Wednesday, August 14, 2019

செனரத மன்னன்

SHARE

செனரத மன்னன் 1604 முதல் 1635 வரை கண்டி அரசை ஆண்ட மன்னன் ஆவான். முதலாம் விமலதருமனுக்கு அடுத்தபடியாக இவன் கண்டியை ஆண்டதாககச் சொல்லப்பட்டாலும், விமலதருமனின் மரணத்துக்குப் பின்னர் என்ன நிகழ்ந்தது, இவன் எவ்வாறு மன்னன் ஆனான் என்ற தகவல்கள் தெளிவில்லை. விமலதருமனின் ஒன்றுவிட்ட சகோதரனாக இவன் இருக்கக்கூடும். இறந்த மன்னனின் மனைவி, தொன் கதரீனாவை மட்டுமன்றி, அவளது இரு மகள்மாரையும் மணந்த இவன் கண்டி வரலாற்றில் புதிராகவே விளங்குகின்றான்.

ஆட்சி

இவன் ஆட்சியில் அடிக்கடி போர்த்துக்கேய ஆக்கிரமிப்புக்களும் உள்ளூர் கிளர்ச்சிகளும் கண்டியைப் பாதித்ததாகத் தெரியவருகின்றது. ரந்தெனிவலையில் நிகழ்ந்த போரில் போர்த்துக்கேயரைத் தோற்கடித்த இவனது பெறாமகன் குமாரசிங்கனது வீரம் வெகுவாகப் பாராட்டப்படுகின்றது. எனினும், இவனை அடுத்து வாரிசுரிமைச் சிக்கல் வந்தபோது, தந்திரமாகத் தன் இருபெறாமக்களைத் தவிர்த்துவிட்டு, இராஜசிங்கனை முடிசூட்டினான். அவர்கள் இருவரும் சிலகாலத்துக்குள்ளாகவே மர்மமாக இறந்தனர்.

கற்பிட்டிப் பகுதியில் போர்த்துக்கீசரால் பெருமளவு அச்சுறுத்தல்களைச் சந்தித்த சோனக மக்கள் இவனிடம் அடைக்கலம் கோர, இவன் கீழை இலங்கையின் மட்டக்களப்புப் பகுதியில் அவர்களைக் குடியேற்றுவித்தான்
SHARE

Author: verified_user

0 comments: