Wednesday, August 14, 2019

விமான சேவை பாதுகாப்பு பிரிவு செயற்பாட்டுகள் பகுதி வினாக்கள் 2019

SHARE

1. எவ்வாறு நான் வான் செயற்பாட்டாளர் சான்றிதழ் ஒன்றிற்கு விண்ணப்பிக்க முடியும்?

ஒழுங்காகப் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்ப படிவமொன்றை குறித்த கட்டணத்துடன் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து வெளியீடு 4100 – வான் செயற்பாட்டாளர் சான்றுப்படுத்துகைக் கையேட்டின் பிரகாரம் இவ் அலுவலகத்துக்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.

2. இலங்கைக்கு மற்றும் இலங்கைக்கு வெளியே அட்டவணைப்படுத்தப்பட்ட பறத்தல்களை (பயணிகள் / பொதிகள்) செயற்படுத்துவதற்கான அனுமதிக்காக எவ்வாறு நான் விண்ணப்பிக்க வேண்டும்?

வெளிநாட்டு விமான சேவை உரிமத்துடன் வெளிநாட்டு வான் செயற்பாட்டாளர் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து வெளியீடு 4105 - வெளிநாட்டு வான் செயற்பாட்டாளர்களைச் சான்றுப்படுத்தும் கைநூலின் பிரகாரம் முறையாகப் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை குறித்த கட்டணத்துடன் இவ் அலுவலகத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

3. இலங்கைக்கு மற்றும் இலங்கைக்கு வெளியே அட்டவணைப்படுத்தப்படாத வர்த்தக விமானப் பறப்புக்களை (பயணிகள் / பொருட்கள்) செயற்படுத்துவதற்கான அனுமதிக்காக நான் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

ஒரு பருவத்துக்கு (06 மாத காலவரையறையில்) அட்டவணைப்படுத்தப்படாத ஆறு (06) விமான பறப்புக்களை செயற்படுத்த எதிர்பார்க்கும் செயற்பாட்டாளர்கள் அட்டவணைப்படுத்தப்பட்ட பறப்புக்களைப் போன்றதான சான்றுப்படுத்தும் நடைமுறைகளுக்கு இணையான வெளிநாட்டு வான் செயற்பாட்டாளர் சான்றிதழின் படி சான்றுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

ஒரு பருவத்துக்கு (06 மாத காலவரையறையில்) அட்டவணைப்படுத்தப்படாத ஆறு (06) விமானப் பறப்புக்களுக்கு குறைவாக செயற்படுத்த எதிர்பார்க்கும் செயற்பாட்டாளர்கள் இலங்கை AIP யில் திட்டவட்டமாகக் காட்டப்பட்டுள்ளவாறு அனுமதிப்பத்திரமொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

4. சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையில் அபாயகரமான பொருட்கள் அங்கீகரிக்கப்படுவதற்கான அனுமதிப்பத்திரத்தை நான் எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்?

அபாயகரமான பொருட்களைக் கொண்டுசெல்வது தொடர்பாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து வெளியீடு 4400 - அபாயகரமான பொருட்களைக் கையாளல் கைநூலில் விளக்கப்பட்டுள்ளவாறு உரிய மாதிரிப் படிவங்களின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை செயற்பாட்டாளர் சமர்ப்பிக்க வேண்டும். அத்தகைய விண்ணப்பப் படிவமொன்றுடன் செயற்பாட்டாளரின் அபாயகரமான பொருட்கள் தொடர்பான கைநூல் மற்றும் அபாயகரமான பொருட்கள் தொடர்பான பயிற்சி கைநூல் என்பவற்றையும் குறித்த கட்டணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

5. முன்மொழிவு செய்யப்பட்ட பதவி நிலைகளுக்கான அனுபவமும் தகைமைகளும் யாவை?

சிவில் விமானப் போக்குவரத்து வெளியீடு 4100 பின்னிணைப்பு I இன் பிரகாரம் விரும்பத்தக்க தகைமைத் தேவைப்பாடுகளை விண்ணப்பதாரிகள் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் செயற்பாட்டு விடயப்பரப்பின் மற்றும் அளவின் பிரகாரம் பதவிகள் வெவ்வேறாக மதிப்பிடப்படும்.

6. பறத்தற் செயற்பாட்டு கைநூல் என்றால் என்ன? அதனை நான் எவ்வாறு விருத்தி செய்துகொள்ள முடியும்?

1955 வான்செலவு ஒழுங்குவிதிகளில் 214 வது ஒழுங்குவிதி மற்றும் 'வான் சேவை செயற்பாடுகளின்' XIII வது அத்தியாயத்தின் பிரகாரம் வான் செயற்பாட்டாளர் ஒருவர் செயற்பாட்டு ஆளணியினரின் பயன்பாட்டுக்கும், வழிகாட்டலுக்கும் என செயற்பாட்டு கைநூல் ஒன்றையும், அபாயகரமான பொருட்கள் பயிற்சி கைநூல் ஒன்றையும் தயாரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து வெளியீடு 4500 பந்தி 1 மற்றும் பந்தி 2- செயற்பாட்டு கைநூலைத் தயாரித்தல் மற்றும் சான்றுப்படுத்தல்.

7. எனது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக நான் கொண்டுவர எண்ணுகிற வானூர்திக்காக நான் வான் செயற்பாட்டாளர் சான்றிதழொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமா?

1955 வான்செலவு ஒழுங்குவிதிகளில் 180, 184, 185, 186, 187வது ஒழுங்குவிதி மற்றும் "விமானப் போக்குவரத்துச் செயற்பாடுகளின்" XIII வது அத்தியாயத்தின் பிரகாரம் தனிப்பட்ட, வான் வேலைச் நடவடிக்கைகள், வாடகை அல்லது அட்டவணைப்படுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து சேவைக்காக வானூர்தியொன்றைச் செயற்படுத்தவதற்கு எண்ணுகிற நபரொருவர் வான் செயற்பாட்டாளர் சான்றிதழ் எனக் குறிப்பிடப்படுகின்ற உத்தரவுப்பத்திரமொன்றை சிவில் விமானப் போக்குவரத்துப் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

8. எனது செயற்பாட்டு விளக்க விபரத்தில் குறிப்பிடப்பட்ட பரப்பெல்லையை நான் எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்?

  • அபாயகரமான பொருட்களைக் கொண்டுசெல்தல்

  • அபாயகரமான பொருட்களைக் கொண்டுசெல்வது தொடர்பாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து வெளியீடு 4400ல் விபரிக்கப்பட்டுள்ளவாறு செயற்பாட்டாளர் உரிய மாதிரிப்படிவத்தின் பிரகாரம் விண்ணப்பப்படிவமொன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி விண்ணப்பபடிவத்துடன் செயற்பாட்டாளரின் அபாயகரமான பொருட்கள் கைநூல் மற்றும் அபாயகரமான பொருட்கள் பயிற்சி கைநூல் மற்றும் சம்பந்தப்பட்ட கட்டணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

  • பார்வைக் குறைவு செயற்பாடு (AWO கைநூல், கோட்பாடுகள், மற்றும் விண்ணப்பப்படிவம்)

  • உங்களுடைய செயற்பாட்டுத் திறனின் பிரகாரம் அதற்கு அனுமதியளிக்க இடமுண்டு. அத்துடன் உங்களுடைய வான் செயற்பாட்டாளர் சான்றிதழின் செயற்பாட்டு விளக்க விபரத்தை திருத்துவதற்காக நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து வெளியீடு 4100 இன் பின்னிணைப்பு P – 'செயற்பாட்டு விளக்க விபரத்தைத் திருத்துவதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பார்க்கவும்'. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை குறித்த கட்டணங்களுடன் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைக்கு சமர்ப்பிக்க வேண்டும். (அதை சமர்ப்பிக்கின்றபோது பூர்த்திசெய்ய வேண்டிய விசேட விண்ணப்பப்படிவத்தையும், அதனைப் பூர்த்திசெய்யப் பயன்படுத்தப்பட்ட மூலங்களையும் சமர்ப்பிக்கும்படி விமான சேவைக்கு கோரிக்கை விடப்படும்)

  • குறைவான மாற்றங்களின் அளவு (RVSM)

