

21.ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் எத்தனை?

22. பொதுநலவாய நாடுகளின் எண்ணிக்கை எத்தனை?
யோகாவின் தந்தை யார்?

23. 2015ம் ஆண்டு விண்வெளிக்கு 6 செயற்கைக்கோள்களை அனுப்பிய நாடு?

24. அரச தகவல் திணைக்களம், சிறுவர் நன்னடத்தை மற்றும் இலஞ்சல் ஊழல் தடுப்பு திணைக்களம் என்பனவற்றின் தொலைபேசி இலக்கங்கள்?

25.சிறுவர் உரிமைகள் தொடர்பான சட்டம் எது?

26. வள்ளுவரின் மனைவியின் பெயர்?

27.இரண்டு நன்பர்கள் எதிர் எதிர் திசைகளில் நடக்கின்றார்கள், ஆறு மைல்கள் சென்று பின் வலப்பக்கமாக 8 மைல்கள் நடக்கின்றார்கள் எனின் இருவருக்கும் ஆரம்ப இடத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளார்கள்? 

28. திலிப் குறிப்பிட்ட அளவு மாடுகளையும் பறவைகளையும் வைத்திருந்தான். அவனுடைய பண்ணைக்கு வருகை தந்த மாணவனால் 344 கால்களும் 172 கண்களும் கணக்கிடப்பட்டதாக அவனுடைய நன்பியான பானுவிடம் கூறி எத்தனை மாடுகள் மற்றும் பறவைகள் கணப்பட்டது என வினாவினான்? அவ்வாறாயின் உங்களினால் கண்டுபிடிக்கமுடியுமா? 

29. பிரதாப்பிடம் 14 சிகப்பு நிற காலுறைகளும் 14 நீல நிற காலுறைகளும் உண்டு. பிரதாப் இரண்டையும் ஒரே நிறத்தில் பெற குறைந்தது எத்தனை காலுறைகளை எடுக்க வேண்டும்?

30. நான்காவது முறையாகவும் ஜெர்மனி நரட் அதிபராக தெரிவு செய்யப்பட்டவரின் பெயர் என்ன?


31. அமெரிக்காவால் 25.09.2017 முதல் பயணத்தடை விதிக்கப்பட்ட நாடுகள் எவை?

32. அண்மையில் பெண்களுக்கு ஓட்டுனர் உரிமையளித்த நாடு எது?


33. தற்போதைய சார்க் அமைப்பின் செயலாளர் நாயகத்தின் பெயர் யாது?


34. இலங்கையின் பாராளுமன்றம் 14.10.2017ம் திகதியுடன் எத்தனையாம் ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடுகின்றது?


35. இலங்கையில் உருவாக்கப்பட்ட பாராளுமன்றம் எப்போது உருவாக்கப்பட்டது?


36. இலங்கையின் முதலாவது சபாநாயகர் யார்?

37. முதலாவது பாராளுமன்றம் எங்கு அமைந்திருந்தது?


38. தற்போதைய பாராளுமன்றம் எங்கு அமைந்திருந்தது?


39. பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் யார்?

40. ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன?

Sunday, August 18, 2019

சனத்தொகை வளர்ச்சியும் சவால்களும்.

சனத்தொகை வளர்ச்சியும் சவால்களும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் புகழ்பெற்ற பொருளாதாரவாதியான மால்துஸ் பற்றி அறிந்திருக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. ஆம் இவருடைய புகழ்பெற்ற மக்கட்தொகை கோட்பாடு எல்லாப் பாடப் புத்தகங்களிலும் இன்றும் போதிக்கப்பட்டு போற்றிப் புகழப்படுகிறது. 

 அவரது கோட்பாட்டின் சுருக்கம் இதுதான்…

 “தற்பொழுது ஏற்பட்டுவரும் மக்கட் தொகை பெருக்கத்தின் விளைவாக அனைவருக்கும் உணவு கிடைப்பது மட்டுப்பட்டு, மக்கட் தொகை பெருக்கம் கட்டுப்பாட்டுக்குள் வரும்” “உணவு உற்பத்தியின் வளர்ச்சியானது கூட்டல் தொடரிலும் மக்கட்தொகை பெருகுவது பெருக்கல் தொடரிலும் நடைபெறுவதால். ஒரு கட்டத்தில் மக்கட் தொகையானது உணவு கிடைப்பை தாண்டிச் செல்லும்” இதன் விளைவாக உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு பஞ்சம் பசி பட்டினி நோய் ஆகியவற்றால் பெருமளவு மரணம் ஏற்பட்டு மக்கட் தொகையானது கட்டுக்குள் வரும்.

 உலகில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக தேவைகளும் பெருகிவிட்டன. இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியேத் தொடர்ந்தால் வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்னும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் மழை இல்லை என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன.

 இவ்வாறான நிலையிலேயே உலக சனத்தொகை தினம் ஒவ்வொரு வருடமும் ஜூலை11  ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபை, இளைஞர்களுக்கான முதலீடு என்ற தொனிப்பொருளில் இம்முறை அனுஷ்டிக்கின்றது.

 21 ஆம் நூற்றாண்டில் உலகம் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளுள் முக்கியமான பிரச்சினைகளாக குடித்தொகை அதிகரிப்பு அமைய உள்ளதோடு, அதிகரிக்கும் சனத்தொகைக்கு அவசியமான உணவு, குடிநீர், உறைவிடம். மருத்துவவசதி, மற்றும் வேலை வாய்ப்புக்கள் பெற்றுக்கொடுத்தல் என்பனவும் அதனுடன் இணைந்து கொள்ளவுள்ளன. 

 சனத்தொகையின் வளர்ச்சி வேகம்

 இதனை உறுதி செய்வதாகMedindia – calculators World Population Clock  கணிப்புக்கள் அமைகின்றது. அதாவது சனத்தொகையின் வளர்ச்சி வேகமானது வருடத்திற்கு77,760,000  ஆகவும், மாதாந்த வளர்ச்சி வேகம்648,000 ஆகவும், நாளொன்றுக்கு2,116,000 ஆகவும், மணித்தியாலத்திற்கு 9,000 ஆகவும், நிமிடத்திற்கு 150  ஆக காணப்படுகின்ற நிலையில் சனத்தொகையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிதாக சிலர் சேர்த்துக்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

 பாரிய அழிவுகளை சந்திக்கும் 

 இந்நிலை தொடருமாயின் ஒவ்வொரு பதினொரு வருடத்திற்கு ஒரு தடவையும் உலகின் குடித்தொகையில் ஒரு பில்லியன் மக்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என எதிர்வு கூறப்படுகின்றது. இதனால் அவர்களது அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதோடு மட்டுமல்லாது இந்நிகழ்வினால் சுற்றுப்புறச் சூழலும் பாரிய அழிவுகளை சந்திக்கும் என்பது திண்ணமாகும். 

 இவற்றினை கருத்திற் கொண்டு குடித்தொகை தொடர்பான விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதோடு மகாநாடுகளும் ஒழுங்கமைப்பட்டிருக்கின்றன. அந்தவகையில் உலகின் முதலாவது சர்வதேச குடித்தொகை மாநாடு1974 ஆம் ஆண்டு புச்சாறெஸ்ட்டில் “உலகிக் துரித குடித்தொகை வளர்ச்சி” என்ற கருப்பொருளில் நடைப்பெற்றது. 

 சர்வதேச மாநாடுகள்

 1984 ஆம் ஆண்டில் இரண்டாவது சர்வதேச மாநாடு மெக்சிகோசிலும், மூன்றாவது மாநாடு1994 இல் கெய்ரோவில் குடித்தொகையும் அபிவிருத்தியும் என்ற கருப்பொருளில் நடைபெற்றது. நான்காவது மாநாடு1995 ஆம் ஆண்டில் பிஜிங்கில் நடைபெற்றது. 

 2000 ஆண்டில் மிலேனியம் உச்சி மாநாடு மிலேனியன் அபிவிருத்தி இலக்குகளும் எனும் தொனிப்பொருளில் அமைந்ததை காணலாம். இவ்வாறு சனத்தொகை தொடர்பான மகாநாடுகள் தொடர்ந்து கொண்டிருப்பதன் மூலம் சனத்தொகை வளர்ச்சி பற்றிய ஆய்வின் முக்கியத்தும் உணர்த்தப்படுவதோடு அப்பிரச்சினைக்கான தீர்வு இன்றும் முன்வைக்கப்படாதும் உள்ளமை கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.

 துண்டுப்பிரசுரம்

 சனத்தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் புவியில் வாழும் மனிதர்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பதாகும். கிரேக்க, உரோம காலத்தில் ஆராயப்படாத இத்துறையானது  17 ஆம் நூற்றாண்டில் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப ஏனைய துறைகளும் வளர்ச்சியடைகின்றன என்பது சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து முக்கியத்துவம் பெறலானது.

 குடித்தொகை கல்வியின் தந்தையாக கருதப்படுகின்ற ஜோன் கிரான்ட  (John Graunt)   தமது அனுபவங்களை கருத்திற் கொண்டு  (Natural and Political Observations made upon the bills of Motality ) என்ற துண்டுப்பிரசுரத்தின் வாயிலாக லண்டன் மாநகரின் இறப்புக்கள் பற்றிய விபரங்களை1622 ஆம் ஆண்டு வெளியிட்டார். 

 கறுப்பு மரணம்

 அன்று முதல் சனத்தொகை பற்றிய கவனம் முதன்மைப் பெறத்தொடங்கியது. 1400  ஆண்டில் நிகழ்ந்த கறுப்பு மரணத்தின் முடிவிலிருந்து உலக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 20 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த விரைவான மக்கள் தொகை வெடிப்பு காரணமாக புவியில் மக்களின் வாழ்க்கை பாதிப்படைவதைக் குறித்து ஆதங்கங்கள் எழுப்பப்பட்டுள்ளன. 

 கி.மு70,000 காலகட்டத்தில் ஏற்பட்ட சனத்தொகையின் அதிகரிப்பினால் பேரழிவுகள் உருவானதாக கூறுகின்ற அறிவியலாளர்கள் இதற்காக டோபா பேரழிவினை உதாரணமாகக் காட்டுகின்றனர். அம்மை இன்ஃப்ளுவன்ஸா போன்ற நோய்களும் ஆரம்பகால சனத்தொகையினை கட்டுப்படுத்தும் காரணிகளாக அமைந்தன.

 உலக மக்கள் தொகை ஒன்று மற்றும் இரண்டு பில்லியன் குறிகளைக் கடந்த சரியான நாள் மற்றும் மாதம் பற்றிய கணக்கீடு எதுவும் இல்லை. மூன்று மற்றும் நான்கு பில்லியனை எட்டிய நாட்கள் அதிகாரபூர்வமாக கொண்டாடப்படவில்லை. 

 ஆனால் அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் செயலகத்தின் பன்னாட்டுத் தரவுதளம் அவற்றை ஜூலை1959 மற்றும் ஏப்பிரல்1974 என்று குறிப்பிடுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பிக் கணிப்பீட்டின் படி சனத்தொகை5 பில்லியனை எட்டிய நாளாக(11 ஜூலை1987) இனையும், மற்றும்6 பில்லியனை எட்டிய நாளாக(12 அக்டோபர்1999) இணையும் வரையறுத்துக் கொண்டாடியது. 

 அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் செயலகத்தின் அகில உலக திட்டப்பிரிவு 1999 ஏப்ரல் 21 அன்று (அதிகாரபூர்வ ஐக்கிய நாடுகள் அமைப்பின் நாடுகள் அமைப்பின் நாளுக்குப் பலமாதங்கள் முன்னதாகவே) உலகம் ஆறு பில்லியனை அடைந்ததாகக் கணக்கிட்டது. அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள் தொகை கணக்கெடுப்புச் செயலகம் ஜூலை2012 ஆம் ஆண்டை7 பில்லியனை எட்டும் நாளாக குறிப்பிட்டது.

 2024 ஆம் வருடத்தில்…

 இருப்பினும் சனத்தொகையின் ஒவ்வொரு மைல் கற்களும் கடக்கப்பட்ட விதம் இவ்வாறு காட்டப்படுகின்றது. 1 பில்லியன் 1804,2 பில்லியன் 1927,3 பில்லியன்1960, 4 பில்லியன்1974,5 பில்லியன்1987,United Nations  கணிப்பீட்டின் படி சனத்தொகையானது 7 பில்லியன்களாக மாறிய வருடமாக ஒக்டோபர்12. 1999 கொண்டாடப்பட்டது. சனத்தொகையானது 7 பில்லியன்களாக மாறிய வருடமாக2011  ஆம் ஆண்டு குறிப்பிட்டுள்ளது. இந்நிகழ்வானது கடந்த வருடம் ஒக்டோபர்31, 2011 நடைப்பெற்றது. United Nations கணிப்பீட்டின் படி சனத்தொகையானது 8 பில்லியன்களாக மாறக்கூடிய வருடமாக2024 ஆம் ஆண்டினை குறிப்பிட்டுள்ளது.

 விழிப்புணர்வை வழங்கும் நாள்

 இவ்வாறான சனத்தொகை வளர்ச்சியினால் ஏற்படுகின்ற மற்றும் ஏற்படவுள்ள பாதிப்புக்களை இனங்கண்ட உலக நிறுவனங்கள் அவற்றினை குறைப்பதற்கான நடவடிக்கைகள் பற்றியும் கவனம் செலுத்தி வருகின்றன. இதன் முக்கிய நிகழ்வாக அமைவதே உலக மக்கள் தொகை நாள் ஆகும்.  ஆண்டுதோறும் ஜூலை மாதம்11 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை வழங்குவதாக இந்நாள் அமைந்துள்ளது. 

 உலகின் குடித்தொகையானது கி.பி1600 ஆம் ஆண்டுக்காலப்பகுதிகளில் 400 மில்லியன்களாக இருந்தது. இத்தொகையானது1900 ஆம் ஆண்டளவில்1610 மில்லியன்களாக அதிகரித்ததோடு, 1950 இல் 2.5 பில்லியன்களாக காணப்பட்டதோடு சனத்தொகையானது 2025 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் 8.0 பில்லியன்களாக அதிகரிக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அண்மைக் காலப்பகுதிகளில் ஏற்பட்ட உற்பத்தி மற்றும் சுகாதார விருத்தியின் காரணமாக சனத்தொகை அதிகரித்த போக்கினை காட்டி வருகின்றது. எதிர்வுக்கூறப்படுகின்ற முறையினையே வரைபு காட்டுகிறது.

 ஓராண்டில் உலகின் குடித்தொகையானது 5.5 கோடியாக அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து சனத்தொகை அதிகரிப்பு எனும் பதமானது சனத்தொகை வெடிப்பு என மாற்றமடையத் தொடங்கியது. இவ்வாறாக சனத்தொகையில் ஏற்பட்டு வருகின்ற மாற்றமானது புவியில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும் என்பதனை அறிவிக்கும் முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் இத்தினம் உலக மக்கள் தொகை தினமாக1987 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு (World Population Day, recognized by the UN )   1989 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டும் வருகின்றது. மக்கள் தொகை பெருக்கத்தின் தீமைகளையும் சிறுகுடும்ப நெறியின் நன்மைகளையும் எடுத்துரைப்பது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

 பிரதேச வாரியாக மக்கள் தொகையின் வளர்ச்சியினை கீழே உள்ள அட்டவணையும், வரைப்படமும் காட்டி நிற்கின்றது. காட்டி நிற்கின்றது. வரலாற்று மற்றும் வரும் காலங்களுக்கான உத்தேச மக்கள் தொகை எண்ணிக்கையை இவை மில்லியன்களில் காட்டுகிறன. வரலாற்றில் மக்கள் தொகை எண்ணிக்கையின் கிடைக்குந்தகைமை பிரதேசங்களுக்கு ஏற்ப மாறுபட்டமைகின்றது. பல்வேறு கண்டங்களில் மக்கள் தொகை பரிணாம வளர்ச்சி நிலைக்குத்து அச்சு மடக்கையாகவே காணப்படுகின்றது. அது மட்டுமல்லாது மக்கள் தொகையின் நிலையும் அவ்வாறானதே. 20 ஆம் நூற்றாண்டில் மருத்துவ முன்னேற்றத்தாலும் மற்றும் பசுமைப்புரட்சியின் காரணமாகவும் விவசாயத்தின் பெருக்கத்தாலும் பல நாடுகளில் இறப்பு விகிதம் குறைந்ததால் மனித வரலாற்றிலேயே மிக அதிகமான மக்கள் தொகை பெருக்கத்தினை உலகம் பார்த்தது.    

 1989 ஆம் ஆண்டில் ஓராண்டுக்கான88 மில்லியன் மக்கள் தொகை அதிகரிப்பிலிருந்து குறைந்து 2000 ஆம் ஆண்டில் ஏறத்தாழ75 மில்லியன்களாக உலக மக்கள் தொகை அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டிருந்தது. 2000 ஆம் ஆண்டில் பூமியின் சனத்தொகையானது கடந்த300 வருடங்களுக்கு முன்னால் இருந்த மக்களை விட10 மடங்கு அதிகமானவர்கள் உள்ளனர் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 பெண்களின் கருவளம் 

 உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கான பிரதான காரணம் பிறப்பு வீதம். இறப்பு வீதம் என்பனவாகும். பெண்களின் கருவளம் பிறப்பு வீதத்தினை நிர்ணக்கின்றது. இனப்பெருக்க திறன் கொண்ட பெண்கள் பெறும் உயிருள்ள குழந்தைகளின் எண்ணிக்கை கருவளம் எனப்படும். ஓராண்டில் ஆயிரம் மக்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை பிறப்பு வீதம் எனப்படும். பிறப்பு வீதத்தினை நிர்ணயிக்கும் காரணிகளாக வயது,மதம்,கல்வி, பொருளாதாரம் என்பன அமைகின்றன.

 இறப்பு வீதம் 

 குறித்ததொரு ஆண்டில் ஒரு நாட்டில் வாழ்கின்ற மக்களில் ஆயிரம் பேருக்கு மரணம் அடைகின்றோரின் எண்ணிக்கை இறப்பு வீதம் எனப்படும்.  நாடுகளின் இறப்பு வீதம் எனும் போது இறந்தோரின் மொத்த எண்ணிக்கையினை ஆயிரத்தினால் பெருக்கி நாட்டின் மொத்த சனத்தொகையால் வகுப்பதன் மூலம் பெறப்படுகின்றது. பொதுவாக இறப்பு வீதத்தினை விட பிறப்பு வீதம் அதிகமாகக் காணப்படுவதே குடித்தொகை பெருக்கத்திற்கு காரணமாகின்றது. நவீன காலத்தில் மருத்துவத்துறையின் முன்னேற்றமே இதற்கு காரணமாக அமைகின்றது.

 எதிர்மறையான வளர்ச்சி

 உலகளவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் சீரான அளவினைக் காட்டினாலும் இலத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் துணை சகார ஆபிரிக்கா பகுதிகளில் இதன் வளர்ச்சி உயர் மட்டத்திலேயே காணப்படுகிறது. சில நாடுகளில் எதிர்மறையான வளர்ச்சிகளும் காணப்படுவதை அவதானிக்கலாம். அவ்வாறான நாடுகளில் காலப்போக்கில் குடித்தொகை எதிர்மறையான மக்கள் பெருக்கம் ஆபத்தினை எதிர்நோக்கும் அபாயத்தில் உள்ளன. உதாரணமாக கிழக்கு ஐரோப்பா. யப்பான்,  மேற்கு ஐரோப்பாவின் சில நாடுகள என்பவற்றைக்கூறலாம். 

 2006  ஆண்டில் மக்கள் இனப்புள்ளி நிலைமாற்றங்களின் காரணமாக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதை ஐக்கிய நாடுகள் சுட்டிக்காட்டியது. 

 உலகின் சனத்தொகை வளர்ச்சி வீதமானது வருடத்திற்கு1.14 சதவீதம் என கணிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும்80 மில்லின்களாக சனத்தொகையில் அதிகரிப்பு ஏற்படுகிறது. 1960 ஆம் ஆண்டுகளில் சனத்தொகை வளர்ச்சி வீதமானது2 வீதத்தினை தாண்டியதோடு, 1963 ஆம் ஆண்டில் இவ்வளவு2.19 சதவீதமாக அதிகரிப்பினை காட்டியது. எவ்வாறாக இருப்பினும் இவ்வளர்ச்சி சதவீதமானது எதிர்வரும் காலங்களில் ஒரு சரிவினை நோக்கிச்செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதாவது 2020 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் 1 விதமாகவும் 2050 ஆம் ஆண்டுகளில்0.5 வீதமாகவும் குறைவடையலாம் என கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. 

 ஏறக்குறைய 3.8 பில்லியன் மக்களுடன் ஆசியா காணப்படுவதோடு, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து உலக மக்கள் தொகையில் பெரும் பங்கிற்கு வகைகுறித்து நிற்கின்றன. உலக மக்கள் தொகையில்12 சதவீதம் ஆன1 பில்லியன் மக்களுடன் ஆபிரிக்கா தொடர்கிறது. ஐரோப்பாவின்731 மில்லியன் மக்கள் எண்ணிக்கை உலக மக்கள் தொகையில்11 சதவீதம் ஆகும். வட அமெரிக்கா514 மில்லியனுக்கும், தென்னமெரிக்கா 371 மில்லியனுக்கும் அவுஸ்திரேலியாக 21 மில்லியனுக்கும் இருப்பிடமாக உள்ளது.

 இலங்கையில் சனத்தொகை

 இலங்கையின் தற்போதைய சனத்தொகை இரண்டு கோடி இரண்டு லட்சத்து71 ஆயிரத்து464 பேர் என்று கடந்த வருடம்(2013.12.31) மேற்கொள்ளப்பட்ட குடிசன மற்றும் குடிமனை மதிப்பீடுகளின் போது தெரியவந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

 இந்த எண்ணிக்கையில் 77.3 சத வீதம் கிராமப்புறங்களிலும் 18.3 வீதம் நகரப்புறங்களையும் உள்ளடக்கியுள்ளது.அத்துடன்4.4 சதவீத மக்கள் பொருந்தோட்டங்களில் வசிக்கின்றனர். இறுதியாக1981 ஆம் ஆண்டு சனத்தொகை மதிப்பிடு மேற்கொள்ளப்பட்டதிலிருந்து இன்று வரை36% சனத்தொகை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. அதிகரித்தத் தொகையானது54 இலட்சத்து24 ஆயிரத்து714 ஆகும். மக்கள் செறிவுக்கு இணங்க ஒரு வர்க்க கிலோமீற்றரில் வாழும் சனத்தொகையின் எண்ணிக்கை323 என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

 இதன்படி கொழும்பிலேயே அதிகளவாக ஒரு வர்க்க கிலோமீற்றரில் 3417 பேர் வசிக்கின்றனர். மிகக் குறைந்த சனத்தொகை செறிவு முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவுகின்றது. அங்கு ஒரு வர்க்க கிலோமீற்றரில் 38 பேர் மாத்திரமே வாழ்கின்றனர். ஆண் மற்றும் பெண் என்ற அடிப்படையில் சனத்தொகை மதிப்பிடலின் போது100 பெண்களுக்க94 ஆண்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர வயது அடிப்படையில் கணக்கிடும் போது18 வயதுக்கு குறைந்த சிறார்களை கவனத்தில் கொள்ளும் போது102 பெண்களுக்கு100 ஆண் பிள்ளைகள் என்று தெரியவந்துள்ளது.

 உலகின் சனத்தொகை7 பில்லியனை எட்டிவிடும் என்பதால் இயற்கை வளங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அமெரிக்க அரசாங்கம் எதிர்வு கூறியுள்ளது. அமெரிக்காவானது உலகில் மூன்றாவது சனத்தொகை அதிகமான நாடாக காணப்படுவதோடு ஏனைய இடங்களை இந்தியாவும்,சீனாவும் பெற்றிருப்பதைக் காணலாம். 

 இந்தியாவுக்கு அபாயம்

 இலங்கை 53 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் சனத்தொகை அதிகரிப்புக்கு முன்னேற்றம் கண்டிருக்கும் மருத்துவ மற்றும் போசாக்கு போன்றவற்றில் இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஏற்பட்ட அபிவிருத்தி காரணமாக அமைந்தன என அமெரிக்க அறிவியலாளரான ஹஊப் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாது கலாசார மாற்றங்களையும், பெண்கள் வேலைக்குச் செல்வதையும், பாடசாலைக்குச் செல்வதையும் காரணம் காட்டினார். இதனடிப்படையில் எதிர்காலத்தில் அதிக சனத்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.

 பூமியில் எத்தனை பேர் வாழ முடியும் என்பது பற்றிய கணிப்பீடுகள் இதுவரை கணிக்கப்படவில்லை என வொஷிங்டனில் செயற்படும் பூருக்கிங்ஸ் நிறுவனத்தின் நிபுணர் வில்லியம் ப்ஃரே தெரிவித்துள்ளார். பூமியில் காணப்படும் வளங்களை மக்கள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதனை பொறுத்தே வாழக்கூடிய மக்கள் தொகை தீர்மானிக்கப்படும் என்பதாக அவர் தெரிவித்தருந்தார். ஆபிரிக்க,ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பாலான பெண்கள் சராசரியாக6 ற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்றனா எனவும் அவரது ஆய்வுகள் சுட்டி நிற்கின்றன. 

 முதியோர் தொகை அதிகரிப்பு

 சனத்தொகை அதிகரிப்பானது இலங்கையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் தெரிவித்துள்ளது. சனத்தொகை அதிகரிப்பதனால் வேலையின்மை, சுகாதாரப்பிரச்சினைகள் எதிர்கொள்ள நேரிடுமென ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் சனத்தொகையில் முதியோர் தொகை அதிகரிப்பும் முக்கிய பிரச்சினையாக அமைய உள்ளது. இலங்கையில் சனத்தொகையில்10 வீதத்தினர்60 வயதிலும் கூடியவர்களாக உள்ளனர். 2020 ஆம் ஆண்டில் இத்தொகை20 வீதமாக அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதே வேளை ஆண்களை விட பெண்களின் தொகை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
 குடும்பக் கட்டுப்பாடு

 கட்டிளமைப் பருவத்தினரும் இளைஞர்களும் மக்கள் தொகையில்26 சதவீதமாக உள்ளனர். இலங்கையில்15-24 வயதிற்கிடையில் உள்ளோர்5.6 மில்லியன்களாகும் என கூறும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் கூறியுள்ளது. எனவே இவர்களுக்கு அறிவை ஊட்டி குடும்பக் கட்டுப்பாடு பற்றிய தெளிவை ஏற்படுத்தல் அவசியமாகின்றது. ஐக்கிய நாடுகள் சார்ந்த அமைப்புக்கள் சனத்தொகை அதிகரிப்பைத் தடுப்பதற்காக பல விழிப்புணர்வுகள் கருத்தரங்குகள் திட்டமிட்ட குடும்ப அமைப்புகள், கருத்தடைச்சாதன உபயோகிப்பின் அவசியம், குழந்தைகள் சுகாதாரம் போன்ற விடயங்களில் கவனத்தினை செலுத்தினாலும் சனத்தொகை அதிகரிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

 உலக சனத்தொகையில் அரைவாசி மக்கள் இன்று25 வயதில் இருப்பதனால் குறுகிய காலத்தில் சனத்தொகையை கட்டுப்படுத்தவது சாத்தியமற்றதாகும். உலகில்925 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். வருடத்திற்கு25 மில்லியன் குழந்தைகள் பட்டினியால் இறக்கின்றனர். போசாக்கின்மையினால் 170 மில்லியன் குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக காணப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் சனத்தொகை அதிகரிக்கின்ற போது பட்டினி இறப்புக்களும் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பிறப்பும் காணப்படும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே திட்டமிட்ட முறையில் குழந்தைகளைப் பெற்று அவர்களை ஆரோக்கியத்துடன் வளர்த்தெடுக்க இத்தினத்தில் திடசங்கட்பம் கொள்வது அவசியமாகும்.

 ஆண்களின் வயதெல்லையும் பெண்களின் வயதெல்லையும்

 இலங்கையின் இயற்கை அதிகரிப்பு வீதம்1.1 ஆகவும் பிறப்பு வீம்1000 பேருக்கு17.9வீதமாகவும். இறப்பு விதம்1000 பேருக்கு6.6 விதமாகவும் காணப்படுகிறது. இலங்கையின்2001 ஆம் ஆண்டு மதிப்பிட்டின் படி18,797,257 ஆகவும்,2007 ஆம் ஆண்டில்20,010,000 ஆகவும் காணப்பட்ட தொகையானது2009 ஆம் ஆண்டில்   21,128,772 ஆகவும் இன்று 2.271.464 என அதிகரித்துமுள்ளது. ஆண்களின் சராசரி வயதெல்லை71 ஆக காணப்பட பெண்களின் வயதெல்லை78 என கூறப்பட்டுள்ளது. 

 இலங்கையின் சராசரி வளர்ச்சி வீதம்(1995. 2000) 1.1 இலிருந்து (2045) 0.45 குறையுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. கருவள வீதத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன். இதற்கு காரணம் பெண்கள் கல்வியில் ஈடுபடுதல், பெண்கள் தொழில்வாய்ப்புப் பெருதல், திருமண வயதில் ஏற்பட்ட மாற்றம், குடும்பக்கட்டுப்பாடு விழிப்புணர்வு என்பனவாகும்.

 பூமிக்கு நாமே பாரமாகிவிட்டோம்

 பூமியில் உள்ள வளங்கள்200 கோடி மக்களுக்கு மட்டுமே போதுமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகப்படியான மக்கள் தொகையால் சமூக, பொருளாதார, சுற்றுப்புறச்சூழல் பிர்சசினைகள் அதிகரிக்கின்றன. ஒவ்வொரு நாளும் பூமியின் வளங்களை புதிதாக2 இலட்சம் பேரோடு பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. நாம் வாழும் பூமிக்கு நாமே பாரமாகிவிட்டோம் என்ற உணர்வு அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

  சனத்தொகையானது பூமியிலுள்ள பயன்பாட்டிற்குரிய வளத்தை விட அதிகரிப்பதனால் குடிநீர் மற்றும் உணவு வளப்பிரச்சினைகள் விரைந்து அதிகரிக்கின்ற நிலை தோன்றியுள்ளது. இதனை ஈடுசெய்யவதற்கு நீர் முகாமைத்துவம் மற்றும் மரபணு மாற்றங்கள் பயன்படுத்தப்படவேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. 

 சனத்தொகை அதிகரிப்பானது பூமியின் கொள்ளளவை விட விஞ்சிவிட்டதனால் அதனை கட்டுப்படுத்தவேண்டிய அவசியம் காணப்படுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். மக்கள் தொகை பெருக்கமானது அபிவிருத்தியடைந்த நாடுகளை விட அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளிலேயே தாக்கத்தினை ஏற்படுத்தும் என கருத்து வெளியிடப்பட்டுள்ளது. அதாவது உலக சனத்தொகையில்80 விதத்தினை கொண்டுள்ள இவர்கள்20 விதமான வளத்திற்கே உரித்துடையவர்களாக காணப்படுகின்றனர். இதற்கு மாறான நிலையே அபிவிருத்தியடைந்த நாடுகளில் காணப்படுகின்றது.

 பட்டினிச்சாவு ஏற்படும்

 ஜூன் 2009 ஆம் ஆண்டு கூட்டப்பட்ட ஜி8 மாநாட்டில் உரையாற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ஜொசெரின் கூற்றிற்கு ஏற்ப உலகில்  6 பேரில் ஒருவர் பசியின் கொடுமைக்கு உள்ளாகின்றனர். பலர் போசாக்கின்னையினால் பாதிக்கப்படுகின்றனர் ஆபரிக்க நாடுகளில் இந்நிலை அதிகமானதாகும்.  இந்நிலை இதற்கு முன்னர் காணப்படவில்லை என கூறும் இவர், இந்த நிலை நீடித்தால் பட்டினிச்சாவு ஏற்படுவதோடு மனிதாபிமானத்தின் அவலத்திற்கு பூமி வற்துவிடும் என்கிறார். பெண்ணொருவருக்கு 2.5 பிள்ளைகள் என காணப்படும் நிலை தொடருமாயின்2050 ஆம் ஆண்டில்21 வீதத்தில் பிறப்பு வீதம் விழ்ச்சியடையும் எனவும் கூறுகின்னறார்.

 வறுமை. வேலையின்மை அடிப்படை சுகாதார வசதியில்லை. சுற்றுப்புறச்சூழல் கேடு, தண்ணீர்ப் பஞ்சம். போன்றவற்றிலிருந்து வன்முறை,கொலை,கொள்ளை வலையிலான அனைத்தும் பெருக்கமடையும் அபாயம் இருப்பதாக கூறபபடுகின்றது.மக்கள் தொகை பெருக்கத்தினால் வனவளம் அருகி மண் அரிப்பு பெருகி சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படும். கட்டிடவாக்கத்தன் விருத்தியினால் பயிர்செய்கைக்கான நிலம் குறைவடைந்து வருகிறது கிராம மக்கள் நகரங்களைநோக்கி இடம்பெயர்கின்றனர். எனவே, அங்குள்ள சூழல் பாதிக்கப்படுகின்றது அவ்விடத்தில் சுற்றுப்புறச்சூழல் சீர்கெடுகிறது. குடிநீர்ப்பற்றாக்குறை, மின்சாரப் பற்றாக்குறை, போக்குவரத்து நெரிசல், மருத்துவனைகளில் கூட்டம், பள்ளிக்கூடங்களில் இடமின்மை, போன்ற பல்வேறு பிரச்சினைகளால் நகரங்கள் நரகங்களாகும் அபாயத்தினை உலகம் எதிர்நோக்கியுள்ளது.

 சோறிட வேண்டும்

 மக்கள் தொகைப் பெருக்கம் குறித்த இரு வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. அதாவது பிறக்கும் குழந்தைகள் வயிரோடு மட்டும் பிறக்கவில்லை உழைப்பதற்கு இரு கரங்களோடு பிறக்கிறது. இது சமவுடமைவாதிகளின் கருத்தாகும். சமவுடமை வாதிகள் சனத்தொகையினை வளமாகக் கருதுகின்றனர். ஒரு சோடிக்கரங்கள் பல சோடி வயிற்றுக்கு காலமெல்லாம் சோறிட வேண்டும் என்பதனால் ஒவ்வொரு குழந்தைகளையும் முதலாளிததுவம் சுமையாகக் கருதுகின்றது.

 அறியப்பட்ட வளங்களை கணக்கில் கொண்டு உலக மக்கள் தொகை மிகையாக கருதப்படுகிறது. நானைய தினம் மனிதனின் அறிவியல் தொழிநுட்ப வளர்ச்சியால் இயற்கையின் இரகசியங்கள் முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட்டு புதுப:புது வளங்கள் கண்டறியப்படுமானால் இருக்கும் இந்த மக்கள் தொகை குறைவானதாக கருதப்படும் நிலை தோன்றலாம். 

 பேராபத்தினை ஏற்படுத்தக்கூடும்

 மக்கள் தொகை அதிகரிப்பானது கேடானதாக மாறும் நிலை காணப்படுவதோடு குறைவும் பேராபத்தினை ஏற்படுத்தக்கூடும். அதாவது எதிர்க்காலத்தில் உழைக்கும் வர்க்கத்தினரின் எண்ணிக்கையினை குறைத்துவிட்டு தங்கிவாழ்வோரின் அளவினை அதிகரிக்குமாயின் உற்பத்தி முடக்கத்திற்கும் வழிவகுக்கலாம். எவ்வாறாக இருப்பினும் எதிர்காலத்தின் ஆபத்தினை குறைப்பதற்கான நடவடிக்கைகள் அரசும் தனியாரும் எடுக்கவேண்டிய கட்டாயத்தினை சனத்தொகை அதிகரிப்பானது ஏற்படுத்தியிருப்பதை உலக மக்கள் தொகை தினங்கள் உணர்த்தி நிற்பதைக் காணலாம்.
இலங்கை கல்வி நிர்வாக சேவை சில வினாக்கள்

இலங்கை கல்வி நிர்வாக சேவை சில வினாக்கள்


01.பொது சிவில் சட்டம் என்றால் என்ன?

02.மிசா சட்டம் என்றால் என்ன?

03 தகவல் அறியும் உரிமை சட்டம் என்றால் என்ன?.

04 டெஸ்மா சட்டம் என்றால் என்ன?

05 குண்டர் சட்டம் என்றால் என்ன?

06 தடா சட்டம் என்றால் என்ன?

07 சந்திர கிரகணம் என்றால் என்ன?

08 பங்கு சந்தை என்றால் என்ன?

09 ஜனநாயகம் என்றால் என்ன?

10 ஜனநாயக ஆட்சி என்றால் என்ன?

11 ராணுவ ஆட்சி என்றால் என்ன?

12 குடியரசு ஆட்சி என்றால் என்ன?
13. தகவல் அறியும் சட்டத்தின் நன்மைகள்?
14 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என்றால் என்ன?

15 பொது சிவில் சட்டம் என்றால் என்ன?
16இலங்கை விவாகரத்து சட்டம் என்றால் என்ன?
17இலங்கை அரசியலமைப்பு சட்டம் என்றால் என்ன?.
18இலங்கை குற்றவியல் சட்டம் என்றால் என்ன?
19 இலங்கை திருமண சட்டம் என்றால் என்ன?
20 இலங்கை காணி சட்டம் என்றால் என்ன?
21 இலங்கை போக்குவரத்து சட்டம் என்றால் என்ன?
22 கலப்பு பொருளாதாரம் என்றால் என்ன?
23 பொருளாதார முன்னேற்றம் என்றால் என்ன?
24 பொருளாதார வளர்ச்சி என்றால் என்ன?


மேல் எமது பக்கத்தில் பார்க்கவும்...**************



https://srilankahistory2019.blogspot.com/

Saturday, August 17, 2019

 பொது அறிவு வினாக்கள்

பொது அறிவு வினாக்கள்


1)இந்தியாவின் எந்த மாநிலத்தில் என்ரான் மின்திட்டம் அமைக்கப்பட்டது?

2)நான்கு அறைகளுடனான வயிறு உடைய விலங்கு?

3)1994இல் வியாழன் என்ற கோலுடன் மோதிய மிகப்பெரிய வால் வெள்ளி?

4)இலங்கைக்கு முதன் முதலில் அனைத்துலக போட்டியில் களப்போட்டி ஒன்றில் தங்கப்பதக்கத்தை பெற்று கொடுத்தவர்?

5)வாசனைப்பொருட்களின் அராணி என அழைக்கப்படுவது?

6)போலியோ சொட்டு மருந்தை கண்டு பிடித்தவர்?

7)சுதந்திரத்திற்கான நீண்ட பயணம் என்ற நூலை எழுதியவர்?

8)மூன்று தலைநகரங்களை கொண்ட நாடு?

9)சார்க் வலயத்தில் மிக வறிய நாடு?

10)அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கபௌபட்ட கத்தோலிக்க ஜனாதிபதி யார்?

11).மஞ்சளாறு என அழைக்கப்படும் ஆறு எது?

12)புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்க துவங்கிய ஆண்டு?

13)முதன் முதலாக தமிழை ஆட்சி மொழியாக வெளியிட்ட நாடு?

14)ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் நடாத்திய ஆய்வில் உலகளாவிய ஆயுத இறக்குமதியில் 2014-2018 வரை முதலிடத்தில்உள்ள நாடு?

15)அன்மையில் ரஷ்யாவுடனான தனது ஒப்பந்தத்தை நீக்கி கொள்வதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.இவ்வொப்பந்தத்தின் பெயர் என்ன?

16)வேள்ட் எக்ஸ்போ கண்காட்சி 2020 இல் எங்கு நடைபெறவுள்ளது?

17)அன்மையில் இடம்பெற்ற உலக கிண்ண போட்டியில் அதிக விக்கட்டுகளை கைப்பற்றியவர் யார்?

18)உலக வங்கியில் இருந்து அதிக கடன் பெறும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு

19)அன்மையில் டெல்லியில் எத்தனை யுனிட்டுக்கு குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மின்கட்டணம் இல்லை என புதுடில்லியின் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் (1/08/2019)இல்அறிவித்தார்?

20)2023ம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் உலக கோப்பை போட்டிக்கு பங்கேற்கும் அணிகள் என்னிக்கையை எத்தனையாக FIFA உயர்த்தியுள்ளது?

Wednesday, August 14, 2019

விமான சேவை பாதுகாப்பு பிரிவு  செயற்பாட்டுகள் பகுதி  வினாக்கள் 2019

விமான சேவை பாதுகாப்பு பிரிவு செயற்பாட்டுகள் பகுதி வினாக்கள் 2019


1. எவ்வாறு நான் வான் செயற்பாட்டாளர் சான்றிதழ் ஒன்றிற்கு விண்ணப்பிக்க முடியும்?

ஒழுங்காகப் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்ப படிவமொன்றை குறித்த கட்டணத்துடன் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து வெளியீடு 4100 – வான் செயற்பாட்டாளர் சான்றுப்படுத்துகைக் கையேட்டின் பிரகாரம் இவ் அலுவலகத்துக்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.

2. இலங்கைக்கு மற்றும் இலங்கைக்கு வெளியே அட்டவணைப்படுத்தப்பட்ட பறத்தல்களை (பயணிகள் / பொதிகள்) செயற்படுத்துவதற்கான அனுமதிக்காக எவ்வாறு நான் விண்ணப்பிக்க வேண்டும்?

வெளிநாட்டு விமான சேவை உரிமத்துடன் வெளிநாட்டு வான் செயற்பாட்டாளர் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து வெளியீடு 4105 - வெளிநாட்டு வான் செயற்பாட்டாளர்களைச் சான்றுப்படுத்தும் கைநூலின் பிரகாரம் முறையாகப் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை குறித்த கட்டணத்துடன் இவ் அலுவலகத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

3. இலங்கைக்கு மற்றும் இலங்கைக்கு வெளியே அட்டவணைப்படுத்தப்படாத வர்த்தக விமானப் பறப்புக்களை (பயணிகள் / பொருட்கள்) செயற்படுத்துவதற்கான அனுமதிக்காக நான் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

ஒரு பருவத்துக்கு (06 மாத காலவரையறையில்) அட்டவணைப்படுத்தப்படாத ஆறு (06) விமான பறப்புக்களை செயற்படுத்த எதிர்பார்க்கும் செயற்பாட்டாளர்கள் அட்டவணைப்படுத்தப்பட்ட பறப்புக்களைப் போன்றதான சான்றுப்படுத்தும் நடைமுறைகளுக்கு இணையான வெளிநாட்டு வான் செயற்பாட்டாளர் சான்றிதழின் படி சான்றுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

ஒரு பருவத்துக்கு (06 மாத காலவரையறையில்) அட்டவணைப்படுத்தப்படாத ஆறு (06) விமானப் பறப்புக்களுக்கு குறைவாக செயற்படுத்த எதிர்பார்க்கும் செயற்பாட்டாளர்கள் இலங்கை AIP யில் திட்டவட்டமாகக் காட்டப்பட்டுள்ளவாறு அனுமதிப்பத்திரமொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

4. சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையில் அபாயகரமான பொருட்கள் அங்கீகரிக்கப்படுவதற்கான அனுமதிப்பத்திரத்தை நான் எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்?

அபாயகரமான பொருட்களைக் கொண்டுசெல்வது தொடர்பாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து வெளியீடு 4400 - அபாயகரமான பொருட்களைக் கையாளல் கைநூலில் விளக்கப்பட்டுள்ளவாறு உரிய மாதிரிப் படிவங்களின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை செயற்பாட்டாளர் சமர்ப்பிக்க வேண்டும். அத்தகைய விண்ணப்பப் படிவமொன்றுடன் செயற்பாட்டாளரின் அபாயகரமான பொருட்கள் தொடர்பான கைநூல் மற்றும் அபாயகரமான பொருட்கள் தொடர்பான பயிற்சி கைநூல் என்பவற்றையும் குறித்த கட்டணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

5. முன்மொழிவு செய்யப்பட்ட பதவி நிலைகளுக்கான அனுபவமும் தகைமைகளும் யாவை?

சிவில் விமானப் போக்குவரத்து வெளியீடு 4100 பின்னிணைப்பு I இன் பிரகாரம் விரும்பத்தக்க தகைமைத் தேவைப்பாடுகளை விண்ணப்பதாரிகள் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் செயற்பாட்டு விடயப்பரப்பின் மற்றும் அளவின் பிரகாரம் பதவிகள் வெவ்வேறாக மதிப்பிடப்படும்.

6. பறத்தற் செயற்பாட்டு கைநூல் என்றால் என்ன? அதனை நான் எவ்வாறு விருத்தி செய்துகொள்ள முடியும்?

1955 வான்செலவு ஒழுங்குவிதிகளில் 214 வது ஒழுங்குவிதி மற்றும் 'வான் சேவை செயற்பாடுகளின்' XIII வது அத்தியாயத்தின் பிரகாரம் வான் செயற்பாட்டாளர் ஒருவர் செயற்பாட்டு ஆளணியினரின் பயன்பாட்டுக்கும், வழிகாட்டலுக்கும் என செயற்பாட்டு கைநூல் ஒன்றையும், அபாயகரமான பொருட்கள் பயிற்சி கைநூல் ஒன்றையும் தயாரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து வெளியீடு 4500 பந்தி 1 மற்றும் பந்தி 2- செயற்பாட்டு கைநூலைத் தயாரித்தல் மற்றும் சான்றுப்படுத்தல்.

7. எனது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக நான் கொண்டுவர எண்ணுகிற வானூர்திக்காக நான் வான் செயற்பாட்டாளர் சான்றிதழொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமா?

1955 வான்செலவு ஒழுங்குவிதிகளில் 180, 184, 185, 186, 187வது ஒழுங்குவிதி மற்றும் "விமானப் போக்குவரத்துச் செயற்பாடுகளின்" XIII வது அத்தியாயத்தின் பிரகாரம் தனிப்பட்ட, வான் வேலைச் நடவடிக்கைகள், வாடகை அல்லது அட்டவணைப்படுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து சேவைக்காக வானூர்தியொன்றைச் செயற்படுத்தவதற்கு எண்ணுகிற நபரொருவர் வான் செயற்பாட்டாளர் சான்றிதழ் எனக் குறிப்பிடப்படுகின்ற உத்தரவுப்பத்திரமொன்றை சிவில் விமானப் போக்குவரத்துப் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

8. எனது செயற்பாட்டு விளக்க விபரத்தில் குறிப்பிடப்பட்ட பரப்பெல்லையை நான் எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்?

  • அபாயகரமான பொருட்களைக் கொண்டுசெல்தல்

  • அபாயகரமான பொருட்களைக் கொண்டுசெல்வது தொடர்பாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து வெளியீடு 4400ல் விபரிக்கப்பட்டுள்ளவாறு செயற்பாட்டாளர் உரிய மாதிரிப்படிவத்தின் பிரகாரம் விண்ணப்பப்படிவமொன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி விண்ணப்பபடிவத்துடன் செயற்பாட்டாளரின் அபாயகரமான பொருட்கள் கைநூல் மற்றும் அபாயகரமான பொருட்கள் பயிற்சி கைநூல் மற்றும் சம்பந்தப்பட்ட கட்டணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

  • பார்வைக் குறைவு செயற்பாடு (AWO கைநூல், கோட்பாடுகள், மற்றும் விண்ணப்பப்படிவம்)

  • உங்களுடைய செயற்பாட்டுத் திறனின் பிரகாரம் அதற்கு அனுமதியளிக்க இடமுண்டு. அத்துடன் உங்களுடைய வான் செயற்பாட்டாளர் சான்றிதழின் செயற்பாட்டு விளக்க விபரத்தை திருத்துவதற்காக நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து வெளியீடு 4100 இன் பின்னிணைப்பு P – 'செயற்பாட்டு விளக்க விபரத்தைத் திருத்துவதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பார்க்கவும்'. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை குறித்த கட்டணங்களுடன் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைக்கு சமர்ப்பிக்க வேண்டும். (அதை சமர்ப்பிக்கின்றபோது பூர்த்திசெய்ய வேண்டிய விசேட விண்ணப்பப்படிவத்தையும், அதனைப் பூர்த்திசெய்யப் பயன்படுத்தப்பட்ட மூலங்களையும் சமர்ப்பிக்கும்படி விமான சேவைக்கு கோரிக்கை விடப்படும்)

  • குறைவான மாற்றங்களின் அளவு (RVSM)

  • உங்களுடைய செயற்பாட்டுத் திறனின் பிரகாரம் அதற்கு அனுமதியளிக்க இடமுண்டு. அத்துடன் உங்களுடைய வான் செயற்பாட்டாளர் சான்றிதழின் செயற்பாட்டு விளக்க விபரத்தைத் திருத்துவதற்காக நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து வெளியீடு 4100 இன் பின்னிணைப்பு P – 'செயற்பாட்டு விளக்க விபரத்தைத் திருத்துவதற்கான விண்ணப்பப்படிவத்தைப் பார்க்கவும்.' பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை குறித்த கட்டணங்களுடன் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

  • கூட்டுப் பரப்பு இரட்டை உந்துபொறி செயற்பாடு ETOPS

  • உங்களுடைய செயற்பாட்டுத் திறனின் பிரகாரம் அதற்கு அனுமதியளிக்க இடமுண்டு. அத்துடன் உங்களுடைய வான் செயற்பாட்டாளர் சான்றிதழின் செயற்பாட்டு விளக்க விபரத்தைத் திருத்துவதற்காக நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து வெளியீடு 4100 இன் பின்னிணைப்பு P – 'செயற்பாட்டு விளக்க விபரத்தைத் திருத்துவதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பார்க்கவும்'. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை குறித்த கட்டணங்களுடன் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைக்கு சமர்ப்பிக்க வேண்டும். (அதை சமர்ப்பிக்கின்ற போது பூர்த்திசெய்ய வேண்டிய விசேட விண்ணப்பப்படிவத்தையும் அதனைப் பூர்த்திசெய்யப் பயன்படுத்தப்பட்ட மூலங்களையும் சமர்ப்பிக்கும்படி விமான சேவைக்கு கோரிக்கை விடுக்கப்படும்.)

  • செயலாற்றுகைகளை அடிப்படையாகக் கொண்ட வான் பயணத்துக்கான (PBN) வழிகாட்டற் விளக்க விபரம்

  • உங்களுடைய செயற்பாட்டுத் திறனின் பிரகாரம் அதற்கு அனுமதியளிக்க இடமுண்டு. அத்துடன் உங்களுடைய வான் செயற்பாட்டாளர் சான்றிதழின் செயற்பாட்டு விளக்க விபரத்தைத் திருத்துவதற்காக நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து வெளியீடு 4100 இன் பின்னிணைப்பு P – 'செயற்பாட்டு விளக்க விபரத்தைத் திருத்துவதற்கான விண்ணப்பப்படிவத்தைப் பார்க்கவும்'. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை குறித்த கட்டணங்களுடன் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைக்கு சமர்ப்பிக்க வேண்டும். (அதை சமர்ப்பிக்கின்றபோது பூர்த்திசெய்ய வேண்டிய விசேட விண்ணப்பப் படிவத்தையும் அதனைப் பூர்த்திசெய்யப் பயன்படுத்தப்பட்ட மூலங்களையும் சமர்ப்பிக்கும்படி விமான சேவைக்கு கோரிக்கை விடுக்கப்படும்.)


9. அட்டவணைப்படுத்தப்பட்ட வான் செயற்பாட்டுகளுக்காக என்னிடம் வான் செயற்பாட்டாளர் சான்றிதழ் உண்டு. நான் வாடகை விமான சேவையை நடத்த அந்த சான்றிதழ் போதுமா?

அதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. அத்துடன் உங்களுடைய வான் செயற்பாட்டாளர் சான்றிதழின் செயற்பாட்டு விளக்க விபரத்தைத் திருத்துவதற்காக நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

10. வான் செயற்பாட்டாளர் சான்றிதழ் ஒன்றைப் பெற்றுக்கொண்டவுடன் வர்த்தக செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கு எனக்கு அனுமதி கிடைக்குமா?

அதற்கு அனுமதி கிடைக்காது. அத்துடன் வர்த்தக செயற்பாட்டை ஆரம்பிப்பதற்காக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் வான் போக்குவரத்து மற்றும் சட்ட விவகாரங்களுக்கான பகுதியில் விமான சேவை உரிமமொன்றை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
விமான சேவை பாதுகாப்பு பிரிவு வினாக்கள் -2019

விமான சேவை பாதுகாப்பு பிரிவு வினாக்கள் -2019


1. நான் விமானமொன்றில் சுடுபடைக் கலன்களையோ / ஆயுதங்களையோ / ரவைகளையோ எடுத்துச்செல்ல முடியுமா?

முடியும். ஆனால் அப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் மாத்திரம் முடியும். அதற்காக சி.வி.சே. பணிப்பாளர் நாயகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

2. எவ்வாறு நான் அதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்?

சம்பந்தப்பட்ட தகவல்கள்/ ஆவணங்களுடன் சிவில் விமானப் போக்குவரத்துப் பணிப்பாளர் நாயகத்திற்கு எழுத்துமூலம் கோரிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

3. சம்பந்தப்பட்ட தகவல்கள் / ஆவணங்கள் எனப்படுபவை யாவை?
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அனுமதிக் கடிதம்
விமான பயண தகவல்கள் - திகதி, நேரம், விமான பயண இலக்கம் மற்றும் வழி
சுடுபடைக் கலன்/ ஆயுதங்கள்/ ரவைகள் பற்றிய தகவல்கள் (தொடர் இலக்கம், அளவு, வகை, வர்த்தக பெயர், துப்பாக்கி குழல்/ ரவை போன்றவற்றின் விட்டம் மற்றும் ஏனைய துணைப் பாகங்கள்)

4. இவ்வாறு அனுமதி பெற்றுக்கொள்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?

கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் 24 மணித்தியாலங்கள் (வேலை நாட்களில்)

5. நான் சுடுபடைக் கலன்கள் / ஆயுதங்கள் / ரவைகள் என்பனவற்றை விமானம் மூலம் அனுப்ப முடியுமா?

ஆம், உங்களுக்கு முடியும். அதற்காக சிவில் விமானப் போக்குவரத்துப் பணிப்பாளர் நாயகத்தின் எழுத்துமூல அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

6. அதற்கான அங்கீகாரத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வது?

விமான சேவையின் பட்டியல் இலக்கத்துடன் மேற் குறிப்பிட்டுள்ள (வினா 3) தகவல்களை / ஆவணங்களை சிவில் விமானப் போக்குவரத்துப் பணிப்பாளர் நாயகத்திற்கு எழுத்துமூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

7. நான் கையில் எடுத்துச் செல்லும் பிரயாண பையில் கத்தி / கத்தரிக்கோல் ஒன்றை எடுத்துச் செல்ல முடியுமா?

முடியாது. ஆனால் அத்தகைய பொருட்களை நீங்கள் விமானத்தின் பொருட்கள் கூடத்தில் வைக்கப்படும் உங்களுடைய பிரயாண பையில் வைத்து எடுத்துச் செல்ல முடியும். அத்துடன் நீங்கள் கையில் எடுத்துச் செல்லும் பிரயாண பையில் கொண்டு செல்ல முடியாத இன்னும் சில பொருட்கள் இருக்கின்றன. அவற்றில் பின்வருவன அடங்குகின்றன.

கத்தி அல்லது வெட்டுவதற்குப் பயன்படுத்தும் கருவிகள் - குறு வாள், வாள், அட்டை வெட்டும் கருவி, வேட்டைக் கத்திகள், நினைவுக் கத்திகள், தற்காப்பு சண்டைகளின்போது பயன்படுத்துகின்ற உபகரணங்கள், தொழில் சார்ந்த ரீதியாக வெட்டும் உபகரணங்கள் மற்றும் செ.மீ.6 அல்லது அதற்கு மேல் நீளமுள்ள ஏனைய கத்திகள், மற்றும் / அல்லது உள்ளுர் சட்டத்தின் பிரகாரம் சட்டவிரோதமாகக் கருதப்படுகின்ற கத்திகள்

தடிகள்  - பிளெக்ஜெக் (ஈயம் நிரப்பிய வளையக்கூடிய தடி வகைகள்) பிளி கிளப் (குறுகிய தடி வகை), பேஸ்போல் மட்டை அல்லது அதற்கு சமமான உபகரணங்கள்

வலுவிழக்கச் செய்யும் அல்லது பலவீனப்படுத்தம் உபகரணங்கள்  - எய்வதற்குப் பயன்படுத்தப்படும் கைத் துப்பாக்கிகள், கெனிஸ்டர்கள் அல்லது வேறு பாத்திரங்களில் உள்ள சகல கண்ணீர் புகை, வலுவிழக்கச் செய்யும் இரசாயன பொருட்கள் அடங்கிய சிகரட் மற்றும் ஏனைய மயக்கமடையச் செய்யும் அல்லது அதிர்ச்சிக்குள்ளாக்கக்கூடிய இலத்திரனியல் உபகரணங்கள் போன்ற வலுவிழக்கச் செய்யும் உபகரணங்கள்.

ஏனைய பொருட்கள் - விளையாட்டு ஆயுதங்கள் அல்லது கைக்குண்டுகள் உள்;ளிட்ட மரணத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான ஆயுதமாகக் கருதாவிட்டாலும் ஆயுதமாகக் கருதக்கூடிய ஐஸ் உடைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்ற உளிகள், மலை ஏறுகிறவர்கள் பயன்படுத்துகின்ற இரும்பு கொக்கியுடனான தடி, சவரக் கத்தி, நீண்ட கத்திரி போன்றவை

8. விசேட தேவைகள் உள்ள பயணிகள் மற்றும் இதய இயக்க பட்டறி (pacemaker) பொருத்தப்படட பயணிகள் உலோக உணர்காட்டி ஊடாக பயணிப்பதற்கு அல்லது கடந்து செல்லாமல் இருப்பதற்கு மாற்று செயல்முறை உண்டா?

ஆம். கர்ப்பிணிப் பெண்கள், மிகப் பெறுமதியான பொருட்களைக் கொண்டுசெல்லும் பயணிகள், இதய இயக்க பட்டறி பொருத்தப்படட பயணிகள் மற்றும் குறைந்த உடல் இயக்கமுள்ள பயணிகள் போன்ற மிகக் கவனமாக பரிசோதிக்க வேண்டிய பயணிகள் உலோக உணர்காட்டியினூடாக செல்லாமல் தனியான இடத்தில் பரிசோதிக்கப்படுவார்கள். 

எவ்வாறாயினும், பரிசோதிக்கின்ற இடத்தில் அப் பயணிகள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் அதற்காக கோரிக்கை விடுக்க வேண்டும்.