  • உங்களுடைய செயற்பாட்டுத் திறனின் பிரகாரம் அதற்கு அனுமதியளிக்க இடமுண்டு. அத்துடன் உங்களுடைய வான் செயற்பாட்டாளர் சான்றிதழின் செயற்பாட்டு விளக்க விபரத்தைத் திருத்துவதற்காக நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து வெளியீடு 4100 இன் பின்னிணைப்பு P – 'செயற்பாட்டு விளக்க விபரத்தைத் திருத்துவதற்கான விண்ணப்பப்படிவத்தைப் பார்க்கவும்.' பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை குறித்த கட்டணங்களுடன் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

  • கூட்டுப் பரப்பு இரட்டை உந்துபொறி செயற்பாடு ETOPS

  • உங்களுடைய செயற்பாட்டுத் திறனின் பிரகாரம் அதற்கு அனுமதியளிக்க இடமுண்டு. அத்துடன் உங்களுடைய வான் செயற்பாட்டாளர் சான்றிதழின் செயற்பாட்டு விளக்க விபரத்தைத் திருத்துவதற்காக நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து வெளியீடு 4100 இன் பின்னிணைப்பு P – 'செயற்பாட்டு விளக்க விபரத்தைத் திருத்துவதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பார்க்கவும்'. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை குறித்த கட்டணங்களுடன் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைக்கு சமர்ப்பிக்க வேண்டும். (அதை சமர்ப்பிக்கின்ற போது பூர்த்திசெய்ய வேண்டிய விசேட விண்ணப்பப்படிவத்தையும் அதனைப் பூர்த்திசெய்யப் பயன்படுத்தப்பட்ட மூலங்களையும் சமர்ப்பிக்கும்படி விமான சேவைக்கு கோரிக்கை விடுக்கப்படும்.)

  • செயலாற்றுகைகளை அடிப்படையாகக் கொண்ட வான் பயணத்துக்கான (PBN) வழிகாட்டற் விளக்க விபரம்

  • உங்களுடைய செயற்பாட்டுத் திறனின் பிரகாரம் அதற்கு அனுமதியளிக்க இடமுண்டு. அத்துடன் உங்களுடைய வான் செயற்பாட்டாளர் சான்றிதழின் செயற்பாட்டு விளக்க விபரத்தைத் திருத்துவதற்காக நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து வெளியீடு 4100 இன் பின்னிணைப்பு P – 'செயற்பாட்டு விளக்க விபரத்தைத் திருத்துவதற்கான விண்ணப்பப்படிவத்தைப் பார்க்கவும்'. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை குறித்த கட்டணங்களுடன் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைக்கு சமர்ப்பிக்க வேண்டும். (அதை சமர்ப்பிக்கின்றபோது பூர்த்திசெய்ய வேண்டிய விசேட விண்ணப்பப் படிவத்தையும் அதனைப் பூர்த்திசெய்யப் பயன்படுத்தப்பட்ட மூலங்களையும் சமர்ப்பிக்கும்படி விமான சேவைக்கு கோரிக்கை விடுக்கப்படும்.)


9. அட்டவணைப்படுத்தப்பட்ட வான் செயற்பாட்டுகளுக்காக என்னிடம் வான் செயற்பாட்டாளர் சான்றிதழ் உண்டு. நான் வாடகை விமான சேவையை நடத்த அந்த சான்றிதழ் போதுமா?

அதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. அத்துடன் உங்களுடைய வான் செயற்பாட்டாளர் சான்றிதழின் செயற்பாட்டு விளக்க விபரத்தைத் திருத்துவதற்காக நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

10. வான் செயற்பாட்டாளர் சான்றிதழ் ஒன்றைப் பெற்றுக்கொண்டவுடன் வர்த்தக செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கு எனக்கு அனுமதி கிடைக்குமா?

அதற்கு அனுமதி கிடைக்காது. அத்துடன் வர்த்தக செயற்பாட்டை ஆரம்பிப்பதற்காக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் வான் போக்குவரத்து மற்றும் சட்ட விவகாரங்களுக்கான பகுதியில் விமான சேவை உரிமமொன்றை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
SHARE

Author: verified_user

0 comments: